Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி!

Featured Replies

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி!

 

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி!

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் வேறு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் தமிழர்களின் நீண்டகால அபிலா ஷைகளை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன வழி என்பதை சொல்லவேண்டும்.

தமிழ் மக்கள் மீண்டும் ஆ யுத ங்களை ஏந்தவேண்டுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பிருக்கிறார்.

பருத்துறை பகுதியில் நேற்று(05) உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.  இப்பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்....

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்கபோகிறீர்கள்? என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம்.

குறிப்பாக ஏக்கிய இராச்சிய என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். அது எதற்கான இணக்கம் என்றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பது.

நான் சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் பூர ணமானதும், மீள பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள் என கேட்கிறேன். இதனாலேயே நாங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு இணங்கினோம்.

அதிகார பகிர்வு தவிர்ந்த மற்றய வி டயங்களில் நாங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். ஆனால் அதிகார பகிர்வு விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிப்போம்.

காரணம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் விடயத்தில் விட்டு கொடுப்புக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. அர சாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை.

ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேவே இந்தளவு விடயங்களை சாதிக்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி இருக்கின்றது.

இந்த விடயத்தில் ஊடகங்களும் பொய்யை சொல்கின்றன. அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள்.

அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speeach-05

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்கபோகிறீர்கள்? என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம்.

 

இந்த விடயத்தில் ஊடகங்களும் பொய்யை சொல்கின்றன. அரசியல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை கவருவதற்காக பொய்களை சொல்கிறார்கள்.

அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-sumanthiran-speeach-05

தமிழ்காங்கிரசும் ஊடகங்களும் என்ன சொல்லப்போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருஷம் பிரபாகரன் பிடிவாதக்காரன் 
இந்தியா தாம்பாள தட்டில் விடிவு கொண்டுவந்தது 
கொழும்பு யாழ்தேவியில் கொண்டுவந்தது 
என்று உங்கள் தலைவர்கள் கதை அளந்தார்கள் 

இப்போ சமஸ்டி என்றே சொல்லுக்கு சம்மதிக்கிறார்கள் இல்லை என்கிறீகள்.
பிரபாகரனும் தன்னலமற்ற போராளிகளும் 
உயிரை கொடுத்து போராடும்போது 
நீங்கள் என்ன வெட்டி கிழித்தீர்கள் ? 

அதையே போய் செய்யுங்கள் ...
அரசியல் தெரிந்தவன் அதை செய்வான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

. நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லை என்றார்.

 நீங்கள்  சொல்வதைத்தான் ஊடகங்கள் கொண்டுசெல்லமுடியும். நீங்கள் சொல்லாததை அவர்கள் எப்படி கொண்டு செல்லமுடியும். பிறகு நாங்கள் சொல்லாததை ஊடகங்கள் இட்டுக்கட்டுகின்றன என்று வேற பிரதாபீப்பீங்கள்.

எல்லாவற்றையும் விட்டுக்குடுத்துப்போட்டு பிறகு எதற்குத்தான்  போராடப் போகிறீர்கள்? 

9 hours ago, நவீனன் said:
9 hours ago, நவீனன் said:

குறிப்பாக ஏக்கிய இராச்சிய என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். அது எதற்கான இணக்கம் என்றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பது.

. சினிமாவில நகைச்சுவை நடிகர் செந்தில் கவுண்டமணிக்கு சொல்லுற பதில் மாதிரி "இஞ்சை ஒண்டு இருக்குது மற்றது எங்கயடா?" " மற்ற ஒன்றுதான் அண்ணை இது." இவர் இப்ப வர வர நகைச்சுவை நடிகனாட்டம் கதைக்கிறார்.

 

  • தொடங்கியவர்
  • கூட்­ட­மைப்­புக்­கான ஆத­ரவு சரிந்­தால் புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது
sumanthiran-964854-750x400.jpg

கூட்­ட­மைப்­புக்­கான ஆத­ரவு சரிந்­தால் புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கான மக்­கள் ஆத­ரவு சரிந்துவிட்­டது என்ற செய்தி பெப்­ர­வரி 11ஆம் திகதி வரு­மாக இருந்­தால், புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்ற முடி­யாது போகும். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு மக்­கள் கொடுத்­தி­ருந்த ஆணையை மக்­கள் மீள­வாங்கி விட்­டார்­கள் என்ற செய்தி வரக்­கூ­டாது.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
பரு­த்தித்­து­றை­யில் நேற்று இடம்­பெற்ற வேட்­பா­ளர் அறி­முக நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­ததாவது:-

இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்சி என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­ப­டா­மல் அது இலங்­கைக்­குப் பொருத்­த­மற்­றது என்று குறிப்­பிட்­டு­விட்டு, மத்­தி­யி­லும் மாகா­ணங்­க­ளி­லும் ஆட்சி அதி­கா­ரங்­களை உப­யோ­கிக்­கின்ற நாடு என்ற வர்­ணிப்பு இருக்­க­வேண்­டும் என்று சொல்­லப்­பட்டு இருக்­கின்­றது. அதில் சொல்­லப்­ப­டும் ஒரு குறை ஏக்­கிய ராஜ்­ஜிய என்று சொல் உப­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அது ஆட்சி முறை­யைக் குறிக்­கிற சொல் அல்ல என்­பது தெளி­வா­கச் சொல்­லப்­பட்ட இருக்­கி­றது.

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது பிரிக்­கப்­பட முடி­யாத ஒரு நாடு. அது­தான் அதன் வரை­வி­லக்­க­ணம் என்று சொல்­லப்­பட்டு இருக்­கின்­றது. சொல்­லப்­பட்­டது மட்­டு­மல்­லா­மல் புதிய அர­ச­மைப்­புச் சட்ட வரை­வில் எழு­தப்­ப­ட­வேண்­டும் என்­றும் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. ஏக்­கிய ராஜ்­ஜிய ஒரு நாடு. அதற்கு நாங்­கள் இணங்­கு­கி­றோம். ஏன் இணங்­கு­கி­றோம்.

சிங்­க­ளத்­தில் சிங்­கள மக்­கள் மத்­தி­யிலே சுமந்­தி­ரன் சென்று பேச வேண்­டும் என்று ஒரு­வர் கடி­தம் எழு­திக்­கொண்­டி­ருக்­கி­றார். சென்று பேசு­வது அவ­ருக்­குத் தெரி­யாது. பல தடை­வ­கள் நான் சென்று பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். நாட்­டைப் பிரிக்­க­ வேண்­டாம் அதி­கா­ரங்­க­ளைப் பிரித்­துக் கொடுங்­கள். சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இருக்­கிற எண்­ணம் கூட்­டாட்­சி­யைக் கொடுத்­தால் நாடு பிரிந்­து­வி­டும். கூட்­டாட்­சி­யைக் கொடுத்­தால் நாடு பிரி­யாது. நாடு பிரி­யா­மல் இருக்க நீங்­கள் எதை­யும் எழு­த­லாம். அது­தான் நிபந்­தனை.

 

பிரித்­துக் கொடுக்­கப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்­கள் முழு­மை­யா­ன­தா­க­வும் அர்த்­த­முள்­ள­தா­க­வும் திருப்பி எடுக்­கப்­பட முடி­யா­த­தா­க­வும் இருக்­க­வேண்­டும்.
அதற்­காக புதிய அர­ச­மைப்­புச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டும். அது­தான் கூட்­டாட்சி. அது இடைக்­கால அறிக்­கை­யில் கூட இருக்­கி­றது. பிர­தான அறிக்­கை­யில் கூட இருக்­கி­றது. நான்கே நான்கு பக்­கங்­க­ளைப் படித்­துப் பார்த்­தால் தெரி­யும்.

பௌத்த சம­யத்­துக்கு முத­லி­டம் என்று பெரும்­பான்­மை­யான மக்­கள் விரும்­பி­னால், மதச் சார்­பற்ற நாடாக இருக்­க­வேண்­டும் என்­பது எங்­க­ளு­டைய கொள்­கை­யாக இருந்­தா­லும் அவர்­கள் அதனை விரும்­பு­வார்­கள் என்­றால், அதற்கு நாங்­கள் தயார். ஆனால் எந்த அடிப்­ப­டை­யில் இணங்­கத் தயார் என்­றால் எந்த சம­யத்­துக்கோ, நம்­பிக்­கைக்கோ, நம்­பிக்கை இல்­லா­த­வ­ருக்கோ பார­பட்­ச­மாக நாடு இருக்­க­மு­டி­யாது என்ற அடிப்­ப­டை­யி­லேயே. இன்­றைக்கு இருக்­கின்ற உறுப்­புரை ஒன்­பது மாற்றி எழு­தப்­ப­ட­வேண்­டும்.

மாற்றி எழு­தப்­ப­டு­கின்ற வாச­க­மும் இடைக்­கால அறிக்­கை­யிலே இருக்­கி­றது. முத­லி­டம் என்ற சொல்­லைச் சொல்­லி­விட்டு சில சரித்­திர கார­ணங்­க­ளா­லேயே, அப்­ப­டி­யான முத­லி­டம் என்று அவர்­கள் விரும்­பி­னால், அது ஏனை­யோரை பார­பட்­ச­மாக நாடு நடத்த முடி­யாது என்­கின்ற நிலைப்­பாட்­டுக்கு நாங்­கள் வரு­வோம். மிகுதி எல்லா விட­யங்­க­ளும் நாங்­கள் இணங்­கக் கூடி­ய­தக இருக்­கின்­ற­போது அதை நாங்­கள் பரி­சீ­லிக்­கத் தயார் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம்.

அதி­கா­ரப் பகிர்வு சம்­பந்­த­மாக முழு­மை­யான இணக்­கத்தை எமது மக்­கள் சார்­பில் கொடுப்­ப­தற்கு நாங்­கள் தயா­ராக இருக்­கின்­ற­போது, நாங்­கள் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று சொல்­லி­யி­ருக்­கின்­றோம். இது பேச்சு மேசை­யி­லேயே செய்­யப்­பட வேண்­டிய விட­யம். இது அடித்­துப் பறிக்­கிற விட­யம் அல்ல. பேச்சு மேசை­யில் போய் பல்­வேறு வித்­தி­யா­ச­மான நிலைப்­பா­டு­க­ளைக் கொண்­ட­வர்­கள் சேர்ந்து அமர்ந்து இருந்து ஒரு இணக்­கப்­பாட்டை எட்­டு­கின்ற பொழுது ஒரு தரப்­பும் 100 வீத­மாக வெல்­ல­மு­டி­யாது. இது எங்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருக்க வேண்­டும்.

பேச்சு மேசை­யில் விட்­டுக்­கொ­டுப்பு இருக்­கத்­தான் வேண்­டும். இதைச் சொல்­லு­வ­தற்­குப் பயந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.
விட்­டுக்­கொ­டுத்­துத்­தானே செய்ய வேண்­டும். விட்­டுக்­கொ­டுப்பு இல்­லா­மல் வெவ்­வேறு நிலைப்­பா­டு­க­ளில் இருக்­கி­ற­வர்­கள் இணங்கி வர­லாமா? ஆனால் அந்த விட்­டுக்­கொ­டுப்பு ஒன்று கூட எங்­க­ளு­டைய அடிப்­ப­டை­யான வேண­வாக்­களை இல்­லா­மல் செய்ய முடி­யாது. நாங்­கள் ஒரே நாட்­டில் வாழ்­வ­தற்கு இணங்­கு­கின்­றமே அது பெரிய விட்­டுக்­கொ­டுப்பு. தனி­நாடு கோரிய நாங்­கள் ஒரு நாட்­டுக்­குள் தீர்­வுக்கு இணங்­கி­யுள்­ளோம். இது விட்­டுக்­கொ­டுப்­புத்­தான். எங்­கள் அடிப்­படை வேண­வாக்­களை நாங்­கள் விட்­டுக் கொடுக்­க­வில்லை. வேறு வேறு விட­யங்­க­ளில் விட்­டுக் கொடுத்­தி­ருக்­கின்­றோம்.

ஆனால் எங்­கள் அடிப்­ப­டை­களை விட்­டுக் கொடுக்­க­வில்லை. வேறு விட­யங்­க­ளில் விட்­டுக் கொடுத்து முதன்­மை­யா­னதை நாங்­கள் நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றோம். வேறு மாற்­று­வழி இருந்­தால் எவ­ரா­வது சொல்­லட்­டும். இதனை வேண்­டாம் என்று விட்டு வந்­தால் என்ன செய்­வது ? யாரைக் கேட்­டா­லும் வெளி­நாடு செல்­லப் போகின்­றோம் என்­கி­றார்­கள். இது தொடர்­பில் வட­ம­ராட்சி கிழக்­கில் நான் ஆய்வு நடத்­தி­னேன். அங்­குள்ள பத்து பேரில் 9 பேர் வெளி­நாடு போக விரும்­பு­கின்­றோம் என்று சொல்­கின்­றார்­கள்.

இப்­ப­டியே போனால் 20ஆண்­டு­க­ளில் இங்கு இனப் பிரச்­சி­னையே இருக்­காது. எங்­க­ளு­டைய இனமே இருக்­காது. வெளி­நாட்­டில்­தான் எங்­க­ளு­டைய இனம் இருக்­கப்­போ­கின்­றது. நாடு கடந்த அரசு மாத்­தி­ரம் இருக்­கும். அதற்­காக தரு­வதை நாங்­கள் பெற்­றுக் கொள்­ளப் போவ­தில்லை. நாங்­கள் எங்­கள் அடிப்­ப­டை­களை விட்­டுக் கொடுக்­க­வில்லை என்­ப­தற்கு இடைக்­கால அறிக்­கை­தான் ஆதா­ரம். அது நிறை­வேற வேண்­டு­மா­னால், இந்த நாட்­டில் இருப்பை தக்க வைக்­க­வேண்­டு­மா­னால், தொடர்ச்­சி­யாக இந்த நாட்­டில் தமிழ் மக்­கள் வாழ­வேண்­டு­மாக இருந்­தால், சரித்­தி­ரத்­தில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு தாய­கம் இங்கே இருக்­கின்­றது. அவர்­க­ளும் ஒரு தேசம் இருக்­கின்­றது.

சிங்­க­ள­வர்­கள் மட்­டும் இங்கே இருக்­கின்ற தேசம் அல்ல. தமிழ் மக்­க­ளும் ஒரு தேசம். அவர்­கள் ஆட்சி அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து கொண்டு ஒரே நாட்­டிலே வாழ்­வ­தற்கு இணங்கி
வந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சரித்­தி­ரம் எழு­தப்­பட வேண்­டு­மாக இருந்­தால், இந்த முயற்சி பலிக்க வேண்­டும். இந்த முயற்சி பலிப்­ப­தற்கு, தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ரவு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இருப்­ப­தாக காண்­பிக்­கப்­பட வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் 5பேர் தமி­ழர்­கள். அவர்­க­ளில் இரு­வர், இரு­மு­வ­தற்கோ, தும்­மு­வ­தற்கோ வாய் திறக்­க­வில்லை. அமைச்­சர் சுவா­மி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா இரு­வ­ரும் வழி­ந­டத்­தல் குழு­வின் 76 கூட்­டங்­க­ளில் ஒரு தடவை கூடப் பேசி­ய­தில்லை. அமைச்­சர் மனோ­க­ணே­சன், கூட்­டாட்சி, வடக்கு – கிழக்கு இணைப்­புப் பற்றி எது­வுமே கதைப்­ப­தில்லை. நானும், சம்­பந்­தன் ஐயா­வும் வடக்கு – கிழக்கு மக்­கள் சார்­பில் அங்கே பேசி­னோம்.

பெப்­ர­வரி 11ஆம் திகதி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள் ஆத­ரவு சரிந்து விட்­டது என்ற செய்தி வந்­தால், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான இடைக்­கால அறிக்­கையை நிறை­வேற்­றாது போய்­வி­டும்.
இப்­போ­துள்ள ஆத­ர­வு­ட­னேயே நிறை­வேற்ற முடி­யுமா ? இல்­லையா என்று கேட்­டால் எனக்­குத் தெரி­யாது என்­று­தான் சொல்­வேன். மக்­கள் கூட்­ட­மைப்­புக்கு கொடுத்த ஆணை­யி­லி­ருந்து மாற­வில்லை என்ற செய்தி வர­வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/61093.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அரசியலமைப்பு உருவாக்க பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது

அரசியலமைப்பு பேச்சுவார்த்தையில் த.தே. கூ விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது!

 

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விட்டுக்கொடுப்புக்களில் ஒன்றேனும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை இல்லாது செய்யாது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு பேச்சுவார்த்தையில் த.தே. கூ விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது!

பருத்தித்துறை பகுதியில், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம், நேற்று(06.01.2018) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கே.சவரணபவன் ஆகியோருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியினரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கொடுக்கும் அதிகாரங்கள் மீளப் பெறப்படவோ, குறைக்கவோ, மத்திய அரசாங்கம் தலையிடவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அனைத்து கட்சிகளும் இடைக்கால அறிக்கையில் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான, தர்மலிங்கம் சித்தார்த்தன், இடைக்கால அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுவதில், எந்தவொரு உண்மையும் இல்லை என, கூறியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-made-concessions-on-constitution

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.