Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர்

Featured Replies

மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர்

viki.jpg

ஊடகவியலாளர் கேள்வி – முதலமைச்சர் பதில்

கேள்வி – நேற்றைய மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் – மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன்.

நேற்றைய நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடைபெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்லங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துள்ளார்கள் எம் மக்கள். நல்லாட்சி கொண்டுவந்த அரசாங்கத்தால் வல்லாட்சியின் வசம் திரும்ப முடியாததால் முன்னைய அரசாங்க காலத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்திருந்தன.

எமது மாவீரர்களை மலினப்படுத்துவதே மக்களின் மனோநிலை என்றிருந்தால் இவ்வளவு எழுச்சியைக் காட்டியிருக்கமாட்டார்கள் எம் மக்கள். முன்னைய வருடங்களிலும் பார்க்க உணர்வலை இவ்வருடம் கூடியதற்கான காரணங்கள் இரண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒன்று உள்ளேயிருந்த உணர்ச்சிகளை இது காறும் எம் மக்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள். அவ்வாறு தடை போடத் தேவையில்லை என்றவாறு அரசியல் நிலைமாற்றம் அடைந்ததும் தமது உணர்ச்சிகளை ஊர் அறிய உலகறிய மக்கள் வெளிக்காட்டியுள்ளார்கள்.

மற்றைய காரணம் எம் மக்களிடையே ஒரு பயம் பிறந்து விட்டது என்று கருதுகின்றேன். விடுதலை வீரர்கள் வலம் வந்த காலத்தில் ஈழத்தை விட எல்லாமுந் தருவோம் என்ற சிங்கள அரசியல் வாதிகள் இன்று சொற்களால் எமக்கு சுகம் தரலாம் என்று எண்ணுவதைப் பார்த்து இவ்வளவுதான் கிடைக்குமா, எமது அபிலாiஷகள், அடிப்படை வேண்டுதல்கள் நிறைவேறாதா என்ற பயம் பீடிக்க அன்று இருந்த நிலையை எண்ணி அப்போதைய அதிகாரங்களை எண்ணி அன்றைய விடுதலை வீரர்களை எண்ணித் தமது மரியாதைகளை, மாண்பை தன்னெழுச்சியாகத் தெரிவிக்கத் திரண்டனர் என்று கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. எங்கே எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ மற்றும் அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்று எண்ணி அஞ்சி விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண எத்தனித்துள்ளார்கள். கொள்கைகளில் உறுதியாக இருந்தவர்களின் நினைவில் அமைதி காண எத்தனித்துள்ளார்கள்.

துயிலும் உள்ளங்கள் எமது மக்களுக்குத் துயர் வர விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது போன்று தோன்றுகின்றது. அச்சுறுத்தல்கள் ஆங்காங்கே இருந்திருப்பினும் அச்சமின்றி மக்கள் ஒன்று சேர்ந்தமை அரசாங்கத்திற்குத் தலையடி கொடுத்திருக்கிறது.  எமது இனம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்குத் துயிலும் இல்ல தொடர்பாடல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/archives/52001

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, eyeglasses and text

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

மக்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள் – மாவீரர் நாள் மக்கள் எழுச்சி நிகழ்ச்சிகள் பற்றி முதலமைச்சர்

viki.jpg

துயிலும் உள்ளங்கள் எமது மக்களுக்குத் துயர் வர விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது போன்று தோன்றுகின்றது. அச்சுறுத்தல்கள் ஆங்காங்கே இருந்திருப்பினும் அச்சமின்றி மக்கள் ஒன்று சேர்ந்தமை அரசாங்கத்திற்குத் தலையடி கொடுத்திருக்கிறது.  எமது இனம் விழித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்குத் துயிலும் இல்ல தொடர்பாடல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/archives/52001

மக்களாட்சி என்ற முகமூடியுடன் முப்படைகளையும் கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டுவரும் அரசுக்குப் பிடிக்காதவற்றை.... நியாயப்படுத்திப் பேசுவதற்கும் ஒரு துணிவு வேண்டும். 

15792.jpg

தமிழ் தலைவர்கள் அரை குறைத் தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணித்து விடுவார்களோ என்று அஞ்சியே மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் எழுச்சியுடன் கடைப்பிடித்துள்ளார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
மாவீரர் நாள் மக்கள் எழுச்சி தொடர் பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
 
மக்கள் தங்களை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் சக்தியை உணரத் தொடங்கி விட்டார்கள். தங்கள் உரித்துக்கள் என்ன என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதுகின்றேன். 
 
மாவீரர் தின நிகழ்ச்சிகள் துயிலும் இல்லங்களில் மட்டும் நடை பெறவில்லை. கோயில்களில், குடும்ப இல்ல ங்களில் எல்லாம் தீபச் சுடர் ஏற்றி எமது விடு தலை வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித் துள்ளார்கள் எம் மக்கள். 
 
நல்லாட்சி கொண்டு வந்த அரசாங்கத்தால் நல்லாட்சியின் வசம் திரும்ப முடியாததால் முன்னைய அரசாங்க காலத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்திருந்தன. 
 
எமது மாவீரர்களை மலினப்படுத்துவதே மக்களின் மனோநிலை என்றிருந்தால் இவ் வளவு எழுச்சியைக் காட்டியிருக்கமாட்டார்கள் எம் மக்கள். முன்னைய வருடங்களிலும் பார்க்க உணர்வலை இவ்வருடம் கூடியதற் கான காரணங்கள் இரண்டிருப்பதாக தெரி கிறது. ஒன்று, உள்ளேயிருந்த உணர்ச்சி களை இது காறும் எம் மக்கள் தடைபோட்டு வைத்திருந்தார்கள். 
 
அவ்வாறு தடை போடத் தேவையில்லை என்றவாறு அரசியல் நிலை மாற்றம் அடைந்ததும் தமது உணர்ச்சி களை ஊர் அறிய உலகறிய மக்கள் வெளிக் காட்டியுள்ளார்கள். 
 
மற்றைய காரணம், எம் மக்களிடையே ஒரு பயம் பிறந்து விட்டது என்று கருதுகின் றேன். 
 
விடுதலை வீரர்கள் வலம் வந்த கால த்தில் ஈழத்தை விட எல்லாமும் தருவோம் என்ற சிங்கள அரசியல்வாதிகள் இன்று சொற்களால் எமக்கு சுகம் தரலாம் என்று எண்ணு வதைப் பார்த்து இவ்வளவுதான் கிடைக்குமா, எமது அபிலாசைகள், அடிப்படை வேண்டுதல்கள் நிறைவேறாதா என்ற பயம் பீடிக்க அன்று இருந்த நிலையை எண்ணி அப்போதைய அதிகாரங்களை எண்ணி அன்றைய விடுதலை வீரர்களை எண்ணித் தமது மரியாதைகளை, மாண்பை தன்னெ ழுச்சியாகத் தெரிவிக்கத் திரண்டனர் என்று கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. 
 
எங்கே எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ மற்றும் அரைகுறைத் தீர் வைத் தம்மீது திணித்து விடுவார்களோ என்று எண்ணி அஞ்சி விடுதலை வீரர்களின் நினை வேந்தலில் மன நிறைவு காண எத்தனித்து ள்ளார்கள். கொள்கைகளில் உறுதியாக இரு ந்தவர்களின் நினைவில் அமைதி காண எத் தனித்துள்ளார்கள்.
 
துயிலும் இல்லங்கள் எமது மக்களுக்குத் துயர் வர விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது போன்று தோன்றுகின்றது. அச்சுறுத்தல்கள் ஆங்காங்கே இருந்திருப்பினும் அச்சமின்றி மக்கள் ஒன்று சேர்ந்தமை அரசாங்கத்திற்குத் தலையடி கொடுத்திருக்கிறது.  
 
எமது இனம் விழித்துக் கொண்டிருக்கி ன்றது என்பதற்குத் துயிலும் இல்ல தொடர் பாடல்கள் கட்டியம் கூறி நிற்கின்றன எனத் தெரிவித்தார்.     

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15792&ctype=news

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது 100 வீத உண்மையும் அதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.