Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

Featured Replies

மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

 

உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். 

3_SriLankan_Airlines.JPG

நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு பங்குதாரர் கிடைக்காதவிடத்து, அரசின் நிதியைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து சுயமாகவே மறுசீரமைத்துக்கொள்வது. இவ்விரண்டு வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே நிறுவனத்தைக் காப்பாற்ற முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்த சில நிறுவனங்கள், அதில் முதலிடும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன. 

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன மென்மேலும் நிதியைத் திரட்டித் தருவதாகக் கூறியுள்ளன. என்றபோதும், ஏலவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள கடன்கள் இன்னும் திருப்பிச் செலுத்தப்படாதுள்ளது. இந்த நிலையில் மேலும் கடன்களை வாங்குவது நிறுவனத்தின் நிலைமையை மட்டுமன்றி இரண்டு வங்கிகளின் நிலையையும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும் என்றும் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/28063

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்த சில நிறுவனங்கள், அதில் முதலிடும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன. 

எது நடக்கவேணுமோ அது நன்றாகவே நடக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், அதனை அதிகமாக பயன்படுத்தும் புலம்பெயர் தமிழர்களிடம் ஏன் உதவிகேட்டு பார்க்ககூடாது?:unsure: 

1 hour ago, valavan said:

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், அதனை அதிகமாக பயன்படுத்தும் புலம்பெயர் தமிழர்களிடம் ஏன் உதவிகேட்டு பார்க்ககூடாது?:unsure: 

 

1 hour ago, பெருமாள் said:

எது நடக்கவேணுமோ அது நன்றாகவே நடக்கின்றது .

இலங்கையின்  சுற்றுலாதுறை ஆண்டுக்கு 25% வளர்ச்சிபடைகிறது, ஆனால் விமான சேவையோ வரலாறு காணாத  நஷ்ட்டங்களை சந்திக்கிறது,  போர் உக்கிரமாக நடந்த்த காலங்களில்  லாபகரமாக இயங்கிய நிறுவனம் மோசமான முகாமைதுவத்தினால் வங்குரொத்து நிலைக்கு வந்து விட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

நிறுவனத்தின் நிதி நிலைமையை ஆராய்ந்த சில நிறுவனங்கள், அதில் முதலிடும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளன. 

அவனவன் மூழ்கிற கப்பலில் நமக்கு ஏன் சோழி என்று ஓடுகிறான் .

2 hours ago, valavan said:

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், அதனை அதிகமாக பயன்படுத்தும் புலம்பெயர் தமிழர்களிடம் ஏன் உதவிகேட்டு பார்க்ககூடாது?:unsure: 

 

2 hours ago, valavan said:

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், அதனை அதிகமாக பயன்படுத்தும் புலம்பெயர் தமிழர்களிடம் ஏன் உதவிகேட்டு பார்க்ககூடாது?:unsure: 

அவை எமிரேட்ஸ், கட்டார், எதிஹாட் என்று மாறி போவீனம் ????

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

தற்போதைய சொறிலங்காவின் நிலை  நன்றி Awantha Artigala

  • கருத்துக்கள உறவுகள்

சொரி  லங்காவி  தூபம் போடுகிறதா, இல்லை வேறு யாராவது அல்லது எந்த நாடாவது சொரி லங்காவை தூபம் போடுவதிற்கு தூண்டுகிறதா? குறிப்பாக சீன.

முக்கியமாக சீன கொழும்பு சர்வதேச விமான நிலைய உரிமையாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் படிப்படியாக மாற்றப்படுவதற்கு,  ஒட்டகம் கூடாரத்திடற்குள் போல் புகுந்தது போல, சொரி லங்காவே குத்து விளக்கு மற்றும் நிறை குடம் வைத்து அழைக்கிறது போல தென்படுகிறது.

கிந்தியாவின் கதி? கிந்தியவிடற்கு கீழேயே சவக்குழி தோணப்படுகிறதா? அதை கண்டும் காணாது போல  இருப்பதை தவிர கிந்தியவிடற்கு வேறு வழி?

ஓர் அரசின், பிராந்தியத்தின், ஓர் பெரு நிலப்பரப்பின் நலன்களையும், கரிசனைகளையும், ஓர் வம்சத்தின் அல்லது ஓர் (நேரு) குடும்பத்தின் , அதுவும் தனிப்பட்ட முறையில், ஓர் தேசத்தையும் இனத்தையும்  அழித்து கூட  பழிவாங்கும் வக்கிர உணர்வு விஞ்சி அது அந்த அரசின் நலனாக, வெளிநாட்டு கொள்கையாக மாறியதின் சமகால, மெலார்ந்த பிரதிபலிப்பு.

சீனப் பழமொழியில் சொல்வதானால், ஈழத்தமிழ் தேசம் May Hindia come to prosperity, its own place and live in interesting and exciting age என்று ஹிந்தியாவை வாழ்த்துகிறது.

 

 

 

  • தொடங்கியவர்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலை: தலைவர் ஊழியர்களுக்குக் கடிதம்

 

 

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலை: தலைவர் ஊழியர்களுக்குக் கடிதம்
 

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை உடனடியாக மூடிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் விசேட கடிதமொன்றின் மூலம் தமது உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்திற்கு மேலும் மூன்று மாற்றுத்திட்டங்களே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் வருமானத்தை விட செலவு அதிகம் என்பதால், அதனை அரசாங்கத்தாலும் நிதி வழங்கும் இரண்டு வங்கிகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த இரண்டு அரச வங்கிகளும் அவதான நிலைமையை எதிர்கொண்டுள்ளதால், எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் விமான
நிறுவன நட்டத்தை ஈடு செய்ய பணம் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் எஞ்சியுள்ள மூன்று மாற்றுத்திட்டங்கள் தொடர்பில் அஜித் டயஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், இணை பங்காளர் மூலம் விமான நிறுவனத்தை செயற்றிறனுடையதாக மாற்றுவதற்கு அதனை மீள் புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான பங்காளரைப் பெற்றுக்கொள்ள முடியாவிடின், அரச நிதி வகுப்பாளர்களினால் தமது செயற்பாடுகளை இந்த நிறுவனத்தின் மூலமாகவே
முகாமைத்துவம் செய்ய முடியுமான வகையில் மீள் புதுப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு மாற்றுத் திட்டங்களும் வெற்றியளிக்காத பட்சத்தில், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை மூடி விட வேண்டி ஏற்படும் என அதன் தலைவர்
தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு மீள் புதுப்பிக்கும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை
நியமித்துள்ளதாகவும் அவர்கள் தற்போது ஆரம்ப ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 20 ஆம் திகதியாகும் போது முதல் அறிக்கையைத் தயாரிக்க முடியும் என ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக மீள் புதுப்பித்தல் செயற்பாட்டினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக சர்வதேச நிறுவனம் ஒன்றிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்வுகளுக்கு ஏற்ப 2016 மற்றும் 2017 நிதி ஆண்டுகளில் 28 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை
எதிர்கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் நாளாந்த செலவுகளை ஈடு செய்ய அரச வங்கி மூலம் 7.5 பில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக்கொள்கின்றது.

இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவரின் கடிதத்திற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் கடிதம் ஒன்றின் மூலம் பதில்
வழங்கியுள்ளது.

ஆலோசனை பெறும் நிறுவனத்திடம் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு மீள் புதுப்பிக்கும் செயற்பாட்டினை புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட காலத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு விமான நிறுவனத்தை பிரதான தலைப்பாகப் பயன்படுத்தினாலும் அங்கு இடம்பெற்ற ஊழல் மோசடிகள்
தொடர்பில் கடந்த மூன்று வருடங்களில் எவ்வித நடவடிக்கையும எடுக்கப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய பணிப்பாளர் சபையின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டும் தொழிற்சங்கம், தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு வியாபார முகாமைத்துவம் தொடர்பில் எவ்வித அனுபவமும் இல்லை என கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும் தகைமை அவருக்கு இல்லை எனவும் கடந்த மூன்று வருடங்களில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு அதன் தலைவர் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/12/ஶ்ரீலங்கன்-விமான-நிறுவன-3/

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த காலப்பகுதியை நினைத்துகொள்கிரன் எத்தனை எத்தனை வெடி கொளுத்தினார்கள்  அதில் ஒன்று இலங்கை ஜனநாயக குடியரசு சைனா நாட்டின் துணையுடன் செய்மதி சொந்தமாக  ஏவுதல் அப்படி இப்படி எத்தனை அலப்பறை வெடிகள் இப்பத்தான் மடியில் இருந்து பூனைக்குட்டி வெளியில் வருகிறது இவ்வளவு நாளும் ஊரான் புடவையில் கொய்யகம் வைச்சு தமிழனுக்கு சோ காட்டின விடயம் . இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு ஸ்ரீ லங்கன் எயார் பறக்கணும் சாமி அப்படி இல்லாவிட்டால் இந்த சிங்கள ஜனநாயக குடியரசின் சிங்கள மக்களுக்கு  அவமானமாகிவிடும் சாமி .tw_blush:

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.