Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை

Featured Replies

இலங்கை கடற்படை சுட வேண்டிய அவசியம் இல்லை; வக்காலத்து வாங்கும் ஏ.கே.அந்தோணி

டெல்லி: இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுட வேண்டிய காரணமோ, அவசியமோ இல்லை என்று கூறியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து லோக்சபாவில் நேற்று தமிழக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பினர்.

அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசியது. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்திற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் வந்து இதுகுறித்து விவாதித்துள்ளார். இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அந்நாட்டு கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சுடவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

ஆனால் விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.

தமிழக மீனவர்களின் நலனைக் காக்க மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் அந்தோணி.

முன்னதாக திமுக உறுப்பினர் செ.குப்புசாமி பேசுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பல தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

http://thatstamil.oneindia.in/news/2007/03/14/minister.html

யார் என்ன சொன்னாலும் இந்திய மக்களுக்கு உண்மை நிலை தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் என்ன சொன்னாலும் இந்திய மக்களுக்கு உண்மை நிலை தெரியும்.

YES ESPECIALLY TAMILNADU PEOPLE KNOW VERY WELL ABOUT CUNNING AND TAMIL HATING MALAYALEES .

மக்களுக்குத்தெரிந்தது

மத்தியஅமைச்சருக்குத்தெரியவ

எனக்கென்னமோ ஏ.கே.அந்தோணி மேலதான் சந்தேகமே

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் அந்தோணி.[/quote}

தவறு காங்கிரஸ்க்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.எனவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார் அந்தோணி. :angry: :angry: அதனால்தான் ஏ.கே.அந்தோணி மேல் சந்தேகம். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்குத்தெரிந்தது

மத்தியஅமைச்சருக்குத்தெரியவ

மத்திய அமைச்சருக்குத் தெரியவில்லை என்று நீங்கள் நினைப்பது அதைவிட வேதனையான விடயம். என்ன நான் சொல்லுறது சரியோ?

எல்லாருக்கும் எல்லாம் தெரியும், இதெல்லாம் கபட நாடகம்

சுட்டவன் சிங்களவன் செத்தவன் தமிழன். இதற்கு வக்காலத்து வாங்குபவன் கேரளத்தான். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

ஈழத்திலிருந்து

ஜானா

இதற்கு ஒரே தீர்வு தமிழ் நாடு அரசு தனது அதிகாரத்தின் கீழ் கரையோர காவற்படையைக் கொண்டு வந்து அதனை நவீனப்படுத்தி மீனவருக்குப் பாதுகாப்பு வழங்குவதே.கரையோர மீனவ வளங்களைப் பாதுகாக்க மானில அரசுகள் இவ்வாறான கரையோரப்படையை நிறுவும் அதிகாரத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பில் தகுந்த மாற்றங்களை திமுகா மற்ற மானில அரசுகளுடன் சேர்ந்தும் மத்தியில் உள்ள தமது அரசியற் பலத்தின் மூலமும் கோர வேண்டும்.

இல்லை! இல்லை! இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் மலர்வது தான். அப்போது பாக்கு நீரிணை தமிழன் நீரிணை ஆகி விடும். அது நட்பு நீரிணையாகவும் மாறிவிடும்

இல்லை! இல்லை! இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் மலர்வது தான். அப்போது பாக்கு நீரிணை தமிழன் நீரிணை ஆகி விடும். அது நட்பு நீரிணையாகவும் மாறிவிடும்

அருமையான திட்டம் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SRILANKAN GOVERNMENT DOING THE RIGHT THING!! WHY DO THEY ENTER IN OUR SEA? I WUD DO THE SAME THING IF I WAS THERE , I WUD SHOOT ALL THE INDIAN FISHERMANS :D YARODA FISH YAARU PIDIKIRATHU ? [PICHU PODUVAN PICHU

சோல்யா சொல்லும் சொல்லிலும் எழுதும் வார்த்தைகளிலும் கவனம் இருப்பது நல்லத நண்பரெ

அந்த A K யை ஒருதடவை கச்சதீவுப் பக்கம் மீனபிடிக்க வரச்சொல்லுங்கோ.

அப்பதெரியும் சுமுகமான உறவின் நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை! இல்லை! இதற்கு ஒரே தீர்வு தமிழீழம் மலர்வது தான். அப்போது பாக்கு நீரிணை தமிழன் நீரிணை ஆகி விடும். அது நட்பு நீரிணையாகவும் மாறிவிடும்

நல்ல திட்டம்தான். அது நடக்கும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு மாற்றுத்திட்டம் இருந்தால் நல்லதல்லவா. ஈழத்திற்தான் எமதினம் அவலங்களுக்கு முகம்கொடுத்தபடி வாழ்கின்றதென்றால் தமிழகத்திலுமா? அவர்களாவது நிம்மதியாக வாழ்ந்தால் ஈழத்தவரின் பின்பலம் அதிகரிக்குமல்லவா.

இலங்கையரசு ஒரே கல்லில் மத்தியரசு,தமிழகம்,புலிகள் எல்லோரையும் அடித்துள்ளது.

தமிழக மீனவர்களைக்கொன்று புலிகளைச்சாட்டி மத்தியரசின் கவனத்தை திருப்பி

இந்தியகடற்படையுடன் கூட்டுரோந்தில் ஈடுபடப்பண்ணி மேலும் அழிவுகளை தமிழினத்திற்கு எற்படுத்த திட்டமிட்டு நடக்கிறது. மத்திய அரசின் அமைச்சர்கள்,அதிகாரிகளை மடக்கிவிட்டால் தமிழ் நாட்டை சாட்டை பண்ணத்தேவையில்லை என நினைத்துள்ளது. அயல் நாட்டு மக்களையே கொல்லும் சிங்களம் சொந்த நாட்டு தமிழ் மக்களை எவ்வளவு கொன்றழிக்கும் என்பது தமிழகம் நன்கறியும். அதே போன்று தமிழகமீனவர்களை சிங்களம் கொல்லும் போது மத்திய

அரசிலுள்ள பாதுகாப்பு மந்தி எவ்வளவு பொறுப்பில்லாமல் இலங்கை நட்பு நாடு தமிழகமீனவர்களை கொல்லமாட்டார்கள் என்று சொல்லுவார்? சொந்த நாட்டு மக்கள்

கொல்லப்படும் போது கொன்றவனை ஆதரிப்பதிலிருந்து தமிழகமீனவர்கள் உயிர்கள்

பேரிதில்லை என்று கூறுகிறாரா மந்திரி? கூட்டுரோந்து=பெரும் போரட்டம்(ஒயாத)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோல்யா சொல்லும் சொல்லிலும் எழுதும் வார்த்தைகளிலும் கவனம் இருப்பது நல்லத நண்பரெ

ok sirrrrr

நல்ல திட்டம்தான். அது நடக்கும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு மாற்றுத்திட்டம் இருந்தால் நல்லதல்லவா. ஈழத்திற்தான் எமதினம் அவலங்களுக்கு முகம்கொடுத்தபடி வாழ்கின்றதென்றால் தமிழகத்திலுமா? அவர்களாவது நிம்மதியாக வாழ்ந்தால் ஈழத்தவரின் பின்பலம் அதிகரிக்குமல்லவா.

ஈழத்தமிழருக்குப் பின்பலமா? அது இருந்திருதால் எப்போதோ முடிவை அடைந்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.