Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் நேற்று(24) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அங்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் இன்று(25) அம்பாறை கல்முனையில் மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

இந்த சந்திப்பிற்கு  த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதன் செயலாளர் துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், கோடீஸ்வரன், துரைரெட்னசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இராஜேஸ்வரன், கலையரசன் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக அங்கு வருகைதந்த பிரமுகர்கள் விளக்கமளித்ததுடன் மேலதிக விளக்கங்களை இரா.சம்மந்தன் தெளிவூட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-meeting-start-in-eastern-province

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி பெரிசா எதுவும் பண்ணலயே இவங்ககிட்ட போய் நிற்கிறதுக்கு  இது வெறும் படம் காட்டும் செய்தி அவ்வளவுதான் சொல்ல முடியும் 

  • தொடங்கியவர்

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய  கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன்

  • தொடங்கியவர்
‘தமிழர் தரப்பிலுள்ளவர்களில் சிலர் புதிய அரசமைப்பை முறியடிக்க கங்கணம்’
 

image_0edf9e3b1b.jpg

பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

தமிழ் தரப்பிலேயே, தங்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சில போலி தேசியவாதிகள், புதிய அரசமைப்பை முறியடிப்பதற்குக் கங்கணம் கட்டியுள்ளார்களென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பேடினன்ட் மண்டபத்தில் நேற்று (25) மாலை நடைபெற்ற புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகத் தெளிவூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

“புதிய அரசமைப்புச் சட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதிலே, சிங்கள தீவிரவாதிகள் மிகவும் மும்மூரமாக இருக்கிறார்கள். அத்துடன், அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளிவந்த உடனேயே, இதனை நிராகரித்துவிட வேண்டும், இதிலே தமிழருக்கு எதுவும் இல்லை, கிடையாது என்ற கருத்துகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவர்கள் மத்தியிலிருந்து கூட வெளிவந்தது.

“அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, சம்பந்தன் ஐயாவும் நானும் வழிநடத்தல் குழுவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று கூட, த.தே.கூவில் இருந்தவர்களிடமிருந்து கருத்துகள் வந்தன. அதைப் பலர் தூண்டிக் கொண்டிருந்தார்கள்.

“உபகுழு அறிக்கை வந்தபோது, அதில் இருந்த முன்னேற்றங்களை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது வருமா? வராதா? என்பதை விடுத்து, இந்தளவு தூரம் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை எதிர்பார்த்திருக்காத காரணத்தாலேயே, அது குறித்து விமர்சனமும் செய்யவில்லை. அவர்கள் எதிர்பார்த்ததை விட முன்னேற்றகரமாக அமைந்திருந்தது.

“இடைக்கால அறிக்கை சற்று தமதமாக வந்தபோதிலும், அந்த அறிக்கை எவ்வாறு இருந்தாலும் அதற்குப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு எங்களில் சிலர் அப்போதே வந்துவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக, அறிக்கை வந்தவுடன், அதை நிராகரிக்க வேண்டுமென, வடக்கு முதலமைச்சர் அறிக்கைவிட்டார்.

“இடைக்கால அறிக்கையை நிராகரித்துவிட வேண்டும்”, “மக்களைக் குழப்பிவிட வேண்டும்”, “இதன் மூலமாக, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது”, “இதிலே தமிழ் மக்களுக்கு ஒன்றுமில்லை” எனக் கோஷமிடுவது, ஏற்கெனவே தயார்படுத்திய விடயம்” என்றார்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழர்-தரப்பிலுள்ளவர்களில்-சிலர்-புதிய-அரசமைப்பை-முறியடிக்க-கங்கணம்/73-207927

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இடைக்கால அறிக்கை சற்று தமதமாக வந்தபோதிலும், அந்த அறிக்கை எவ்வாறு இருந்தாலும் அதற்குப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு எங்களில் சிலர் அப்போதே வந்துவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக, அறிக்கை வந்தவுடன், அதை நிராகரிக்க வேண்டுமென, வடக்கு முதலமைச்சர் அறிக்கைவிட்டார்.

“இடைக்கால அறிக்கையை நிராகரித்துவிட வேண்டும்”, “மக்களைக் குழப்பிவிட வேண்டும்”, “இதன் மூலமாக, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கிறது”, “இதிலே தமிழ் மக்களுக்கு ஒன்றுமில்லை” எனக் கோஷமிடுவது, ஏற்கெனவே தயார்படுத்திய விடயம்” என்றார்.

 இவரின் பொய் புளுகுகளை கேட்டு  ஏமாறாவண்ணம் மக்களை  முதல்வர் தடுத்து  போடுவார் என்று இவருக்கு ஒரு பயம் எப்போதுமே உண்டு. அதனால எந்தப் பேச்சிலும் முதல்வரை வம்புக்கு இழுத்து கேலி செய்து இனத்தை காட்டிக்கொடுத்து அரசியல் செய்யும் துர்பாக்கிய நிலையில் உள்ளார்.

 

On 11/25/2017 at 11:47 PM, நவீனன் said:

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் நேற்று(24) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளது

இதென்ன புதுசா? தேர்தல் காலங்களில் கூடுற சந்தைதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.