Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

ஊடக அறம் - ரஜினியும் எம்.ஜி.ஆரும்: ஓர் ஒப்பீடு

ஊழிமுதல்வன்

ரஜினிக்காகச்  சலம்பும் அடிப்பொடிகள்

வருவேன் வருவேன் என்று இருபத்தோரு ஆண்டுகளாகப் போக்குக்காட்டி வந்த ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டு கடைசியில் தமிழக அரசியலில் குதித்தே விட்டார்; "நேரடியாக இருநூத்தி முப்பத்துநாலு தொகுதிகளிலும் போட்டி போடுறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சி அமைக்கிறோம்", என்று அறிவித்தும் விட்டார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் காணும் இக்காலகட்டத்தில், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டை எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதருடன் ஒப்பிட்டு, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆரைவிட ரஜினி மிக உயர்ந்தவர் என்று தலைமேல் தூக்கிவைத்துக் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். வாட்ஸப், ட்விட்டர், முகநூல், இணையதளம், யூட்யூப் என்று இவர்கள் பண்ணும் அலம்பல் தாங்கமுடியாமல், காலச்சக்கரத்தைச் சற்றே பின்னோக்கிப் பார்த்தேன் - இவர்களின் சலம்பலில் எங்காவது உண்மை இருக்கிறதா என்று.

எம்.ஜி.ஆரின் ஊடகஅறமும் - ரஜினியின் ஊடக சீரழிவும்

தம்காலத்தின் மிகப்பெரிய தகவல்-தொடர்பு ஊடகமான திரைப்படம் மூலம் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்குத் தவறான பாதைகளைக் காட்டக்கூடாது என்னும் திரை-ஊடக அறம் ஒன்றை தனக்கென வகுத்துக்கொண்டு, அதன் வழியே துளியும் விலகாமல், மக்களுக்கு நல்ல செய்திகளையே தருவது என்பதில் கடைசிவரை உறுதியாக வாழ்ந்த எம்.ஜி.ஆர் என்னும் மாமனிதர் எங்கே?

"புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், சூதாடுதல், பெண்களை அவமதித்தல், கெட்ட வார்த்தையை ஸ்டைலாகப் பேசுதல் (விரசமான "இதெப்படியிருக்கு?" வசனம் நினைவிருக்கும் என நினைக்கிறேன்), கற்பழித்தல், பிறன்மனை நயத்தல் என்ற தீய செயல்களை நியாயப்படுத்துவது போன்றவற்றையே திரைப்படங்கள் மூலம் வியாபாரமாக்கித் தமிழ்ச் சமூகத்தையே சீரழித்த ரஜினி என்னும் "சிவாஜிராவ் கெய்க்வார்டு" என்ற மகானுபவன் எங்கே? யாரை யாருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போனதுதான் அவலம்.

தமிழர்களின் 'எங்கள் வீட்டுப் பிள்ளை'யான எம்.ஜி.ஆர்

திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களைக் கொண்ட திமுகவைத் தவிர்த்துவிட்டு, எம்ஜிஆரைத் தமிழக மக்கள் தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தியதற்குக் காரணங்கள்.

குடி-புகை-சூதாடுதல் தீமை என்று இளைஞர்களுக்கு கற்பித்தார் எம்.ஜி.ஆர்

பொதுவாக, வள்ளுவர் வலியுறுத்திய வாழ்வியல் அறங்களான கள்ளுண்ணாமை, சூதாடாமை, உயிர்க்கொலை செய்யாமை, வாய்மை, தாய்மை போற்றுதல், அறன் வலியுறுத்தல் போன்ற செய்திகளை உள்ளடக்கியே தனது திரைப்படங்களை வடிவமைத்தார். குடிப்பழக்கத்தையும், புகைப்பிடிப்பதையும் பெரும் தீமை என்று இளைஞர்களுக்கு திரைப்படங்கள் மூலம் உறுதியான செய்தி சொன்ன எம்.ஜி.ஆர் அதைத் தன் வாழ்விலும் கடைப்பிடித்து, அப்பண்பு-நலன்களுக்கு வலிமையையும் சேர்த்தார்.

குடும்பத்தலைவன் எம்.ஜி.ஆர்

குடும்பக் கதைகள் என்றால், அவையும் வள்ளுவன் வகுத்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றியே அமைத்தார்;  தாய்-தந்தையரை மதித்தலும் பேணுதலும், இல்வாழ்க்கை அறம், வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேற்றின் சிறப்பு, அன்புடைமையின் அவசியம், விருந்தோம்பல் என்னும் மானுடப்பண்பு ஆகியன எம்.ஜி.யாரின் குடும்பத் திரைப்படங்களில் ஆணிவேராக இருந்தன.

பொன்மனச் செம்மலாக இளைஞர்களுக்கு வழிகாட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.

அவை அனைத்திலும், இனியவைகூறல், செய்ந்நன்றி அறிதல், பொறுமை காத்தல், பிறரிடம் பொறாமை கொள்ளாத தன்மை, கோள்சொல்லாமை, உதவாக்கரைப்பேச்சு பேசாமை, தீவினையச்சம், சமூக நல்லிணக்கம், வள்ளன்மை(ஈகை), திருடாமை, எதிர்பார்ப்பின்றி உதவுதல்(அருளுடைமை), கூடாவொழுக்கம் தவிர்த்தல், கோபம் கொள்ளாத தன்மை,  பிறருக்கு துன்பம் விளைவிக்காமை போன்ற நற்குணங்களை தனது திரைப்படங்கள் மூலம் மக்களுக்குச் சொல்வதே  எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வியலாக இருந்தது.

எம்.ஜி.ஆரின் அரசியல் அறம்

எம்.ஜி.ஆரின் திரைப்பட அரசியல் குற்றங்கடிதல், பெரியாரைத் துணைக்கோடல், செங்கோலாட்சி, கொடுங்கோன்மை எதிர்த்தல்,  பெரியாரைப் பிழையாமை என்று இழையோடிய கதையோட்டம் வள்ளுவம் வகுத்த அரசியல் பாதையாகவே இருந்தது. 138 திரைப்படங்களில் 136 தமிழ்ப்படங்கள் நடித்துள்ளார். சர்வாதிகாரி என்னும் படம் தெலுங்கிலும் தமிழிலும் உருவானது. ஏக்தா ராஜா என்னும் ஒரு இந்திப் படத்தில் 1951ல் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் பொதுவுடைமை ஆன்மீக அறம்

இந்தக் கால கட்டங்களில், திமுகவின் நேரடி அரசியலிலும் அவர் பங்கு கொண்டவர் என்பதையும் கணக்கிடவேண்டும். திராவிடஇயக்கக் கொள்கைகளில், வள்ளுவம் வகுத்த கொள்கைகளை மட்டுமே தம் திரைப்படங்களில் கதை அமைத்து, மக்களுக்குச் செய்தியாக வழங்கியவர்.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டிருந்த திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்தாலும், எம்.ஜி.ஆரின் கடவுள் கொள்கை மக்களைச் சார்ந்தே இருந்தது. "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்! அவன் யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை! ஊருக்காகக் கொடுத்தான்!" என்று பொதுவுடமையைக் கடவுளின் பண்பாக மக்களுக்குக் கொண்டுசென்ற மனிதநேயப் பண்பாளர் எம்.ஜி.ஆர். "கடவுள் ஏன் கல்லானான்? மனம் கல்லாய் போன மனிதர்களாலே!" என்று மனிதரிலேயே கடவுட்தன்மையை அவர் வலியுறுத்தியது எம்.ஜி.ஆரின் ஆன்மீக அரசியலுக்கு ஒரு சோற்றுப் பதம்;  இமயமாய் உயர்ந்து நிற்கும் அம் மாமனிதரின்  சமூகச் சிந்தனைகளுக்கு ஓர் உரைகல்.

கொள்கைகளையே பாடல்களாக உருவாக்கிய எம்.ஜி.ஆர்.

கவிதை எழுதியவர்கள் கவிஞர்களே தவிர எம்.ஜி.ஆர். இல்லையே என்பவர்களுக்காக: அவரது படங்களில் வரும் பாடல்களின் மையக் 'கரு'க்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆரே என்பதற்கு, கதைக்களத்துக்குப் பொருத்தமான பாடல்வரிகள் வரும்வரை, பாடல் வரிகளை மாற்றச்சொல்லி, கவிஞர்களுடன் அமர்ந்து பேசி, எழுதி வாங்கியவர் எம்.ஜி.ஆர் என்று பல கவிஞர்களும் உரைத்த சாட்சிகளே போதுமானவை.

அனைத்துத் தளங்களிலும் அறவாழ்வு என்பதையே வாழ்வியலாக மக்களுக்குச் சொன்ன எம்.ஜி.யாரைப் பார்த்து, "அன்றைக்கு எம்ஜிஆருக்கு என்ன விசேஷமான கொள்கை இருந்தது?" என்ற பாமரத்தனமான கேள்வி கேட்கும் புத்திசாலிகளுக்கான பதிலே இவை.

குடியும் புகையும் இளைஞர்களுக்கு ஊக்குவித்த ரஜினி படங்கள்

ரஜினியின் 161 திரைப்படங்களில் 114 தமிழ்ப் படங்களில் இதுவரை நடித்துள்ளார். இதில் ராகவேந்திரா என்னும் ஒரு படம் தவிர  புகை, மது போன்ற தீய பழக்கங்கள் இல்லாத படங்களை ரஜினி தந்தது இல்லை. ரஜினி ஸ்டைல், யதார்த்தம் என்ற பெயரில் இரண்டு தலைமுறைத் தமிழ் இளைஞர்களைக் குடிப்பழக்கத்துக்கும், புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கும் அடிமைப்படுத்திய பெருமைக்குரிய பெருந்தகை இந்த ரஜினி என்னும் "சிவாஜிராவ் கெய்க்வார்டு".

சமூகவிரோதிகளை மக்கள் நாயகனாகத் தூக்கிப்பிடிக்கும் ரஜினி படங்கள்

இவர் நடித்த திரைப்படங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை நியாயப்படுத்தும் படங்களே அதிகம். பெண்ணடிமைத்தனமும், பெண்களை இழிவு செய்யும் கதைகளும் இவைகளில் உண்டு. 

சமூகவிரோதச் செயல்களே ஹீரோயிசம் என்று காட்டிய ரஜினி படங்கள்

அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான், பாவத்தின் சம்பளம், குப்பத்து ராஜா, பில்லா, காளி, பொல்லாதவன், முரட்டுக்காளை, தீ, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, ரங்கா, தங்க மகன் போன்றவையால் குடித்துவிட்டுக் கலாட்டா செய்வது எப்படி, சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது எப்படி, அறவழி வாழ்வது இளித்தவாய்த்தனம் என்ற பிற செயல்முறை விளக்கங்கள் இந்த மகான் தமிழ் இளைஞர்களுக்குப் போதித்த 'ரஜினி வாழ்வியல் தத்துவங்கள்'.

'சிஸ்டம்' கெட்டுப்போகக் காரணமாக இருந்துவிட்டு 'சிஸ்டம் கெட்டுப்போச்சே' என்றால் . . .

இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களையெல்லாம் உதிர்த்து, தனக்குப்பின் தன்னைப் போலவே பல எதிர்மறை நட்சத்திரங்கள் தமிழ் மண்ணில் உருவாக முன்னுதாரணமாக வாழ்ந்து, தமிழ்ப் பண்பையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டிப் புதைத்த இந்த சமூக சேவகர் இப்போது "சிஸ்டமே கெட்டுப்போயிருச்சே! நான் முதல்வரா வந்தாத்தானே சரி செய்ய முடியும்" என்கிறார்.

தமிழ்நாட்டைப் பாதித்த எந்த முக்கியமான நிகழ்வுகளையும் கண்டுகொள்ளாமல் எங்கோ அயல் கிரகத்தில் நடந்ததுபோல் சாமர்த்தியமாக நடந்துகொண்ட இவர், தமிழ்நாட்டின் 'சிஸ்டம் கெட்டுவிட்டது' என்பது கேலிக்கூத்தில்லாமல் வேறென்ன?

தமிழ்சமூகத்தின் விதைநெற்களைத் துவம்சம் செய்த ரஜினி

அசுரனைப்போல் எதிர்மறைத் தத்துவங்களையே தூக்கிப்பிடித்து, பல இளைய தலைமுறைத் தமிழ் இளைஞர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி, அந்த குட்டிச்சுவர்களின் இடிபாடுகலையே கோபுரமாக்கி, ரஜினி பெற்ற பட்டம்தான் 'சூப்பர் ஸ்டார்'. ரஜினியின் வாழையடி வாழையாக முளைத்த அடிப்பொடிகளான 'சப்ரீம் ஸ்டார்', 'சளைய தளபேதி'', 'உரல்டு நாயகன்', 'உல்டிமேட் ஸ்டார்', 'அண்டர்கிரவுண்டு ஸ்டார்', 'அப்பர்கிரௌண்டு ஸ்டார்' என்னும் பலரும் அவரவர் தகுதிக்கேற்ப, தங்களுக்கென பல இளம் தமிழ்க் கைத்தடிகளை உருவாக்கித் தங்கள் கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் செய்யவைத்துத் தங்கள் பங்குக்குத் தமிழ் சமூகத்தின் விதை நெற்களைத் துவம்சம் செய்தனர்.

ரஜினியின் வாரிசுகள் அரசியலுக்கு வந்தால் . . .

தமிழக அரசியலில் வாரிசு அரசியல் என்னும் வாரியல் அரசியல் எல்லா நிலைகளிலும் நிலைபெற்றுவிட்டது. ரஜினி 'சிஸ்டத்தை'ச் சரிசெய்தபின், எல்லாத் தலைவர்களையும்போல் தனது வாரிசுகளிடம் தமிழ் சிஸ்டத்தை ஒப்படைத்தபின் நடக்கப்போகும் நிலையைக் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியவில்லை. 'பாத்தா புடிக்காது! பாக்கப் பாக்கப் புடிக்கும்!' என்று கூவும் குரல் இப்போதே குடலைக் குமட்டுகிறது.

உணர்விலும் தமிழன்-அல்லாத ரஜினி . . .

தனது சொத்துக்கள் அனைத்தையும் தமிழ்நாட்டில் மட்டுமே வாங்கி, தமிழ் மக்களுக்கே அவற்றைக் கொடுத்த எம்.ஜி.ஆர் எங்கே? தனது சொத்துக்கள் அனைத்தையும் கர்நாடகா, மகாராஷ்டிரா என்று வெளியில் வாங்கிக் குவித்துவிட்டு, தன்னை வாழவைத்த தெய்வங்கள் என்று போலியாகப் பசப்பு வார்த்தைகள் பேசி, தமிழ் மண்ணில் ஒரு சிறு முதலீடுகூடச் செய்யத் துணியாத அயலான் மனப்பான்மை கொண்ட ரஜினி எங்கே?

கடைசி ஆறுதலாக . . .

ரஜினி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சிகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டபோது கிடைத்த ஒரே சிறிய ஆறுதல், பெரும்பாலான ரசிகர்கள் ஐம்பதுகளைக் கடந்த வயதான வழுக்கை மண்டையர்களாகவும், நரைத்த முடியர்களாகவும் இருந்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.