Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசித்தீர்க்காவிடில் எதிர்காலத்தில் சிக்கல்-  சித்தார்த்தன் 

Featured Replies

பேசித்தீர்க்காவிடில் எதிர்காலத்தில் சிக்கல்-  சித்தார்த்தன் 

பேசித்தீர்க்காவிடில்  எதிர்காலத்தில் சிக்கல்-  சித்தார்த்தன் 

கூட்­டாட்சி என்று குறிப்­பி­டு­வதோ அல்­லது ஒற்­றை­யாட்சி என்று குறிப்­பி­டு­வதோ பிரிந்து செல்­வ­தையோ அல்­லது தடுப்­ப­தையோ தீர்­மா­ னிப்­ப­தில்லை. ஒரு மக்­கள் குழு இரண்­டாம் தர­மாக நடத்­தப்­பட்­டாலோ ஒடுக்­கப்­பட்­டாலோ, அப்­படி நடத்­தப்­ப­டு­வ­தாக அவர்­கள் உணர்ந்து கொண்­டா­லோ­தான் பிரிந்து செல்­லும் சிந்­த­னையை அவர்­க­ளி­டத்­தில் தூண்­டு­கின்­றது.

இங்கே நீங்­கள் விவா­திப்­ப­தைப் ­போன்று கூட்­டாட்­சியோ அல்­லது ஒற்­றை­யாட்­சியோ பிரிந்து செல்­வ­தைத் தீர்­மா­னிப்­ப­தில்லை. இதைப் புரிந்­து­கொள்­ளுங்­கள்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார்.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான மூன்­றாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த காலத்­தில் பிரச்­சி­னை­கள் எழுந்தபோது பேசித்­தீர்ப்­ப­தற்­கான தலை­வர்­கள் காணப்­பட்­டார்­கள். அவர்­க­ளு­டன் பேசித்­தீர்க்­காது விட்­டால் எதிர்­கா­லத்­தில் கடு­மை­யா­ன­வர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­வேண்­டிய நிலமை ஏற்­ப­டும் என்­றார்.

தற்­போ­தும் அவ்­வா­றான நிலை­மை­ யொன்றே காணப்­ப­டு­கின்­றது. பேச்சு மூலம் தீர்­வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஆர்­வம் கொண்ட தலை­வர்­கள் இருக்­கின்­றார்­கள். எமது தலை­வர் சம்­பந்­த­னு­டன் பேச்சு ஊடாக நியா­ய­மான தீர்­வொன்றைப் பெற்­று­விட வேண்­டும் என்ற நிலைப்­பாட் ­டில் உள்­ளார்.

நாட்­டின் தன்­மை­யா­னது கூட்­டாட்சி அமைப்­பாக அமை­யும் என்­றால் சிங்­கள மக்­கள் அச்­ச­ம­டைந்து அதனை வேண்­டாத பொரு­ளாகப் பார்க்­கின்­றார்­கள். ஆனால் தமிழ் மக்­கள் நியா­ய­மான ஒரு தீர்வு கிடைக்க வேண்­டு­மென்­றால் கூட்­டாட்சி என்­பது இருக்­க­வேண்­டும் என்று கோரு­கின்­றார்­கள்.

நண்­பர் தினேஸ் குண­வர்த்­தன இந்த விட­யம் சம்­பந்­த­மாக என்­னு­டன் உரை­யா­டி­ய­போது கூட்­டாட்சி ஏற்­பாடு காணப்­பட்­டால் தற்­போது ஸ்பெயி­னின் நிலமை ஏற்­ப­டும் என்று உத­ா ர­ணம் காட்­டி­னார்.

இந்த இடத்­தில் அனை­ வ­ரும் ஒரு விட­யத்தைப் புரிந்து கொள்ள வேண்­டும். கூட்­டாட்சி என்று குறிப்­பி­டு­வதோ அல்­லது ஒற்­றை­யாட்சி என்று குறிப்­பி­டு­வதோ பிரிந்து செல்­வ­தையோ அல்­லது தடுப்­ப­தையோ தீர்­மா­னிப்­ப­ தில்லை. பெரும்­பான்­மை­யின மக்­கள் கூட்­டாட்சி தொடர்­பில் அச்­ச­ம­டை­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

எத்­த­னையோ நாடு­க­ளில் கூட்­டாட்சி முறைமை காணப்­ப­டு­கின்­றது. அந்த நாடு­கள் எல்­லாமே ஒற்­று­மையாகவே இருக்­கின் ­றன.  தற்­போ­தைய நில­மை­யில் நாம் எதனைக் கோரு­கின்­றோம் என்­பதைச் சரி­யா­கப் புரிந்து கொள்­ள­வேண்­டும்.

கூட்­டாட்சி அம்­சங்­க­ளுக்கு ஒப்­பாக எமது தாய­கப் பகு­தி­க­ளில் எமது விட­யங்­களைக் கையா­ளக்­கூ­டிய அதி­கா­ரப் பகிர்­வையே நாம் கோரு­கின்­றோம்.

இந்­தச் சபை­யில் பலர் 13ஆவது திருத்­தம் பற்றி அதி­க­ள­வில் பேசி­னர். 13ஆவது திருத்­தச்­சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால் அனைத்­தும் சரி­யென்ற நோக்­கம் இருக்­கின்­றது. 13ஆவது திருத்­தச்­சட்­டம் கொண்­டு­ வ­ரப்­பட்டு முப்­பது வரு­டங்­க­ளா­கின்றபோதும் அது முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அர­ச­மைப்­பில் உள்ள அந்த விட­யத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத நில­மையே உள்­ளது. 13ஆவது திருத்­தச்­சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டா­லும் அது எமக்­கான தீர்­வை வழங்­காது.

அதி­கா­ரங்­கள் மீளப்­பெ­ற­மு­டி­யாத வகை­யில் பகி­ரப்­பட வேண்­டும். அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டு­வது குறித்து தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கை­யில் இருக்­கின்­றது. இருப்­பி­னும் அந்த விட­யங்­கள் புதிய அர­சி­ய­ல­மைப்­பின் இறுதி வரை­பில் வர­வேண்­டும்.

அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­பட்டு அவை மீளப்­பெ­ற­மு­டி­யாத நிலமை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும். இந்த நாட்­டில் மக்­க­ளுக்­கி­டை­யில் அந்­நி­யோன்­ய­மான புரிந்­து­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். ஆனா­லும் இரு­த­ரப்­பி­லும் அச்­சம் காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு இல்­லாது கடந்த காலக் குறை­க­ளைக் கூறிக்­கொண்­டி­ ருந்­தால் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வை எட்­ட­மு­டி­யாது. கார­ணம் இரு­த­ரப்­பி­ன­ருக்­கும் பரஸ்­ப­ரம் குறை­களைக் கூறு­வ­தற்குப் பல விட­யங்­கள் இருக்­கின்­றன. ஆனால் அது பொருத்­த­மா­ன­தாக இருக்­காது.

ஆகவே தான் கடந்த கால விட­யங்­களை விடுத்து எதிர்­கா­லம் பற்றி யோசிக்க வேண்­டும்.
கடந்த காலத்­தில் பல சந்­தர்ப்­பங்­களை இழந்து வந்­தி­ருக்­கின்­றோம். ஆகவே நியா­ய­மான தீர்­வுக்­கான இரண்டு பக்­கங்­க­ளும் நியா­ய­மான முறை­யில் இத­ய­சுத்­தி­யு­டன் நடந்து கொள்­ள­வேண்­டும்.

தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­களை இரு­வி­த­மாக அணுக வேண்­டி­ய­தா­கவே நான் பார்க்­கின்­றேன். மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­ச­ி னை­கள் ஒரு விட­ய­மா­க­வும் தேசிய இனப் பிரச்­சி­னைக் ­கான விட­யம் மற்­றொன்­றா­க­வும் பார்க்கப்பட வேண்­டும். இந்த அரசு பார­பட்­சம் காட்டவில்லை. நேர்­மை­யாக நடக்­கின்­றது என்று தமிழ் மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தவேண்­டிய பெரிய பொறுப்பு அர­சுக்கு உள்­ளது – – என்­றார்.

http://newuthayan.com/story/43196.html

  • கருத்துக்கள உறவுகள்

48 இல் இருந்து என்ன நடக்குது.?

அப்படி என்ன தான் பேசப் போகிறீர்கள்?

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் இவை ஒன்றுமே செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா அறுபது வருடமாய் பழுத்தது வாயே திறக்கவில்லையா? இனி மட்டும் திறப்பார், அவன் கேட்பான்  என்று ஏதாவது உத்தரவாதம் தந்தார்களா. தீர்க்க வேண்டிய முக்கியமான காலத்தையெல்லாம் அவர்களுக்கு சாதகமாய் நடந்து வீணடித்துவிட்டு இனி எதைப்பற்றி பேசப்போகிறீர்கள்? ஏதோ அப்பப்ப பேசுகிறோம், பேசப்போகிறோம் என்று பரப்புரை வேற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

பேசித்தீர்க்காவிடில் எதிர்காலத்தில் சிக்கல்-  சித்தார்த்தன் 

அது சரி என்ன இருந்தாப்போலை எல்லாரும் சிங்களத்தை வெருட்ட வெளிக்கிட்டினம். அங்காலை சம்பந்தன்  இஞ்சாலை சித்தார்த்தன்...இடையாலை அடைக்கலம்

ஆர் முதல்லை கொட்டன் தூக்கப்போறியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.