Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்!

Featured Replies

சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்!

 

சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்!

கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான, படையின் அபகரித்துள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றைய தினம் மக்கள் முன்னிலையில் படைத்தரப்பில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்போது கேப்பாபுலவு பகுதியில் 111.5 ஏக்கர் காணிகளும் சீனியாமோட்டை பகுதியில் மான 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன.

காணிகளை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த காணிகள் நில அளவீடு செய்து உரியவகையில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் வருகிற 1 ம் திகதி வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றி பிரதான பாதை திறந்து விடப்படும் எனவும் கூறியதோடு மக்களும் தங்களுடைய காணிகளுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பிரதேச செயலக காணி உத்தியோகததர்கள் கிராம அலுவலர்கள் காணிகளை அடையாளம் காட்ட மக்களை அழைத்திருந்தனர். இந்நிலையில் காணிகளை காட்ட சென்றவர்களை இராணுவத்தினர் தமது பேருந்தில் ஏற்றி சென்றிருந்தனர். இருப்பினும் ஒரு காணிக்கு ஒருவர் மாத்திரமே அழைத்து செல்லப்பட்டார்.

தமது காணிகளை வீடுகளை பார்க்கும் ஆவலில் இருந்த சிறார்கள் காணிகளுக்கு சென்ற உறவினர்களை வீடியோ கோல் எடுக்குமாறு கூறி தமது தொலைபேசிகளில் வீடுகள் காணிகளை பார்த்து மகிழ்ந்தமை குறிப்பிடத்தகதாகும்.

சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/mullaithivu-dec30

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

சொந்தக் காணிகளை ஆவலோடு பார்த்து படம் பிடித்துக்கொண்ட சிறுவர்கள்!

அடக்கடவுளே! சொந்த வீட்டுக்கு/காணிக்கு போறது கூட இலங்கை தமிழருக்கு சாதனை போல் வந்துவிட்டது.

நாடு அப்படி.....

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அடக்கடவுளே! சொந்த வீட்டுக்கு/காணிக்கு போறது கூட இலங்கை தமிழருக்கு சாதனை போல் வந்துவிட்டது.

நாடு அப்படி.....

இந்த ஆர்வமானது குறைத்து மதிப்பிடமுடியாதது. அதுதோடு தமது போராட்டத்தின் வெற்றியை அனுபவிக்கும் ஆவலின் வெளிப்பாடுமாகும். அதேவேளை புலத்திலே கணிசமான பராயவயதுடையோர் தமது ஊரெதென்று தெரியாமல் வளர்க்கப்படும் அவலமும் நிகழ்வது வேதனைக்குரியதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.