Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் அழிக்க போகிறாயா இந்தியா ..........?

Featured Replies

இந்தியா! நீயுமா?

.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் நாலா வது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்ப மானது.

இலங்கை உட்பட முக்கிய பல நாடுகளில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான நிலை வரத்தை ஆராயும் முக்கிய சர்வதேசக் கூட்டமாக இது அமைகின்றது. இந்த மாத முடிவு வரை இந்தத் தொடர் நீடிக்கின்றது.

சட்டத்துக்கு முரணான வகையிலும் சட்ட விரோதமாகவும் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பான ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன், யுத்தப் பிணக்குகளின் மத்தியில் சிக்கியுள்ள சிறுவர்களின் விவகாரத்தைக்கையாளும் ஐ. நாவின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மனித உரிமைகள் ஆணையாளர் லூஸி ஆர்பர் உட்பட மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரதிநிதிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை சம்பந் தமாக சமர்ப்பிக்கும் அறிக்கைகள் இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய இடம் பிடிக்கவிருக்கின்றன.

இலங்கையில் மிக மோசமாக அதிகரித்துவரும் மனிதஉரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் கேட்டு மிரட்டுதல், படுகொலைகள் ஆகியவை தொடர்பான சர்வதேச சிரத்தை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இச்சமயத்தில் இலங்கை விடயம் இந்தக் கூட்டத்தொடரில் பிரதான இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் அரசுப்படைகளின் கட்டுப்பாட் டுப் பகுதிகளில் மனிதஉரிமை மீறல்கள் அதிகள வில் இடம்பெற்று வருகின்றன. அரசுப்படைகளுக்கு அவற்றில் நேரடி சம்பந்தம் உண்டு, அதற்கு அரசுத் தலைமையும் ஆதரவும், அங்கீகாரமும், இணக்க மும், உடன்பாடும் அளித்துள்ளது, என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள பின்னணியில், இந்தக் கூட்டத்தொடரில் நிலைமை இலங்கை அரசுக்குப் பாதிப்பானதாக பாதகமான தாக போகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஐ. நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எழக்கூடிய சர்வதேச மட்டத்திலான குற்றச்சாட்டுகள், கண் டனம், எதிர்ப்பு, அதிருப்தி ஆகியவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் இலங்கை அரசு மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சகல ஆயுத்தங்க ளோடும், உதவியாளர்களோடும் ஜெனிவாவுக்கு அனுப்புகிறது.

இராஜதந்திர வட்டாரங்களில் அதிக தொடர் பாடலும், செல்வாக்கும் உள்ள அமைச்சர் சமரசிங்க, அந்தத் தகைமையை வைத்துக்கொண்டு ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக வீசக்கூடிய மனிதஉரிமை மீறல் புயலை சமாளித்து விடுவார் என கொழும்பு நம்புகின்றது.

இதேசமயம் இலங்கையில் மோசமாக இடம் பெறும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசைப் பொறுப்பாக்கிக் கண்டிக்கும் விதத்திலான பிரேரணை ஒன்றை இந்தக் கவுன்ஸிலின் அமர் வுக்குக் கொண்டுவருவதில் இருபத்தியைந்து நாடு கள் அடங்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் முன்னைய அமர்வுகளின் போதும் இத்தகைய பிரேரணை ஒன்றை அங்கு நிறைவேற்றச் செய் வதற்கான முஸ்தீபுகளில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டதாயினும், அப்போதைய நிலைமைகருதி அது அச்சமயம் பிற்போடப்பட்டது.

இந்தத் தடவையும் அந்த முயற்சியை முளை யிலேயே கிள்ளிவிடவோ அல்லது தள்ளிப்போடச் செய்யவோ தன்னால் இயன்ற சகல முயற்சிகளை யும் கொழும்பு அரசு எடுத்திருக்கின்றது.

மனித உரிமை மீறல் நிலைமை தொடர்பாக கொழும்பு அரசுக்கு எதிரான பிரேரணை ஏதும் இந்த அமர்வுக்குக் கொண்டுவரப்படுவதையும், நிறை வேற்றப்படுவதையும் தடுக்கும் நோக்கில் அவ் வாறு தடுக்கும் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகை யில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் மத்தியில் தனது இராஜதந்திரத் தொடர்பாடலையும் பிரசாரங் களையும் செல்வாக்கையும் கொழும்பு தீவிரப்படுத்தியிருப்பதாகவு

Edited by வானவில்

இந்தியா நீயுமா என்ற தலைப்பு சரிவராது இதற்கு மீண்டும் அழிக்க போகிறாயா இந்தியா என்ர தலைப்பே சரி

  • தொடங்கியவர்

உமது விருப்பப் படியே மாற்றப் பட்டுள்ளது

அமெரிக்காவின் காலடியில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடுதான் கியூபா அது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து நிமிர்ந்து நிர்க்கவில்லையா கவலையை விட்டு காவலனுக்கு தோள் கொடுங்கள். காலம் நல்ல தீர்ப்பை வழங்கும். அனைத்தையும் அடிபடையில் இருந்து தொடங்கினாலும், சுய சார்பே சூழலை மாற்றும். வீரியமுள்ள விதையே விரிச்சமாகும்.

சரியாக சோல்கிறிர்கள். இலவசங்களால் அறிவிழந்த இந்தியனிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறெ. சுயசார்பெ ஒரெ வழி.

உங்கள் தைரியமூட்டல்கள் தமிழினத்திற்கு ஒரு தனிநாடு அவசியம் தேவை என்பதினை உரத்துச்சொல்லுகிறது. சில நேரம் தமிழ்நாடும், தமிழீழமும் ஒரு காலதில் வல்லரசுகலாக வரலாம். 2013 தொடங்கி 2030 வரை பசுமிக்சமுத்திர அடியில் உருவாகப்போகும் பூகம்பத்தினால் அண்மையில் ஏற்பட்ட சுணாமியிலும் பார்க்க எத்தனையோ மடங்கு பெரிதாக உருவாகி அமெரிக்காவின் கலிபோனியாவிற்கு அண்மையான அதே நேரன் வன்குவார் பகுதிகள் எல்லாம் கடலினுள் போகப்போகிறது. :unsure::D

அமெரிக்காவின் காலடியில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடுதான் கியூபா அது அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து நிமிர்ந்து நிர்க்கவில்லையா கவலையை விட்டு காவலனுக்கு தோள் கொடுங்கள். காலம் நல்ல தீர்ப்பை வழங்கும். அனைத்தையும் அடிபடையில் இருந்து தொடங்கினாலும், சுய சார்பே சூழலை மாற்றும். வீரியமுள்ள விதையே விரிச்சமாகும்.

உங்கள் உணர்வுகளுக்கு நன்றிகள். புத்தனையும் காந்தியையும் தந்த இந்தியா, இன்று ஒரு இனவெறி அரசுக்கு பாதுகாப்பு தந்து கொண்டு இருக்கிறது.

ஈழம் மலராது போனால், இழப்பு தமிழர்களுக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் தான்.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விட்ட பல்வேறு தவறுகளில் ஈழ எதிர்ப்பு கொள்கையும் ஒன்று. சிலவேளைகளில் அதிமேதாவிகள் அடிப்படை விடயங்களில் கோட்டை விடுவது உண்டு.

அப்படி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கடந்த காலங்களில் கோட்டை விட்டவற்றில் சில:

1. வங்கப் போரின் போது கைது செய்யப்பட்ட 98000 பாகிஸ்தானிய இராணுவ வீரர்களின் விடுதலையின்

விலையாக காஷ்மீரின் LOC (Line of control) ஐ நிரந்தர எல்லையாக மாற்றிக்கொள்ள முனையாதது.

இதை செய்து இருந்தால் இன்று காஷ்மீரில் மத தீவிரவாதம் இவ்வளவு வளர்ந்து இருக்காது. 1971ல்

இருந்து எல்லையில் பலியாகும் உயிர்களும், பொருளாதாரமும் கூட காப்பாற்றப்பட்டு இருக்கும்

2. கிழக்கு பாகிஸ்தான் வங்க தேசம் ஆன போதே அங்கே உள்ள 15% இந்துக்களுக்கு எல்லையில் ஒரு

மாநிலம் ஒன்றை உருவாக்காமல் விட்டது. நான் இப்படி சொல்வதால் முஸ்லீம்களுக்கு எதிரான

நிலைப்பாடு கொண்டவன் என்று நினைத்து விடாதீர்கள். அதாவது இந்திய கண்ணோட்டத்தில்

பார்க்கும் போது, இப்படி ஒரு இந்து மாநிலம் வங்க தேசத்தில் உள்ள 15% இந்துக்களுக்கு அமைத்து

தந்து இருந்தால் அதனால் இந்தியா பெற்று இருக்கக் கூடிய பாதுகாப்பு சம்பந்தமான

அனுகூலங்கள் பல.

இப்படி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சறுக்கிய சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம். அது

போலவே ஈழப்பிரச்சினையிலும் இவர்கள் செய்த குளறுபடிகள் ஏராளம். ஆனைக்கும் அடி சறுக்கும்! அது போல் அதி மேதாவிகளுக்கும் சறுக்கும் என்பதை உணர்ந்து, இவர்கள் தங்கள் ஈழக்கொள்கையை மறு பரிசீலனை செய்வார்களாக இருந்தால், ஈழம் மலர்வது இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கத்திற்கு

எவ்வளவு உறுதுணை என்பதை மட்டும் அல்ல, எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்வார்கள்.

ஈழம் மலர்வதால் தமிழகம் தனியாக போய் விடும் என்று எவராவது நினைத்தால், தமிழகத்தின் 7 கோடி மக்களையும் அவர்களின் இந்திய பற்றையும் சந்தேகித்ததாக அல்லவா ஆகும். தமிழகத்தின் 7 கோடி மக்களின் தாய் நாட்டு பற்றையும் சந்தேகப்படுவது அந்த மக்களுக்கு செய்யும் அவமரியாதை இல்லையா? தமிழகத்தின் தமிழா! உன்னை இவர்கள் இன்னும் முழுமையாக நம்பவில்லையா? அப்படி நம்பி இருந்தால் இந்த சின்னஞ்சிறு ஈழம் மலர்வதால் நீ இந்தியாவை பிரித்து விடுவாய் என்று நினைப்பார்களா???!!!

ஒன்றுபட்ட இந்தியா! உயர்ந்து நிற்கும் தமிழகம்!! இவை இரண்டிற்கும் ஈழம் என்றும் நண்பனே என்பதை இந்தியா புரிந்து கொள்ளும் நாள் வரும்!

If Indian policy makers can analyze the pros and cons of the creation of the soverign state of Eelam, in an unbiased manner, forgetting past mishaps, I am sure they can easily identify, there are more advantages to India than disadvantages, by the creation of Eelam.

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்தது ஆயுதமும் கொடுக்கவில்லை, ஆனால் அதை யாழ் தள உருப்பினரும் நன்றி கூரவில்லை. ஓரவங்சனை செய்கிறார்கள் ஈழத்தவர்கள்.

யானை இரவு ராணுவ முகாம் தாக்கப்பட்டபோதும் இந்தியாவிடம் கென்சி கேட்டும் இலங்கைக்கு ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை, இதையும் எந்த உருப்பினரும் நினைத்து பார்பதில்லை, இந்தியர்களை திட்டுவதென்றால் அல்லவா சாப்பிடுவது போல இனிக்கிறது ஈழத்தவர்களுக்கு.

ஆமாம் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன்!

நன்றாக புரிந்து கொண்டு விட்டீர்கள்

நன்றாக புரிந்து கொண்டு விட்டீர்கள்

பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழனாக இருப்பவர்களை எப்படி அழைப்பார்கள் தெரியுமா?

புரிந்தால் சரி!!!

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்தது ஆயுதமும் கொடுக்கவில்லை, ஆனால் அதை யாழ் தள உருப்பினரும் நன்றி கூரவில்லை. ஓரவங்சனை செய்கிறார்கள் ஈழத்தவர்கள்.

யானை இரவு ராணுவ முகாம் தாக்கப்பட்டபோதும் இந்தியாவிடம் கென்சி கேட்டும் இலங்கைக்கு ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை, இதையும் எந்த உருப்பினரும் நினைத்து பார்பதில்லை, இந்தியர்களை திட்டுவதென்றால் அல்லவா சாப்பிடுவது போல இனிக்கிறது ஈழத்தவர்களுக்கு.

இந்தியா அண்மையில்கூட இலங்கைக்கு ஒரு பாரிய யுத்தக்கப்பலை வழங்கியிருந்தது.

ஆனையிறவு முகாம் தகர்க்கப்பட்டு யாழ்ப்பாண வாசல்வரை புலிகள் முன்னேறியபோது திரைமறைவிலிருந்து தடுத்தது இந்தியாதான் என்பதற்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

எத்தனை அழிவுகளையும் இன்னல்களையும் தந்தது இந்த அஹிம்சா தேசம். இன்னமும் இதை நம்பிக் கொண்டிருப்பதில் பயன் என்ன? வரலாறுகள் புகட்டிய பாடங்களை மறந்து இன்னும் இவர்களை நம்பிக் கெட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றுக்கு நூறு உண்மை.

ஈழத்தமிழர்கள் இந்தியா மேல் வைத்திருந்த அளவற்ற அன்புக்கும் நம்பிக்கைக்கும் இந்தியா கொடுத்த பரிசு மிகப் பெரியது. சிங்கள அரசு நெஞ்சில் குத்தியது. இந்திய அரசு முதுகில் குத்தியது.

இங்கு இன்னுமொரு விவாதம் தொடங்கப் பார்க்கிறது. தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றிவிட்டால் இந்தியாவில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை வலுவடையைச் செய்து விடும், என்ற கருத்து இந்தியாவுக்கு இருக்கிறது. இக்கருத்து பொய்யானது மட்டுமல்ல வரலாற்று முரணானதும் கூட.

ஈழத்தில் தனி நாட்டுக் கோரிக்கை 1970 களின் தொடக்கத்தில்தான் எழுப்பப் படுகிறது. அது வரைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வையே (Federal Solution) தமிழர்கள் எழுப்பி வந்தார்கள், அதுவும் 1949 இல்தான் சமஷ்டிக் கட்சி (Federal Party) தொடங்கப் படுகிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் 1938-ம் ஆண்டு தந்தை பெரியார், சோமசுந்தரப் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களால் ~தமிழ்நாடு தமிழருக்கே| என்ற விடுதலைக் குரல் தமிழக மண்ணில் எழுப்பப் பட்டு விட்டது. தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இறுதிவரைக்கும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இவர்கள் யாரும் ஈழத்தைப் பார்த்து தங்கள் விடுதலைக் கோரிக்கையை எழுப்பவில்லை. ஏனவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ் நாடும் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் என்று கூறுவது பொருத்தமற்றது.

வங்கதேசம் பிரிந்தவுடன் அதனோடு ஒட்டி இருந்த மேற்கு வங்காளம் பிரிந்து சென்றுவிடவில்லை. தமிழீழம், தமிழகம் போன்றே வங்கதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருப்பவர்கள் ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளையும் பறி கொடுத்ததன் பின்பும், சிங்களவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று இந்தியா பிதற்றுவது ஈழத்தமிழர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று. தனி ஈழத்தை மனபலத்தாலும் மறவர் தோள் பலத்தாலும் வென்றெடுக்கும் திறன் ஈழப்போரளிகளுக்கு உண்டு. பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியத் துணைக்கண்டம் தனி ஈழம் என்ற கருத்துக்கு தார்மீக ஆதரவு அளித்தாலே போதும் ஈழப் போராட்டத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரமாக அது அமையும் என்பதுடன் பிற நாடுகளின் அங்கீகாரத்திற்கு வழி அமைத்தும் கொடுக்கும். இந்தியா அதைச் செய்யத் தயங்குவதுதான் இந்தியா மீதான எங்கள் வெறுப்புக்குக் காரணம்

Edited by இளங்கோ

போரில் புறமுதுகிடுவதையும் பகைவனை முதுகில் தாக்கி கொல்வதையும் கோழைத்தனம் என்று கூறி இகழ்ந்தனர் எமது மூதாதைத் தமிழர். போரில் ஆயுதமிழந்து நிற்கும் எதிரியைப் பார்த்து இன்று போய் நாளை வா என்று சொல்லி மனிதாபிமானத்துடன் அனுப்பியும் வைத்தனர். ஆனால் நோர்வே நாட்டவனோ அத்தருணத்தில் எதிரியென்று கண்டவனை துண்டாடினான். கன்னியாஸ்திரிகளைக் கற்பழித்தான். ஆயுதமற்ற அப்பாவிகளைக் கொன்றான் அந்நிய நாட்டு பொக்கிஷங்களைச் சூறையாடினான். ஆனால் இன்று உலகத்துக்கே சமாதானப் பரிசை வழங்கும் சமாதானப்புறாவாக வளர்ந்து விட்டான். இது எப்படிச் சாத்தியம்? எப்படி நிகழ்ந்தது? இன்று தமிழன் நிலையென்ன நோர்வே நாட்டவனின் நிலையென்ன? நோர்வே நாட்டவன் மட்டுமல்ல மேலைத்தேச நாடுகள் அனைத்துமே அன்றும் இன்றும் இதைத்தான் செய்கின்றன. இன்று இதை எப்படி இந்நாடுகள் செய்கின்றன என்பது தான் இன்றைய சர்வதேச அரசியல்.

Edited by Norwegian

போறிள் புரமுறுகிறுவதையும் பகைவண் முறுகிள் தாக்கி கொழ்வதையும் கேணைத்தனம், இன்ரு போய் டுமோரோ வா என்று எந்த டமிலன் அனுப்பி வைத்தவனுங்கோ? அதுக்கு என்ன வரலாற்று சான்று வைத்திருக்கிங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றுக்கு நூறு உண்மை.

ஈழத்தமிழர்கள் இந்தியா மேல் வைத்திருந்த அளவற்ற அன்புக்கும் நம்பிக்கைக்கும் இந்தியா கொடுத்த பரிசு மிகப் பெரியது. சிங்கள அரசு நெஞ்சில் குத்தியது. இந்திய அரசு முதுகில் குத்தியது.

b] இந்தியா அதைச் செய்யத் தயங்குவதுதான் இந்தியா மீதான எங்கள் வெறுப்புக்குக் காரணம்

தலைவன் வழி நிற்போம்! இதை விட வேறு என்ன சொல்ல வேண்டி இருக்கு?

இந்தியா எமக்களித்த பரிசுகள் போதும் போதும் போதும்!. எமக்குள் பிரிவினை வாதத்தை விதைத்துவிட்டதே இந்தியாதான்.! இந்தியனுக்கும் அமெரிக்கனுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

தலைவர் எந்த நாட்டையும் நம்பி நமக்கான போராட்டத்தை உருவாக்கவில்லை. தொடங்கவில்லை. ஈழத்தமிழர்கள் எங்களின் ஒற்றுமையே விடுதலையை வென்றுதரும். ! அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய சமயம் இது!.

அடுத்ததாக பல தமிழ் நாட்டு அரசியல் பிரபலங்களின் காதுகளில் நாராசமாக ஒலிக்கும் சேதி என்னவென்றால் எமது தேசியத்தலைவர் உலகத் தமிழினத்திற்கே ஒரு சரித்திர நாயகனாக படிப்படியாக உயர்ந்துவருவது தான். இந்த முன்னேற்றம் தமிழகத்தின் பல தமிழ் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கிடிக்கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதைத் தடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஈழத்தமிழினத்தின் குரல் வழையை நசுக்குவதாகவே அமையும் என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தும் சுய இலாப நோக்குடன் அவர்கள் காலத்துக்குக் காலம் தமது திருகு தாளங்களை மேடையேற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்.

இந்தியாவின் இலங்கைபற்றிய கொள்கைகள் இந்திரா அம்மையார் இருந்த போது மட்டுமே மிக உறுதியக இருந்தது. கொள்கைவகுப்பாளர்களும் பார்த்தசாரதி போன்றவர்களும் தெளிவான நியாயமான இலங்கை தமிழர்விடையத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் இன்று எல்லாம் தலைகீழ். இந்தியாவில் எத்தனை ஆட்சி வந்தாலும் தமிழ் நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் மத்தியரசின் கொள்கைவகுப்பாளர்கள் இலங்கையரசின் மகுடிக்கு ஆடுபவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். இது தான் இலங்கையரசின் நரித்தந்திரம். இந்தியா மட்டுமல்ல உலகம் முளுவதும் தந்திரமாக காய் நகர்த்துறது. தனக்கு வாய்க்காத இடங்களில் இது நமது பிரச்சனை தலையிட உரிமையில்லை என்று முகத்தில் அடித்தால் போல் கூறிவிடும். அல்லது தனது நட்பு நாடுகள் முலம் அணுகி தனது கரியங்களை சாதித்து கொள்ளும். எம்மை பொறுத்தளவில் எந்த நாட்டையும் நம்பியிருக்காமல் காலத்தை வீணாக்கமல் எமற்குள் ஒற்றுமையை வளர்த்து கடமைகளை, பிரச்சாரங்களை உடன் செய்து வருவோம். களத்தில் இறங்கியவர்கள்

தம் கடமை அவர்களுக்குரிய நேரத்தில் தலைமையின் கட்டளை படி செய்வார்கள்

செய்திருக்கிறாகள்.

நூற்றுக்கு நூறு உண்மை.

ஈழத்தமிழர்கள் இந்தியா மேல் வைத்திருந்த அளவற்ற அன்புக்கும் நம்பிக்கைக்கும் இந்தியா கொடுத்த பரிசு மிகப் பெரியது. சிங்கள அரசு நெஞ்சில் குத்தியது. இந்திய அரசு முதுகில் குத்தியது.

இங்கு இன்னுமொரு விவாதம் தொடங்கப் பார்க்கிறது. தமிழீழம் என்று ஒரு நாடு தோன்றிவிட்டால் இந்தியாவில் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை வலுவடையைச் செய்து விடும், என்ற கருத்து இந்தியாவுக்கு இருக்கிறது. இக்கருத்து பொய்யானது மட்டுமல்ல வரலாற்று முரணானதும் கூட.

ஈழத்தில் தனி நாட்டுக் கோரிக்கை 1970 களின் தொடக்கத்தில்தான் எழுப்பப் படுகிறது. அது வரைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வையே (Federal Solution) தமிழர்கள் எழுப்பி வந்தார்கள், அதுவும் 1949 இல்தான் சமஷ்டிக் கட்சி (Federal Party) தொடங்கப் படுகிறது. ஆனால் இவற்றுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் 1938-ம் ஆண்டு தந்தை பெரியார், சோமசுந்தரப் பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களால் ~தமிழ்நாடு தமிழருக்கே| என்ற விடுதலைக் குரல் தமிழக மண்ணில் எழுப்பப் பட்டு விட்டது. தந்தை பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் இறுதிவரைக்கும் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இவர்கள் யாரும் ஈழத்தைப் பார்த்து தங்கள் விடுதலைக் கோரிக்கையை எழுப்பவில்லை. ஏனவே தனி ஈழம் மலர்ந்தால் தமிழ் நாடும் பிரிவினைக் கோரிக்கையை எழுப்பும் என்று கூறுவது பொருத்தமற்றது.

வங்கதேசம் பிரிந்தவுடன் அதனோடு ஒட்டி இருந்த மேற்கு வங்காளம் பிரிந்து சென்றுவிடவில்லை. தமிழீழம், தமிழகம் போன்றே வங்கதேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் இருப்பவர்கள் ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளையும் பறி கொடுத்ததன் பின்பும், சிங்களவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று இந்தியா பிதற்றுவது ஈழத்தமிழர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று. தனி ஈழத்தை மனபலத்தாலும் மறவர் தோள் பலத்தாலும் வென்றெடுக்கும் திறன் ஈழப்போரளிகளுக்கு உண்டு. பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியத் துணைக்கண்டம் தனி ஈழம் என்ற கருத்துக்கு தார்மீக ஆதரவு அளித்தாலே போதும் ஈழப் போராட்டத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரமாக அது அமையும் என்பதுடன் பிற நாடுகளின் அங்கீகாரத்திற்கு வழி அமைத்தும் கொடுக்கும். இந்தியா அதைச் செய்யத் தயங்குவதுதான் இந்தியா மீதான எங்கள் வெறுப்புக்குக் காரணம்

முக்தி பாகினி அமைப்பின் "ஆதரவாளர்கள்" மேற்கு வங்காளத்தோடு தொப்புள் கொடி உறவு இருக்கு, மேற்கு வங்காளத்தையும் வங்காள தேசத்தையும் இணைத்த ஒரு தனி நாட்டைப் பற்றி தமது மூதாதையர் கனவு கண்டவர்கள் என்று பிதற்றினார்களோ என்று ஒருக்கா விசாரிச்சா நல்லம். மேற்கு வங்காளத்தில் உள்ளவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் அடக்கப்படுகிறார்கள் ஒடுக்கப்படுகிறார்கள் அவர்களும் எங்கள் தோழர்களே அவர்கள் விடுதலைக்காக சவுண்டு விடுவம் எண்டு ஒப்பாரி வைச்சவையே எண்டு விசாரிக்கிறதும் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கு வங்காளத்திலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் பிரிவினைவாதத்தை தேடும் சக்த்திகள் எல்லாம் எங்கள் தோழர்கள் என்று கொள்கைப் பிரகடனம் செய்து கொண்டு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்த்தார்களா?

வங்காளதேசம் இந்தியாவின் பரம எதிரியான பாக்கிஸ்தானின் ஒரு அங்கம் போல் சம அளவில் இந்தியாவின் பரமஎதிரியாக சிறீலங்காவை பார்க்கக் கூடியதாக இருக்க முடியுமா?

அப்படி இல்லை என்றால் ஏன் தமிழீழத்தை வங்காள தேசம் போல் இந்தியா உருவாக்க உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறம்?

Edited by kurukaalapoovan

அடுத்ததாக பல தமிழ் நாட்டு அரசியல் பிரபலங்களின் காதுகளில் நாராசமாக ஒலிக்கும் சேதி என்னவென்றால் எமது தேசியத்தலைவர் உலகத் தமிழினத்திற்கே ஒரு சரித்திர நாயகனாக படிப்படியாக உயர்ந்துவருவது தான். இந்த முன்னேற்றம் தமிழகத்தின் பல தமிழ் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கிடிக்கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதைத் தடுப்பதற்கான அவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஈழத்தமிழினத்தின் குரல் வழையை நசுக்குவதாகவே அமையும் என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தும் சுய இலாப நோக்குடன் அவர்கள் காலத்துக்குக் காலம் தமது திருகு தாளங்களை மேடையேற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்.

மற்றவயின்ரை திருகுதாளங்கள் இருக்கட்டும். எங்களை நாங்களே மடையராக்கிற கேணைத்தனமான சுயதிருகுதாளங்களை பற்றிப் முதல் கொஞ்சம் பாப்பம். எந்த தமிழன் இன்று போய் நாளை வா என்று போர்க்களத்தில் பூவிறிஸ் விட்டவன் என்று ஒருக்க விளக்க முடியுமோ?

தமிழர்கள் தங்கடை கவினயத்தின் மொழிநயத்தின் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னரான கலாச்சாரம் பண்பாடு என்றும் புராணப் புனைக் கதைகளின் பெயர்களால் விடுகிற விளக்கெண்ணைத்தனமான பஞ்டயலொக்குகளிற்கு நன்கு பெயர்போனவர்கள் என்றால் மிகையாகாது.

இது போன்ற நிலைப்பாடுகளை இந்தியா எடுப்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா எவ்வகையான

சார்புநிலைகளை எடுக்கின்றதோ அதன் வழிசார்ந்த நிலைப்பாட்டையே இந்தியா எடுக்கும்.

அது தவிந்த வேறு நிலைப்பாடுகள் இந்தியாவிடம் தற்போது இல்லை.

ஒரு நேரத்தில் அமெரிக்க நிலைப்பாடு மாறும்போது இந்திய நிலைப்பாடும் மாறித்தானாக

வேண்டும்.அமெரிக்காவின் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இந்தியா இழுபட்டுக் கொண்டி

ருப்பதற்குக் காரணம் இலங்கையரசு அமெரிக்காவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து

விடக்கூடாதென்பதே.

மற்றவயின்ரை திருகுதாளங்கள் இருக்கட்டும். எங்களை நாங்களே மடையராக்கிற கேணைத்தனமான சுயதிருகுதாளங்களை பற்றிப் முதல் கொஞ்சம் பாப்பம். எந்த தமிழன் இன்று போய் நாளை வா என்று போர்க்களத்தில் பூவிறிஸ் விட்டவன் என்று ஒருக்க விளக்க முடியுமோ?

தமிழர்கள் தங்கடை கவினயத்தின் மொழிநயத்தின் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்னரான கலாச்சாரம் பண்பாடு என்றும் புராணப் புனைக் கதைகளின் பெயர்களால் விடுகிற விளக்கெண்ணைத்தனமான பஞ்டயலொக்குகளிற்கு நன்கு பெயர்போனவர்கள் என்றால் மிகையாகாது.

இந்தியாவை அவன் கண்டுபிடித்தான், அமெரிக்காவை இவன் கண்டுபிடித்தான் என்று பரஸ்பரம் அறிந்து கொண்டதையே வரலாறாக படித்திருக்கும் நமக்கு நம்மர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவை விளக்கெண்ணைதனமான பஞ்ச் டயலாக்குகலாக தான் தெரியும். நம்ம வரலாறு என்பது நம்மவர்கள் எழுதிய பாட்டுக்களால் தான் அறிய முடியும் அந்த வகையில் இங்கு முடவனார்எழுதிய ஒரு பாடல்.

நீர்மிகின், சிறையும் இல்லை, தீமிகின்

மன்னுயிர் நிழற்றும் நிழழும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி

'தன் தமிழ் பொது' என பொறா அன் போர்எதிர்த்து

கொண்டி வேண்டுவன் ஆயின் 'கொள்க' எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே;

அளியரோ அளியர், அவன் அளி இழந்தோறே;

நுண்பல் சிதலை அரிது முயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல

ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே;

- முடவனார்

இன்னும் வரலாற்று விளக்கங்கள் வேண்டுமாயின் முயன்று தர முயற்ச்சிக்கிறோம். இப்பாடலுக்கும் விளக்கம் வேண்டும் எனில் யாழ் களத்திலும் பல புலவர்கள் இருக்கிறார்கள் அவர்களை அனுகவும்.

  • தொடங்கியவர்

இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதில்லை என்று முடிவு எடுத்தது ஆயுதமும் கொடுக்கவில்லை, ஆனால் அதை யாழ் தள உருப்பினரும் நன்றி கூரவில்லை. ஓரவங்சனை செய்கிறார்கள் ஈழத்தவர்கள்.

யானை இரவு ராணுவ முகாம் தாக்கப்பட்டபோதும் இந்தியாவிடம் கென்சி கேட்டும் இலங்கைக்கு ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை, இதையும் எந்த உருப்பினரும் நினைத்து பார்பதில்லை, இந்தியர்களை திட்டுவதென்றால் அல்லவா சாப்பிடுவது போல இனிக்கிறது ஈழத்தவர்களுக்கு.

[b]உமக்கு எதுவும் தெரியாட்டி பொத்திக் கொண்டு இரும்......... தெரியத விடயங்களில் மூக்கை முழைக்காமல் :angry: :angry: :angry:

[b]உமக்கு எதுவும் தெரியாட்டி பொத்திக் கொண்டு இரும்......... தெரியத விடயங்களில் மூக்கை முழைக்காமல் :angry: :angry: :angry:

வானவில்,

இப்படியான பதிகளைத் தவிர்ப்போம்.

வேறு நாடுகளில் வழும் மக்களுக்கு மட்டுமல்ல, ஈழத்தமிழர் சிலருக்கே தெரியாத பல விடயங்கள் பல உண்டு. அவற்றை நாம் தெளிவுபடுத்தி எமது உண்மையான நிலையை உலகிற்கு அறிய வைப்பது, போராட்டத்தின் பங்களிப்புகளில் ஒன்றாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.