Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்!

Featured Replies

கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்!

 

கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்!

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொடா்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.

அத்துடன் தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் தமது போராட்டம் நிறைவு பெறாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 132 ஏக்கர் காணி நாளை (28) விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலா் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/132-acres-land-in-Keppapula-released

தமிழர்களிடம் திருடிய காணிகளின்  விடுவிப்பு நாளை நடைபெற்ற பின்னர் தான் உண்மை நிலவரங்கள் தெரியவரும்.

  • தொடங்கியவர்

கேப்­பாப்பு­லவு மக்­களின் 133 ஏக்கர் காணிகள் இன்று கைய­ளிக்­கப்­படும்

 

 
 

கேப்­பாப்பு­லவு மக்­க­ளுக்கு சொந்­த­மான 133ஏக்கர் காணிகள் இன்று அவர்­க­ளி­டத்தில் மீளவும் கைய­ளிக்­கப்­படும் என்று சிறைச்­சா­லை கள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அறி­வித்­துள் ளார்.

swamynathan.jpg

இது தொடர்பில் அமைச்சர் சுவா­மி­நாதன் விடுத்­துள்ள அறி­விப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்டுள்­ள­தா­வது, 

தேசிய பாது­காப்புக் கருதி இலங்கைத் தரைப்­ப­டையின் பாது­காப்புப் படைத் தலை­மை­ய­க­மொன்­றாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வந்த கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர் பிரிவின் கேப்­பா­பி­லவு கிரா­மத்தில் 133 ஏக்கர் காணிகள்  அமைச்சின் ஊடாக 148 மில்­லியன் ரூபா படைத் தலை­மை­ய­கத்தை இட­மாற்­று­வ­தற்கு இலங்கைத் தரைப்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

அந்த அடிப்­ப­டையில், டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இக்­கா­ணி­களை அவற்றின் ஆரம்ப உரித்­தா­ளி­க­ளிடம் மீண்டும் கைய­ளிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பிர­தேச செய­லா­ள­ருக்கு அறி­விப்பு விடுக்­கப்­பட்­டள்­ளது. 290நாட்­க­ளுக்கு மேல் தொடர்ந்த உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட்டு அம்­மக்­க­ளுக்கு தமக்குச் சொந்­த­மான கணி­களைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு தற்­போது உரு­வா­கின்­றது. 2018 ஆம் ஆண்டில் அக்­கா­ணி­களில் 85 குடும்­பங்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன என்­றுள்­ளது.

முன்­ன­தாக பாரா­ளு­மன்­றத்தில் கடந்த எட்டாம் திகதி நடை­பெற்ற வரவு செல­வுத்­திட்ட ஒதுக்­கீ­டுகள் குறித்த தனது அமைச்சின் தெரி­வுக்­குழு அறிக்கை மீதான விவா­தத்தில் கேப்­பா­புல தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளான ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சிவ­மோகன், சிவ­சக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா மற்றும் ஈ.பி.டி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போது, டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாபுலவு காணிகள் விடுவிக்கப்படும் என  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/28681

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் விடுவித்து விட்டு சொல்லணும் இப்படி எத்தனைதரம் சவுண்டு விட்டாச்சு .

  • தொடங்கியவர்

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

 

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் அபகரித்துள்ள காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் இன்று மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாபுலவு மக்கள் வாழ் இடத்தில் படையினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி  ரூபவதி கேதீஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி குணபாலன்,மற்றும் படைத்தளபதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மக்களின் காணிகளின் உரிமையினை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்க அவர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்கள்.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 68 குடும்பங்களுக்கு சொந்தமான 111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 17குடும்பங்களுக்கு சொந்தமான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 85 குடும்பங்களுக்கு சொந்தமான 133.34 ஏக்கர்  காணிகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளது

காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும்  வருகிற 1 ம் திகதி வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றி பிரதான பாதை   திறந்து விடப்படும் எனவும் அத்தோடு மக்களும் தங்களுடைய காணிகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்  

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 64 ஆவது படைஅணியின் 1ஆவது படைப்பரிவு தளபதி பிரிகேடியர் நிஷாந்த மானகே வரவேற்புரையினை நிகழ்த்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன்  ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தியுள்ளர்கள்.

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை பெறுவதற்காக சென்ற மக்கள் இதுவரை போராட்டத்தைதலைமையேற்று நடாத்திய ஆறுமுகம் வேலாயுதம் பிள்ளை அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். காணி விடுவிப்பை தொடர்ந்து மக்கள் முழுமையான காணி விடும்வரை போராட்டம் தொடருமென தெரிவித்துள்ளனர்.

கடந்த மாசிமாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482  ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://news.ibctamil.com/ta/internal-affairs/132-acres-land-in-Keppapula-Relief-

  • தொடங்கியவர்

விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கவுள்ள இராணுவம்!

 

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினரால் இன்று(28) விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள வீடுகளை அப்படியே கையளிக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கையளிக்கப்பட்ட காணிகளுக்குள் தாங்கள் வரும்போது 8 வீடுகள் காணப்பட்டதாகவும், அவை சிறந்த முறையில் புனரமைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், மாபிள் பாதிக்கப்பட்டு அழகாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக மக்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள வீடுகள் அப்படியே கையளிக்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தாம் புதிதாக குறித்த காணிக்குள் அமைத்த 29 வீடுகளையும் மக்களுக்கே வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த வீடுகள் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் கால்நடைகள் பலவும் காணக்கூடியதாக இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனா்.

காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாபுலவு மக்கள் வாழ் இடத்தில் படையிரின் ஏற்பாட்டில் இன்று(28) காலை நடைபெற்றது.

இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 68 குடும்பங்களுக்கு சொந்தமான 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 85 குடும்பங்களுக்கு சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/keppapulavu-land-release-28

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு ; மிகுதி காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் 

 

 
 

 

கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த  காணிகளில் இருந்து  133.4 ஏக்கர் காணிகள் இன்றையதினம்  மக்கள் முன்னிலையில்  மாவட்ட அரசாங்க அதிபர்  கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

kepppapilavu.jpg

 

காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது.

IMG_0703.JPG

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி துஷ்யந்த ராஜகுரு மற்றும் மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் சி குணபாலன் மற்றும் படைத்தளபதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_0696.JPG

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல்  துஷ்யந்த ராஜகுரு மக்களின் காணிகளின் உரிமையினை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனனிடம் கையளிக்க, அவர் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம்  கையளித்தார்.

IMG_0695.JPG

இதன்போது கேப்பாப்புலவு பகுதியில் 68 குடும்பங்களுக்கு சொந்தமான 111.5 ஏக்கர்  காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் 17குடும்பங்களுக்கு சொந்தமான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 85 குடும்பங்களுக்கு சொந்தமான 133.34 ஏக்கர்  காணிகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன.

IMG_0691.JPG

காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும்  எதிர்வரும் முதலாம் திகதி வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டு  பிரதான பாதை   மக்களின் பாவனைக்கு  விடப்படும் எனவும் அத்தோடு மக்களும் தங்களுடைய காணிகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார். 

IMG_0629.JPG

இந்த நிகழ்வில் 64 ஆவது படையணியின் முதலாவது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் நிஷாந்த மானகே வரவேற்புரையினை நிகழ்த்த மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி மேலதிக செயலாளர் செந்தில் நந்தனன்  ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர்.

IMG_0615.JPG

காணிகளை பெறுவதற்காக சென்ற மக்கள் இதுவரை போராட்டத்தை தலைமையேற்று நடாத்திய  ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளையை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு மிகுதியாகவுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்துள்ளனர்.

 

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தமது காணிகளை கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் இன்றுடன் 303 நாட்களாக போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

http://www.virakesari.lk/article/28712

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.