Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனா­தி­பதி, பிர­தமர், நீதித்­துறை அதி­கா­ரிகள் பங்­கேற்கும் கூட்­டத்தை நடத்­துங்கள்...அர­சியல் கைதிகள் பிரச்­சினை தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கோரிக்கை

Featured Replies

ஜனா­தி­பதி, பிர­தமர், நீதித்­துறை அதி­கா­ரிகள் பங்­கேற்கும் கூட்­டத்தை நடத்­துங்கள்

3-189439ae3d99309ce1084aa7b65ef049328a5943.jpg

 

அர­சியல் கைதிகள் பிரச்­சினை தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கோரிக்கை
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அர­சியல் கைதி­களின் பிரச்­ச­ினை­க­ளுக்கு தீர்­வினை எட்­டு­வது தொடர்­பாக ஜனா­தி ­பதி, பிர­தமர், நீதித்­துறை அதி­கா­ரிகள் பங்­கேற்கும் விசேட கூட்­ட­மொன்­றினை உட­ ன­டி­யாக நடத்­த­வேண்­டு­மென எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சபையில் நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளவி­டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அர­சியல் கைதிகள் விடு­த­லையால் நாடு பிள­வ­டை­யப்­போ­வ­தாக குழு­வொன்று அச்­சு­றுத்­துவ­தற்கு அர­சாங்கம் அடி­ப­ணி­யக்­கூ­டாது என வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்­சித்­த­லைவர் அவர்­களின் விட­யங்கள் அர­சியல் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்க்­கப்­பட வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்தில் நீதி, அபி­வி­ருத்தி உபா­ய­மு­றை கள் மற்றும் சர்­வ­தேச அமைச்­சுக்கள் ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு­நிலை விவாதத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது நாட்டில் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. நாங்கள் இந்த விட­யத்­தினை பல தட­வைகள் சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம். அவர்­களில் சில­ருக்கு எதி­ராக தீர்ப்பு வழங்­கப்­பட்­டு­ள்­ளது. சில­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் இல்லை. சில­ருக்கு எதி­ராக வழக்­குகள் நிலு­வையில் உள்­ளன. நாங்கள் இந்த விடயம் சம்­பந்­த­மாக ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டினோம். இந்த விட­யத்தில் அவர்­களின் நிலைப்­பாடு நியா­ய­மா­ன­தா­கவே உள்­ளது.

தற்­போது புதிய நீதி அமைச்சர் ஒருவர் விட­யத்­தினைப் பொறுப்­பேற்­றுள்ளார். அந்­நி­லையில் அவர் மூல­மாக இவ்­வி­ட­யத்­தினை நாம் நியா­ய­பூர்­வ­மாக தீர்ப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். அதற்­காக நாம் முன்னாள் நீதி அமைச்­சரை குறை­கூ­ற ­வில்லை. அவ­ரு­டனும் நாம் இந்த விட­யங்கள் தொடர்­பாக பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்தோம். ஆனால் அவர் இந்த விட­யத்தில் எதி­ரான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­காது விட்­டாலும் எந்­த­வொரு நியா­ய­மான நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்கப் பட்­டி­ருக்­க­வில்லை.

சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்த நபர்கள் அர­சியல் ரீதி­யா­கவே குற்­றங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் தமது சொந்த நலன்­க­ளுக்­காக குற்­றங்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள் என்று கூற­மு­டி­யாது. ஆகவே அர­சியல் ரீதி­யா­கவே குற்­றங்­களை மேற்­கொண்­டுள்­ளார்கள் என்­ப­தனை மறுக்க முடி­யாது.

இந்த நபர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டலாம். இந்த நபர்­க­ளுக்கு நிபந்­த­னை­யின்­றிய விடு­தலை வழங்­கப்­ப­டலாம். இந்தக் கோரிக்­கை­களை நான் கடந்த காலத்தில் நடை­பெற்ற விட­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே கோரு­கின்றேன்.

கடந்த காலத்தில் நடை­பெற்ற சம்­ப­வங்­களின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் 1971, 1987, 1988ஆம் ஆண்­டு­களில் பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்பட்­டுள்­ளனர். ஆகவே அவ்­வாறு தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்ள போதும் தற் ­போது தமிழ் இளை­ஞர்கள் விடுவிக்­கப்­ப­டாது இருக்­கின்­றார்கள். தனிப்­பட்ட ரீதியில் குற்­றங்கள் மேற்­கொண்­டி­ருந்தால் இந்த நபர்­களை விடு­விக்­கு­மாறு நான் கோர­மாட்டேன். ஆனால் அவர்கள் அர­சியல் ரீதி­யாக செயற்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஆகவே தான் அவர்­களை விடு­விக்க வேண்டும் என்று உங்­க­ளிடத்தில் கோரி நிற்­கின்றேன்.

அத்­துடன் பயங்­க­ர­வா­த­ த­டைச்­சட்டம் பொருத்­த­மற்­றது எனவும் அதனை நீக்­கி­விட்டு புதி­ய­தொரு சட்டம் கொண்டு வரப்­படும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. ஒரு தடவை அல்ல, பல தட­வைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விலும் உள்­நாட்­டிலும் வாக்­கு­று­திகள் அளிக்­கப்­பட்­டுள்­ளன.

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் பிர­காரம் இந்த நபர்கள் கைது செய்­யப்­பட்ட விதம், வாக்­கு­மூலம் பெறப்­பட்ட விதம், அதன் மூலம் வழக்­குகள் தொடுக்­கப்­பட்ட விதம் வழக்­குகள் நிலு­வையில் உள்ள விதம், நீதி­மன்ற தீர்ப்­புக்கள் வழங்­கப்­பட்ட விதம் என்­பன நாட்டின் சட்­டங்­க­ளுக்கு வேறு­பட்­ட­தா­கவே இருக்­கின்­றன. அதே­நேரம் பயங்­க­ர­வாத சட்­டத்­தினை நீக்­கு­வ­தாயின் அந்­தச்­சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதன் காரணம் என்ன? அவர்­களை எந்த அடிப்­ப­டையில் தடுத்து வைக்க முடியும்?

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்னை கொலை செய்ய வந்த குற்­றச்­சாட்டில் தீர்ப்பு வழங்­கப்­பட்ட நப­ருக்கு பொது மன்­னிப்­பினை வழங்­கினார். அவர் ஏன் பொது மன்­னிப்பு வழங்­கினார்? இந்த இடத்தில் ஜனா­தி­பதி ஏன் பொது­மன்­னிப்பு வழங்­கினார் என்­பதை பார்க்க வேண்டும். அந்த நபர் தனது சொந்த கார­ணங்­க­ளுக்­காக ஜனா­தி­ப­தியைக் கொலை செய்­வ­தற்கு வர­வில்லை. அவர் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகவே அவ்­வாறு நடந்து கொண்­ட­தனை உணர்ந்து கொண்­ட­மையால் தான் ஜனா­தி­பதி பொது மன்­னிப்­ப­ளித்தார்.

கடந்த காலத்தில் அர­சியல் கைதிகள் அனை­வ­ருக்கும் பொது­மன்­னிப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யுறுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. ஆனால் முன்னாள் நீதி அமைச்சர் அந்த விட­யங்­களில் தகுந்த கவ ­னத்­தினைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அவர் கவனம் கொண்­டி­ருந்தால் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­குரிய நட­வடிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம்.

இவ்­வாறு நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள வடக்கு, கிழக்கு இளை­ஞர்­களின் விடு­தலை தொடர்பில் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் என்னை சந்­திக்க வேண்டும் என்றும் கோரி­யி­ருந்­தார்கள். எனக்கு கொழும்பில் அதி­க­ளவு வேலைப்­பளு இருந்­ததன் கார­ண­மாக என்னால் அவர்­களின் அழைப்­பினை ஏற்று அவர்­களைச் சந்­திப்­ப­தற்­காக அங்கு செல்ல முடி­ய­வில்லை. ஆனால் அவர்­களின் உணர்­வு­களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடி­கின்­றது.

எமது கட்­சியின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் இங்கு உரை­யாற்றும் போது வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்தில் மூன்று பேரின் வழக்­குகள் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இந்த விடயம் சம்­பந்­த­மாக நானும் சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வந்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் புதிய நீதி­ய­மைச்சர் நாட்டில் இருக்­க­வில்லை. எனினும் தற்­போது வரை யில் இந்த விடயம் இன்­னமும் தீர்க்­கப்­ப­டாத நிலை­­யி­லேயே உள்­ளது.

வழக்­குகள் இட­மாற்­றப்­ப­டு­கின்­ற­போதும், விடு­தலை கோரிக்­கை­களை முன்­வைக்­கின்­ற­போதும் இன­ரீ­தி­யான பிரச்­சி­னையை எழுப்­பு­வ­தற்கு ஒரு குழு­வினர் முனை­கின்­றார்கள். கைதி­களை விடு­தலை செய்தால் நாடு பிள­வ­டைந்து விடும் என்று பிர­சாரம் செய்ய முயல்­கின்­றார்கள். இவ்­வா­றா­ன­வர்­களின் கூற்­று­க­ளுக்கு செவி­ம­டுத்து நீதி அமைச்­சரும் அர­சாங்­கமும் அச்­சு­றுத்­த­ல­டை­ய­மு­டி­யாது.

அர­சாங்கம் பத­வி­யேற்று மூன்று வரு­டங்­க­ளா­கின்­றன. மூன்று வரு­டங்­க­ளாக இந்தப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இந்த விட­யங்­களை தொடர்ந்தும் தீர்க்­காது கொண்டு செல்ல முடி­யாது. இந்த நாட்டில் நல்­லி­ணக்கம், ஐக்­கியம், என்­பன ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவற்­றினை கைதிகள் விடயம் பாதிக்கக் கூடாது. இளை­ஞர்கள் தாங்கள் வேறு­வி­த­மாக நடத்­தப்­ப­டு­கின்றோம் என்ற மன­நி­லையை அடை­யக்­கூ­டாது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதிரான யுத் தம் நிறைவடைந்து விட்டது. யுத்த மற்ற சூழலே தற்போது உள்ளது. பிரிக்க முடியாத, பிளவுபடுத்த முடியாத ஐக்கிய நாட்டிற்குள்ளேயே அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றோம். ஆகவே ஐக்கியத்தினை ஏற்படுத்துவதற்கான விடயங்களை விடு த்து செயற்படுத்த முடியாது. அரசியல் கைதி களின் விடயத்தினை உடடியாக தீர்க்க வேண்டும். நீதி அமைச்சர் தங்களது கொரிய விஜயம் நிறைவடைந்தவுடன் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சராகிய நீங்கள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கூட்டமொன்றினை உட னடியாக ஏற்பாடு செய்யுங்கள். அதில் நாங்களும் பங்கேற்பதற்கு தயாராகவே உள் ளோம். அந்தக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-21#page-2

  • கருத்துக்கள உறவுகள்

அறளை பெயர்ந்தால் இப்படி எல்லாம் கதைப்பினமாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த மனிசனும் 40 வருசத்துக்கு மேலாய் கிழிச்ச கோட்டைதாண்டாமல் காட்டுக்கத்து கத்திக்கொண்டேயிருக்குது. சிங்களவனும் உந்தாளை வடிவேலுவை பாக்கிறமாதிரியே பார்த்து சிரிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வீட்டுக்கு வந்து ..
பேப்பர் படிக்க தொடங்கிடாரா ?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.