Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவையின் மகனும் தேர்தல் களத்தில்.

Featured Replies

மாவையின் மகனும் தேர்தல் களத்தில்.

mavai.jpg?resize=244%2C206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் போட்டியிடவுள்ளார். கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்வி கற்று வந்த கலையமுதன் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

வலி.வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுகின்றார். வலி.வடக்கு பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் முன்னாள் உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோரும் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிருகின்றமை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளைய தினம் மதியம் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைய உள்ள நிலையில் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாழில்.வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2017/56347/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கு பிறந்தது பூனையாகாது எண்டு நான் நினைக்கிறன்.......அதாகப்பட்டது தேப்பனை மாதிரியே வெடிக்கும்....பறக்கும்...புடுங்கும்..... எண்டு மோன்காரனும் கூத்து காட்டுவார் எண்டு நினைக்கிறன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு மாவையின் மகன் அரசியலில் இறங்குகிறார்? மாவை ஜனநாயக ரீதியில் போராடி பெற்று தந்த உரிமைகளே போதும் போதும் எண்டு சொல்லுற அளவுக்கு இன்னும் 100 வருஷத்துக்கு உக்காந்து அனுபவிக்க காணும், இன்னும் எதுக்கு மேலதிகமா? அளவுக்கதிகமா தமிழர்களுக்காக குடும்பத்தோட போராடி உடம்பை கெடுத்து கொள்ளாதீங்க!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, valavan said:

எதுக்கு மாவையின் மகன் அரசியலில் இறங்குகிறார்? மாவை ஜனநாயக ரீதியில் போராடி பெற்று தந்த உரிமைகளே போதும் போதும் எண்டு சொல்லுற அளவுக்கு இன்னும் 100 வருஷத்துக்கு உக்காந்து அனுபவிக்க காணும், இன்னும் எதுக்கு மேலதிகமா? அளவுக்கதிகமா தமிழர்களுக்காக குடும்பத்தோட போராடி உடம்பை கெடுத்து கொள்ளாதீங்க!

ஒரு சில தொழில்களை பரம்பரை தொழிலாக தமிழர்கள் வரவேற்பார்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஒரு சில தொழில்களை பரம்பரை தொழிலாக தமிழர்கள் வரவேற்பார்கள். :cool:

அகிம்சை ஆனாலும் சாரி, ஆயுத போராட்டம் என்றாலும் சரி.. உலக அளவில் பரம்பரை அரசியல் வெற்றி காணாத ஒரே இடம் இலங்கை தமிழர் அரசியல் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி குடும்பம் போல இருக்கு. ஸ்டாலினாவது அரசியல் போராட்டம் இஅது .இது என்று பெய்க்காட்டினார். இவர் ஒன்றுமே இல்லாமல் வானத்தில் இருந்து குதித்திருக்கிறார். இருந்தாலும் சுமத்திரன் வைக்கிற ஆப்பில் எல்லாம் ஆடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

கருணாநிதி குடும்பம் போல இருக்கு. ஸ்டாலினாவது அரசியல் போராட்டம் இஅது .இது என்று பெய்க்காட்டினார். இவர் ஒன்றுமே இல்லாமல் வானத்தில் இருந்து குதித்திருக்கிறார். இருந்தாலும் சுமத்திரன் வைக்கிற ஆப்பில் எல்லாம் ஆடும்.

சுமத்திரன் கட்டுசோத்துக்குள் பெருச்சாளி அல்ல பேய் என்பது தமிழரசு கூட்டம்களுக்கு இனித்தான் விளங்கும் அவரின் அரசியல் பிரவேசம் என்பது கூட்டமைப்பை சுக்கு நூறாய் உடைக்கவே இந்திய அமெரிக்க அரசுகளினால் அவரை கொண்டு வந்தவர்கள் இனி தலைக்கு மேல் வெள்ளம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.