Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பினணமுறி விசாரணை அறிக்கை ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமா?

Featured Replies

பினணமுறி விசாரணை அறிக்கை ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துமா?

Untitled-1-e8f4a07a3f840f245740ef6b6a1fc2234f8eb459.jpg

 

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோச­டி­யினால் 11,145 மில்­லியன் ரூபா இழப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி ஆணைக்­குழு கண்­ட­றிந்­தி­ருப்­ப­தா­கவும், இந்த மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டிப்­பாக அறி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த புதன்­கி­ழமை இது­தொ­டர்­பான விசேட அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்ட பின்னர், அந்த அறிக்கை பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டுமா என்ற கேள்­விகள் இருந்­தன.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்­னரே அந்த அறிக்­கையை வெளி­யிட வேண்டும் என்று ஐ.தே.க. தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் கூறப்­பட்­டது.

அதே­வேளை, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சித் தலை­வர்­களோ, இந்த அறிக்­கையை உட­ன­டி­யாக வெளி­யிட வேண்டும் என்று கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.

எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த அறிக்­கையை வெளி­யிட்டு ஐ.தே.க.வுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். ஏனென்றால், இந்த மோசடிக் குற்­றச்­சாட்­டினால் ஐ.தே.க. தலை­வர்­களின் தலை­களும் உருளப் போகி­றது. குறிப்­பாக முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக லஞ்ச- ஊழல் குற்­றச்­சாட்டு மாத்­தி­ர­மன்றி, பொய்ச்­சாட்­சியம் அளித்­த­தா­கவும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­தி­ருக்­கி­றது.

ஐ.தே.க. தலை­மைக்கு நெருக்­க­மான முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் மற்றும் அவ­ரது மரு­ம­க­னான பேர்­பச்­சுவல் ட்ரசரிஸ் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­சியஸ் ஆகியோர் குற்­ற­மி­ழைத்­தி­ருப்­ப­தாக அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்த முறையில் தவறு இல்லை என்று ஆணைக்­குழு கூறி­யி­ருந்­தாலும், கோப் கூட்­டத்தில் இந்த மோசடி குறித்து சுட்­டிக்­காட்­டப்­பட்ட போது அர்­ஜுன மகேந்­திரன் மீது நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யி­ருக்­கிறார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்றும் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

ஐ.தே.க. தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இந்த மோச­டியில் தொடர்­பி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­ப­டாத போதும் நடந்­துள்ள மோச­டி­களில் அவ­ருக்குப் பொறுப்பு இல்லை என்று தட்­டிக்­க­ழிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

உரிய நேரத்தில் அர்­ஜுன மகேந்­திரன் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்தால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விவ­கா­ரத்தில் அதி­க­ளவில் சர்ச்­சை­களில் சிக்கிக் கொள்­ளாமல் தப்­பி­யி­ருப்பார்.

ஆனால், உள்­ளூ­ராட்சித் தேர்தல் பிர­சா­ரங்­களில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இந்த மோச­டி­யுடன் தொடர்­பு­பட்­ட­வ­ரா­கவே மஹிந்த ராஜபக் ஷ அணி நிச்­ச­ய­மாக பிர­சாரம் செய்யும். ஏற்­க­னவே அத்­த­கைய பிர­சா­ரங்­களை மஹிந்த அணி ஆரம்­பித்தும் விட்­டது.

அதுவும் ஐ.தே.க.வின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரான ரவி கரு­ணா­நா­யக்க இந்த மோசடி தொடர்­பாக கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறார். இது ஐ.தே.க.வைப் பொறுத்­த­வ­ரையில் கடு­மை­யான சோத­னை­யா­கவே இருக்கப் போகி­றது.

எனினும், ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைப்­படி ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தமது கட்சி ஆத­ரவு அளிக்கும் என்று ஐ.தே.க.வின் அமைச்சர் அஜித் பெரேரா கூறி­யி­ருக்­கிறார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல், எதிர்­கொள்­ளப்­ப­ட­வுள்ள சூழல், ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், ஐ.தே.க.வுக்கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வு உடன்­பாடு முடி­வ­டைந்­துள்ள சூழல், இரண்டு கட்­சி­களும் கூட்டு அர­சி­யலில் இருந்து கொண்டே முட்­டுப்­படத் தொடங்­கி­யுள்ள சூழல் என்­ப­ன­வற்றின் மத்­தியில் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த அறிக்­கையின் முக்­கிய அம்­சங்­களைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ளார். இந்த ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தமை தொடர்­பாக முன்­ன­தாக ஐ.தே.க.வின் அமைச்­சர்கள் சிலர் கடு­மை­யாக விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். ஐ.தே.க. மீது ஜனா­தி­பதி பழி­யு­ணர்­வுடன் செயற்­ப­டு­கிறார் என்­பது போல அவர்­களின் கருத்­துக்கள் அமைந்­தி­ருந்­தன.

அது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அவரும் அதற்குக் காட்­ட­மான பதிலைக் கொடுத்­தி­ருந்தார். இது ரணில்- மைத்­திரி கூட்டில் விரி­சல்கள் விழத் தொடங்கி விட்­டன என்­ப­தற்­கான அடை­யா­ள­மா­கவும் பார்க்­கப்­பட்­டது. அண்­மைக்­கா­லத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் பேசப்­பட்­டது.

ஆனாலும், இவ்­வா­றான பேச்­சுக்கள் எழும்பும் போதெல்லாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கு முற்­றுப்­புள்ளி வைத்து வந்­தி­ருக்­கிறார். தமக்­கி­டையில் சீரான உறவு இருப்­ப­தாகக் கூறி வந்­தி­ருக்­கிறார். இப்­போது ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து அத்­த­கைய நெருக்­கத்தை உறு­திப்­ப­டுத்தும் கருத்­துக்கள் வெளி­யா­க­வில்லை. எனினும், பிணை முறி மோசடி விவ­கா­ரத்தில் பிர­தமர் காப்­பாற்­றப்­பட்­டி­ருக்­கிறார் என்று ஜே.வி.பி. குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில், தனது நேர்­மையை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யதும், தனது தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைக் காப்­பாற்ற வேண்­டி­ய­து­மான சூழலில் இருக்­கிறார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி ஐ.தே.க. தன்னைப் பலப்­ப­டுத்திக் கொள்ள முனை­கி­றது என்ற கருத்து அர­சியல் மட்­டங்­களில் மாத்­தி­ர­மன்றி, ஊட­கங்­க­ளிலும் உள்­ளன.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள பிள­வுகள் அந்தக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தி­யுள்­ளது உண்மை. 

மஹிந்த அணி தேசி­ய­வாதப் பிரச்­சா­ரங்­களின் மூலம், சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெற முனையும் நிலையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தமது தலை­மை­யி­லான கட்­சியே பல­மா­னது என்­பதை நிரூ­பிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்தத் தேர்­தலில் வெற்­றியை வெளிப்­ப­டுத்­தாது போனால், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்­ள­வர்கள் மஹிந்­தவின் பக்கம் பாயவும் தயங்­க­மாட்­டார்கள் என்­பதும் ஜனா­தி­ப­திக்குத் தெரியும்.

எனவே, எப்­ப­டி­யா­வது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியைப் பாது­காக்க வேண்­டிய கட்­டாயம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கி­றது. ஐதே­க­வுடன் உள்ள உற­வு­களை கருத்தில் கொண்டு, ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்­தாமல் இருந்­தி­ருக்­கலாம்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் வரை இழுத்­த­டித்­தி­ருக்­கலாம். ஆனால் அவர் அவ்­வாறு செய்­தி­ருந்தால், அவ­ரது உண்­மைத்­தன்­மையும், நேர்­மையும் கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்கும். ஜனா­தி­பதி தனது பெயரைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு முன்­னு­ரிமை அளித்­தி­ருக்­கிறார்.

அதே­வேளை, இதன் மூலம், உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் போது, ஐ.தே.க.வுக்குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தவும் அவர் முயன்­றி­ருக்­கிறார்.

தமது தலை­மையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி ஊழ­லுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் என்ற செய்­தி­யையும் அவர் வாக்­கா­ளர்­க­ளுக்கு கொண்டு செல்ல முயன்­றி­ருக்­கிறார்.

அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரே கல்லில் பல காய்­களை வீழ்த்த முனைந்­தி­ருக்­கிறார் என்றே கூற வேண்டும்.

ஆனாலும், தாம் ஐ.தே.க.வுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த முனை­ய­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்தும் வகையில்- இன்­னொரு அறிக்கை பற்­றியும் ஜனா­தி­பதி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த 34 பாரிய ஊழல் மோச­டிகள் குறித்து விசா­ரித்த ஆணைக்­கு­ழுவின் அறிக்கை பற்றி அவர் அதில் பிரஸ்­தா­பித்­துள்ளார். எனினும் அதன் உள்­ள­டக்­கங்கள் பற்றி எந்தக் கருத்­தையும் அவர் வெளி­யி­ட­வில்லை.

இந்த அறிக்­கையில் பெரும்­பா­லான குற்­றச்­சாட்­டுகள் மஹிந்த ராஜபக் ஷ அணியில் உள்­ள­வர்கள் மீது தான் உள்­ளன. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தாலும், அவர்கள் தற்­போது எதிர் அணியில் இருப்­பதால், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டாது.

இரண்டு ஆட்­சி­க­ளிலும் ஊழல்கள், மோச­டிகள் நடந்­தி­ருக்­கின்­றன என்­பது இரண்டு ஆணைக்­கு­ழுக்­க­ளி­னதும் முடி­வாக அமைந்­தி­ருக்­கி­றது, எனினும், முன்­னைய ஆட்­சிக்­கால மோச­டிகள் ஒப்­புக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இப்­போ­தைய அர­சாங்கம் தவ­று­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு அல்­லது தவ­றுகள் என்று கண்­ட­றி­யப்­பட்ட விட­யங்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கி­றது என்­பது பொது­மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆறு­த­லான விட­யமே.

மத்­திய வங்கி பிணை­முறி விற்­ப­னையில் 2008ஆம் ஆண்டில் இருந்தே இத்­த­கைய மோச­டிகள் நடந்து வந்­தி­ருப்­ப­தா­கவும் , ஆணைக்­குழு கூறி­யி­ருக்கும் நிலையில், இது­பற்­றிய நீண்ட விசா­ர­ணைகள் நடத்த வேண்­டி­யி­ருக்கும். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை் எடுப்பதற்கு காலமும் தேவைப்படும்.

இப்போதைய நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, அரசாங்கத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிடினும், கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா என்பதை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.

எலி கொழுத்தால் வளையில் தங்காது என்பது போல, உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றால், நிச்சயம் ஐ.தே.க.வுடனான கூட்டை முறித்துக் கொள்ள முனையும். அத்தகைய கட்டத்தில் ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க முனையலாம், அது கை கூடுமா என்பது பின்னரே தெரியவரும்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று, மஹிந்த அணி பலவீனமாக இருப்பது தெரியவந்தால், அங்குள்ளவர்கள் அணி தாவுவார்கள். அதுபோலவே, மஹிந்த அணி வெற்றி பெற்றால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி கலகலத்துப் போகும்.

இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடுபறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆணைக்குழு அறிக்கை அரசியலில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-01-07#page-1

  • தொடங்கியவர்

பிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும்

 

இலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அந்த அபிப்­பி­ர­ாயங்­களில் அனே­க­மா­னவை அக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்­களின் போது மோச­டிகள் நிகழ்ந்­த­தாக கூறு­கின்­றன. நிதி, அதி­கார ரீதி­யி­லான துஷ்­பி­ர­யோ­கங்கள், சிறப்­பு­ரிமை துஷ்­பி­ர­யோகம் என அப்­பட்­டி­யலை குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் நீட்டிச் செல்­லலாம்.

 இந் நிலையில் இலங்கை மத்­திய வங்­கியின் பிணைமுறி விநி­யோ­கத்தின் போது உண்­மை­யி­லேயே மோசடி இடம்­பெற்­றதா என ஆராய ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது.

 பிர­த­மரின் பிட்­டி­பன உண்­மையைத் தேடும் குழு, 2015 பாரா­ளு­மன்றின் கோப் குழு, 2016 ஆம் ஆண்டின் கோப் குழு ஆகி­யன இந்த பிணை முறி தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை செய்து அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கும் சட்ட மா அதி­ப­ருக்கும் சமர்ப்­பித்­தி­ருந்த நிலையில், இந்த ஆணைக்குழு அமைக்­கப்பட்­டது. பிட்­டி­பன குழுவின் அறிக்­கைக்கும் கோப் குழுவின் அறிக்­கை­க­ளுக்கும் இடையில் இருந்த பல்­வேறு முரண்­பா­டுகள் கூட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவை அமைப்­பதில் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருக்­கலாம்.

எது எப்­ப­டியோ, கடந்த ஆண்டு விசா­ர­ணை­களை ஆரம்­பித்த, உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி. சித்­ர­சிறி தலை­மை­யி­லான மூவர் கொண்ட விசா­ரணை ஆணைக் குழு அதன் இறுதி அறிக்­கையை கடந்த 2017 டிசம்பர் 30 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­தது. இதனைத் தொடர்ந்து அந்த அறிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, அதில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களை மையப்­ப­டுத்தி கடந்த மூன்றாம் திகதி விசேட அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார்.

அதில் முக்­கிய விட­யங்­க­ளாக பின் வரும் விட­யங்­களை அவ­தா­னிக்­கலாம்.

1. முன்னாள் மத்­தி­ய­வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரனினதும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­னதும் வெளி­யி­லி­ருந்து செயற்­பட்ட சில நபர்­க­ளி­னதும் நிறு­வ­னங்­க­ளி­னதும் பங்­கேற்­பு­டனும் பேர்­ப்பச்­சுவல் டிரசரீஸ் நிறு­வனம் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் இலா­பத்தை ஈட்­டி­யுள்­ளமை:

2015 பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை­முறி ஏலத்தின் மூலம் பேர்ப்­பச்­சுவல் நிறு­வனம் ஆகக்­கு­றைந்தது 688 மில்­லியன் ரூபாவை இலா­ப­மாக ஈட்­டி­யுள்­ளது. இத்­தொ­கை­யா­னது விசா­ர­ணைக்கு உட்­பட்ட காலப்­ப­கு­தியில் ஈட்­டிய இலா­ப­மாகும். விசா­ர­ணை­க­ளி­லி­­ருந்து வெளிப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் இரண்டாம் நிலைச் சந்­தையில் இடம்­பெற்ற கொடுக்கல் வாங்­கல்­களின் மூலம் பேர்ப்­பச்­சுவல் நிறு­வனம் பெற்றுக் கொண்­டுள்ள ஆகக்­கு­றைந்த இலாபம் 11145 மில்­லியன் ரூபா­வாகும். இதனால் ஊழியர் சேம­லாப நிதி உள்­ளிட்ட இத­னுடன் தொடர்­பு­டைய அரச நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்ட நட்டம் 8529 மில்­லியன் ரூபா ஆகும்.

2. மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் முடி­வுகள் தொடர்பில் மத்­திய வங்­கியின் உய­ர­தி­கா­ரிகள் செய­லி­ழந்த நிலையில் இருந்­துள்­ளனர். அர்ஜுன மகேந்­திரன் முறை­கே­டான முறை­யிலும் தவ­றான முறை­யிலும் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு பிணை­முறி ஏலம் தொடர்­பான செயற்­பா­டு­களில் சம்பந்­தப்­பட்­டி­ருப்­ப­துடன் உள்­ளக தக­வல்­களை வெளித்­த­ரப்­பி­ன­ருக்கு பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்றார் . இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் ஒரு குறிப்­பிட்ட தரப்­பி­ன­ருக்கு இலா­ப­மீட்­டக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

3 அர்ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்கி ஆளுநர் பத­விக்கு நிய­மிப்­பது தொடர்­பான பிர­தமர் ரணிலின் அதி­கா­ரங்கள் முறை­யா­னது. எனினும் பாரா­ளு­மன்­றத்தில் அர்ஜுன மகேந்­திரன் மற்றும் சம­ர­சிறி ஆகியோர் பற்­றியும் அதிலும் குறிப்­பாக அர்ஜுன மகேந்­திரன் கொடுத்த வாக்­கு­றுதி மீது நம்­பிக்கை வைத்து செயற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பிர­தமர் தெரி­வித்­தமை நடந்­தி­ருக்­கவே கூடா­தது. இந்த விட­யங்கள் கோப் விசா­ர­ணைக்­கு­ழுவின் முன்­னி­லை­யிலும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதும் பிர­தமர் அர்ஜுன மகேந்­திரன் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

4. அலோ­சியஸ் குடும்­பத்­தி­ன­ருக்கு சொந்­த­மான, அவர்­களின் நிர்­வா­கத்தின் கீழி­ருந்த வோல்ட் அன் றோ நிறு­வ­னத்­தினால் பென்ட் ஹவுஸ் நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான பென்ட் ஹவுஸ் மாடி வீட்­டுக்கு மாதாந்த வாடகை செலுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பொறுப்புக் கூற வேண்டும். அதனால் அவ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் வழக்கு தொடுக்­கப்­பட வேண்டும்., ஆணைக்­கு­ழுவின் முன்னால் பொய் சாட்­சியம் அளித்­தமை தொடர்பில் அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் பிர­காரம் குற்­ற­வியல் விசா­ரணை நடத்­தப்­படல் வேண்டும்.

5. ஊழியர் சேம­லாப நிதி­யத்தின் நிதி முறை­கே­டான விதத்தில் உப­யோ­கப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. அதன் உண்­மை­யான தொகையை அறி­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யான ஆய்வு (தட­யவியல் தணிக்கை பரி­சோ­தனை) மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இத­னுடன் தொடர்­பு­டை­யோரின் பெய­ர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

6. தண்­டனை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக பேர்ப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­சேன மற்றும் அறிக்­கையில் பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்­க­ளாக இனங்­காணப் பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வியல் மற்றும் சிவில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படல். அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டத்­தினை ஈடு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படல் . அதற்குத் தேவை­யான சட்ட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படல்.

7. இலங்கை மத்­திய வங்­கியில் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயல்கள் இடம்­பெ­று­வதை தவிர்ப்­ப­தற்கும் ஆணைக்­கு­ழுவின் தற்­கால பரிந்­து­ரை­களை செயற்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யிலும் பழைய சட்­டத்தை இரத்துச் செய்து புதிய நாணயச் சட்­ட­மூ­லத்தை அறி­மு­கப்­ப­டுத்தல்.

பதிவு செய்­யப்­பட்ட பங்குப் பத்­தி­ரங்கள் மற்றும் கட்­டளைச் சட்­டங்­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தல். நாணய சபை உறுப்­பி­னர்­க­ளையும் மத்­திய வங்கி ஆளு­நரையும் நிய­மிப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையின் அனு­ம­தியைப் பெறல். அரச கடன் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டு­களை கடும் கண்­கா­ணிப்­புக்குள் கொண்­டு­வரல்.

7. மத்­திய வங்­கியின் கணக்­காய்வு செயற்­பா­டுகள் உரிய முறையில் நடை­பெ­றாது இருப்­பதால் அதன் கணக்­காய்வு பிரி­வினை முற்­றிலும் மாற்­றி­ய­மைத்தல்.

மத்­திய வங்­கிக்­கென பிரத்­தி­யேக சட்ட பிரி­வினை ஸ்தாபித்து அதனை வினைத்­திறன் மிக்­க­தாக ஆக்­குதல். 2008 முதல் 2015 வரையில் இடம்­பெற்ற பிணை­முறி வழங்கல் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான உரிமை இவ் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைக்கப் பெறா­மை­யினால் அதைப்­பற்­றிய விசா­ரணை மேற்­கொள்ளல்.

8. பேன் ஏசியா வங்­கி­யு­ட­னான கொடுக்கல் வாங்­கல்கள் மற்றும் அதன் முன்னாள் தலை­வரின் செயற்­பாடுகள் ஆகி­யன ஆராய்ந்து பார்க்­கப்­படல்.

9. பொது­வாக குறிப்­பிட்ட பணத்தை மீளப் பெறுதல் வழ­மை­யான சட்­டத்­தின்­கீழே செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆயினும் அதிக காலம் எடுப்­பதால் அதற்கு மாற்று வழி­யாக இந்த பணத்­தினை மீளப்­­பெ­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூ­ல­மொன்றை நிறை­வேற்ற வேண்டும். அதற்­கான பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­தினைப் பெற்று துரி­த­மாக பணத்தை மீளப் பெற்­றுக்­கொள்ளல்.

10. ஆணைக்­கு­ழுவை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான அனைத்து செல­வினங்­க­ளையும் பேர்ப்­பச்­சுவல் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து அற­விட்­டுக்­கொள்ளல்.

 இந்த 10 விட­யங்­க­ளுமே ஜனா­தி­ப­தியின் கூற்றின் பிர­காரம் மத்­திய வங்கி பிணை முறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்­கையின் முக்­கிய விட­யங்கள்.

 ஜனா­தி­ப­தியின் கூற்றின் பிர­காரம், மத்­திய வங்கி பிணை முறி விநி­யோ­கத்தில் பாரிய மோசடி இடம்­பெற்­றுள்­ளது. மேலே கூறி­யது போன்று நிதி, அதி­காரம் சார் மோச­டிகள் இவ்­வாறு இடம்­பெற்­றுள்­ளன. அதற்கு பொது­வாக எல்லா தரப்­பாலும் குற்­றம்­சாட்­டப்பட்ட மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன், அவ­ரது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, பேர்ப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிர­தான நிறை­வேற்று அதி­காரி கசுன் பலி­சேன ஆணைக் குழு, இம்­மோ­ச­டி­க­ளுடன் தொடர்­பு­டைய­வர்கள் என பெயர்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

எனினும் இந்த விவ­கா­ரத்தில் அர­சியல் ரீதி­யாக பெரிதும் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்நோக்­கி­யுள்ள பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவின் விடயம், ஜனா­தி­ப­தியின் அறி­விப்­புக்கு அமைய சிந்­திக்கச் செய்­கின்­றது. தலையை தடவி கொட்­டுதல் என்­பது போல அர்­ஜுன மகேந்­தி­ரனை நிய­மித்­தது சரி என கூறி­விட்டு பின்னர் பாரா­ளு­மன்றில் மகேந்­தி­ரனை காக்கும் வண்ணம் பேசி­யமை தவறு என கூறு­வது பிர­தமர் விட­யத்தில் தீர்­மானம் எடுக்கும் பொறுப்பை சட்ட மா அதி­ப­ரிடம் ஒப்­ப­டைப்­ப­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

 ஏனெனில் ஜனா­தி­பதி விசேட உரையில், அறிக்­கையை சட்ட மா அதி­ப­ரிடம் கொடுத்­து­விட்டேன். அவர்கள் ஆராய்ந்து யார் யாருக்­கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டுமோ அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்பர் என சிலே­டை­யாக சொல்­லி­யி­ருந்தார். ஒரு வேளை பிர­த­ம­ருக்கு எதி­ராக நேர­டி­யாக நட­வ­டிக்கை எடுங்கள் என கூறாமல் ஜனாதி­பதி மைத்திரி சிலே­டை­யாக கூட இவ்­வா­றான வார்த்தை­களை பயன்­ப­டுத்தி இருக்­கலாம்.

மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற குறித்த மோச­டியால் அர­சுக்கு ஏற்­பட்ட நட்­டத்தின் மொத்த தொகை 11145 மில்­லியன் ரூபா. இதில் ஊழியர் சேம­லாப நிதி, மஹா­பொல புல­மைப்­ப­ரிசில் நிதி, தேசிய சேமிப்பு வங்­கியின் நிதி இலங்கை காப்­பு­றுதி நிறு­வன, காப்­பு­றுதி கூட்­டுத்­தா­பன நிதியம், ஆகி­ய­வற்றின் தொகை 8529 மில்­லியன் ரூபா­வாகும். அதா­வது 8.5 பில்­லியன் ரூபாவுக்கும் அதி­க­மான நிதி மேற்­கு­றிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் நிதி. எஞ்­சிய தொகை தனியார் துறை­யி­ன­ருக்கு சொந்­த­மா­னது. 70 இலட்சம் தனியார் துறையின் வியர்­வையில் சேமிக்­கப்­பட்­ட­வையே இவ்­வாறு மோசடி செய்­யப்பட்­டுள்­ளது.

 உண்­மையில் இந்த மோச­டி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுடன் முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் சம்­பந்தம் ஒன்றும் இர­க­சி­ய­மல்ல. எனவே அவ­ருக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் சட்­டத்தின் கீழ் விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­க­ப்ப­டவேண்டும் என்ற பரிந்துரை நியாயமானது.

 எனினும் ஜனா­தி­பதி பட்டும் படா­மலும் சொன்ன பிர­தமர் விட­யத்தில் கேள்­விகள் தொடர்­கின்­றன. ஏனெனில், இந்த பாரிய மோசடி இடம்­பெறும் போது மத்­திய வங்­கிக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக இருந்­தவர் பிர­தமர் ரணில். அப்­ப­டி­யானால் அவ­ரது பொறுப்பு இங்கு தட்­டிக்­க­ழிக்­கப்­பட முடி­யா­தது. பிர­த­மரை மீறி ரவி கரு­ணா­நா­யக்­கவோ அல்­லது வேறு ஒரு­வரோ மத்­திய வங்­கியில் ஆதிக்கம் செலுத்தி இருப்பார் என்று யாரா­வது நினைப்­பார்­க­ளானால் அது முட்டாள் தன­மா­னது.

எனவே தான் அர்ஜுன மகேந்­தி­ரனை மத்­திய வங்­கியின் ஆளுநர் பத­விக்கு நிய­மித்த பிர­தமர் அதன் பின்னர் பிணை முறி தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழும் போது அவரை காப்­பாற்ற எடுத்த முயற்­சிகள் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

 குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்தில் 2015.03.17 அன்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரது கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போது பிர­தமர் மத்­திய வங்­கியின் ஆளுநர் இத­னுடன் தொடர்­பு­ப­ட­வில்லை. குற்றச்­சாட்­டுக்கள் உண்­மைக்கு புறம்­பா­னவை. மத்­திய வங்கி ஆளுநர் கேள்வி கோரல் மனு நட­வ­டிக்­கை­களில் தலை­யீடு செய்­ய­வில்லை.' என காப்­பாற்றும் பதில்­களை கொடுத்­தி­ருந்தார்.

இந்த மோசடி தொடர்பில் பிர­தமர் ரணில் மீது விரல் நீட்ட நியா­ய­மான கார­ணங்கள் அல்­லது சந்­தே­கங்கள் உள்­ளன.

 குறிப்­பாக காலா காலம் நிதி­ய­மைச்சின் கீழ் இருந்த மத்­திய வங்­கியை பிர­தமர் தனக்கு கீழ் கொண்டு வந்­தமை, சிங்கப் பூர் பிர­ஜையை ஆளு­ந­ராக நிய­மித்­தமை, அவரைக் காப்­பாற்ற அவரின் பதவிக் காலத்தை நீடிக்க முயற்­சித்­தமை, குற்­றச்­சாட்டு எழுந்து பூதா­க­ர­மா­ன­போது கூட அவரை அகற்­றாது அவரின் பதவிக் காலம் நிறை­வுறும் வரை காத்­தி­ருந்­தமை போன்­றன பிர­த­ம­ர் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களாகவுள்ளன.

 அதே போல் 2016 கோப் குழுவில் அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக பல­மான ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்பட்ட சமயம், மனோ கணே­சனின் கட்சி சார்பில் கோப் குழுவை பிரதி நிதித்­துவம் செய்த வேலு குமாரை அதில் இருந்து விலகச் செய்து, அவ­ருக்கு பதி­லாக சுஜீவ சேன­சிங்­கவை உள் நுழைத்த விடயமும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஏனெனில் சுஜீவ சேன­சிங்­க­வுக்கும் அலோசியஸுக்கும் இடையிலான தொடர்புகள் ஆணைக்குழு விசாரணையின் இடை நடுவே வெளிப்படுத்தப்பட்டமை, பிணைமுறி மோசடி நடக்கவே இல்லை என அவர் புத்தகம் எழுதியமை போன்றன அவரது கோப் குழு பிரவேசத்தை சந்தேகப்பட வைக்கின்றது.

எது எப்படி இருப்பினும் தற்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் உள்ள நிலையில், அடுத்து வரும் நான்கு வாரங்களின் பின்னர் அதிரடி கைதுகள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சிகளை நெறிப்படுத்திய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா தலைமையிலான 10 பேர் கொண்ட சட்டவாதிகளின் கைகளிலேயே இந்த வழக்கு தொடரும் பணியும் ஒப்படைக்கப்பட்டால், அவர்களது ஆலோசனைக்கு அமைய பலர் கைதாகலாம். குற்றவியல் சட்டத்தின் கீழ் அது சாத்தியப்படும்.

 அதேபோன்று பிரதானமாக சட்ட மா அதிபர் நட்டத்தை மீள அறவீடு செய்வதை நோக்காக கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவசரமாக சட்ட திருத்தங்கள், புதிய சட்டவாக்கம் தொடர்பில் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 இவையனைத்தையும் தாண்டி ஜனாதிபதி சொல்லாத அதிர்ச்சிகள், இந்த விசாரணை அறிக்கை மக்கள் மயப்படும் போது வெளிப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாக உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அறிக்கை மக்கள் மயப்படும் வரை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்.

எம்.எப்.எம்.பஸீர்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-06#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.