Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் 2018: சி.எஸ்.கே அணி எப்படி இருக்கு? ஒரு அலசல்

இரண்டு ஆண்டு கல தடையை முடித்து மீண்டும் களத்தில் இறங்குகிறது நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனியை தலைமையக கொண்ட இந்த அணியில் பல அனுபவமிக்க மற்றும் முத்த வீரர்களை கொண்டது இந்த அணி, ஆனாலும் ரசிகர்கள் மெக்கல்லம், அஸ்வின் மற்றும் சிலரை மிஸ் செய்கிறார்கள். மேலும் பல தகவல்கள் இந்த வீடியோவில்.

  • Replies 133
  • Views 16.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

சூப்பர் fan சரவணன்

  • தொடங்கியவர்

அனுபவ வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு குறித்து மனம் திறக்கும் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்

 

 
06chpmukasi%20viswanathan

காசி விஸ்வநாதன்

அனுபவ வீரர்களின் அடிப்படையிலேயே சிஎஸ்கே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த சீசனில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. இதற்கிடையே இம்முறை சிஎஸ்கே அணியில் 30 வயதை கடந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் (தோனி, பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், டு பிளெஸ்ஸிஸ், கேதார் ஜாதவ், ரெய்னா, அம்பாட்டி ராயுடு, வாட்சன், முரளி விஜய், கரண் சர்மா) இதனால் சீனியர் கிங்ஸ் அணி எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அனுபவ வீரர்களின் அடிப்படையிலேயே சிஎஸ்கே அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக பல்வேறு விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:

2 வருடங்களுக்குப் பிறகு அணி திரும்புகிறது, மக்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக் கிறது?.

அணியின் மதிப்பு குறையாமல் தான் உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் எங்கும் செல்லவில்லை. அவர்கள் அப்படியே தான் உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நடத்தப்பட்ட ஆய்வில் பார்த்த போது சென்னை அணி இல்லாததால் தமிழகத்தில் போட்டியை பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்தது. ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அணியின் மதிப்பு குறையவில்லை. ஸ்பான்சர்ஷிப் விஷயங்களில் கூட மற்ற அணிகளைவிட நாங்கள் முன்னதாகவே அனைத்து பணிகளையும் முடித்துவிட்டோம்.

கடந்த சீசன்களில் ஏர்செல் ஸ்பான்சராக இருந்தார்கள். இம்முறை எந்த நிறுவனம் உள்ளது?

ஸ்பான்சர்ஷிப் அனைத்தும் முடிவாகி விட்டது. அதனை முறைப்படி விரைவில் நாங்கள் அறிவிப்போம்.

இம்முறை சிஎஸ்கே அணியில் சீனியர் வீர்கள் அதிகம் உள்ளனரே ஏன்?

அனுபவ வீரர்களின் அடிப்படையை கொண்டே அணியை தேர்வு செய்துள்ளோம். இந்திய அணியில் மற்ற வீரர்களை விட தோனி முழு உடல் தகுதியுடன் விளையாடி வருகிறார். எங்களை பொறுத்தவரை அனுபவம் முக்கியம். அதேவேளையில் இளம் வீரர்களும் அணியில் உள்ளனர். சரியான கலவையில்தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பார்ப்பதற்கு அணி பலமாகவே உள்ளது. களத்திலும் அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களுக்கு அணி மீது முழு நம்பிக்கை உள்ளது.

சிஎஸ்கே அணி பங்கேற்ற 8 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றில் இருந்துள்ளது. இதில் இரு முறை சாம்பியன், 4 முறை 2-வது இடம் பிடித்துள்ளது. இரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அதே திறனை மீண்டும் வெளிப்படுத்த முடியுமா?

அதற்குத்தான் நாங்களும் முயற்சி செய்கிறோம். எங்களது நோக்கமே அதுதான். முதலில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய வேண்டும். டி 20 ஆட்டம் என்பது கணிக்க முடியாது. அப்படியிருக்கையில் 8 வருடங்கள் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தினோம். இதேபோன்ற திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஆவல். அதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். தற்போதுள்ள அணியால் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீபத்தில் தோனி அளித்த ஒரு பேட்டியில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை அதிகளவில் சேர்க்க முயற்சி செய்வோம் என தெரிவித்திருந்தார். எனினும் ஜெகதீசன், முரளி விஜய் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதற்கான காரணம்?

ஏல முறையில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களைத்தான் எடுக்க முடியும். எங்களுக்கென்று ஒரு அணிச்சேர்க்கை உள்ளது. அந்த அணிச் சேர்க்கைக்கு தகுந்தபடி சமநிலையை ஏற்படுத்த வேண்டும். முதலில் வரும் வீரர்களை விட்டுவிட முடியாது. பின்னால் வரும் வீரருக்காக காத்திருந்தால் ஒரு அணியை உருவாக்க முடியாது.

இதனால் இந்த வீரரைத்தான் எடுக்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருக்க முடியாது. உதாரணமாக அஸ்வினை முதலில் எடுக்க முயற்சி செய்தோம். ஒரு அளவுக்கு மேல் எங்களால் அவரை எடுக்க முடியாமல் போனது. முரளி விஜய் ஏலம் எடுக்கப்படாமல் இருந்தால் அவரை பிற்பகுதியில் எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் இருந்தோம். எங்களது எதிர்பார்ப்பின்படியே அது நடந்தது.

அதன் பின்னர் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்தோம். இதன் பின்னரே தினேஷ் கார்த்திக் ஏலப்பட்டியலில் வந்தார். தினேஷ் கார்த்திக்கிற்காக நாங்கள் காத்திருந்தால் ஹர்பஜன், கேதார் ஜாதவை எடுத்திருக்க முடியாது. ஏலமுறையில் எங்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறதோ, அதைத்தான் பயன்படுத்த முடியும். தமிழக வீரரைத்தான் எடுக்க வேண்டும் என்ற முடிவுடன் நாங்கள் இருக்க முடியாது.

வாஷிங்டன் சுந்தர் ஏலப்பட்டியலில் கடைசி பகுதியில்தான் வந்தார். அவர் 133-வது வீரராக இடம் பெற்றிருந்தார். அவரை நாங்கள் எடுக்க வேண்டும் என்றுதான் விரும்பினோம். ஆனால் அவருக்காக காத்திருந்தால் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்திருக்க மாட்டார்கள்.

இம்முறை சுழற்பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றம் உள்ளதே?

அப்படி இல்லை. மார்க்வுட், லுங்கி நிகிடி ஆகியோர் 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசக்கூடியவர்கள். இவர்களுடன் ஷர்துல் தாக்கூர், தீபக் ஷகார், கனிஷ்க் சேத் ஆகியோரும் உள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கனிஷ்க் சேத் இடது கை வேகப்பந்து வீச்சாளர். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவை தவிர பிராவோ, வாட்சனும் இருக்கிறார்கள். மொத்தத்தில் வேகம், சுழல் ஆகிய இரண்டுக்கும் வலுவான வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் டி 20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இம்ரன் தகிர், ஹர்பஜன், ஏற்கெனவே தனது திறனை நிருபித்துள்ள கரண் சர்மா, இடது கை சுழல் வீரர் மிட்செல் சான்ட்னர் ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜாவும் இருக்கின்றனர். சுழல், வேகம் ஆகிய இரண்டும் சமநிலையை வகிக்கும் வகையில்தான் அணியை தேர்வு செய்துள்ளோம்.

பேட்டிங்கில் இம்முறை தொடக்க வீரர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் யாரும் இடம் பெறாதது போன்ற தோற்றம் இருக்கிறதே?

டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், வாட்சன் ஆகியோர் சிறப்பான தொடக்கம் கொடுக்கக்கூடியவர்கள்தான். இவர்களுடன் சேம் பில்லிங்ஸ் இடம் பெற்றுள்ளார். அவரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்தான். இம்முறை மெக்கலத்தை எடுக்க முடியவில்லை. ஏலப்பட்டியலில் டு பிளெஸ்ஸிஸ் முதலில் வந்ததால் அவரை எடுத்துக்கொண்டோம்.

சிஎஸ்கே அணிக்காக வெப் டிவி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டதே. அதன் நிலை தற்போது எந்த அளவில் உள்ளது?

டேக்பிளே நிறுவனம்தான் எங்களது டெக்னிக்கல் பார்ட்னர். அவர்கள்தான் எங்களது இணையதளத்தை பராமரிக்கின்றனர். சிஎஸ்கே அணிக்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் வெப் டிவியும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றை பின்னர் அறிவிப்போம்.

இம்முறை ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெறுதவற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதே? இதில் உங்களது நிலைப்பாடு என்ன?

அதுபோன்று ஒரு பேச்சு உள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் இரு போட்டிகள் அமைவதை பல்வேறு அணிகள் விரும்பவில்லை. இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குவதுதான் ரசிகர்களின் வருகைக்கு சரியாக இருக்கும். 5.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தால் அடுத்த ஆட்டம் பாதிக்கும். ஸ்பான்சர்கள் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நேரத்தை மாற்ற எங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடிய வீரர்களுக்கு எதிர்கால வாய்ப்பு எப்படி உள்ளது?

அவர்கள் மிகவும் இளம் வீரர்கள். உடனடியாக அவர்களால் ஐபிஎல் போன்ற தொடர்களில் இடம் பெற முடியாது. தொடர்ச்சியாக பல்வேறு மட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐபிஎல் அணிகளுக்காக தேர்வு செய்யப்படலாம். வாஷிங்டன் சுந்தர் ஜூனி யர் சூப்பர் கிங்ஸ் தொடரில் விளையாடியவர்தான்.

சிஎஸ்கே அணிக்காக வீரர்களின் திறன் கண்டறியும் தேர்வு முகாம்கள் ஏதும் நடத்தப்படுகிறதா?

பயிற்சி முகாம் நடத்தவில்லை. உள்ளூர் போட்டிகளை நன்கு கூர்ந்து கவனிக்கிறோம். இதன் அடிப்படையில் திறன் உள்ள வீரர்கள் பட்டியலை தயார் செய்கிறோம். அவற்றில் இருந்துதான் வீரர்களை தேர்ந்தெடுக்கிறோம்.

தற்போதைய அணியில் ராஞ்சியை சேர்ந்த மோனுகுமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் தோனியின் உள்ளீடு இருந்ததா?

ஆமாம். வேகப்பந்து வீச்சாளரான அவரை, தோனிதான் பரிந்துரை செய்தார். வளர்ந்து வரும் வீரரான அவரை, எதிர்கால நோக்கில் தேர்வு செய் துள்ளோம்.

தமிழகத்தை தவிர்த்து பிறமாநில இளம் வீரர்கள் மீது ஏன் அதிக கவனம்?

நாங்கள் ஏற்கெனவே அவர்களை, அடையாளம் கண்டு வைத்திருந்தோம். அந்த வகையிலேயே தேர்வு செய்துள்ளோம்.

ஏலத்துக்கு முன்னதாக எப்படி திட்டமிட்டீர்களோ அதே அணியை பெற முடிந்துள்ளதா?

90 சதவீதம் நாங்கள் திட்டமிட்டபடியிலான அணியையே பெற்றுள்ளோம். ஒரு சில வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியாமல் போனது உண்மைதான்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் தற்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்களே? சிஎஸ்கே அணியில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்கள் யார்?

இம்ரன் தகிர், கரண் சர்மா ஆகியோர் சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்கள். டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் இம்ரன் தகிர்தான். கரண் சர்மா, கடந்த சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணிகளுக்காக சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். இவர்கள் மீது நம்பிக்கை உள்ளது.

ஹர்பஜனை கடந்த ஆண்டு மும்பை அணி சரியாக பயன்படுத்தவில்லை. இளம் வீரரான கிருனல் பாண்டியாவைத்தான் அதிகம் நம்பினர். ஒரு சில ஆட்டங்களில் ஹர்பஜன் சிங் அதிக ரன்களையும் வழங்கினார். இந்த சூழ்நிலையில் அவரை, நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். அவர் இந்த முறை ஜொலிப்பாரா?

ஹர்பஜன் சிங், 10 வருடங்களாகவே மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். ஒரு சில ஆட்டங்களில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். விக்கெட் கைப்பற்றுவதை மட்டுமே பார்க்கக்கூடாது. ரன்களை வழங்குவதில் சிக்கனமாகவும், எந்த சூழ்நிலையிலும் பந்து வீசக்கூடியவராகவும் ஹர்பஜன் உள்ளார். இதையும், அவரது அனுபவத்தையுமே நாங்கள் பார்க்கிறோம்.

ஏலத்தில் எந்த வீரரை எடுக்க அதிகம் போட்டி போட வேண்டிய நிலை இருந்தது?

ஷர்துல் தாக்கூர், தீபக் ஷகார், ஜெயதேவ் உனத்கட் ஆகியோரை எதிர் நோக்கினோம். உனத்கட்டை பெற ரூ.10.50 கோடி வரை சென்றோம். ஆனால் அதிக விலைக்கு மற்றொரு அணியால் எடுக்கப்பட்டு விட்டார். இதேபோல் ஆன்ட்ரூ டையை எடுக்க விரும்பினோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

http://tamil.thehindu.com/sports/article22665097.ece?homepage=true

  • தொடங்கியவர்

"எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் ஆற்றல் பிடிக்கும்"- தென்.ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி

 

 
Lungi-Ngidi-Records-in-Hindi-740x431jpg

லுங்கி இங்கிடி

எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆற்றல் பிடிக்கும் என்று ஐபிஎல்லில் அந்த அணிக்காக விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி கூறியுள்ளார்.

ஐபிஎல் டி20, 2018-ம் ஆண்டுத் தொடருக்கான ஏலத்தில் தென்ஆப்பிரிக்க அணியின் லுங்கி இங்கிடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடபெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருப்பது குறித்து லுங்கி இங்கிடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. கனவு நனவாகியுள்ளது. இந்த அற்புதமான ஆசிர்வாதத்துக்காக நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல்லில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். விளையாட்டு மீதான இந்தியர்களின் காதல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எனர்ஜி (ஆற்றல்) மிகவும் பிடிக்கும்.

நான் லுங்கிடான்ஸ் பாடலை தற்போதுதான் கேட்டேன்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

லுங்கி நிக்டி ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடப்பெற்றபோது நெட்டிசன்கள் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடப்பெற்ற லுங்கி டான்ஸ் பாடலைக் கொண்டு லுங்கி இங்கிடி குறிப்பிட்டு பதிவுகளையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22689320.ece

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முத்தூட் நிதி நிறுவனம் ஸ்பான்சர்

 

 
12chpmuCSK

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பங்குதாரராக முத்தூட் நிதி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அணியும் ஜெர்சியின் மீது முத்தூட் நிதி நிறுவனம் என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். இத்தகவலை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தூட் குழுமத்தின் துணை மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர் ஜார்ஜ் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “இந்தியாவில் அதிக அளவு மக்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதன. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தொடர் பெரிய அளவிலும் சிறப்பானதாகவும் அமைந்துள்ளது. ஏற்கெனவே முத்தூட் குழுமம் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்களிப்பு செய்து வருகிறது. புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே டெல்லி அணிக்கு 4 ஆண்டுகள் ஸ்பான்சராக இருந்துள்ளோம். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப் பூர்வமான பங்குதாரராக முத்தூட் குழுமம் செயல்பட உள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையில் செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளோம்” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறும்போது, “கடந்த 130 ஆண்டுகளாக வர்த்தகப் பணியில் ஈடுபட்டுள்ள முத்தூட் நிதி நிறுவன குழுமத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் 4500-க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களை முத்தூட் குழுமம் கொண்டுள்ளது. இதன் மூலமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் எளிதில் பிரபலமாகும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article22727717.ece

  • தொடங்கியவர்

தோனியின் கீழ் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது: ஷேன் வாட்சன் கருத்து

 
IN12WATSONjpg

வாட்சன்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவம் என்றும் கேப்டன் தோனியின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சியான விஷயம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வரலாற்று புகழை கொண்ட சிறந்த அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவது உண்மையிலேயே கவுரவமான விஷயம். மேலும் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளது எனது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரிய எதிரியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். ஆனால் அது நீண்ட காலத்துக்கு இல்லை. நான் இன்னும் கிரிக்கெட் விளையாட்டை விரும்பியே விளையாடுகிறேன், என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது எளிது.

ஆட்டத்தின் போக்கு எப்படி இருக்கும் என தெரியாத இந்த விளையாட்டை இன்னும் நான் விரும்பியபடியும், சிறந்த போட்டியாளராகவும் உள்ளேன். அனைத்து ஆட்டங்களிலும் என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தோனி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் நம்ப முடியாத வகையிலான சிறந்த அணிதான். தற்போதுள்ள அமைந்துள்ள அணியும், கடந்த ஆண்டுகளில் செயல்பட்ட அணியைவிட சிறப்பானதே.

இவ்வாறு ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

ஷேன் வாட்சன் 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இதன் பின்னர் கடந்த இரு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய நிலையில் தற்போது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். 36 வயதான அவர், இதுவரை ஐபிஎல் தொடரில் 102 ஆட்டங்களில் விளையாடி 2,622 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 138.65 ஆகும். ஆல்ரவுண்டரான வாட்சன் 86 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர், ஓய்வுபெற்றிருந்தார். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22738391.ece

  • தொடங்கியவர்

தோனி உறுதியளித்து விட்டார்; இனி பேட்டிங்கில் முழு கவனம் செலுத்துவேன்: ‘சத’ ஜடேஜா உறுதி

 

 
jadeja

தோனி, ஜடேஜா.   -  கோப்புப் படம். | விவேக் பெந்த்ரே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பேட்டிங் வாய்ப்புகளை அதிகம் வழங்குவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி உறுதியளித்தது ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கில் சதம் மூலம் எதிரொலித்துள்ளது.

நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா 116 பந்துகளில் 113 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக நிற்க 330 ரன்கள் இலக்கை சவுராஷ்டிரா அணி விரட்டி வெற்றி பெற்றது. இந்த 113 ரன்களில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கும்.

இது ஜடேஜாவின் 2-வது லிஸ்ட் ஏ சதமாகும். 4-ம் நிலையில் இறங்கி பேட்டிங் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார் ஜடேஜா.

இது குறித்து தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸில் ஜடேஜா கூறியதாவது:

மாஹி பாய் (தோனி) என்னிடம் வரும் ஐபிஎல் தொடரில் எனக்கு பேட்டிங் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று கூறினார். மேலும் ஒரு முறையான பேட்ஸ்மெனுக்கான திறமை என்னிடம் இருப்பதாகவும், எப்போதாவது ஒளிரும் பேட்ஸ்மென் அல்ல என்றும் தோனி தெரிவித்தார்.

ஆகவே நான் என் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். தோனி கூறியது எனக்கு உத்வேகமூட்டுகிறது. ஒரு முனையில் நின்று ஆடக்கூடிய பேட்டிங் எனக்கு பழக்கமானதுதான்.

என் பேட்டிங்கில் நான் கவனம் செலுத்தி வருகிறேன், 20-25 ரன்களை அடிக்கும் பேட்ஸ்மெனாக ஒருபோதும் இனி இருக்க முடியாது.இந்தப் போட்டியில் செய்தது போல் ஒருமுனையில் நின்று கடைசி வரை வெற்றிக்காக ஆடும் வீர்ராக விரும்புகிறேன். இந்த வெற்றி எனக்கு பெரிய அளவில் உற்சாகத்தை அளிக்கிறது. இவ்வளவு பெரிய இலக்கை துரத்தி வெற்றி கண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

இவ்வாறு கூறிய ஜடேஜா, விஜய் ஹசாரே டிராபியின் 4 போட்டிகளில் விக்கெட்டுகள் எதையும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22732664.ece

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

  • தொடங்கியவர்

நான் மிகவும் ரசித்த தோனியுடன் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்: சாம் பில்லிங்ஸ்

uopjpg

தோனி (இடது), சாம் பில்லிங்க்ஸ் (இடது)

நான் மிகவும் ரசித்த தோனியிடம் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று ஐபிஎல் சீசன் 2018-ல் சிஎஸ்கேவில் இணைந்து விளையாடவுள்ள இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் டி20 2018 -ல் இங்கிலாந்து வீரர், சாம் பில்லிங்ஸ் (26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையட இருக்கிறார் சாம் பில்லிங்ஸ்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளது குறித்து சாம் பில்லிங்ஸ் அந்த அணியின்வலைதளத்தில் கூறும்போது, ''நான் சிறந்த அணியுடனும், அனுபவம் மிக்க வீரர்களுடனும்  விளையாட ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த வீரரான தோனியுடன் இணைந்து விளையாடவும், கற்றுக்கொள்ளவும் இருப்பதை எதிர்நோக்கி இருக்கிறேன். எங்கள் இருவருக்கும் பேட்ஸ்மேன், கீப்பர் என்று ஒற்றுமை உள்ளது'' என்றார்.

உங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அழுத்தங்களை எப்படி எதிர் கொள்வீர்கள் என்ற கேள்விக்கு, ''நிச்சயமாக நீங்கள் ஒரு அணிக்காக விளையாடும்போது ஒவ்வொரும் முறை நீங்கள் களத்தில் இறங்கும்போது அழுத்தம் உருவாகும். உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதும் அற்புதமானது'' என்று கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article22797360.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

‘மேட்ச் வின்னராக’ ஜொலிக்க தோனி, பிராவோவின் அனுபவ அறிவு எனக்கு வேண்டும்: இங்கிலாந்து வீரர் மார்க் உட் கருத்து

 

 
mark%20wood

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட்   -  படஉதவி: கெட்டி இமேஜஸ்

மேட்ச் வின்னராக ஜொலிக்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் வீரர் டுவைன் பிராவோ ஆகியோரின் அனுபவ அறிவு எனக்குவேண்டும் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இணையதளத்துக்கு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னைத் தேர்வு செய்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் விளையாடும்போதுதான் நாம் அதிகமான விஷயங்களைக் கற்க முடியும். அதிலும் அனுபவ வீரர்களுடன் விளையாடும் போது, நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைநாம் அவர்களுக்கு அருகே இருந்து பார்த்து கற்க முடியும்.

அதிலும் எங்கள் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியுடனும், மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோவுடனும் நான் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். ஒரு மேட்ச் வின்னராக ஜொலிக்க இருவரின் மூளையின் உதவியும் எனக்கு வேண்டும்.

என்னுடைய பந்துவீச்சில் “ஸ்லோபால்” முறையை திருத்தி, அதை வலுப்படுத்தியவர் பிராவோதான். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டிகளில், அதிலும் சிறந்த அணியில் இடம் பெற்று விளையாடுவதை யார்தான் விரும்பமாட்டார்கள். நான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரன்.

வேகப்பந்துவீச்சாளர்களைச் சுற்றி எப்போதும் ஒருவிதமான நெருக்கடியும், அழுத்தமும் இருந்து கொண்டே இருக்கும். அதேசமயம், இந்த முறை சிஎஸ்கே அணியில் லிங்கிடி, ஷர்துல் தாக்கூர் இருப்பது எனக்கு பக்கபலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article22907160.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐபிஎல்லின் மேட்ச் வின்னர் இவர்தான்.. சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பி இருக்கும் இங்கிலாந்து வீரர்!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய சென்னை அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இந்த சென்னை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

அதேபோல் சென்னை அணியின் பவுலிங் ஆர்டரும் மிகவும் வலுவாக இருக்கிறது.

எத்தனை கோடி

சென்னை அணியின் மேட்ச் வின்னர் என்ற இடத்தில் நீண்ட காலமாக ரெய்னா இருந்து வந்தார். தற்போது அந்த இடத்திற்கு ஒரு இங்கிலாந்து வீரர் வந்துள்ளார்.

 

எத்தனை கோடி

ஏலத்தில் மார்க் உட் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 1.5 கோடி கொடுத்து மார்க் உட் ஏலம் எடுக்கப்பட்டார். ஆல்ரவுண்டரான இவர் சென்னை அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

எத்தனை ஆல்ரவுண்டர்

எத்தனை ஆல்ரவுண்டர்

சென்னை அணியில் மொத்தம் 11 ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். பிராவோ, ஜடேஜா, கேதார் ஜாதவ், ஷேன் வாட்சன், மிட்சல் சாண்டர், தீபக் சாஹர், மார்க் உட், கனிஷ்க் சேத், துருவ் ஷோரி, சிட்ஸ் சர்மா, சைத்தானியா பிஸ்நோய் ஆகியோர் ஆவர். அனைத்து வயதினரும் இதில் கலந்து இருக்கிறார்கள்.

வின்னர்

வின்னர் இவர்தான்

சென்னை அணிக்கு மேட்ச் வின்னராக இருப்பார் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை அணியில் நிறைய ஆல்ரவுண்டர் இருந்தாலும் மார்க் தனி மார்க் போடுவார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

மார்க் பேட்டி

 

மார்க் பேட்டி

இதுக்குறித்து இவரே பேட்டி அளித்துள்ளார். அதில் ''எனக்கு சென்னை அணியில் விளையாடுவது மிகவும் சந்தோசம் அளிக்கிறது. மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். டோணி தலைமையின் கீழ் விளையாடுவது இப்போதே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது'' என்றுள்ளார்.


Read more at: https://tamil.mykhel.com/cricket/mark-wood-hopes-be-match-winner-csk/articlecontent-pf22467-009783.html

  • தொடங்கியவர்

'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்': ஹாட்ரிக் குறித்து ரஜினி வசனத்தில் பதிலளித்த இம்ரான் தாஹீர்

 

 
jioljpg

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து பதிவு ஒன்றையிட்டுருந்தது. அதற்கு அருணாச்சலம் படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பதிலாக அளித்துள்ளார் இம்ரான் தாஹிர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற சர்வதேச வீர்ர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான்நடத்தி வருகிறது.

மூன்றாவது சீசன் பிஎஸ்எல் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா, இஸ்லமபாத் முல்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் முல்தான் சுல்தான் மற்றும் குவெட்ட கிளாடியேட்டர்ர்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் முல்தான் சுல்தான் அணியின் இம்ரான் தஹிர் ஹாட்ரிக் எடுத்தார்.

இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தாஹிர் விளையாடுகிறார்) தனது ட்விட்டர் பக்கத்தில், ”அனைவரும்சேர்ந்து விசில் அடியுங்கள் நமது  ஹாட்ரிக் வீரருக்காக” என்று பதிவிட்டிருந்தனர்.

இதற்கு இம்ரான் தஹிர் , "மிக்க நன்றி... உங்க மொழியில சொல்ல வேண்டும் என்றால்,  ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்குறான். பொறுத்து கொள்ளுங்கள் நான் இன்னும் சென்னை மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்

 

Put your whistles together for the hat-trick man, our beloved #ParasakthiExpress! #OdinenOdinen ???pic.twitter.com/beV570Nh0u

 

Thanks a lot god proposes man disposes in your language andavan solran arunachalam mudikran pls bear me Iam still learning chennai language

http://tamil.thehindu.com/sports/article22932603.ece?homepage=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பின்னடைவு? மிட்செல் சாண்ட்னர் விலகல்

 

 
santner

2016-ல்விசாகப்பட்டிணத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் தோனியை வீழ்த்திய சாண்ட்னர்.   -  படம். | கே.ஆர்.தீபக்.

கடும் முழங்கால் காயம் காரணமாக 9 மாதங்களுக்கு நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னரினால் கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நியூஸிலாந்து அணிக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சாண்ட்னர் மிகவும் சிக்கனமாக தன் இடது கை ஸ்பின் ஓவர்களை வீசுவதோடு பின் வரிசையில் இறங்கி சமீபத்தில் இங்கிலாந்து பந்து வீச்சுக்கு தன் மட்டையின் மூலம் காட்டு காட்டென்று காட்டினார், இதனையடுத்து வரும் ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்சில் கேப்டன் தோனியின் வலதுகரமாகச் செயல்படுவார் என்ற ஆவல் மேலிட்டது.

தோனிக்கும் வேகப்பந்து வீச்சை விட ஸ்பின் பவுலிங்தான் அதிக விருப்பம், அதிலும் சாண்ட்னர் போன்ற ஒரு பவுலர், ஆல்ரவுண்டர் என்பது தோனியின் கிரிக்கெட் உத்திக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் காயமடைந்தார், ஸ்கேனில் முழங்கால் எலும்பில் கோளாறு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை கட்டாயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்க சாண்ட்னர் 6-9 மாதங்கள் வரை கிரிக்கெட் பக்கம் தலைவைத்து படுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நியூஸிலாந்தின் அடுத்தடுத்த தொடர்களில் இவரது பங்களிப்பின்மையாலும் இவரை வைத்து திட்டங்கள் பலதீட்டும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொஞ்சம் கை ஒடிந்தது போல்தான் இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

http://tamil.thehindu.com/sports/article23243787.ece

  • தொடங்கியவர்

வெளியேறிய சாண்டனர்: மாற்று வீரராக யாரைத் தேர்வு செய்யப் போகிறது சிஎஸ்கே?

 

 
dhoni121

 

சென்னை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னரை இந்த வருடை ஐபிஎல்-லில் காணமுடியாது. எனில், அவருக்குப் பதிலாக எந்த வீரரை சிஎஸ்கே தேர்வு செய்யப்போகிறது?

26 வயது சாண்ட்னரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 45*, 63*, 41, 67 என ரன்கள் குவித்தார் சாண்ட்னர். இதனால் அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் திறமைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் காயத்தால் தற்போது அவரால் ஐபிஎல் போட்டியிலேயே விளையாடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாண்ட்னருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் தீவிரமாக உள்ளதால் தற்போது அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்துக்கு 9 மாதங்கள் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல், கவுண்டி ஆட்டங்கள் போன்ற முக்கியமான போட்டிகளில் சாண்ட்னரால் பங்கேற்கமுடியாது.

Santner44xx.jpg

எனினும் தற்போது சாண்ட்னருக்குப் பதிலாக மற்றொரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும். ஆனாலும் அதில் சில விதிமுறைகள் உள்ளன.

சாண்ட்னருக்கு சிஎஸ்கே எவ்வளவு வழங்குவதாக இருந்ததோ அதே தொகையில் அல்லது அதற்குக் குறைவான தொகைக்குத்தான் வீரரைத் தேர்வு செய்யவேண்டும். ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பிடித்த வீரர்களில் இருந்துதான் அவர் தேர்வாக வேண்டும். அவ்வீரரின் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவானதாக இருக்கவேண்டும் என்கிற நெருக்கடிகள் சிஎஸ்கேவுக்கு உள்ளன. 

இன்னொரு ஆல்ரவுண்டர்தான் வேண்டுமென்றால் ஆஸ்திரேலியாவின் ஆஸ்டன் அகரை சிஎஸ்கே தேர்வு செய்யலாம். மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க வீரர் டுவைன் ஸ்மித்தும் ஒரு நல்ல தேர்வாக அமைவார். மே.இ. ஆல்ரவுண்டர் ரோவ்மேன் பவலையும் சிஎஸ்கே பரிசீலிக்க வாய்ப்புண்டு.  

பிரக்யான் ஓஜா, இக்பால் அப்துல்லா, சாய் கிஷோர் போன்ற இடக்கை பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்யலாம். ஆனால் அணியில் ஏற்கெனவே ஜடேஜா இருப்பதால் இன்னொரு இடக்கை பந்துவீச்சாளரை சிஎஸ்கே தேர்வு செய்யவேண்டிய அவசியம் இருக்காது. 

வருண் ஆரோன், ஜை ரிச்சர்ட்சன், மார்க்ரம், ஷம்ஸி என ரூ. 50 லட்சத்துக்குள் தேர்வு செய்யக்கூடிய வீரர்கள் பலர் உள்ளார்கள். சென்னை அணியின் தேவைக்கேற்ப தகுந்த வீரர் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளார்.

சாண்டனரின் நிலைமையை அறிந்துள்ளோம். கேப்டனும் பயிற்சியாளரும் இணைந்து எந்த வீரரைத் தேர்வு செய்யவேண்டும் என முடிவெடுப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

agar1.jpg

 

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/15/csk-to-seek-replacement-for-santner-2881204.html

  • தொடங்கியவர்

``கேப்டன் கூல் தோனி இருக்க எனக்கென்ன கவலை!’’ மீண்டும் சிஎஸ்கே-வில் டுவைன் பிராவோ

 

ஐ.பி.எல் வந்து விட்டது. சி.எஸ்.கே மீண்டு வந்து விட்டது. சேப்பாக்கம் ஸ்டேடியம் அலங்காரத்துடன் தயாராகி வருகிறது. டுவைன் பிராவோ சென்னை வந்துவிட்டார். சென்னை வந்து சேர்ந்த வீரர்கள் பி கிரவுண்டில் பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர். ப்ரோமோ, பிரஸ் மீட் என சி.எஸ்.கே நிர்வாகம் பிஸியாகி விட்டது. அப்படியொரு ஸ்பான்ஷர் பிரஸ் மீட்டில் முரளி விஜய், டுவைன் பிராவோ இருவரும் சி.எஸ்.கே சார்பில் கம்பேக் கொடுத்தனர்.

பிராவோ - முரளி விஜய்

 

``வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுவிட்டது. ஒருவேளை தகுதிபெறாமல் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பையை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?’’

டுவைன் பிராவோ: ``உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றதற்காக வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களை நினைத்து சந்தோஷப்படுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பை என்பது இத்தாலி இல்லாத ஃபிஃபா உலகக் கோப்பையைப் போன்றது. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் இளமையான அணி. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நடக்கும் களேபரங்களுக்கு இடையே, அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் எப்போது நன்றாகவே விளையாடியிருக்கிறது.’’

``சென்னை அணிக்குத் திரும்பியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

பிராவோ: ``சென்னைக்குத் திரும்புவது என்பது வீட்டுக்குத் திரும்புவதுபோன்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியை மிஸ் செய்தது கொஞ்சம் ஏமாற்றமே. ஐ.பி.எல் ஏலத்தின்போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். எப்படியாவது சி.எஸ்.கே என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது நடந்து விட்டது. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. சி.எஸ்.கே அணியில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஷ் தொடருக்குப் பிறகு வேறு எந்த அணியிலும் விளையாடவில்லை. 

பிராவோ

``வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் அனைவரும் ஐ.பி.எல் தொடரில் ஜொலிப்பது எதனால்?’’

பிராவோ: ``எங்களை நாங்களே கொண்டாடக்கூடியவர்கள். டி-20-யைப் பொறுத்தவரை என்டெர்டெயன்மென்ட்தான் முக்கியம். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர். எங்களின் கேம்ஸ்டைல் அதற்கு உகந்ததாக இருக்கிறது. அதனால்தான் கெய்ல், பொல்லார்டு, டேரன் சமி போன்ற வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமாக வலம்வருகிறார்கள். அதேமாதிரி வெறுமனே விளையாட வேண்டும் என்பது மட்டுமல்லாது வெற்றிபெற வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் ஊறிப்போயிருக்கிறது.

``சி.எஸ்.கே அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்கிறீர்கள். அப்போது போலிஞ்சர், ஹில்ஃபெனாஸ், நெஹ்ரா போன்ற சீனியர் பெளலர்கள் அணியில் இருந்தனர். இப்போது அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. நீங்கள்தான் வேகப்பந்துவீச்சை முன்னின்று நடத்த வேண்டும் என்பதில் நெருக்கடி இருக்கிறதா?’’

பிராவோ: ``கண்டிப்பாக நெருக்கடி இல்லை. வாட்சன், ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை. எல்லாவற்றையும்விட கேப்டன் கூல் (தோனி) இருக்கிறார். அவர் எப்போதுமே அந்த மொமன்ட்டை அனுபவிக்கச் சொல்வார். அதனால், எந்த நெருக்கடியும் இல்லை. தவிர, இளம் உள்ளூர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

`` `டெஸ்ட், டி-20  போட்டிகள் மட்டுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கும்’ என ஷேன் வார்னே சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்து?’’

பிராவோ: ``அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் யார்? டி-20, டெஸ்ட், ஒன் டே மட்டுமல்ல, டி-10 ஃபார்மட் கூட வந்துவிட்டது. இவை எல்லாமேதான் கிரிக்கெட். எல்லா ஃபார்மட்டையும் விளையாட வேண்டும். இதைப் பற்றி வேறு என்ன சொல்ல...’’

``மிச்செல் சான்ட்னர் உங்கள் கேம் பிளானில் முக்கியப் பங்கு வகிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். காயம் காரணமாக அவர் விலகியிருப்பது உங்களுக்கு பின்னடைவாக இருக்குமா? அவருக்கு மாற்று யார்?’’

காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் செயலாளர்: ``எங்கள் கேம் பிளானில் சான்ட்னரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர் இல்லாதது உண்மையிலேயே பின்னடைவுதான். அவரை யார் ரீபிளேஸ் செய்வது என்பதை பயிற்சியாளர், அணி நிர்வாகம்தான் முடிவு செய்யும்.’’

முரளி விஜய்

``கடந்த ஐ.பி.எல் போட்டியில் நீங்கள் விளையாடவில்லை. அதன்பின் லிமிடெட் ஓவர்ஸ் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை. 2019 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த ஐ.பி.எல் உங்களுக்கு லிமிட்டெட் ஓவர் அணியில் இடம்பெற்றுத் தரும் வாய்ப்பாக அமையுமா?’’ 

முரளி விஜய்: ``நன்றாக விளையாடி அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு தயாராகவே இருக்கிறேன்.’’

அடுத்து வரும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

முரளி விஜய்: ``அந்தத் தொடர்களுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிலும் கூட நன்றாகவே விளையாடினோம். துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து விட்டோம். ஒருவேளை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். தென்னாப்பிரிக்கத் தொடரில் பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்.’’

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன், கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா?

முரளி விஜய்: ``கவுன்ட்டியில் விளையாடுவதென்பது பெரிய பிராசஸ். அவுட் ஸ்டேஷன் பிளேயர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே அவர்கள் மற்ற வீரர்களைத் தொடர்புகொள்வார்கள். அங்கு விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. கவுன்ட்டியில் விளையாடுவது குறித்து என்னையும் தொடர்பு கொண்டார்கள். ஆனால், அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.’’ 

பிராவோ - முரளி விஜய்

``தென்னாப்பிரிக்கத் தொடரில் நினைத்த அளவு சோபிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்காகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த  ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் அதையெல்லாம் மறக்கடிக்குமா?’’

முரளி விஜய்: நான் எப்போதுமே ரிலாக்ஸான மனநிலையில்தான் இருப்பேன். என்ன மாதிரியான கேம் விளையாட வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கிறேன்.’’

``சி.எஸ்.கே-வில் விளையாடிய காலகட்டம் உங்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக இருந்தது. அந்த நினைவுகள் பற்றி...?’’

முரளி விஜய்: ``மும்பையுடன் ஜெயிப்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விஷயம். சென்னை அணியுடன் எனக்கு ஏராளமான நினைவுகள் உள்ளன. எது பெஸ்ட் என பட்டியலிட முடியாது. இந்தமுறை அதிக நினைவுகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

``சி.எஸ்.கே அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது எப்படி இருக்கிறது?’’ 

 

முரளி விஜய்: ``சி.எஸ்.கே கிரிக்கெட்டிங் ஸ்டைல் அருமையாக இருக்கும். அந்த அணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி. இது எனக்குக் கிடைத்தப் பெரிய வாய்ப்பு.’’

https://www.vikatan.com/news/sports/119896-dwayne-bravo-murali-vijay-speak-about-csks-comeback.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'நான் வந்துட்டேன்'னு சொல்லு: தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களைக் கவர்ந்த ஹர்பஜன் சிங்

 

 
hhar

ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவு   -  படம்: ட்விட்டர்

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன் சிங், ரஜினிகாந்தின் 'கபாலி' பட வசனமான ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வாசகத்தை ட்வீட் செய்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வந்தார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்க உள்ள 11-வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி கழற்றிவிட்டது.

அதேசமயம், கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் கம்பீரமாக வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை வீரர் அஸ்வினுக்குப் பதிலாக ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது.

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா நடந்தது. இதில் முதல்முறையாக அணியில் இடம் பிடிக்கும் ஹர்பஜன் சிங்குக்கு 27-ம் எண் அச்சிடப்பட்ட ஜெர்சி (அணியின்உடை) ஒதுக்கப்பட்டுள்ளது.

jerjpg

ஹர்பஜன் சிங்கக்கு ஒதுக்கப்பட்ட ஜெர்சி

 

இந்த மகிழ்ச்சியை ஹர்பஜன் சிங் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து பகிர்ந்துள்ளார்.

நான் வந்துட்டேன்னு சொல்லு…

தமிழின் அன்பு உடன்பிறப்பெல்லாம் எப்படி இருக்கீங்க ‘மக்கா’

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல….

மஞ்ச ஜெர்சில…. ‘வீரமா’

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்போட்டிக்காக

விளாட(ச) போறத நெனச்சாலே ‘மெர்சலாகுது’

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க…

இவ்வாறு ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்பெற்ற பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டும் அதில் தமிழில் பதிவு செய்துள்ளார்.

தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம் இவையுன்டு, தானுண்டென்போர் மத்தியில் கொள்கைக்கா உயிர் நீத்த ஒரு உன்னதப் போராளி படைப்பை உங்களோடு தமிழில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழுக்கு உதவிய சரவணன், சுஜன் ஆகியோருக்கு நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்குக்கு ட்விட்டரில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் நீண்டகாலமாக நண்பர் என்பதும், அவரைக் குறித்து ஹர்பஜன் அடிக்கடி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23325392.ece?homepage=true

  • தொடங்கியவர்

நாதஸ்வரம் ஊதும் தோனி; பாங்ரா ஆடும் ஹர்பஜன்! - சென்னை அணியின் அசத்தல் என்ட்ரி

 

சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 

DY9WLA3XcAATL6U_16522.jpg

 

ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தமிழக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் இந்தமுறை களமிறங்குகிறது. போட்டி தொடங்கும் முதல் நாளே, நடப்புச் சாம்பியன் மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளம்பரத்தில் நடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிராவோ, ஹர்பஜன், ஜடேஜா, விஜய் உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி நடனமாடுகின்றனர். ஹர்பஜன் பாங்ரா ஆடியவாரே ஆட்டோவில் இருந்து இறங்குகிறார்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கெனவே பெரிதும் எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், அதனை அதிகப்படுத்தும் வகையில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை அணி வீரர்களின் புகைப்படங்கள் சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

DY4D_XsU8AArh27_16163.jpg

 

DY9AnZuUQAEuUaQ_16100.jpg

https://www.vikatan.com/news/sports/120011-csk-players-photos-goes-viral.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- பயிற்சியை தொடங்கினார் சிஎஸ்கே கேப்டன் டோனி

 

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று முதன்முறையாக ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். #CSK #MSDhoni

 
ஐபிஎல் 2018- பயிற்சியை தொடங்கினார் சிஎஸ்கே கேப்டன் டோனி
 
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அணி வீரர்களும் ஐபிஎல் பயிற்சி முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருட தடைக்குப்பின் தற்போது களம் இறங்குகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மூத்த வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுத்துள்ளது. புதுக்கலவையுடன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்க இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வந்த வண்ணம் மூத்த வீரர்களான ஹர்பஜன் சிங், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர். இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஆன டோனி விளையாடவில்லை.

அந்த சமயத்தில் ஓய்வு எடுத்த டோனி, நேற்று சிஎஸ்கே அணிக்காக முதன்முறையாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இவருடன் அம்பதி ராயுடு, ஜடேஜா, ரெய்னா, ஷர்துல் தாகூர் ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் டோனியை ‘தல’ என குறிப்பிட்டுள்ளது. ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. #IPL2018 #CSK #MSDhoni

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/23165333/1152791/MS-Dhoni-Joins-CSK-Practice-Warms-Up-for-IPL-in-Style.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட்: ‘சிஎஸ்கே’ மொபைல் ஆப்ஸ் அறிமுகம்

 

 
CHENNAISUPERKINGS

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி   -  படம்: கணேசன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு உதவும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் மொபைல் ஆப்ஸை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மொபைல் ஆப்ஸை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா, சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் வெளியிட்டனர்.

செக்பிளே சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிஎஸ்கே ஆப்ஸில், ஐபிஎல் போட்டியியின் நிலவரம், கருத்துக்கள், போட்டி ஆய்வுகள், ரசிகர்கள் பங்கேற்பு, போட்டிகள், சிறிய அளவிலான விளையாட்டுகள், சிஎஸ்கே டிவி, டிக்கெட்டுகள் விற்பனை போன்ற விஷயங்கள் இதில் உள்ளன.

இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் கூறுகையில், ‘ சிஸ்கே ரசிகர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தும் வகையிலும், அவர்களை எங்களோடு இன்னும் இணக்கமாக வைத்திருக்கவும், இந்த ஆப்ஸை கட்டமைத்து இருக்கிறோம். இந்த ஆப்ஸ் மூலமும், சென்னைசூப்பர்கிங்ஸ்.காம் என்ற தளத்திலும் சென்று அதிகாரபூர்வமாக ஐபிஎல் டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்களையும், அணியையும் டிஜிட்டல் தளத்தில் ஒன்றாகக் கொண்டு வந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதலாவது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23357021.ece

  • தொடங்கியவர்

'தோனிதான் தல, தட்றோம், தூக்கறோம்' - இம்ரான் தாஹிரின் உற்சாக தங்கிலீஷ் ட்வீட்


 

 

imran-tahir-tweet-tahir-tamil-tweet-csk-player-tweet

இம்ரான் தாஹிரின் ட்வீட்

'என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். நாளை சென்னைக்கு வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில' - இந்த ட்வீட் எந்த சென்னை தமிழரின் பதிவும் அல்ல. மாறாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் பதிவேற்றியது. 

1522064283.jpg

ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், 2 வருடங்கள் கழித்து களமிறங்கப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சுற்றியுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மீம், வீடியோ, நகைச்சுவை துணுக்கு என பலவற்றையும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ஏற்கனவே சென்னை அணிக்கு விளையாடப்போகும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் பதிவேற்றிய ட்வீட்டுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது சென்னை அணியில் விளையாடப்போகும் மற்றொரு வீரர் இம்ரான் தாஹிரும் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தல தோனிதான்

இம்ரான் தாஹிரின் இந்த ட்வீட்டுக்கு சிஎஸ்கே ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் ஒரு ரசிகர், நீ வா தல, என்று அதில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்துள்ள இம்ரான் தாஹிர், அன்புக்கு நன்றி சகோதரா. ஆனால் ஒரே ஒரு தல தான் , அது தோனி தான், விசில் போடு என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக ஹர்பஜன் தமிழ் எழுத்துகளில் ட்வீட் போட்டிருந்தார், தாஹிர் தங்கிலீஷில் போட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் செயல்திறன் ஆய்வாளராக இருக்கும் பிரசன்னாவிடம் தான் நான் தமிழ் கற்றேன் என்றும் தாஹிர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரசன்னா சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 19 வயதுகுட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். பிறகு போட்டிகளில் நடுவராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியிலும் பணியாற்றியிருக்கிறார். 

http://www.kamadenu.in/news/sports/1187-imran-tahir-tweet-tahir-tamil-tweet-csk-player-tweet.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

  • தொடங்கியவர்

இங்க எல்லாமே யெல்லோ தான்: சமூகவலைத்தளத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ‘டியர் சிஎஸ்கே’ காணொளி!

 

 
dear_csk71xx

 

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா குழுவை நியமித்தது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொண்ட லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதன் காரணமாக அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடினார்கள்.

இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 7-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல்-லில் விளையாடுவது குறித்து புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. டியர் சிஎஸ்கே என்கிற பெயரில் வெளியான இந்தக் காணொளி, ஒரு பெண்ணின் பார்வையில் சிஎஸ்கே-வை வழிபடுவதாக அமைந்துள்ளது. ஓவியங்கள், அனிமேஷன் போன்றவற்றின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி, சிஎஸ்கேவுக்கு வரவேற்பு தெரிவிப்பதோடு சமூகவாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளையும் கூடவே வெளிப்படுத்தியுள்ளது. மிகவும் உணர்வுபூர்வாக அமைந்துள்ள இந்தக் காணொளிக்குச் சமூகவலைத்தளத்தில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் கூட இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் யூடியூப் தளத்தில் இந்தக் காணொளி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

இந்தக் குறும்படத்தை இயக்கியவர், ரெளனக் மன்கொட்டில். ஓவியங்கள், அனிமேஷன் - நஜீப் தொட்டுங்கல். குரல் - காவ்யா நட்சத்திரா.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/27/dear-csk-2888394.html

  • தொடங்கியவர்

சில சமயம் தோனி வெல்வார்; சில சமயம் நான் வெல்வேன்: டிவைன் பிராவோ ருசிகரம்

 

 
bravo-dhoni

பிராவோ, தோனி.   -  கோப்புப் படம். | ஏ.பி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2018 முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குவதையடுத்து தோனி வெல்ல வேண்டும் என்ற ஆர்வங்கள் ஏற்கெனவே சென்னை ரசிகர்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் இணையதளத்தில் அதன் வீரர் டிவைன் பிராவோ கூறியதாவது:

எங்கள் ரசிகர்களுக்காக நான் வித்தியாசமாக எதையும் செய்வேன். இம்முறையும் என் நடனத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு மிகப்பெரிய அணிகள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகும். இரண்டுமே வெற்றிகரமான அணிகள். அனைவரும் இந்தப் போட்டியை ஆவலாக எதிர்பார்க்கின்றனர். தொடரின் முதல் போட்டி என்ற விதத்தில் இதைவிட மிகப்பெரிய போட்டி ஒன்று இருக்க முடியாது.

இப்படிப்பட்ட போட்டிகள்தான் என்னை உத்வேகம் கொள்ளச் செய்கின்றன.

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் சிறந்த அணிகள் என்பதால் தொடக்கம் அருமையாக இருக்க வேண்டும். இந்தத் தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எனவே நன்றாகத் தொடங்க வேண்டும். ஏனெனில் பிற்பாடு மீண்டு எழுவது கடினமாகப் போய்விடும்.

தோனி என் மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அனைத்தும் தயாரிப்பில்தான் உள்ளது. வலைப்பயிற்சிகளில் தோனிக்கு நான் எப்பவுமே கடைசி ஓவர்களை வீசுவதைப் போல் வீசுவேன், காரணம் அவர் உலகின் தலைசிறந்த பினிஷர்களில் ஒருவர். அவருக்கு வீசுவது மூலம் என்னை நானே சவாலுக்குட்படுத்திக் கொள்வேன்.

எப்பவுமே ஒரு கற்பனையான சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டு பயிற்சி செய்வோம் நான் பவுலிங் செய்வேன் இதில் சில சமயம் அவர் வெல்வார், சில சமயம் நான் வெல்வேன்.

தலைவராக அவர் மிகச்சிறந்தவர். வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள எப்பவுமே அனுமதிப்பார். செய்யும் தவறுகளிலிருந்து மீள வாய்ப்பளிப்பார். அவர் மிகவும் அமைதியாக இருப்பவர் இந்தக் குணம் எப்பவும் நல்லது.

இவ்வாறு கூறினார் டிவைன் பிராவோ.

 

 

http://tamil.thehindu.com/sports/article23363663.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஓபன் பஸ்ஸில் சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சி.எஸ்.கே. வீரர்கள்! - வைரல் வீடியோ

 

ஐ.பி.எல் 11-வது சீசன் தொடங்க இன்னும் 9 நாள்களே உள்ளன. அதைவிட, சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்ஸியை 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் களத்தில் பார்க்க இன்னும் 9 நாள்களே உள்ளன என்று சி.எஸ்.கேவின் எல்லோ ஆர்மியினர் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.  

17_21298.jpg

 

photo credit: twitter/ @ChennaiIPL

இரண்டு ஆண்டுகள் சென்னை அணி விளையாடாததால் வருத்தத்தில் இருந்த ரசிகர்கள், தற்போது மீண்டும் விளையாடவுள்ளதை அடுத்து சென்னை அணியை வரவேற்க தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். தினமும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர்கள், ஓய்வு நேரத்தில் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இரண்டு ஆண்டுக்குப் பிறகு ஆடவுள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பல்வேறு புரொமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் சி.எஸ்.கே. வீரர்கள் தோன்றி ஆச்சர்யப்படுத்துகின்றனர். 

இந்நிலையில், சென்னை நகர் முழுவதும் தோனி உள்ளிட்ட வீரர்கள் திறந்த வெளி பேருந்து ஒன்றில் விசிட் அடித்துள்ளனர். `இது நம்ம பிரைடு’ (ithu namma pride) என்ற எழுதப்பட்ட ஓபன் பஸ்ஸில் தோனி, ரெய்னா, ஹர்பஜன் உட்பட ஒட்டுமொத்த அணி வீரர்களும் இன்று சென்னை நகர் முழுவதும் வலம் வந்தனர். அப்போது நகர் முழுவதுமிருந்து ரசிகர்கள் சி.எஸ்.கே. வீரர்களை காண அவர்களைப் பின்தொடர்ந்தனர். இந்தக் காட்சிகளை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது. 

https://twitter.com/ChennaiIPL?ref_src=twsrc^tfw&ref_url=https%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2Fsports%2F120520-csk-players-roaming-the-chennai-city-by-open-bus.html

 

https://www.vikatan.com/news/sports/120520-csk-players-roaming-the-chennai-city-by-open-bus.html

  • தொடங்கியவர்

சூப்பர் கிங்ஸ் அணியின் சாதனைகள் தொடரும்

 

 
kings

ஐபிஎல் போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. 
இது தொடர்பான அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறியிருப்பதாவது: ஐபிஎல் போட்டியில் முதல் 8 ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு சென்னை அணியின் வெற்றி பயணம் தொடரும். இப்போட்டித் தொடரில் அனைத்துமே எங்களுக்கு பழக்கமானதுதான். மற்ற எந்த அணிகளுக்கும் இல்லாத வகையில் மிகச்சிறந்த கேப்டனான தோனி, சென்னை அணியில் உள்ளார். நடப்பு சாம்பியனான மும்பை அணியுடனான முதல் போட்டியில் இருந்தே இந்தத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்றார் அவர்.

 

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/mar/29/சூப்பர்-கிங்ஸ்-அணியின்-சாதனைகள்-தொடரும்-2889176.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.