Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்டமைப்பை நகர்த்துவோம்: துளசி!

Featured Replies

விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை நோக்கி கூட்டமைப்பை நகர்த்துவோம்: துளசி!

 

விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை நகர்த்த முயற்சிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயக போராளிகள் கட்சியினால் இன்று வவுனியா குருமன்காட்டில் உள்ள விருந்தினர் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வாறான முரண்பாடுகள் இருக்கின்றதோ இல்லையோ ஒட்டு மொத்தமாக தமிழர்கள் தங்களது ஒற்றுமையின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே இதுவரை காலமும் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமது அரசியல் முகவரியை பெற்றுக்கொண்டவர்கள் தாயக பிரதேசத்திலே தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசியகூட்டமைப்பு தமிழர்களது அரசியல் வடிவமாக பயணிப்பது காலத்தின் கட்டாயமானதாகும். அந்தவகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை பாரிய வெற்றிக்கு இட்டுச்செல்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவான ஜனநாயக போராளிகள் கட்சியானது தனது முழுiமான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கியிருக்கிறது.

தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாமல் விட்டால் ஏனைய தேசிய கட்சிகள், தமிழ் தேசியத்தினூடாக தமது பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய நிலையேற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சில விமர்சனங்கள் இருக்கலாம், கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களில் சில விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழர்களின் ஒற்றுமையின் வெளிப்பாடு. அனைத்து போராளிகளும் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் இணைந்தே பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எம்மிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சில நபர்கள்தான் கட்சிகளையும் முரண்பாடான தோற்றப்பாடையும் உருவாக்கி செற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஏனைய போராளிகள் எம்மோடு இணைந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்துவதற்கான பயணத்தில் கைகோர்த்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அந்த கட்டமைப்பில் இருந்தவர்களை விட விடுதலைப்புலிகளில் மிக திறமையான அரசியலாளர்கள் இருந்தார்கள். ஆனால் காலத்தின்தேவை கருதியே தமிழ் தேசியத்திற்காக ஒன்றினைத்து தேசிய தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். இந்தநிலையில் தமிழர்களிற்கான தீர்வு விடயத்தில் தமிழீழ விடுதலைப்பலிகளினால் எட்டப்பட்ட தீர்மாணத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பை நகர்த்துவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்." என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-dec31

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாரென்று யாருக்காவது தெரியுமா? புலிகளால் உருவாக்கப்படவில்லை என்று அதன்தலைவரே கூறிவரும் நிலையில் இவர்கள் ஏன் இப்படி ஒரு பரப்புரை. மக்கள் மீது அக்கறை கொண்டோராக இருப்பின் மக்களைச் சுயமாகச் சிந்திக்கவும் சரியாக வழிகாட்டுவதையும் செய்வதே பொருத்தமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கேவலமான தமிழர்களின் அரசியல்கட்சிகள் தவறென்பதாலேயே சுயநலமற்ற  புலிகள் இயக்கம் அன்று தோன்றியது,  அதே கேவலமான அரசியல் கட்சிகளின் சுயநல பிரச்சாரத்துக்கு இன்று புலிகள் இயக்கம்  பயன்படுத்தப்படுகிறது!

கட்டுப்பாடான தலைமையின் கீழ் வாழ நீங்கள் கொடுத்துவைக்காதவர்கள் என்பது எம் தலைவிதி,

கட்டாக்காலிகளின் தலைமகளின்கீழ்தான் நீங்கள் என்றும் வாழ்ந்து தொலைப்பீர்கள் என்பது

தமிழர்களுக்கு எப்போதும் உள்ள விதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.