Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

Featured Replies

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

 

 

தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார்.

14_Badulla.JPG

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபர் ஆர்.பவானி. அவருக்கு, ஊவா மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், கடிதத்தைக் கொண்டுவரும் பிள்ளையை பாடசாலையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பாடசாலை விதிகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தால் அந்தக் கடிதத்தை ஏற்க மறுத்ததுடன், குறித்த பிள்ளையை பாடசாலையில் அனுமதிக்கவும் மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த முதலமைச்சர் சாமர சம்பத், தமது அதிகாரிகளை அனுப்பி அதிபரை தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அழைத்து வந்து, தன் முன் மண்டியிடச் செய்தார்.

இச்செய்தி ஊடகத்தில் வெளியானது. அது குறித்த குரல் பதிவு ஒன்றையும் அதிபர் அளித்திருந்தார்.

எனினும் தேர்தல் இலாபங்களுக்காக தாம் மிரட்டப்பட்டே தமது குரல் பதிவு செய்யப்பட்டது என்று அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று (19) குறித்த பாடசாலைக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட கல்வி வலய அதிகாரிகள் பலர் முன்னிலையில், தாம் மிரட்டப்பட்டதும் மண்டியிடச் செய்யப்பட்டதும் உண்மையே என அதிபர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

“என்னைத் தனது அலுவலகத்துக்கு வரவழைத்த மாகாண கல்விச் செயலாளர், முதலமைச்சர் குறித்த குரல் பதிவை வழங்கியதற்காக என்னைக் கடிந்துகொண்டார். என்னை மிரட்டியே அந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். அவரது மிரட்டலுக்குப் பணிந்தே நான் அவ்வாறு செய்திருந்தேன்.

“உண்மையில், என்னைத் தமது இல்லத்துக்கு வரவழைத்த முதலமைச்சர் என்னைக் கண்டபடி திட்டினார். என்ன, ஏது என்று கேட்பதற்குள் கடுமையாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கடைசியில் என்னை மண்டியிடச் செய்த பின்னரே அவரது கோபம் அடங்கியது” என, குறித்த அதிபர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/29665

  • தொடங்கியவர்

தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை ஆசிரியர் அதிபர்களுக்கான தொழிற்சங்கங்கள் எதுவுமே சிறிலங்காவில் இல்லையா அல்லது இதுபோன்ற விடயங்களை கண்டும் காணாததுபோல் இருப்பார்களா? தொழிலாளர்களுக்கு இலங்கையில் என்ன பாதுகாப்பு உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vanangaamudi said:

பாடசாலை ஆசிரியர் அதிபர்களுக்கான தொழிற்சங்கங்கள் எதுவுமே சிறிலங்காவில் இல்லையா அல்லது இதுபோன்ற விடயங்களை கண்டும் காணாததுபோல் இருப்பார்களா? தொழிலாளர்களுக்கு இலங்கையில் என்ன பாதுகாப்பு உள்ளது?

ஏனில்லை? வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தைப் பாவிக்குமாறு கட்டளை வந்தபோது போக்குவரத்தையே முடக்கினார்களே.?? :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் சொல்ல வந்தது அமைதியை குலைப்பதோ ஆர்ப்பாட்டம் செய்வதையோ சமூகநல சேவைகளை முடக்குவதோ அல்ல. நீதிமன்றத்தினூடாக அல்லது அரசியல் மட்ட பேச்சுவார்த்தைகளால் பொதுப்பிரச்சனைகளை அல்லது ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்பது. 

  • தொடங்கியவர்

உடனடி நடவடிக்கை வேண்டும்: ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தல்

 

 

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் ஊவா மாகாண முதலமைச்சர் முன் மண்டியிடச் செய்த விவகாரத்தில், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

2_Teachers_Union.JPG

தான் மண்டியிடச் செய்தமை உண்மையே எனவும் ஊவா மாகாண கல்வித் துறை செயலாளரின் மிரட்டலையடுத்தே அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்று தாம் கூற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

குறித்த பாடசாலைக்கு நேற்று (19) ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விஜயம் செய்தபோதே இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது.

http://www.virakesari.lk/article/29667

  • தொடங்கியவர்

அதிபரை அச்சுறுத்தியமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டனம் : சுசில் பிரேமஜயந்த

 

பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். 

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி அச்சுறுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. 

இது தொடர்பான விசாரணைகளை தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆரம்பித்துள்ளது.

http://www.virakesari.lk/article/29694

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நவீனன் said:

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

தமது சிபாரிசைப் புறக்கணித்த பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தன் முன் மண்டியிடச் செய்தது உண்மையே என்பது அம்பலமாகியுள்ளது. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் மாகாண கல்வி வலய அதிகாரிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபரே இதை உறுதிசெய்துள்ளார்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்களின் துணிச்சலுக்கும் முன் உதாரணத்துக்கும் பாராட்டுகள். இந்த விதமான முயற்ச்சிகள் தொடரவேண்டும். இவ்வாறன துணிச்சல் மிக்க முயற்ச்சிகள் இல்லாவிட்டால் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ முடியாது.

  • தொடங்கியவர்

அதி­பரை மண்­டி­யிடச் செய்த முத­ல­மைச்­சரை கைது செய்க : இலங்கை ஆசி­ரியர் சங்கம்

 

எஸ்.கணேசன்

பாட­சாலை பெண் அதி­பரை மண்­டி­யிடச் செய்த ஊவா மாகாண முத­ல­மைச்­ச­ரையும், அதை மறைக்கும் படி அதி­பரை அச்­சு­றுத்­திய ஊவா மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் சந்­திய அம்­பன்­வெல , பதுளை மாகாண கல்விப் பணிப்­பாளர், பதுளை வலயக் கல்விப் பணிப்­பாளர் ஆகி­யோ­ரையும் கைது செய்ய வேண்­டு­மென இலங்கை ஆசி­ரியர் சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இவ்­வாறு நட­வ­டிக்கை எடுக்கத் தயங்­கினால் இலங்கை ஆசி­ரியர் சங்கம், இலங்கை அதிபர் சங்கம் உட்­பட ஏனைய கல்வி சார் தொழிற்­சங்­கங்கள் இணைந்து நாடு தழு­விய போராட்­ட­மொன்றை நடத்தும் என இலங்கை ஆசி­ரியர் சங்க பொதுச்­செ­ய­லாளர் ஜோசப் ஸ்டாலின் தெரி­வித்தார்.  

(பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­ல­யத்தில் ஒரு பிள்­ளையைச் சேர்க்க மறுப்புத் தெரி­வித்த பெண் அதி­பரை மாகாணக் கல்வி அமைச்சின் செய­லாளர் சந்­திய அம்­பன்­வெல அமைச்­சுக்கு அழைப்­பித்து அதி­பரை முத­ல­மைச்­சரின் இல்­லத்­துக்குச் செல்­லு­மாறு பணித்­துள்ளார். முத­ல­மைச்­சரின் இல்­லத்­துக்குச் சென்ற இப்பெண் அதி­பரை ஊவா மாகாண முத­ல­மைச்சர் மண்­டி­யிட்டு மன்­னிப்புக் கேட்­கும்­படி பணித்­துள்ளார். இச்­சம்­பவம் கடந்த 2ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. மீண்டும் கடந்த 9ஆம் திகதி பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­ல­யத்­துக்குச் சென்ற மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர், மாகாண கல்விப் பணிப்­பாளர், வலயக் கல்விப் பணிப்­பாளர் ஆகியோர் அறிக்­கை­யொன்றை எழுதி அதி­ப­ரிடம் கொடுத்து அதை இலத்­தி­ர­னியல் ஊட­க­மொன்­றி­னூ­டாக ஊட­க­வி­ய­லா­ள­ரிடம் வாசிக்கும் படி பணித்­துள்­ளனர்.

இதையும் மீறி இச்­செய்தி அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மூலம் ஊட­கங்­களில் வெளி­யா­னதை அடுத்து மேற்­படி கல்வி அமைச்சின் செய­லா­ளரும் ஏனைய அதி­கா­ரி­களும் மீண்டும் பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­ல­யத்­துக்குச் சென்று அதி­பரை அச்­சு­றுத்­திய போது அவர் பதுளை மாவட்ட ஐ.தே கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரே­ஷிடம் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு விட­யத்தைத் தெரி­வித்­துள்ளார். இதை­ய­டுத்து , வடிவேல் சுரேஷ் எம்.பி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லத்­துக்குச் சென்­றுள்ளார். அப்­போது கல்வி அமைச்சின் செய­லாளர் உட்­பட ஏனையோர் வெளி­யேறிச் சென்­றுள்­ள­தா­கவும் ஜோசப் ஸ்டாலின் தெரி­வித்­துள்ளார்.

ஆசி­ரியர், அதி­பர்­களைப் பாது­காக்க வேண்­டிய ஊவா கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் இவ்வாறு அதிபர்களை காட்டிக்கொடுப்பது கண்டிக்கத்தக்கது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-01-21#page-1

  • தொடங்கியவர்

பதுளை தமிழ்  பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை – விசாரணைக்கு உத்தரவு…

Samara-My3-Princi.jpg?resize=651%2C345

பதுளை தமிழ்  பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காவற் துறை  மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் பணித்திருந்த நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய அந்த அதிபர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, குறித்த அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு பணித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

http://globaltamilnews.net/2018/62559/

  • தொடங்கியவர்

ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிடச் செய்தது உண்மையா: பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் விளக்கம்

  • தொடங்கியவர்
முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது
 

image_54da82bc85.jpgபதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, அச்சுறுத்தி முழங்காலிடவைத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில் முழங்காலிட்டு, வணங்கி மன்னிப்பு கேட்ட விவகாரத்தை அந்த அதிபர் மூடிமறைத்தார். எனினும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்துக்கு, கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுடன் சென்ற வடிவேல் சுரேஷ்,

“இந்த விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தருவேன்” என முதலில் உறுதியளித்துள்ளார்.

“ஆகையால், எவ்விதமான அச்சமும் பயமும் இன்றி, அங்கு நடந்ததை ஊடகங்களுக்குத் தெரிவிக்குமாறு” அதிபர் பவானியிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் சூழ்ந்திருக்க, ஊடகங்களின் முன்பாக வந்த அதிபர், கண்ணீர் மல்க, தனக்கு நேர்ந்ததை, புட்டுப்புட்டு வைத்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தேசிய ரீதியில் பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்தது.

தனக்கு நேர்ந்ததை ஊடகங்களுக்கு அதிபர் தெரிவித்ததை அடுத்து அதிபர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மலையக தமிழ் கலாசாரத்துக்கு, ஊவா மாகாண முதலமைச்சர் பங்கம் விளைவித்துவிட்டார் என்பதால், மக்கள் முன்னிலையில், அவரும் முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டுமென்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
‘உயிருக்கு அஞ்சி முழங்காலிட்டேன்’

சுற்றறிக்கையில் பிரகாரமே, 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவிகளை சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையை பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு 8 சதவீதமே ஒதுக்கப்படும். அதனடிப்படையியேயே, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

எனினும், இன்னுமிரு மாணவிகளை சேர்த்துக்கொள்ளவேண்டுமென, முதலமைச்சர் சாமர சம்பத், கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அவ்வாறு கடிதங்களுடன் வந்திருந்த இருவரையும், அழைத்து, சுற்றறிக்கையை தெளிவுப்படுத்தினேன்.

இயலாத பட்சத்தில், மாகாண பணிப்பாளர் அல்லது மாகாண செயலாளரிடம் கடிதங்களை பெற்றுவருமாறு அவ்விருவரையும் அனுப்பிவைத்தேன். இதேபோன்றதொரு பிரச்சினை, 2017 ஆம் ஆண்டின் போதும், தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது இடம்பெற்றது.

இந்நிலையில், ஜனவரி 3 ஆம் திகதியன்று தன்னுடைய காரியாலயத்துக்கு வருமாறு மாகாண செயலாளர் என்னை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். சிறிதுநேரம் கழித்து, முதலமைச்சரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, தங்களுடைய பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளுமாறு, முதலமைச்சரின் கடிதங்களுடன், பாடசாலைக்கு வந்திருந்த பெற்றோர் இருவரும் இருந்தனர். மாகாண கல்விப் பணிப்பாளரும் இருந்தார்.

கடுமையான கோபம் கொண்டிருந்த முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க,

“நான் 8ஆவது படிக்காதவன் என்று தெரிவித்தீரா, உனக்கு இங்கு வேலையில்லை. ஏதாவது தூர பிரதேசமொன்றுக்கு இடமாற்றவும்” என, மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண செயலாளருக்கு  கடுமையான கட்டளையிட்டார்.

அத்துடன், அவ்விரு பெற்றோர்கள் முன்னிலையிலும் முழங்காலிட்டு, மன்னிப்புக் கேட்குமாறு கேட்டார்.

“என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தேன். என்ன செய்வதென்று தெரியாத நான், இறுதியில் முழங்காலிட்டேன். மன்னிப்பு கேட்டேன். என் வாழ்க்கையில் எப்போதும் பொய் சொல்லியது இல்லை. மாணவிகளை சேர்க்கும் விவகாரத்தில் இன, மத, மொழி உள்ளிட்ட வேறுபாடுகளை பார்க்கமாட்டேன். சுற்றறிக்கையின் பிரகாரமே செயற்படுவேன். கடந்த காலங்களில் செயற்பட்டும் உள்ளேன். ஆளுநர் எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என்றேன்.

எனினும், என்னுடைய விளக்கங்களுக்கு செவிசாய்ப்பதாக, முதலமைச்சர் அன்றிருக்கவில்லை. தொழில் பயம், அச்சம் உள்ளிட்டவை காரணமாகவே, முழங்காலிட்டு மன்னிப்புக் கேட்டேன். அதனைவிட, என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. எனினும், அவ்விடத்தில் மாகாண கல்விப் பணிப்பாளரும், மாகாண செயலாளரும் இருந்தனர். அங்கு நடந்தவை என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

முதலமைச்சர் காரியாலயத்தில் நான் முகம்கொடுத்த சம்பவம் தொடர்பில், பாடசாலையின் லொக் புத்தகத்தில் அப்படியே பதிவிட்டுள்ளேன்.

“நான், அச்சுறுத்தப்பட்டதனால், அங்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றியே ஊடகங்களுக்கு அன்று தெரிவித்தேன். அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும், எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மனதுக்குள்ளேயே  குமுறிக்கொண்டிருக்கின்றேன். எனது நிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள் எவருமே, எனக்கு ஆறுதல் கூற முன்வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மட்டுமே , வித்தியாலயத்துக்கு வந்து சம்பவத்தைப் பற்றி வினவினார்” என்றார்.

“எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

‘பகிரங்கமாக முழங்காலிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்’

இந்த விவகாரம் தொடர்பில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில்,

“இது ஓர் அதிபருக்கு இடம்பெற்ற சம்பவமாகக் கருதமுடியாது. நான் கருதவும் மாட்டேன். முழு சமூகத்துக்கும் ஏற்பட்ட அவமானமாகும். பாடசாலை அதிபர் ஒருவரை முழங்காலிடவைப்பதற்கு அரசியல்வாதிக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.

“பாடசாலைக்கு தேவையான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை, நல்கவேண்டியதே அரசியல்வாதிகளின் கடப்பாடாகும். எனினும், முதலமைச்சரின் செயற்பாடு, முழு சமூகத்தையும் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

“இந்த விவகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அதனடிப்படையிலேயே, கல்வியமைச்சு பதவியை அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.

“மாகாண முதலமைச்சருக்கும், எனக்குமிடையே தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை சமூகம் என்ற ரீதியில், நான் சமூகத்துடன் இருக்க வேண்டும். இன்று வித்தியாலய அதிபர் பவானிக்கு நடக்கலாம். நாளை எமது சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கும் நடக்கலாம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

“தனக்கு ஏற்பட்ட அநீதிகளை அதிபர் அடக்கிவைத்துக் கொண்டிருந்துள்ளார். நான் வித்தியாலயத்துக்குச் சென்று அவரிடம் வினவியதும், என்மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையின் பயனாக அனைத்து விடயங்களையும், கண்ணீர் மல்கக் கூறினார்.

இதையடுத்து அதிபருக்கு அச்சுறுத்தல் ஏதும் இடம்பெறும் என்பதால், அவருக்கு, பாதுகாப்பை  வழங்கவும் ஏற்பாடு செய்தேன்” என்றார்.

“இந்தப் பாடசாலையில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மாணவிகளே கூடுதலாக கல்விப்பயிலுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்றார்.

“பாடசாலை அதிபர் ஒருவரையே முழங்காலிட வைத்த முதலமைச்சர், பாடசாலைகளின் ஆசிரியைகள், ஆசிரியர்கள் ஏன் மாணவிகளை எதுவேண்டுமானாலும் செய்யக்கூடும். ஆகையால் இந்த விவகாரத்துக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து, பாடசாலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்” என்றார்.

முதலமைச்சர் சாமர சம்பத் விளக்கம்

மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (21) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க,

“என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுப்பதற்கு நான் தயார். அதற்காக, என்மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் கல்விமைச்சை இராஜினாமா செய்கின்றேன்” என்றார்.

“மாகாண கல்வி அமைச்சராகிய எனது பெயருக்கு களங்கத்தை  ஏற்படுத்தியமை தொடர்பில், பதுளை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் மா அதிபரிடமும் முறையிட்டுள்ளேன்.  முறைப்பாடுகளையும், புகார்களையும்,  பக்கச் சார்பின்றி விசாரணை செய்வதற்கு வசதியாகவே இந்த அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்கின்றேன்” என்றார்.

“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய சம்பவம், எனது பெயருக்கும், எனது அரசியல் பயணத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், ரூபாய் 500 மில்லியன் கேட்டு, மானநட்ட வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.  

என்னுடைய இராஜினாமா  கடிதங்களை, ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கின்றேன்.

“மத்திய வங்கியில் ஏற்பட்ட மோசடியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளது. பிரதமர் பதவியில் அவர், தொடர்ந்தும் இருக்கமுடியாது. பிரதமர் பதவியை அவர் முதலில் துறக்கவேண்டும். அவ்வாறு பதவியை அவர் துறந்தார் என்றால், மறுநிமிடமே, ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை நான் இராஜினாமா செய்வேன்” என்றார்.

நாளை விசாரணை

இந்நிலையில், பதுளை பொலிஸ் நிலையத்தில் குழுமியிருந்த தன்னுடைய ஆதரவாளர்களின் மத்தியில் பேசிய, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்,  “பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிட வைத்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கல்வியமைச்சை மட்டும் இராஜினாமா செய்தமையானது,  ஒரு கண்துடைப்பு விடயமாகும். இந்த விவகாரத்துக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது செயற்பாடுகள் தொடரும்” என்றார்.

இதேவேளை, இந்த விவகாரம் குறித்து, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர  சம்பத் தஸநாயக்கவை விசாரணைக்குட்படுத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்று, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்” என்றார்.

அதிபரும் முறைப்பாடு

விவகாரம் பகிரங்கமாகி சூடுபிடித்ததையடுத்து, அந்த வித்தியாலயத்தின் அதிபர், ஆர்.பவானி, பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (21) முறைப்பாடு செய்துள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
‘வழக்குத் தாக்கல் செய்வேன்’

இவ் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த,  இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட அதிபர் சார்பாக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் காரியாலயத்தில் ஜனவரி 03 ஆம் திகதியன்று மண்டியிட வைத்த சம்பவமானது, ஒளிப்பதிவு செய்யப்பட்டு, ஊவா மாகாண சபையின், ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்தியாரத்னவின் ஊடாகவே அம்பலப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தனக்கு நேர்ந்ததை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திடம் (கபே) அதிபர் ஆர்.பவானி முறையிட்டுள்ளார்.

முழங்காலிடவைத்த விவகாரம் கடந்த 11 ஆம் திகதியன்று, அன்றைய ஊவா மாகாண சபையமர்வின் போது, எம்.சச்சிதானந்தன், சமந்த வித்தியாரட்ன ஆகியோர், முழங்காலிடவைத்த விவகாரம் தொடர்பில், முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுடன் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதனால், பெரும் அமளி, துமளி ஏற்பட்டதுடன் சபையமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

ஊவா மாகாண சபையை பொறுத்தவரையில், தமிழ் அமைச்சர் ஒருவர் உட்பட ஐந்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களுமாக எழுவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றனர். அப்படியிருந்தும் எவருமே கடந்த 10 தினங்களாக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பாடசாலை அதிபர் ஒருவரை முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணித்துள்ளார்.

இந்த விசாரணையை பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு ஊவா மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊவா மாகாண ஆளுநருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பதுளையில் பெரும் பதற்றம்

இந்நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காக, நேற்றுப் பிற்பகல் பதுளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, சம்பவம் இடம்பெற்ற இடத்தை சோதனைக்கு உட்படுத்துவதாகக் கூறி, ஊவா மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன்பின்னர், அந்த அதிபர் மனநலநோயால் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி, பதுளை பெரியாஸ்பத்திரியின் மனநல வைத்தியரிடம் காண்பிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அவரை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள், அதிபர் எவ்வாறான மனநலநோய்களாலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே, பற்றமான நிலைமை சற்று தணிந்தது.

இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சரின் இந்தச் செயற்பாடு, குற்றவியல் குற்றமாகுமென கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முழங்கால்-விவகாரத்தால்-பதுளை-சூடானது/150-210578

  • தொடங்கியவர்

பெண் அதிபரை முழந்தாளிட செய்த விவகாரம் : பிரதமர் முன்னிலையில் நாளை விசாரணை

 

 
 

பெண் அதிபரை முழந்தாளிட செய்த விவகாரம் : பிரதமர் முன்னிலையில் நாளை விசாரணை

பதுளை தமிழ் மகளிர் மாகா வித்தியாலய பெண் அதிபரை முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் விசேட விசாரணை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முதலமைச்சர் தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)

http://www.samakalam.com/செய்திகள்/பெண்-அதிபரை-முழந்தாளிட-ச-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.