Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா? அபிப்பிராயம் கேட்கிறார் ஜனாதிபதி

Featured Replies

இன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா? அபிப்பிராயம் கேட்கிறார் ஜனாதிபதி

 

 

தனது பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலதிகமாக ஒரு வருடம் - அதாவது, 2021ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர முடியுமா என மீயுயர் நீதிமன்றிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

5_Prez.JPG

இது குறித்த விவாதம், நாளை மறு நாள் (11) திறந்த நீதிமன்றில் நடைபெறவுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் கவனத்துக்கு இது குறித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், தனது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மேலும் ஒரு வருடம் தான் பதவியில் தொடர்வதற்கு ஏதேனும் தடைகள் உள்ளனவா என்று கேட்டுள்ளார்.

மேலும், இதற்கான பதிலை இம்மாதம் பதினான்காம் திகதிக்குள் தருமாறும் கோரியுள்ளார்.

இக்கடிதம் குறித்து மீயுயர் நீதிமன்றப் பதிவாளர் அனுப்பியுள்ள பதிலில், ஜனாதிபதியின் கடிதத்தின் பேரில் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு ஆராயப்படப் பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள், அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதில், ‘இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்பவர்கள் ஐந்தாண்டு காலம் பதவி வகிக்கலாம்’ எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29155

  • தொடங்கியவர்

6 வருடங்கள் பதவியில் நான் நீடிக்க முடியுமா? : உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக்கோரினார் ஜனாதிபதி மைத்திரி

p11-987d4401aae5252b5fe948e0988c53347e161edc.jpg

 

 (எம்.எப்.எம்.பஸீர்)

ஆறு வரு­டங்கள் தன்னால் (2021வரை) ஜனா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் நீதி­மன்­றிடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ளார். உயர் நீதி­மன்­றிடம் கடிதம் ஊடாக,

 அவ்­வாறு ஆறு வரு­டங்கள் இருக்க முடி­யுமா என்­ப­தற்­கான அபிப்­பி­ரா­யத்தை எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்கு ( 14 ஆம் திகதி) முன்­ப­தாக அறியத் தரு­மாறு ஜனா­தி­பதி கோரி­யுள்ளார்.

முன்­ன­தாக ஆறு வரு­டங்­க­ளாக இருந்த ஜனா­தி­பதி ஒரு­வரின் பதவிக் காலம் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம், 5 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த அபிப்­பி­ரா­யத்தை கோரி­யுள்ளார்.

இந் நிலையில் இந்த விட­யத்தை ஆராய உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. அதன்­படி நாளை 11 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இந்த விட­யத்தை பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னி­லையில், திறந்த நீதி­மன்றில் விவா­திக்க உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.

அது தொடர்பில் உயர் நீதி­மன்ற பதி­வாளர் எம்.எம்.ஜய­சே­கர, அன்­றைய தினத்­துக்­கான வழக்கு விசா­ரணைப் பட்­டி­யலில் விட­யத்தை சேர்த்­துள்ளார். அத்­துடன் நாளை முற்­பகல் 11.00 மணிக்கு இந்த விட­யத்தை விவா­திக்க உள்­ள­தாக அவர் கடிதம் ஊடாக இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் அதன் செய­லாளர் சட்­டத்­த­ரணி அமல் ரந்­தெ­னிய ஆகி­யோ­ருக்கு அறி­வித்­துள்ளார்.

அதன்­படி நாளை விவாதம் இடம்­பெறும் போது, சட்­டத்­த­ர­னிகள் சங்­கத்தின் உறுப்­பி­னர்கள் விரும்­பினால் தமது கருத்­துக்­களை மன்றில் ஆஜ­ராகி பதிவு செய்ய முடியும் எனவும் அது தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­விக்­கு­மாறு கோரியே இந்த கடித்­ததை உயர் நீதி­மன்ற பதி­வாளர் எம்.எம்.ஜய­சே­கர அனுப்பி வைத்­துள்ளார்.

அந்­த­வ­கையில் நாளை விருப்­ப­மான சங்க உறுப்­பி­னர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் 5 வரு­டங்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா அல்­லது 6 வரு­டங்­க­ளாக அமைய வேண்­டுமா என்­பது குறித்து சார்­பான மற்றும் எதி­ரான வாதங்­களை முன் வைக்க முடியும் என தமது சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தாக இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ. ஆர்.டி. சில்வா கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு அனுப்­பி­யுள்ள அபிப்­பி­ராயம் கோரிய கடி­த­தத்தில், கடந்த 2015 ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிர­காரம் தான் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்ளார்.

அன்­றைய திக­தியில் குறித்த சரத்தின் பிர­காரம் ஜனா­தி­பதி ஒரு­வரின் பதவிக் காலம் 6 வரு­டங்கள் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி, 2015 மே 15 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட 19 ஆவது அர­சியல் திருத்­தத்தின் பிர­காரம், அர­சி­ய­ல­மைப்பின் 30 ஆம் சரத்து திருத்­தப்­பட்­ட­தா­கவும், அதன்­படி இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை 19 ஆம் திருத்­தத்தின் 3 (2) ஆம் பிரி­வூ­டாக திருத்தி 5 வரு­டங்கள் என மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இந் நிலை­யி­லேயே 19 ஆம் திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட முன்னர் பத­விக்கு வந்த தன்னால், அர­சி­ய­ல­மைப்பின் பழைய ஏற்­பா­டுகள் பிர­காரம் 6 வரு­டங்கள் பத­வியில் நீடிக்க முடி­யுமா அல்­லது தானும் 5 வரு­டங்கள் மட்­டுமே பதவி வகிக்க வேண்­டுமா என உயர் நீதி­மன்றின் அபிப்­பி­ரா­யத்தை கோரி இக்­க­டிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

 நாளை பிரதம நீதியர்சர் பிரியசாத் டெப் தலைமையிலான நீதியசர்கள் முன்னிலையில், இந்த விடயம் திறந்த மன்றில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன்போது சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட சட்டவாதிகளும் விவாதத்தில் போது தமது கருத்துரைகளை முன்வைக்க உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்கள தக்வல்கள் தெரிவித்தன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-10#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று சொல்லி பதவிக்கு வாறது, பிறகு அந்தக் கதிரையை நிரந்தரமாக்கஅரசியல் திருத்தம், சரத்து திருத்தம் என்று தங்கட வசதிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கிறது.உப்பிடி எத்தனைபேர் மாத்தி மாத்தி அனுபவிச்சுப் போட்டினம். ஆசை யாரைத்தான் விட்டது?  உங்களை குற்றம் சொல்லிப் பயனில்லை. அந்தக் கதிரையின் ராசி அப்பிடி. எங்கட  தலீவரே வெறும் கதிரையை விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9.1.2018 at 1:59 PM, நவீனன் said:

இன்னொரு வருடம் பதவியில் நீடிக்கலாமா? அபிப்பிராயம் கேட்கிறார் ஜனாதிபதி

பதவிக்கு வரேக்கை சனாதிபதி முறையை வெட்டுறம் புடுங்கிறம் எண்டு சொன்னியள்....இப்பென்ன மாறாட்டக்கதையள்??????
நீங்கதான் தைரியமான ஆளாச்சே....நல்லாட்சியின் தலைவராச்சே. லெக்சனை வைச்சு வெண்டு காட்டுறது..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நல்லாட்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.