Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளது

Featured Replies

சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளது – தமிழிலில் குளோபல் தமிழ் செய்திகள்

Sri-Lanka-is-trapped-in-Chinas-debt-trap

சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகைகளை செலுத்த முடியாது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, இலங்கை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவற்றினால் வழங்கப்படும் கடன்களைப் போன்றல்லாது, சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து கடனுதவிகளை வழங்கி வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கு தந்திரோபாய ரீதியிலும் கேந்திர ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடன்களை சீனா வழங்குகின்றது.

உதாரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளை வர்த்தக ரீதியில் இணைக்கும் முக்கியமான ஓர் கடல் மார்க்கமாக காணப்படுகின்றது. நிதி உதவி மற்றும் உட்கட்டுமான வசதிகளை வழங்கி வரும் சீனா, கைமாறாக இயற்கை வளங்களை பெற்றக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றது.

சமூகப் பொருளாதார பாதிப்புக்கள் அல்லது சுற்றாடல் பாதிப்புக்கள் குறித்து மதிப்பீடு செய்யாது, சந்தை வட்டி அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு கடன் வழங்கி வருகின்றது, சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்படுவதில்லை.
சீனா ஒரே கல்லில் இரண்டு கனிகளை பறிக்கும் வகையில் நாடுகளுக்கு கடன் வழங்கி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் செல்வாக்கு செலுத்தவும், ஏற்றுமதியை விஸ்தரிக்கவும் இவ்வாறு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறைக்கு நிகரான அணுகுமுறையே ஹம்பாந்தோட்டை விவகாரத்தில் பின்பற்றப்படுகின்றது. சீனா இதேவிதமாக பல நாடுகளில் தனது ராஜதந்திர மற்றும் பொருளாதார இலக்குகளை முன்னிலைப்படுத்தி அந்தந்த நாடுகளை கடன் பொறியில் சிக்க வைத்து அதன் ஊடாக நலன் ஈட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
நன்றி : ஏசிய டைம்ஸ்

Sri-Lanka-is-trapped-in-Chinas-debt-trapSri-Lanka-is-trapped-in-Chinas-debt-trap

http://globaltamilnews.net/2017/57568/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த China’s debt-trap diplomacy விளையாட்டு கடைசி யுத்தம்  ஏற்படுவதுக்கு முன்பே சைனா ஆபிரிக்கவின்  முக்கிய   கனிம வள நாடுகளை சூறையாடி கொண்டு இருந்தது இந்த இனவாத மதனமுத்து கூட்டம் அவனிடம் வலிய போய் காலில் விழுந்து இப்ப வேறு வழியின்றி எதுக்கு சண்டை பிடித்தார்களோ அவற்றையே பறி குடுத்து கொண்டு இருக்கிதுகள். இப்ப விஜயன் இருந்து இருந்தால் என்ன சொல்லி இருப்பான் என்பதை உங்களிடமே விடுகிறன்?..

அவர்களின் மகா வம்சத்தில் உள்ளது விஜயன் எனும் சிங்கள  அரசன் கூனி குறுகி படுத்து இருப்பதை பார்த்த தாய் ஏன் இப்படி மகனே என்று வினாவ  ஒரு பக்கம் தமிழன் அடுத்த பக்கம் தெற்கு கடல் அதனால்தான் அம்மா இப்படி கூனி குறுகி படுத்து இருக்கிறன் என்றானாம் கவனிக்க 1000 வருடங்களுக்கு முன்பே இனவாதம் இப்படி உள்ளது இப்ப அவன் இருந்து இருந்தால் கிழக்கு முஸ்லிம் அரக்கன் ,தெற்கு சைனா அரக்கன் என்ன சொல்லி இருப்பான் என்பதை திருவாளர் ரணில் அவர்களிடம்தான் கேட்டு தெரிஞ்சு கொள்ள வேணும் . 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

அவர்களின் மகா வம்சத்தில் உள்ளது விஜயன் எனும் சிங்கள  அரசன் கூனி குறுகி படுத்து இருப்பதை பார்த்த தாய் ஏன் இப்படி மகனே என்று வினாவ  ஒரு பக்கம் தமிழன் அடுத்த பக்கம் தெற்கு கடல் அதனால்தான் அம்மா இப்படி கூனி குறுகி படுத்து இருக்கிறன் என்றானாம் 

அது விசயன் அல்ல, துட்ட கெமுனு :10_wink:

இந்த சீன, இந்திய பிச்சுப் புடுங்களினூடே தான், நம்ம யாபாரமும் நடக்கணும்..:101_point_up:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அது விசயன் அல்ல, துட்ட கெமுனு :10_wink:

இந்த சீன, இந்திய பிச்சுப் புடுங்களினூடே தான், நம்ம யாபாரமும் நடக்கணும்..:101_point_up:

அருமையான பல சந்தர்ப்பங்கள் வந்தும் நம்மடை அரசியல் சம் சும் தங்கடை சுய நல அரசியல் செய்வதால் நாங்கள் ஏமாளி ஆகின்றோம் . மேலும் மேலும் ஏமாளி ஆக்கபட்டு கொண்டு இருக்கிறோம் . நன்றி சரியான பெயரை திருத்தியதுக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.