Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இலங்கை ஒருநாள் போட்டி செய்திகள்

Featured Replies

இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர்  

 
Kohli-1-1-696x464.jpg
 

இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஓருநாள் தொடரில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வினை வழங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று திங்கட்கிழமை (27) தெரிவித்திருக்கின்றது.   

எனினும், தற்பொழுது நடைபெற்று வரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினை தொடர்ந்து கோஹ்லி தலைமை தாங்கி வழிநடாத்துவார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகும் போட்டியுடன் தொடங்குகின்றது. கோஹ்லிக்குப் பதிலாக ஒரு நாள் தொடரில் இந்திய அணியினை வழிநடாத்த ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை, சொந்த காரணங்களுக்காக இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடது போயிருந்த சிக்கர் தவான் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

 

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), முரளி விஜய், லோக்கேஷ் ராகுல், சிக்கர் தவான், செட்டெஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, ரித்திமன் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, விஜய் சங்கர்

 ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி  

ரோஹித் சர்மா (அணித் தலைவர்), சிக்கர் தவான், அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஸ்வர் குமார், சித்தார்த் கெளல்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இலங்கை அணித் தலைவராக திஸர 

 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்படவுள்ளார். 

thisara-perera.jpg

ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 இலங்கை கிரிக்கெட் அணிகளின் தலைவராக திஸர பெரேரா செயற்படவுள்ளார்.

 

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக உப்புல் தரங்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்திற்கு திஸர பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

 

இந்நிலையில் இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27654

  • தொடங்கியவர்

இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை ஒரு நாள் குழாம் அறிவிப்பு

19554752_1595568947183331_41762754590329
 

இம்மாதம் 10ஆம் திகதி இந்தியாவின் தர்மாசாலாவில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாத்தினை புதிய தலைவர் திசர பெரேரா வழிநடாத்தவுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ள இலங்கை அணி, அடுத்து எதிர்கொள்ளவுள்ள பலம் கொண்ட இந்திய அணியுடனான ஒரு நாள் தொடருக்கான 15 பேர் கொண்ட ஒரு வலுவான குழாத்தினை இலங்கை கிரிக்கெட் இன்று (04) அறிவித்துள்ளது.

 

இலங்கை அணிக்கு இந்த வருடம் மிகவும் மோசமான ஆண்டாகவே உள்ளது. இந்த ஆண்டில் 21 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை வீரர்கள் வெறும் 4 வெற்றிகளை மாத்திரமே பெற்று மிகவும் மோசமான பதிவுடன் உள்ளனர். இதில் 12 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

குறித்த தோல்விகளில், உபுல் தரங்கவின் தலைமையில் தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் பெற்ற வைட்வொஷ் தோல்விகள் மிக மோசமான முடிவுகளாக அமைந்தன. இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக திசர பெரேராவை நியமிக்க இலங்கை தேர்வுக்குழு கடந்த வாரம் முடிவெடுத்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் காலியில் இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் கையில் ஏற்பட்ட உபாதையினால் நீண்ட கால ஓய்வில் இருந்த அசேல குனரத்ன மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, அவர் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியின் மத்திய வரிசையைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று, அணிக்கு மேலும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் மத்திய வரிசையைப் பலப்படுத்துவதற்காக முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் அணியில் இணைந்துள்ளார். அவரும் உபாதை காரணமாக முன்னர் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை குழாமில் இடம்பெறவில்லை.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரில் 5 இன்னிங்சுகளில் விளையாடி மொத்தமாக 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இதன் காரணமாக அவர் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

அவருடன் சேர்த்து மத்திய வரிசையில் ஆடும் ஏனைய வீரர்களான சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோரும் ஐக்கிய அரபு இராட்சியத்தில் பாகிஸ்தானுடன் சோபிக்கத் தவறியமையினால் அடுத்த ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர் குசல் மென்டிசை இலங்கை தேர்வுக் குழுவினர் தொடர்ந்தும் இணைக்க இனங்கவில்லை.

அதேநேரம், கடந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து உபாதையை எதிர்கொண்டுவந்த அணியின் மற்றொரு இளம் அதிரடி ஆட்டக்காரர் குசல் ஜனித் பெரேரா தற்பொழுது மற்றொரு உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால் அவரும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடருக்கு அணியில் இணைக்கப்படவில்லை. பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் இருந்து திரும்பிய பெரேராவின் கையில் உபாதை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் 12 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 42.41 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டுள்ள அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குனதிலக்க பாகிஸ்தான் அணியுடனான இறுதித் தொடருக்கான குழாமில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், இடது கை துடுப்பாட்ட வீரரான அவர், இந்திய அணியுடனான போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இலங்கை ஒரு நாள் அணியில் இணைகின்றார்.

 

 

இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக ஜெப்ரி வெண்டர்சே மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் செயற்படவுள்ளனர். அவர்களுடன் இடதுகை சுழற்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்களான சதுரங்க டி சில்வா மற்றும் சிசித் பதிரன ஆகியோருக்கு குழாமில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்பொழுது ஒரு நாள் குழாமிற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய 9 வீரர்களும் இன்று இரவு (04) நாட்டில் இருந்து இந்தியா செல்லவுள்ளனர்.

இலங்கை ஒரு குழாம்

திசர பெரேரா (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குனதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குனரத்ன, சதுரங்க டி சில்வா, சிசித் பதிரன, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மன்த சமீர, சுரங்க லக்மால், நுவன் பிரதீப்

 இலங்கை – இந்திய ஒரு நாள் தொடர் அட்டவணை

முதல் போட்டி – தர்மாசாலா – டிசம்பர் 10ஆம் திகதி – மு.ப 11.30

இரண்டாவது போட்டி – மொஹாலி – டிசம்பர் 13ஆம் திகதி – மு.ப 11.30

மூன்றாவது போட்டி – விசாகபட்டினம் – டிசம்பர் 17ஆம் திகதி – பி.ப 1.30

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்

 

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை நடக்கிறது.

 
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்
 
தர்மசாலா:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.

கேப்டன் வீராட் கோலி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒய்வு கொடுக்கப்படுகிறது. அவர் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

வீராட்கோலி இல்லாததால் ரோகித்சர்மா அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். கோலி இல்லாத இந்திய அணி அதே உத்வேகத்துடன் விளையாடி இலங்கையை வீழ்த்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒருநாள் தொடரை இழந்தது இல்லை. தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது.

ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0), ஆஸ்திரேலியா (4-1), நியூசிலாந்து (2-1) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 அணிகளை மட்டும் அந்நாட்டு மண்ணில் வீழ்த்தி இருந்தது. மீதியுள்ள 4 ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் வென்றது.

இந்திய அணி தற்போது இலங்கையை வீழ்த்தி தொடர்ச்சியாக 8-வது ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
 
201712091218404663_1_kumar._L_styvpf.jpg


டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒயிட்வாஷ் (0-5) ஆகி இருந்ததால் அதற்கு பழிதீர்க்கும் ஆர்வத்துடனும் திகழ்கிறது.

ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. பெரைரா தலைமையில் அந்த அணிக்கு இதனால் பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளைய ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பொதுவாக பகல் - இரவு ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தான் தொடங்குகிறது. பனிபொழிவு அதிமாக இருக்கும் என்பதால் 2 மணிநேரம் முன்னதாக போட்டி தொடங்கப்படுகிறது.

இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), தவான், ரகானே, கேதர்ஜாதவ், டோனி, ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யசுவேந்திர சகால், பும்ரா, புவனேஷ்வர்குமார், சித்தார்த் கபூல்.

இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), உபுல் தரங்கா, திரிமானே, மேத்யூஸ், லக்மல், சமரவிக்ரமா, குஷால் பெரைரா, தனன் ஜெயா டிசில்வா, அகிலா தனன்ஜெயா, சதுரங்க டிசில்வா, சமீரா, டிக்வெலா, நுவன், பிரதீப், குணரத்தனே, குணதிலகா, பதிரனா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/09121839/1133598/India-vs-Sri-Lanka-First-ODI-match-clash-on-tomorrow.vpf

  • தொடங்கியவர்
 

இலங்கை அணியின் போராட்டம் ஒரு நாள் தொடரில் எவ்வாறு அமையும்?

SlvIND.jpg
 

ஒருவரின் உண்மையான தோல்வி என்பது, அவர் விருப்பம் கொண்ட விடயத்தில் எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதே, அந்தவகையில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தோல்விகளால் துவண்ட இலங்கை அணிக்கு, முயற்சி செய்தால் எவ்வாறான விடயங்களையும் சாதிக்க முடியும் என்பதற்குரிய மனவலிமையை தந்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தமது அயல் நாட்டோடு இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என பறிகொடுத்திருப்பினும், அத்தொடரில் இளம் இலங்கை வீரர்களின் நேரான அணுகுமுறை இழந்த தங்களது பெருமைகளை மீட்டுக் கொள்ள நீண்டகாலம் எடுக்கப் போவதில்லை என்பதையும் காட்டி நிற்கின்றது.

 

இதன் அடிப்படையில் மிகவும் பலம்மிக்க இந்தியாவுடன் இலங்கை ஞாயிற்றுக்கிழமை (10) தர்மசலாவில் ஆரம்பமாகும் ஒரு நாள் போட்டியோடு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரொன்றில் மீண்டும் மோதுகின்றது.

வரலாறு

இலங்கை அணி ஒரு நாள் போட்டிகள் விளையாட ஆரம்பித்து நான்கு வருடங்களின் பின்னரே (அதாவது 1979 ஆம் ஆண்டிலேயே) இந்திய அணியுடன் முதலாவது தடவையாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்தது.

அன்று தொடக்கம் இன்று வரை இரண்டு அணிகளும் 155 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. இதில் 88 போட்டிகளில் இந்திய அணி தமது ஆதிக்கத்தைக் காட்ட இலங்கை 55 போட்டிகளிலேயே வெற்றி பெற்றிருக்கின்றது. ஒரு போட்டி சமநிலைக்கு வர, 11 போட்டிகள் எந்த முடிவுமின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரொன்றை இறுதியாக இலங்கை அணி 1997 ஆம் ஆண்டிலேயே கைப்பற்றியிருந்தது. அத்தோடு இதுவரை இந்திய மண்ணில் எந்தவொரு ஒரு நாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இரண்டு அணிகளும், இலங்கையின் சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதியிருந்தன. இந்த ஒரு நாள் தொடரை இந்தியா 5-0 என இலங்கை அணியை வைட் வொஷ் செய்து கைப்பற்றியிருந்தது.

எனவே இறுதியாக இலங்கை அணி அடைந்த தோல்விகளுக்கு பதில் தர நடைபெறப்போகும் ஒரு நாள் தொடர் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை அணி

டெஸ்ட், T-20 போட்டிகளை ஒரு ஓரத்தில் வைத்தாலும் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகள் இலங்கை அணிக்கு மிகவும் கொடூரமாக அமைந்திருந்தது. 21 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் இலங்கை அணி, இவ்வருடத்தில் 4 வெற்றிகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது.

இதில் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பெற்ற மூன்று வைட்வொஷ்  தொடர் தோல்விகள் அடங்குகின்றன. இறுதியாக தாம் விளையாடிய 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி ஒருநாள் தரவரிசையில் தற்போது எட்டாம் இடத்தில் காணப்படுகின்றது. இவ்வாறான களநிலவரங்கள்  இலங்கை கிரிக்கெட் அணியில் பலமாற்றங்கள் ஏற்பட வழிவகைகள் செய்திருந்தது. அந்தவகையில், இலங்கை அணி இந்தியாவுடனான இந்த ஒரு நாள் தொடரில் புதிய அணித் தலைவரான திசர பெரேராவின் தலைமையின் கீழ் செயற்பட இருப்பது குறிப்பிடத்தக்கது  

சகல துறை வீரரான பெரேராவுக்கு தலைமைத்துவப் பதவி வழங்கப்பட்டுள்ளதால் இலங்கையின் முன்னாள் தலைவர் உபுல் தரங்கவுக்கு அழுத்தம் எதுவுமின்றி தனது தரப்பின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்த எதிர்பார்க்க முடியும். இந்த வருடத்தில் இலங்கை சார்பாக 47.77 என்ற சராசரியுடன் அதிக ஓட்டங்கள் (860)  குவித்த வீரராக தரங்க காணப்படுகின்றார். சனத் ஜயசூரியவின் காலத்தில் இருந்து இலங்கை அணியில் இருக்கும் தரங்க இந்திய அணிக்கு எதிராக அதிக அனுபவம் கொண்ட வீரராகவும் இருக்கின்றார். தரங்க ஒரு நாள் போட்டிகளில் வாழ்நாளில் பெற்றுக் கொண்ட மொத்த ஓட்டங்களில் 17 சதவீதமானவை இந்தியாவுக்கு எதிராக பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனவே, இலங்கை அணிக்கு இந்த ஒரு நாள் தொடரில் துருப்பு சீட்டு துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவே ஆவார்.

தரங்க பாகிஸ்தானுடனான ஒரு நாள் தொடரிலும் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்த வீரராவார்.

Upul-Tharanga-2-300x200.jpg உபுல் தரங்க

இலங்கை அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தமது காயங்களிலிருந்து மீண்டு, மீண்டும் குழாமில் உள்வாங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும். இவர்களோடு சேர்த்து இலங்கை அணிக்கு மேலும் வலுச்சேர்க்க இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர். இதில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்த வருடம் இலங்கை அணிக்காக 52.50 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் ஓட்டங்கள் சேர்த்திருக்கின்றார்.

இந்திய அணியுடன் இறுதியாக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் மெதிவ்ஸ் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்கள் (192) சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

angelo-mathews-300x200.jpg அஞ்செலோ மெதிவ்ஸ்

மெதிவ்சுடன் சேர்த்து நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணிக்கு பெறுமதி சேர்க்க கூடிய மிக முக்கிய வீரராவார். இந்த வருடத்தில் 770 ஓட்டங்களை ஒரு நாள் போட்டிகளில் பெற்றிருக்கும் திக்வெல்ல, அண்மைய ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பதிவைக் காட்டாது போயினும் இந்த ஒரு நாள் தொடரில் அதிலிருந்து மீள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு இலங்கை அணிக்கு இன்னும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க, லஹிரு திரிமான்ன, பகுதி நேர துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா ஆகியோர் இருப்பது மேலும் பலம் சேர்ப்பதாகும்.

Niroshan-Dikka-300x200.jpg நிரோஷன் திக்வெல்ல

இலங்கை அணியின் பந்துவீச்சை எடுத்து நோக்கும் போது, அணித் தலைவர் திசர பெரேரா, சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் போன்ற வீரர்களுடன் இணைந்து வேகப்பந்துவீச்சுத்துறையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிகமாக மெதிவ்ஸ் பந்து வீசினால் அது இலங்கைக்கு உதிரி ஆதரவாக அமையும்.

Thisara Perera திசர பெரேரா

இலங்கை அணி அனுபவம் குறைந்த சுழற்பந்து வீச்சாளர்களுடனேயே இந்திய அணியை எதிர்கொள்கின்றது. எனினும், இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில், மொத்தமாக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய இந்திய அணியை இம்முறையும் மிரட்டுவார் என்பதற்கு ஆதரமாகக் கொள்ள முடியும்.

“நாங்கள் எங்களது நம்பிக்கையை இழந்திருந்தோம், உங்களுக்கு எமது வீரர்கள் பயிற்சி ஆட்டங்களின் போது செய்வதை வந்து பார்க்க முடியுமாயின் நீங்கள் பிரம்மித்துப் போவீர்கள். இங்கு செய்வதையே நாங்கள் மைதானத்திலும் வெளிப்படுத்துவோம் எனின், அது வித்தியாசமான ஒரு அணியை உங்களுக்குக் காட்டும். என்னுடைய சொந்தக் கருத்துப்படி நாங்கள் தொடர்ச்சியாக எமது தன்னம்பிக்கைகளை இழந்துவிட்டோம். இந்த விடயத்தையே நாம் மாற்றி முன்னேற வேண்டும்“ என இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா, வீரர்கள் இந்த ஒரு நாள் தொடரில் முன்னேற்ற வேண்டிய முக்கியமான விடயம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

 

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி 

நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, உபுல் தரங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, சதீர சமரவிக்ரம/குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா (அணித்தலைவர்), சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அகில தனஞ்சய

இந்திய அணி

ஒரு நாள் போட்டிகள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து அவர்கள் பங்குபற்றிய ஏனைய அனைத்து ஒரு நாள் தொடர்களும் (சம்பியன் கிண்ணம் தவிர்ந்த) மிகவும் வெற்றிகரமாகவே அமைந்திருந்தது. சம்பியன் கிண்ணத் தொடரை அடுத்து இந்திய அணி தாம் பங்குபற்றிய இறுதி நான்கு ஒரு நாள் தொடர்களையும் கைப்பற்றியிருக்கின்றது. இப்படியாக அதி வலுவான நிலையில்  காணப்படும் இந்திய அணி, இந்த ஒரு நாள் தொடரிலும், T-20 தொடரிலும் அதிக வேலைப்பளு கருதி அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கியுள்ளது. இதனால் இந்திய அணியை ரோஹித் சர்மா தலைமை தாங்குகின்றார்.

கோஹ்லி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை பலம் குன்றியதாக மாறிவிட்டதாகக் கருதிவிட முடியாது. இலங்கை அணியை இந்தியா சொந்த மண்ணில் வைத்து 5-0 என வைட் வொஷ் செய்த ஒரு நாள் தொடரின் பின்னர் பலமிக்க இரண்டு அணிகளுடான தொடர்களில் (அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) விளையாடியிருக்கின்றது. அந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்றக் காரணமாக அமைந்த ரோஹித் சர்மா இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரோடு சேர்த்து 772 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு சர்மா முதுகெலும்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit-Sharma-1-300x200.jpg ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவோடு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானும் இலங்கை அணிக்கு அபாயமாக இருக்கக் கூடிய மற்றுமொரு வீரர் ஆவார். இலங்கை அணிக்கு எதிராக 67.91 என்ற ஓட்ட சராசரியை தவான் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Shikar-Dawan-200x300.jpg சிக்கர் தவான்

மத்திய வரிசையைப் பலப்படுத்த மஹேந்திர சிங் தோனி, அஜிங்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர்களையே பெரிதும் நம்பியிருக்கும் இந்திய அணிக்கு ஜஸ்பிரிட் பும்ரா மிகவும் முக்கியமான ஒருவர், இலங்கை அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் பும்ரா மொத்தமாக 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா புவ்னேஸ்வர் குமாருடன் இணைந்து இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்க்கக் கூடிய ஒருவர் ஆவார்.  

Jaspirit-Bumrah-300x200.jpg ஜஸ்பிரிட் பும்ரா

யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்றவர்கள் இந்திய அணிக்கு சுழல் வீரர்களாக பங்களிப்பு வழங்குவதை எதிர்பார்க்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி 

ரோஹித் சர்மா(அணித்தலைவர்), சிக்கர் தவான், அஜிங்கியா ரஹானே, ஹர்திக் பாண்டியா, மஹேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவ்னேஸ்வர் குமார்,  ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

இலங்கை – இந்தியா ஒரு நாள் தொடர் அட்டவணை

  • முதலாவது ஒரு நாள் போட்டி – டிசம்பர் 10 – தர்மசலா – காலை 11.30 மணி
  • இரண்டாவது ஒரு நாள் போட்டி- டிசம்பர் 13 – மொஹாலி – காலை 11.30 மணி
  • மூன்றாவது ஒரு நாள் போட்டி – டிசம்பர் 17 – விசாகப்பட்டிணம் – பகல் 1.30 மணி

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்திய அணியில் திடீர் மாற்றம்: தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

 

 
Washington_Sundar22211xx

 

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க தொடர் நடைபெறும் நிலையில், தனக்கு ஓய்வு வேண்டியும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பிசிசிஐ-யிடம் விராட் கோலி ஓய்வு அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமித்தது. இதனிடையே முன்பு அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சனிக்கிழமை தடீர் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், தசை பிடிப்பு காரணத்தால் காயமடைந்துள்ளதால் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சி பெற்று வருகிறார். 

முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 9-ந் தேதி (நாளை) நடைபெறுகிறது. பின்னர் 13, 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், கேதர் ஜாதவ், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வாஷிங்டன் சுந்தர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/09/washington-sundar-replaced-injured-kedar-jadhav-in-indian-team-for-odi-series-against-sri-lanka-2823394.html

  • தொடங்கியவர்

பந்துவீச்சைத் தெரிவுசெய்த இலங்கை அணி

இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தெரிவுசெய்துள்ளது.

9_SL.JPG

திசர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, டெஸ்ட் தொடரில் வெற்றியைத் தொலைத்திருப்பதால் ஒருநாள் தொடரைத் தம் வசப்படுத்தும் முயற்சியில் கடுமையாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தாலும் துடுப்பாட்டத்தையே தாம் தெரிவுசெய்ய இருந்ததாகக் கூறிய ரோஹித் ஷர்மா, “நாணயச் சுழற்சியில் தோற்றதும் நல்லதற்கே” என்று கூறியுள்ளார்.

திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் விராட் கோலி ஓய்வு பெற்றிருப்பதால், தலைமைப் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோலியின் இடம் வெற்றிடமாக இருக்கின்றபோதும், தோனி, தவான், தினேஷ் கார்த்திக், ரோஹித் ஷர்மா, ரஹானே என துடுப்பாட்ட வீரர்களுக்குப் பஞ்சமில்லை.

வலைப் பயிற்சியில் தோனி அபாரமாகப் பந்துவீசும் காட்சிகள் ட்விட்டரில் வெளியானதையடுத்து, இப்போட்டியில் தோனி பந்து வீசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/28074

87/8 * (34/50 ov)
  • தொடங்கியவர்

29 ரன்னுக்குள் 7 விக்கெட்: இலங்கை பந்து வீச்சில் நிலைகுலைந்தது இந்தியா

 

தரம்சாலாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

 
29 ரன்னுக்குள் 7 விக்கெட்: இலங்கை பந்து வீச்சில் நிலைகுலைந்தது இந்தியா
 
இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இலங்கை கேப்டன் பெரேரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முதன்முறையாக ஷ்ரேயாஸ் அய்யர் இடம்பிடித்துள்ளார். தொடக்க வீரர் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து மற்றும் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்தனர்.

தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லக்மல் முதல் ஓவரை வீசினார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால் இலங்கையின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முதல் ஓவரில் இந்தியா ரன்ஏதும் எடுக்கவில்லை. 2-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆனார். அப்போது இந்தியா ரன்ஏதும் எடுக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது.

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். 3-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஒரு ரன் எடுத்தது. 4-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் இந்தியா ரன்ஏதும் எடுக்கவில்லை. 5-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். இவர் 13 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்களை இழந்தது.

201712101310196151_1_dharamsala003-s._L_styvpf.jpg

3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் ஐந்து ஓவரில் 5 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி அடித்தார். 9-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் தினேஷ் கார்த்திக் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. 13-வது ஓவரை லக்மல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் மணீஷ் பாண்டே ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் டோனி ஜோடி சேர்ந்தார். 14-வது ஓவரை பிரதீப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 16 ரன்னுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

6-வது விக்கெட்டுக்கு டோனி உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் இந்தியாவை இந்த ஜோடி கரை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அப்போது இந்தியா 28 ரன்கள் எடுத்திருந்தது.

201712101310196151_2_dharamsala001-s._L_styvpf.jpg

7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். புவனேஸ்வர் குமார் ரன்ஏதும் எடுக்காமல் லக்மல் பந்தில் ஆட்டம் இழந்தார். 17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. டோனி 2 ரன்னுடனும், குல்தீப் யாதவ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

அவுட்டான வீரர்க்ள எடுத்த ரன்கள்: ரோகித் சர்மா 2, தவான் 0, ஷ்ரோயஸ் அய்யர் 9, தினேஷ் கார்த்திக் 0, மணீஷ் பாண்டே 2, ஹர்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் 0

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. மணீஷ் பாண்டே, 5. தினேஷ் கார்த்திக், 6. எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), 7. ஹர்திக் பாண்டியா, 8. புவனேஸ்வர் குமார், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. சாஹல்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. உபுல் தரங்கா, 2. தனுஷ்கா குணதிலகா, 3. திரிமானே, 4. மேத்யூஸ், 5. அசேலா குணரத்னே, 6. நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), 7. திசாரா பெரேரா, 8. சுசித் பதிரனா, 9. சுரங்கா லக்மல், 10. அகிலா தனஞ்ஜெயா, 11. நுவான் பிரதீப்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/10131017/1133750/INDvSL-ODI-india-lose-7-wicket-just-29-runs.vpf

  • தொடங்கியவர்

இலங்கையின் பந்து வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகியது இந்தியா : வெற்றி இலக்கு  113

 

 
 

இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சிக்கி சின்னாபின்னமாகிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

india.jpg

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவுப் போட்டியாக இந்தியாவின் தர்மசாலாவில் இடம்பெற்று வருகின்றது.

270770.jpg

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேரா முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.

270771.jpg

அதன்படி முதலில் பந்துவீச களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் துடுப்பாட்ட பலத்தை கதிகலங்க வைத்தது.

ஒரு  நேரத்தில் இந்திய அணியை குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தும் நிலைமையில் இலங்கை அணி இருந்தது.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தடுமாறிய இந்திய வீரர்கள், ஆரம்பம் முதல் வீர்கள் மைதானத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

270775.jpg

இந்திய அணியின் முதலாவது விக்கெட் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ( தவான் 0 ) சரிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது விக்கெட் 2 ஓட்டங்களைப் பெற்றபோதும் (ரோஹித் சர்மா 2 ) 3 ஆவது விக்கெட் 8 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( டினேஸ் கார்த்திக் 0 ) 4 விக்கெட் 16 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( பாண்டியா 2 ) 5 விக்கெட் 16 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( ஐயர் 9 ) 6 விக்கெட் 28 ஒட்டங்களைப் பெற்றபோதும் ( ஹார்திக் பாண்டியா 10 ) 7 விக்கெட் 29 ஓட்டங்களைப் பெற்றபோதும் ( புவனேஸ்வர் குமார் 0 ) சரிக்கப்பட்டன.

இதையடுத்து டோனியுடன் 8 விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குல்தீப் யாதேவ் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார்.

270776.jpg

இந்நிலையில் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதை வெளிப்படுத்திய இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்சய 8 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை முறியடித்தார்.

இந்திய அணியின் 8 விக்கெட் 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ( யாதவ் 19 ) வீழ்த்தப்பட்டது. 9 ஆவது விக்கெட் 87 (பும்ரா 0 ) ஓட்டங்களைப் பெற்றிருந்த போது வீழ்த்தப்பட்டது. இறுதி விக்கெட் 112 (டோனி 65 ) ஓட்டங்களைப்பெற்றிருந்தபோது பறிக்கப்பட்டது.

இந்திய அணியில் மகேந்திரசிங் டோனியைதவிர எவரும் பெரிதாக துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. 

67 ஆவது அரைச்சத்தைப்பூர்தி செய்த அனுபவவீரர் மகேந்திரசிங் டோனி 65 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.

 

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசிய சுரங்க லக்மால் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசியதுடன் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நுவான் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மெத்தியூஸ் , திஸர பெரேரா , தனஞ்சய டி சில்வா மற்றும் பத்திரண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இறுதியில் இந்திய அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது

இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் 50 ஓவர்களில் 113 ஓட்டங்களைப் பெறவேணடும். பொருத்திருந்து பார்ப்போம் போட்டி எவ்வாறு அமையப்போகின்றதென.

http://www.virakesari.lk/article/28085

  • தொடங்கியவர்
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா தோல்வி
  • தொடங்கியவர்

7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி

 

 
upul_tharanga

 

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் டக்-அவுட்டாக, 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் டக்-அவுட்டானார். மணீஷ் பாண்டே 2, ஹார்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்நிலையில், ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நங்கூரமாய் நின்ற தோனி, ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார்.

சற்று தாக்குபிடித்த குல்தீப் யாதவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பும்ராவும் டக்-அவுட்டாக, தோனி அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மொத்தம் 87 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 65 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்காரணமாக இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் அற்புதமாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேத்யூஸ், பெரேரா, தனஞ்ஜெயா, பதிரனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்நிலையில், 113 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் உபுல் தரங்கா 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நடுவரிசை வீரர்களான ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 25 ரன்களுடனும்,  நிரோஷன் டிக்வெல்லா 26 ரன்களுடனும் களத்தில் நின்று இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார், பும்ரா, பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலைப் பெற்றது. 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் டிசம்பர் 13-ந் தேதி புதன்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/10/sri-lanka-won-the-dharamsala-odi-by-7-wickets-against-india-2823835.html

  • தொடங்கியவர்

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி இலங்கை வெற்றி

niroshanjpg

வெற்றிக்களிப்பில் டிக்வெல்லா.   -  படம். | ஏ.பி.

தரம்சலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீச்சுக்குச் சாதகமான பிட்சில் இந்திய அணியை முழு ஆதிக்கம் செலுத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது, இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடம் செல்லும் வாய்ப்பை இந்திய அணி இப்போதைக்கு இழந்தது.

சுரங்க லக்மலின் அபாரமான தொடர் 10 ஓவர்கள் ஸ்பெல்லில் இந்திய அணி 112 ரன்களுக்குச் சுருண்டது. 29/7 என்ற நிலையில் தோனியின் அருமையான 65 ரன்களினால் 112 ரன்களை எட்டியது. ஆனால் இந்தப் பிட்சில் இது போதுமானதல்ல.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கும் பந்துகள் இருபுறமும் ஸ்விங் ஆயின. தனுஷ்கா குணதிலகா மட்டை விளிம்பைக் கடந்து நிறைய பந்துகள் சென்றன. இதில் வெறுப்படைந்து பும்ராவை ஏதாவது செய்ய வேண்டும் என்று நேராக ஒரு தூக்குத் தூக்க வேண்டும் என்று எண்ணினார். எட்ஜ் ஆகி வெளியேறினார். 11 பந்துகளில் 1 ரன்.

பும்ராவும் தனது பந்து வீச்சில் உபுல் தரங்காவை கிட்டத்தட்ட வீழ்த்தினார், கல்லியில் கேட்ச் ஆனது, ஆனால் அது நோ-பால் என்று தெரியவர ஏமாற்றமே மிஞ்சியது. லாஹிரு திரிமானே ஸ்கோரர்களை தொந்தரவு செய்யும் முன்னரே புவனேஷ்வர் குமார் பந்து ஒன்றை முன்னாலும் செல்லாமல் பின்னாலும் செல்லாமல் ஆட முற்பட்டு பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார். இதுவும் நோ-பாலா என்று சோதிக்கப்பட்டது, ரீப்ளேயில் எதுவும் முடிவாகத் தெரியாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அம்மாதிரியான கிரிக்கெட் காலத்தில் நாம் இல்லை என்பதால் திரிமானே வெளியேறினார்.

ஆனால் தரங்கா அதன் பிறகு மிக அழகான டைமிங்கில் சில அபார பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தில் இலங்கை ஆதிக்கத்தை உறுதி செய்தார். பல கவர் டிரைவ்கள் ஆடி 10 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 49 ரன்கள் விளாசி பாண்டியா பந்தை எட்ஜ் செய்து தவணிடம் கேட்ச் ஆனார்.

112 ரன்களை வைத்துக் கொண்டு இந்திய அணி நெருக்கமான களவியூகத்தையே அமைக்க முடியும் இதனால் ஏற்பட்ட இடைவெளிகளை தரங்கா அருமையாகப் பயன்படுத்தி விளாசினார். மேத்யூஸ், டிக்வெல்லா சேர்ந்து அதன் பிறகு 10 பவுண்டரிகலை விளாசி, மேத்யூஸ் 25 ரன்களையும் டிக்வெல்லா 26 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக 20.4 ஓவர்களில் வெற்றி பெறச் செய்தனர். குல்தீப் யாதவ், சாஹல் பந்து வீசவேயில்லை. இது தவறானது, இருவரையும் முயற்சித்துப் பார்த்திருக்க வேண்டும். இம்மாதிரியான பிட்ச்களில் ஷமி, யாதவ் போன்றவர்கள் அபாயகரமாகத் திகழ்வார்கள்.

வருடங்கள் கணக்காக மட்டைப் பிட்சிலேயே ஆடி வந்த இந்திய அணிக்கு இந்தத் தோல்வி ஒரு பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

சுரங்க லக்மல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

http://tamil.thehindu.com/sports/article21385599.ece?homepage=true

  • தொடங்கியவர்

தரம்சாலாவும், இந்திய அணியின் மோசமான சாதனைகளும்!

 

இலங்கை அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஸ்ரேயாஸ் ஐயர்.

 
 


அண்மையில் இலங்கை சென்று விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து வென்றுவந்திருந்தது. மேலும், கேப்டனாக ரோகித் ஷர்மாவுக்கு முதல்தொடர் இது என்பதாலும், விராட் கோலி இல்லாத இந்திய அணி என்பதாலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை இலங்கை அணியின் கேப்டன் திசாரா பெரேரா தேர்வு செய்தது சரி என்பது போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து, இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தொடங்கிவைத்தார். சொந்த மண்ணில் 4 ரன்களுக்குள் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக இந்தியா இழப்பது கடந்த  இருபது ஆண்டுகளில் இதுவே முதல்முறை. முன்னதாக, மும்பையில் கடந்த 1997-ல் நடந்த போட்டியில் இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

தினேஷ் கார்த்திக்-கின் மோசமான சாதனை:

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 18 பந்துகளைச் சந்தித்த, தினேஷ் கார்த்திக் ரன்கணக்கைத் துவங்காமலேயே ஆட்டமிழந்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகளைச் சந்தித்து, ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற ஏக்நாத் சோலங்கியின் சாதனையை அவர் முறியடித்தார். அவர் 17 பந்துகளில் ஆட்டமிழந்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் கடந்த 1974-ல் நடந்த போட்டியில் சோலங்கி, 17 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார். மேலும், இன்றைய போட்டியில் 15 பந்துகளை எதிர்க்கொண்ட பும்ராவும், ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் பத்து ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 11. முதல் பவர் ப்ளே ஓவர்களில் இந்திய அணியின் குறைந்தபட ஸ்கோர் இதுவே.

 

அதேபோல், இன்றைய போட்டியில் இந்திய அணி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. குறைந்த ரன்களில் 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பாக கடந்த 1983-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அந்த போட்டியில் கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் அடித்து அசத்த, இந்தியா அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பியது. மேலும், சொந்தமண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் 112 ஆகும். இதற்கு முன்பாக, கடந்த 1986-ல் இலங்கை அணிக்கெதிரான கான்பூர் மைதானத்தில் நடந்த போட்டியில் 78 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அஹமதாபாத் மைதானத்தில் கடந்த 1993-ல் நடந்த போட்டியில் 100 ரன்களும் எடுத்ததே இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.  

https://www.vikatan.com/news/sports/110340-indias-unwanted-records-in-dharamsala.html

 

 

12 போட்டிகளுக்குப் பின்னர் முதல்முறையாக வெற்றியை ருசித்த இலங்கை!

 
 

தரம்சாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

Tharanga_17319.jpg

 
 


டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, ஒருநாள் போட்டி தொடரில் புதிய கேப்டனான திசாரா பெரேரா தலைமையில் இன்று களம்கண்டது. கேப்டனான முதல் போட்டியிலேயே டாஸ் வென்று அசத்திய பெரேரா, பீல்டிங் தேர்வு செய்தார். பொதுவாக பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருக்கும் தரம்சாலா, இன்று பேட்ஸ்மேன்களை ரொம்பவே வதைத்துவிட்டது. புதிய பந்தில் லக்மல், நுவன் பிரதீப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், மேத்யூஸ் போன்ற மிதவேகப் பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியானது தரம்சாலா. 

முதலில் பேட் செய்யக் களமிறங்கிய இந்திய அணி லக்மல் மற்றும் பிரதீப் ஆகியோரின் அசத்தல் பந்துவீச்சில் 112 ரன்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக தோனி 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி தவிர, குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மற்ற வீரர்கள் எவரும் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. அதிலும் குறிப்பாக 18 பந்துகளைச் சந்தித்து ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்த தினேஷ் கார்த்திக், மோசமான சாதனையைப் படைத்தார். இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

 

113 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்குச் சிறப்பான பந்துவீச்சு மூலம் தொடக்கத்தில் சிரமம் அளித்தது இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் - பும்ரா வேகக்கூட்டணி. தொடக்க வீரர் குணதிலகா, ஒரு ரன்னிலும், திரிமான்னே ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்க இலங்கை அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதையடுத்து உபுல் தரங்காவுடன் கைகோர்த்த மேத்யூஸ், ரன்குவிப்பை வேகப்படுத்தினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது. தரங்கா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிக்வெல்லா, மேத்யூஸுடன் இணைந்து இலங்கை அணியை வெற்றிபெறச் செய்தார். முடிவில் 20.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, தொடர்ச்சியாக 12 போட்டிகளுக்குப் பின்னர் வெற்றியை முதல்முறையாகப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அசத்தலாக பந்துவீசிய சுரங்கா லக்மல், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணியை, அதன் சொந்த மண்ணில், கடந்த 2009-க்குப் பிறகு இலங்கை அணி வெல்வது இதுவே முதல்முறை. 

https://www.vikatan.com/news/sports/110347-indvsl-sri-lanka-defeat-india-to-win-the-first-odi.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘முழிச்சுக்கோ!’ இந்தியாவுக்கு இலங்கையின் எச்சரிக்கை மணி #INDvsSL

 
 

கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் தோல்வி. இந்தியாவுடன் இந்த ஆண்டு ஆடிய 4 தொடர்களிலும் தோல்வி. அணித்தேர்வில் அதிரடி மாற்றங்கள். புதிய கேப்டன். இலங்கை அணி தரம்சாலாவில் களம்காணும் முன்பாகவே எக்கச்சக்க பிரஷர். இந்தத் தொடரில் இலங்கையை வைட்வாஷ் செய்தால், ஒருநாள் ரேங்கிங்கில் இந்தியா முதலிடம் பெறலாம். ‘இந்தியா நிச்சயம் முதலிடம் பெற்றுவிடும்' என்றுதான் அனைவரும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால்.... நடந்ததோ வேறு. கத்துக்குட்டியாய் நினைத்திருந்த இலங்கையிடம் தோல்வி. படுதோல்வி. அதுவும், 112 ரன்னுக்கு ஆல் அவுட். என்னதான் ஆச்சு? #INDvsSL

INDvsSL

 

“நான் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங்தான் தேர்வு செய்திருப்பேன்" - டாஸ் முடிந்ததும், இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன வார்த்தை. இந்திய அணியின் கேம் பிளானே தவறாகத்தான் இருந்தது. ஆட்டம் நடந்தது தரம்சாலாவில். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இடம். அதனால்தான் போட்டி 2 மணி நேரம் முன்னதாகத் தொடங்கப்பட்டது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்போது, அது பந்துவீச்சாளர்களுக்குப் பாதகாமக அமையும். அதனால், சேஸிங் செய்வதையே கேப்டன்கள் விரும்புவார்கள். அதைத்தான் திசாரா பெரேராவும் விரும்பியிருக்கிறார். ஆனால், ரோஹித்....?

அணியின் பிளேயிங் லெவனைப் பார்த்தால் மேலும் அதிர்ச்சி. ரஹானே ஆட்டத்துக்குச் சேர்க்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்தது தவறில்லை. அதற்கு இதுதான் சரியான சமயம். ஆனால், அவரை எங்கு இறக்கியிருக்கவேண்டும்? இந்தியா தடுமாறுவது 4,5-வது இடங்களில். ‘அந்த இடத்தில் யார் ஆடவேண்டும்' என்பதைத்தான் இதுபோன்ற தொடர்களில் இந்தியா தீர்மானிக்கவேண்டும். ஆனால், அவரை இறக்கியது கோலியின் இடத்தில். அதுவே அவருக்கு மிகப்பெரிய பிரஷர். அவரால் நிச்சயம் தன்னுடைய நேச்சுரல் கேமை ஆடியிருக்க முடியாது.

INDvsSL Dickwella

மிடில் ஆர்டர் பிரச்னைகளை இந்தியா தீர்க்க முற்படுவதுபோல் தெரியவில்லை. இந்த இலங்கை அணியுடன் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் மட்டுமே களமிறங்கியதபோல் தெரிந்தது. “எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில்கொண்டே அணி தேர்வு செய்யப்படுகிறது” என்று ஒவ்வொருமுறையும் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத் கூறுகிறார். ஆனால், பிளேயிங் லெவன் அந்த எண்ணத்தோடு தேர்வு செய்யப்படுவதில்லை. பௌலிங் பாண்டியாவோடு முடிந்துவிடுகிறது. கேதர் ஜாதவ் இடத்தில் இன்று மனீஷ் பாண்டே! 113 ரன் டார்கட் என்பதால் ஆறாவது பௌலர் தேவைப்படவில்லை. ஆனால், முழுமையாக 10 ஓவர்கள் வீசுமளவு பாண்டியா ரெடி என்று நம் அணியினர் முடிவுசெய்துவிட்டனரா? நாம் அடுத்து ஆடப்போவது தென்னாப்பிரிக்கா என்பது ரோஹித், ரவி சாஸ்திரி ஆகியோருக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை.

சரி, மேட்சுக்கு வருவோம். அணியின் 30 ரன்களாக இருக்கும்போது, பாண்டியாகூட இதுவரை களமிறங்கியிருக்க மாட்டார். ஆனால், நேற்று குல்தீப் களமிறங்கிவேண்டிய நிலை. 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. இது, அந்த 7 பேட்ஸ்மேன்களின் அலட்சியம் என்று சொல்லிட முடியாது. திரும்பத் திரும்ப நாம் இந்திய கிரிக்கெட்டின்மீது வைத்துவரும் குற்றச்சாட்டுதான் இதற்குக் காரணம் - வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஆடுகளம்... இன்னும் இந்திய பாடம் கற்கவில்லை.

INDvsSL

தவான் பேட்டிங். 'ஓவர் ஸ்டிக்' திசையிலிருந்து பௌலிங் செய்கிறார் மேத்யூஸ். குட் லெங்த்தில், மிடில் ஸ்டம்ப் லைனில் பால் பிட்ச் ஆகிறது. வழக்கமான இந்திய ஆடுகளங்களில், அப்படிப் பிட்ச் ஆகும் பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும். அந்த மைண்ட்செட்டில்தான் தவானும் இருக்கிறார். ஆனால், கொஞ்சம் ஸ்விங் ஆகிறது. எதிர்பார்க்கவில்லை. சுதாரித்து அடிக்கமுடியவில்லை. pad-ல் அடிக்கிறது. அவுட். இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு பூஜ்யம்!

ரோஹித்... குட் லெங்த்தில் வீசுகிறார் லக்மல். மீண்டும் பந்து பேட்டுக்கு வெளியே ஸ்விங் ஆகிச்செல்கிறது. கொஞ்சம் பௌன்ஸ் வேறு. பௌன்ஸை ரோஹித் எதிர்பார்க்கவில்லை. அவுட். இரண்டுக்கு இரண்டு! லக்மல், மேத்யூஸ் இருவரின் பந்துவீச்சிலும் அவ்வளவு துல்லியம். கொஞ்சம் கூட டைமிங் கொடுக்கவில்லை. பெரும்பாலான பந்துகள் மிடில் ஸ்டம்ப் லைனில்தான் வீசப்பட்டன. ஆனால், இருபுறமும் அவர்கள் ஸ்விங் செய்ததில்தான் இந்திய பேட்ஸ்மேங்கள் திக்குமுக்காடிப் போயினர். ஸ்விங் ஆகி வெளியே சென்ற பந்து ரோஹித்தைக் காவு வாங்கியது. இன்ஸ்விங் பாலுக்கு தினேஷ் கார்த்திக் அவுட்.

Lakmal

முந்தைய தொடர்களில் சொதப்பியதால், ஏற்கெனவே மனீஷ் பாண்டே மீது பிரஷர். அவர் ஆடவந்த சூழ்நிலை. அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றது. 15 பந்துகள் ஆடிய அவரிடம், கொஞ்சம் கூட ஃபூட் மூவ்மென்டைக் காண முடியவில்லை. இவரும் லக்மலின் ஸ்விங்குக்கு பலியானார். ஸ்ரேயாஸ்...அதுவரை கொஞ்சம் பொறுமை காட்டியவர், நுவான் பிரதீப் வீசிய அந்தப் பந்தில் பேராசை கொண்டு அவுட் ஆனார். அதுவரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்த லெங்த்திலிருந்து மாறுபட்டு, ஃபுல் லெங்த்தில், வெளியே வீசினார் பிரதீப். கட் செய்ய நினைத்து இன்சைடு எட்ஜாகி வெளியேறினார். 

இவரைப் போலத்தான் பாண்டியாவும். அணி இருந்த நிலையில் எதற்கு அவ்வளவு அவசரம் காட்டினார் புரியவில்லை. 'இப்படித்தான் ஆடவேண்டும்' என்று எந்த பிளானும் இல்லை. அதற்கு முன் 5 பேட்ஸ்மேன்கள் எப்படி அவுட் ஆனார்கள் என்ற சிந்தனையும் இல்லை. அவட்ரையெல்லாம் யோசித்து, ஒரு மெச்சூர்டு இன்னிங்ஸ் ஆடும்வரை, சிறந்த ஆல்ரவுண்டர் ஆகிட முடியாது ஹர்டிக்! பேட்ஸ்மேன்களே இப்படி வெளியேற, பௌலர்கள் அவுட் ஆனதை குறைசொல்ல முடியாது. குல்தீப் - நேற்று அணியின் இரண்டாவது பெஸ்ட் பேட்ஸ்மேன். நிச்சயம் பாராட்டப்படவேண்டும். 

Dhoni

இப்படி எல்லோரும் வருவதும் போவதுமாக இருக்க, பலரும் ஓய்வு பெறச்சொன்னவர் மட்டும் ஓயாமல் நின்று ஆடிக்கொண்டிருந்தார். தோனி அடித்த 65 ரன்கள்தான், மிகக்குறைந்த ஸ்கோர் எடுக்காமல் இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றியது. இந்த இன்னிங்ஸ் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மிகச்சிறந்த பாடம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகும், பிட்சின் தன்மை அறிந்த பிறகும், அதற்குத் தகுந்தார்போல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிட்ச் ஸ்விங் ஆவதை உணர்ந்து, முடிந்தவரை கிரீஸிலிருந்து வெளியேவந்து ஆடவே முற்பட்டார் தோனி. அவர் நிலைத்து நின்று ஆட மிகமுக்கியக் காரணம் இதுதான். மற்ற பேட்ஸ்மேன்களின் ஃபூட் வொர்க் - தரவரிசையில் கடைசி இடத்திலிருக்கும் அணி பேட்ஸ்மேன்களைப் போலத்தான் இருந்தது.

Dhoni

 

‘யானைக்கும் அடி சறுக்குவது போல' என்று இந்தத் தோல்வியை எடுத்துக்கொள்ள முடியாது. கோலி இல்லாததால் ஏற்பட்ட தோல்வி எனும் மூடி மறைத்திட முடியாது. ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்படியிருக்கும் என்பதை, இந்தப் போட்டியும், கொல்கத்தா டெஸ்ட் போட்டியும் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டன. இனியும், கான்பூர், நாக்பூர் ஆடுகளங்களில் ஆடும் அதே மைண்ட்செட்டோடு ஆடினால், தென்னாப்பிரிக்காவில் இந்தியா வைட்வாஷ் செய்யப்படும். அணியைத் தேர்வு செய்வதில் இருந்து, ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் ஆடுவதுவரை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்தியா தக்குப்பிடிக்க முடியும். இலங்கையுடனான இந்தத் தோல்வி, வெளிநாட்டுத் தொடர்களுக்கு இன்னும் ரெடியாகாத இந்திய அணிக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி!

https://www.vikatan.com/news/sports/110376-sri-lanka-beats-india-in-the-first-odi.html

  • தொடங்கியவர்

40 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என நினைத்தோம்: இந்தியாவை நிலைகுலையச் செய்த லக்மல் சொல்கிறார்

 

29 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்த இந்தியா, 40 ரன்னுக்குள் சுருண்டு விடும் என நினைத்தோம் என ஆட்ட நாயகன் வீரர் லக்மல் கூறியுள்ளார்.

 
40 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என நினைத்தோம்: இந்தியாவை நிலைகுலையச் செய்த லக்மல் சொல்கிறார்
 
இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா, இலங்கையில் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 112 ரன்னில் சுருண்டது.

201712111142019263_1_6lakmal001-s._L_styvpf.jpg

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசி 4 மெய்டன் ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.

201712111142019263_2_6lakmal003-s._L_styvpf.jpg

ஆட்ட நாயகன் விருது பெற்ற லக்மல், இந்தியா 40 ரன்னுக்குள் சுருண்டு விடும் என்று நினைத்தோம் என கூறியுள்ளார். இதுகுறித்து லக்மல் கூறுகையில் ‘‘இந்தியா ஒரு கட்டத்தில் 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது நாங்கள் அவர்களை 40 ரன்னுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம். ஆனால், டோனி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

201712111142019263_3_6lakmal-s._L_styvpf.jpg

அவரை மட்டும் விரைவில் வெளியேற்றியிருந்தால், நாங்கள் இந்தியாவை மோசமான ரன்னுக்குள் சுருட்டியிருப்போம். டோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இதற்கு முன் இதுபோன்ற சூழ்நிலையில் அவர் விளையாடியுள்ளார். எங்களுடைய எண்ணம் போட்டியில் வெற்றி பெறுவதுதான். முதல் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து நாங்கள் பெரிய அளவில் நினைக்கவில்லை’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/11114156/1133907/We-could-have-bowled-out-India-for-less-than-50--Lakmal.vpf

  • தொடங்கியவர்

இலங்கையுடன் நாளை 2-வது ஒருநாள் ஆட்டம்: வெற்றி நெருக்கடியில் இந்தியா

தரம்சாலா போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, மொகாலியில் நாளை நடைபெறும் 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கத்தில் உள்ளது.

 
இலங்கையுடன் நாளை 2-வது ஒருநாள் ஆட்டம்: வெற்றி நெருக்கடியில் இந்தியா
 
மெகாலி:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் தொடரில் தர்மசாலாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருக்கிறது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அந்த பெருமையை இழக்காமல் இருக்க வெற்றிக்காக கடுமையாக போராடும். மேலும் தரம்சாலாவில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.

முதல் போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் டோனி ஒருவர் மட்டுமே சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். மோசமான பேட்டிங்கால் வீரர்கள் தேர்வில் கேப்டன் ரோகித் சர்மா மாற்றம் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

201712121231427181_1_srilanka002-s._L_styvpf.jpg

தொடக்க வீரர் என்ற முறையில் ரகானே நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு மிடில் ஆர்டர் வரிசையில் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுக்கலாம். டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி மீண்டும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. தரம்சாலா போட்டியில் விளையாடிய உத்வேகத்தை நாளைய ஆட்டத்திலும் பெரேரா தலைமையிலான இலங்கை அணி பின்பற்றும்.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் மொகாலி போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 157-வது போட்டியாகும். இதுவரை நடந்த 156 போட்டியில் இந்தியா 88-ல், இலங்கை 56-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 போட்டி முடிவு இல்லை. நாளைய ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/12123135/1134123/INDvSL-mohali-ODI-tomorrow-start.vpf

  • தொடங்கியவர்
இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்
  • தொடங்கியவர்

கடைசி ஓவரில் மனைவியின் திக் திக் நிமிடங்கள்... இரட்டை சதம் விளாசி சாதித்த ரோஹித் சர்மா

 
 

இலங்கை அணிக்கெதிராக இன்று நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதம் இதுவாகும். 

Rohit

 


இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. 

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். இதனால், அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. தவான் 67 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ், 70 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், கடைசி பந்து வரை களத்தில் இருந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 392 ரன்கள் குவித்துள்ளது. 

கடைசி ஓவரில் பதற்றம்:

ரோஹித் மற்றும் மனைவி

 

கடைசி ஓவரின்போது 191 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார் கேப்டன் ரோஹித். பெரெரா கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் வீச, இன்னும் மூன்று ரன்களே எடுக்க வேண்டும் என்ற நிலையில், லான்ங்-ஆனில் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு கால் செய்தார் ரோஹித். எதிரே இருந்த சக வீரரான ஹர்திக் பாண்ட்டியாவும் அதற்கு ஈடு கொடுத்தார். ஒரு கட்டத்தில் ஹர்திக், சுலபமாக இரண்டாவது ரன்னை ஓடி முடிக்க, ரோஹித் டைவ் அடித்து ரன்னை கம்ப்ளீட் செய்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித்தின் மனைவி கண்ணில் கண்ணீர் கசிந்தது. அடுத்த பந்தில் மிட்-ஆனுக்கு பந்தைத் தட்டி, சுலபமாக இரண்டு ரன்கள் எடுத்தார் ரோஹித். ஒரு வழியாக 151 பந்துகளுக்கு 200 ரன்களைக் கடந்த பின்னர், ரோஹித்தின் மனைவி ஆனந்த கண்ணீரில் துள்ளிக் குதித்து உற்சாகப்படுத்த, அரங்கமே இந்திய அணி கேப்டனுக்கு எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோஹித்துக்கு ஆட்டம் முடிந்தவுடன் இலங்கை அணி வீரர்களும் கை கொடுத்து பாராட்டினர். 

https://www.vikatan.com/news/sports/110681-rohit-sharma-scored-3rd-double-century-in-odis.html

  • தொடங்கியவர்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரைச் சமன் செய்தது இந்தியா! #INDvSL

 
 

மொஹாலியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 141 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

இந்திய அணி

 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் ஆட அழைத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸின் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 392 ரன்கள் குவித்தது இந்தியா. அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 153 பந்துகளுக்கு 208 ரன்கள் எடுத்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தார். இது ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். இலங்கைக்கு எதிராக அவர் அடிக்கும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதையடுத்து, 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதனால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டும் ஆட்டமிழக்காமல் சதமடித்தார். எனவே, இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்துள்ளது. வரும் 17-ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. அதில் ஜெயிக்கும் அணியே தொடரையும் கைப்பற்றும். 

https://www.vikatan.com/news/sports/110727-team-india-win-by-141-runs-and-level-the-series-11.html

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0153.jpg

  • தொடங்கியவர்

ரோஹித் சர்மா பதிலடியிலிருந்து மீள முடியாத இலங்கை படுதோல்வி: மேத்யூஸ் ஆறுதல் சதம்

 

 

rohith3

 

ஆட்ட நாயகன் விருதுடன் காட்சியளிக்கும் இரட்டைச் சத நாயகன் ரோஹித் சர்மா.   -  படம். | அகிலேஷ் குமார்.

மொஹாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேத்யூஸ் ஏற்கெனவே முன்னரே முடிந்து விட்ட போட்டியில் ஒரு ஆறுதல் சதம் கண்டார். அவர் 111 ரன்கள் எடுத்து நாட் அவுட்.

இலங்கை அணி 393 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 251/8 என்று 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. இந்திய அணி தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

இந்திய அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்கள் வீசி 65 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், புவனேஷ், பாண்டியா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற மீண்டும் யஜுவேந்திர சாஹல் 10 ஓவர்களில் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

விரட்டல் முதல் 10 ஓவர்களிலேயே சுவாரசியமற்றுப் போனது இலங்கை அணி 10 ஓவர்களில் 41/2 என்று ஆனது. தரங்கா 7 ரன்களில் பாண்டியாவின் ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கப்போய் பிறகு செக் செய்து கவர் திசையில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

குணதிலக, 16 ரன்களில் பும்ராவின் லெக் திசை பந்தை சரியாக கிளான்ஸ் செய்யாமல் தோனியிடம் கேட்ச் ஆனார். இலங்கை 30/2 என்று ஆனது. திரிமானேவுக்கு நேரம் சரியில்லை 35 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று தன்னையே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் சர்வதேச விக்கெட்டைக் கைப்பற்றினார்.

செத்த போட்டியில் மேத்யூசும், டிக்வெல்லாவும் இணைந்து கொஞ்சம் அடிக்கப் பார்த்தனர், இருவரும் சேர்ந்து 53 ரன்கள் சேர்த்த நிலையில் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 எடுத்த டிக்வெல்லா சாஹலின் ஷார்ட், வைடு பந்தை சரியாக ஆடாமல் ஷார்ட் தேர்ட்மேனில் சுந்தரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், இன்னிங்ஸ் பாதி கடந்த நிலையில் தேவைப்படும் ரன் விகிதம் 10 ரன்களுக்கும் மேல் சென்றதால் நெருக்கடி கூடியது.

குணரத்னே, மேத்யூஸ் இணைந்து ஸ்கோரை 115-லிருந்து 159 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போது 5 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த குணரத்னே, சாஹல் பந்தை மேலேறி வந்து ஆட முற்பட்டார், சாஹல் பந்தின் வேகத்தையும் லெந்தையும் குறைக்க பந்து ஸ்பின் ஆகி மட்டையைக் கடந்து செல்ல தோனி மீதி வேலையைப் பார்த்தார், ஸ்டம்ப்டு அவுட்.

கேப்டன் திசர பெரேராவும் 5 ரன்களில் தோனியின் அருமையான டைவ் கேட்சுக்கு வெளியேறினார். பதிரனா, தனஞ்ஜயாவை முறையே புவனேஷ், பும்ரா வீழ்த்தினர். அஞ்சேலோ மேத்யூஸ் 132 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இந்த இன்னிங்சைப் பார்த்த போது 1999 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 47/4 என்று முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்ப அஜய் ஜடேஜா ஒரு சதம் அடிப்பார், பயனற்ற சதம், ஆனாலும் குறைகூறுவதற்கில்லை. மொத்தமாக சரணடையாமல் யாராவது ஒருவர் பயனற்றதாக இருந்தாலும் ஒரு முனையை தாங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆடப்படும் இன்னிங்ஸ்களாகும் இது. மேத்யூஸைக் குறைகூறுவதற்கில்லை. எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிவடையும் போது ஒருவர் இப்படி ஆடுவதை குறை கூற முடியாது. ஆல் அவுட் ஆகாமல் 251/8 என்று முடிப்பது சரிவிலும் ஒரு நம்பிக்கையூட்டும் அம்சம்.

ஆட்ட நாயகன் வேறு யாராக இருக்க முடியும்? ரோஹித் சர்மாவேதான்!

http://tamil.thehindu.com/sports/article21599367.ece

  • தொடங்கியவர்

கடைசி ஒருநாள் போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடுவார்: இலங்கை அணி நிர்வாகம் தகவல்

 

16CHPMUANGELOMATHEWS

ஏஞ்சலோ மேத்யூஸ்   -  th

தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்துள்ள ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ், இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்குவார் என இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின் போது 111 ரன்கள் விளசியாய ஏஞ்சலோ மேத்யூஸ், தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் அவர், களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வலை பயிற்சியில் மேத்யூஸ் பங்கேற்றார். பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட அவர், ஒரு சில ஓவர்கள் பந்தும் வீசினார்.

இதுதொடர்பாக இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறும்போது, “ மேத்யூஸ் உடல் தகுதியுடன் உள்ளார். மொகாலி ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர், அதில் இருந்து குணமடைந்துள்ளார்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். தொடரை தீர்மானிக்கும் விசாகப்பட்டினம் ஒருநாள் போட்டிக்கு அவர் தயாராக உள்ளார். ஒட்டுமொத்த அணியில் உள்ள 15 வீரர்களும் முழு உடல்தகுதியுடன் தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article21820110.ece

  • தொடங்கியவர்

இந்­தியா - இலங்கை தீர்க்­க­மான போட்டி இன்று ? வர­லாறு படைக்­குமா இலங்கை ?

 

 
 

இலங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும் 3 ஆவதும் இறு­தி­யு­மான போட்டி இன்று இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. நடை­பெற்று முடிந்த இரு போட்­டி­களில் முதல் போட்­டியில் திசர பெரேரா தலை­மை­யி­லான இலங்கை அணி வெற்றி பெற்­ற­துடன், இரண்­டா­வது போட்­டியில்  ரோஹித் ஷர்மா தலை­மை­யி­லான இந்­திய அணி வெற்றி பெற்­றது.

விசா­கப்­பட்­டி­ணத்தின் வை. எஸ். ராஜ­சே­கர ரெட்டி விளை­யாட்­ட­ரங்கில் பக­லி­ரவுப் போட்­டி­யாக நடை­பெறும் இப்­போட்­டியில் இலங்‍கை அணி வெற்றி பெற்றால், இலங்கை கிரிக்கெட் வர­லாற்றில் இந்­திய அணியை அதன் சொந்த மண்ணில் தொட­ரொன்றை கைப்­பற்­றிய முதல் சந்­தர்ப்­ப­மாக பதி­வாகும்.

எவ்­வா­றா­யினும், சர்­வ­தேச ஒருநாள் தர­வ­ரி­சையில் இரண்டாம் இடத்­தி­லுள்ள இந்­திய அணி, அண்­மைக்­கா­ல­மாக விளை­யா­டி­வரும்  போட்­டி­களில் பெரும்­பாலும் வெற்­றி­யையே ஈட்டி வரு­கின்­றது. எனினும், இலங்கை அணி அண்­மை­க்கா­ல­மாக விளை­யாடி வரும் போட்­டி­களில் தொட­ரொன்றை கூட வெற்றி பெற்­ற­தில்‍லை. இதில் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக 5 க்கு 0 என்ற கணக்­கிலும்,பங்­க­ளா‍­தே­ஷுக்கு  எதி­ராக 1 க்கு 1 என்ற கணக்­கிலும், ஸிம்­பாப்வேக்கு எதி­ராக 3க்கு 2 என்ற கணக்­கிலும் , பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 5க்கு 0 என்ற கணக்­கிலும் போட்­டியை நிறைவு செய்­தி­ருந்­தது. இதில், இலங்கை தனது சொந்த மண்ணில் ஸிம்­பாப்வே, இந்­தியா சர்­வ­தேச ஒருநாள் தொடர்­களும் உள்­ள­டங்கும்.

தீர்­மா­ன­மிக்க இன்­றைய போட்­டியில் இலங்கை அணியின் இட­துகை துடுப்­பாட்ட வீர­ரான  லஹிரு திரி­மான்­ன­வுக்குப் பதிலாக மற்­று­மொரு இடது கை துடுப்­பாட்ட வீர­ரும் அதி­ரடித் துடுப்­பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா களமிறங்குவார் என ‍எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் வேறு சில மாற்றங்களும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/28338

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.