Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட இ-மெயில்கள் உருவாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசேட இ-மெயில்கள் உருவாக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவுக்கு செயல் வடிவம் கொடுக்க இந்த பதிவை எழுதுகின்றேன்.

எங்கள் முதலாவது இ-மெயில் ஆக என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, எமது யாழ்கள நண்பர் வானவில் எழுதிய

“இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.”

என்ற கூற்றுக்கள் ஞாபகத்துக்கு வந்தது.

இதன் மூலம் நான் விளங்கிக்கொண்டது, விளங்குபவர்களுக்கு விஷயம் ஒரு நொடியில் விளங்கி விடுகிறது (வானவில் இணைந்து ஒரு மாதம் கூட இல்லை). சிலருக்கு எவ்வளவு தான் சொன்னாலும் அது புரிய மாட்டேங்கிறது.

மேலும், யாழ் களத்தில் தொடங்கப்படும் பல விதமான (தேசியத்தைப் பலப்படுத்தக் கூடிய) வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவு குறைவாகவே காணப்படுகிறது. இந்த வேளையில் பலர் முன்வந்து உதவியதையும் இன்னும் பலர் வழிகாட்டிகளாக இருப்பதையும், மேலும் பலர் தாமாகவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இந்த வேளையில் தான் ஒரு புது ஐடியா தோன்றியது. அதாவது, இன்னும் யாழ்களத்தில் இணையாமல் இருக்கும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களை யாழில் இணையுமாறு கோரினால் என்ன? இதே போலவே இங்கும் பலருக்கு நண்பர்கள் இருப்பார்கள். எனவே இவர்களை அழைக்க நான் ஒரு இ-மெயிலை உருவாக்க எண்ணினேன். அந்த இ-மெயிலில் யாழ் களத்தில் இணைவதால் அவர்களுக்கும் தேசத்துக்கும் ஏற்படும் நன்மைகளை இரத்தினச் சுருக்கமாகக் கூறி அழைப்பு விடுக்க வேண்டும்.

நான் தயாரித்த இ-மெயிலை கீழே இணைக்கிறேன். இந்த இ-மெயிலை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என கூறுங்கள்.

நான் இந்த இ-மெயிலை குறந்த பட்சம் எனது 50 நண்பர்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்தால் கட்டாயம் பலன் கிடைக்கும். யாழின் தற்போதைய அங்கத்தவர் எண்ணிக்கை சரியாக 3500. இதை நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்தால் விரைவில் யாழின் அங்கத்தவர் எண்ணிக்கையை 5,000 ஆகவும் பின்னர் 10, 000 ஆகவும் மாற்ற முடியும்.

எனது சில நண்பர்கள் நான் சொன்னதற்காகவே அதை செய்ய மாட்டார்கள். அப்படி ஒரு மதிப்பு எனக்கு :lol: இவர்களுக்கு நான் ஒரு அனாமதேய இ-மெயில் மூலம் அனுப்ப எண்ணியுள்ளேன். அதற்காக ஒரு யாஹூ இ-மெயிலை உருவாக்கினேன். அதன் விபரங்களை கீழே தருகிறேன். நீங்களும் விரும்பினால் இதனை பாவித்து இ-மெயில் அனுப்புங்கள். மேலும், ஒவ்வொரு தடவையும் அனுப்பிய பின் உங்கள் செய்திகளை sent box இல் சென்று அழித்து விடுங்கள். வேறு யாராவது நுழையும்போது e-mail address களை பார்க்கக்கூடாது அல்லவா.

User id : kanthappusinnappu@yahoo.com

Paasword : iruppaaithamizaaneruppaai

வணக்கம் நண்பரே,

நாளும் பொழுதும் தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை ஒரு தமிழராக நீங்கள் ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். ஊடகங்களில் துண்டு துண்டாக வரும் செய்திகளை வாசிப்பதால் வெறும் குழப்பமே மிஞ்சுகிறது.

இதனால், இன்றைய நிலவரங்கள் தொடர்பாக எங்கள் மனதில் எழும் சஞ்சலங்கள் தவிர்க்க முடியாதனவே.

போரினால் நாளும் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் அவதியுறும் மக்களைக் காக்க நாம் ஆற்றவேண்டியவை தான் என்ன?

இந்தக் கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் இருந்தாலும் இன்றைய கடுகதி வாழ்க்கையில் எம்மால் என்ன தான் செய்துவிட முடியும் என்ற சலிப்பே எம்மில் பலரிடம் மிஞ்சி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இது தான் விடை என்று தெரிந்திருந்தால் அதை இந்த மின்னஞ்சலில் எழுதி இருப்போம். அப்படி ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், இன்றைய தாயக நிலவரங்களை நாங்கள் சரியாக அறிந்து வைத்திருப்பதனாலும் எம்மால் முடிந்த அளவுக்கு அவற்றை மற்றவர்களுக்குத் தெளிவிப்பதனாலும் தான் இந்தக் கேள்விக்கான பதிலை அடையமுடியும் என்பது மட்டும் உண்மை.

இந்த நிலையில், வெறும் கணனி விசைப்பலகையைத் தட்டுவதன் மூலமே உங்கள் போன்ற வேறும்பல தமிழ் அறிஞர்களுடன் கலந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் தொன்மை வாய்ந்த இசைக்கருவியான யாழின் பெயரிலுள்ள கருத்துக்களத்தில் கீழே உள்ள இணைப்பில் சென்று இணையுங்கள்.

http://www.yarl.com/forum3/

இங்கு தமிழில் எழுதுவது மிகவும் சுலபம். நீங்கள் வேறு எந்த மென்பொருளையும் பாவிக்கத் தேவையில்லை. எவ்வாறு இங்கு தமிழில் எழுதுவது என்று அறிய இந்த இணைப்புக்குச் சென்று அறியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

தமிழில் நீங்கள் தட்டச்சு செய்வதும் மிகச்சுலபம். ஆங்கில உச்சரிப்பையே தட்டச்சு செய்தால் போதுமானது. உதாரணமாக, அம்மா என்று எழுத amma என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள யாழ் குடும்பம் ஆவலாக உள்ளது.

ஏற்கனவே நடைபெறும் ஆக்கபூர்வமான விவாதங்களைப் பார்வையிட இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20565

இந்த மின்னஞ்சலை உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

நன்றி.

இருப்போம் தமிழா நெருப்பாய்

இருந்தது போது இதுவரை செருப்பாய்

இருப்போம் தமிழா நெருப்பாய்

Dear friend,

Did you know that there is a discussion forum entirely in Tamil?

This forum is a great opportunity to discuss current issues in Tamil, to get information on a variety of other topics related to Tamil eelam, and to publish your writings.

Please visit us at:

http://www.yarl.com/forum3/

Thank you.

இந்த இ-மெயிலை எவ்வாறு இன்னும் கவர்ச்சியாக்கலாம் என கருத்துத் தெரிவியுங்கள்.

Edited by பண்டிதர்

புலம்பெயர்ந்தவர்கள் உணர வேண்டிய விடையங்கள்

-1- எமது போராட்டத்தின் இன்றய உண்மை நிலை அதன் சவால்கள் எதிர்கால சவால்கள்

தமிழீழத்தின் நீண்ட கால இருப்பிற்கு ஏற்ற சர்வதேச கருத்தியல் தளத்தை உருவாக்குதல்

-2- தமிழீழத்தின் எதிர்காலப் பொருளாதார தேவைகள் எந்த வடிவில் எந்த அளவுகளில் தேவைப்படும் அதை புலம்பெயர்ந்தவர்களால் எப்படி திரட்ட முடியும்

-3- நாம் ஒரு தேசியமாக எமது பொருளாதார தொழிநுட்பு அரசியல் இராணு பலத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவை. அதற்கா பயணிக்க இன்னமும் உள்ள நீண்ட தூரம்.

-4- தேசிய விடுதலைப் போராட்டத்தின் பலமான புலம்பெயர்ந்தவர்கள் நோக்கிய எதிர்த்த தரப்புகளின் (சிறீலங்கா, சர்வதேச சக்த்திகள் மற்றும் தவறான வெளியுறுவ கொள்கையில் உள்ள இந்தியத் தரப்பு) விசமபிரச்சாரங்கள் சதிகள்

-5- இவை எல்லா வற்றிலும் புலம்பெயர்ந்த ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள்.

"கடுமையாக பயிற்சி செய் இலகுவாக சண்டை செய" என்ற அண்ணையின் கொள்கை போல் நாமும் கடுமையான சவால்கள் நிலைப்பாடுகள் போன்றவற்றை எதிர் கொள்ள தயாராவது தான் அவற்றில் ஒரு பகுதியாவது நிஜமாக வரும் பொழுது நிலைகுலையாது இலகுவாக வெற்றி கொண்டு அடுத்த படி நிலைக்கு செல்லாம். ஆனால் எமது ஊடகங்கள் செய்வதோ நேர் எதிர்மாறானது. அதற்கு அவர்கள் தரும் நியாயம் மக்கள் மனம் தளராது இருக்க ஊக்குவிப்பு தேவையாம் இல்லாவிட்டால் தேசியத்தை கைவிட்டுவிட்டு ஓடிவிடுவார்களாம். அதாவது எடுத்ததுக் எல்லாம் (வாகரை போட்டுது மூதூர் போட்டுது கதிரவெளி போட்டுது என்று) ஒப்பாரி வைப்பவர்களிற்கு தூக்கிவைத்து கண்ணீரை ஒத்தி பட்டிணிப் பண்டங்களும் சோம பானங்களும் கொடுக்கிறார்கள். இது குறுகிய நோக்கில் அவர்களை தெம்பாக்கி அடுத்த ஒப்பாரிக்கு இன்னும் சத்தமாக ஓலமிடத்தான் உதவுகிறதே தவிர வேறு ஒன்றுக்கும் அல்ல.

இந்த கொள்கையின் நடுத்தர மற்றும் நீண்ட கால பாதிப்புகள் என்ன?

இவற்றை தேசியத்தை நேசிப்பவர்கள் அதில் நம்பிக்கை கொண்ட எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

பண்டிதர்.

அருமையான நல்ல யோசனை. நானும் 60-70 பேருக்கு அனுப்புகிறேன். 100 ஐ எட்ட முயற்சி செய்கிறேன்.

மின்-அஞ்சலில் அனுப்பவேண்டிய செய்தியை ஆராய்ந்தேன்.

சிறு குறிப்பு:

மின் அஞ்சலில் வணக்கம் நண்பரே, என்று அழைப்பதற்குப் பதிலாக ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான

சொல்லை அல்லது சொற்களைப் பயன்படுத்தினால் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

மற்றும்படி யாவும் கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னஞ்சல் முகவரியை இது போல திறந்து கடவுச்சொல்லையும் publicஇல் போடுவது அவ்வளவாக புத்திசாலிதனம்போல் எனக்கு தெரியவில்லை.. இதை வேண்டாதவர்கள் பிழையாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது..

உதாரணத்திற்கு வேண்டாத தகவல்களை அனுப்புவது.. கடவுச்சொல்லை வம்புக்கு மாற்றுவது போல இன்னும் பல..

இலகுவான வழி: மோகன் அண்ணாவை தொடர்புகொண்டு ஏதாவது Site recommendation script ஐ உதாரணத்திற்கு PHP இல் உருவாக்கி அதன்மூலம் அனுப்புவது சிறந்தது.. பாதுகாப்பானது.. பக்க விளைவுகள் அற்றது.. ;)

இன்னும் சிறப்பாக மோகன் அண்ணா செய்ய விரும்பினால் பின்வரும் முகவரியில் உள்ள Script மிக விசேடம்..

http://svetlozar.net/page/Import-Contacts-...g-PHP-cURL.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு பதியப்பட்ட கருத்துக்களை ஏற்று இ-மெயிலில் மாற்றமும் மற்றும் அனுப்பும் முறை பற்றியும் ஆராய்ந்து விரைவில் மீண்டும் எழுதுவேன்.

Edited by பண்டிதர்

முக்கியமாக இந்த அஞ்சல்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். என்னாலும் ஒரு நூறு மாணவர்களை திரட்ட முடியும். ஆனால் இங்கு முக்கியமாக தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்ற விளக்கமும் அளிக்கப்படவேண்டும். பெரும்பாலானோர் இதை ஒரு சிக்கலான விடயமாக நினைக்கிறார்கள். எனவே இலகுவாக தமிழில் எழுதுவதற்கு விளக்கமும் ஈ மெயிலில் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் கூடுதலானவர்கள் யாழ் களத்திற்கு வந்து கருத்து எழுதுவார்கள்.

நான் கூட சுமார் மூன்று அரை வருடங்களாக யாழ் களத்தை பார்வையிட்டு வந்தாலும், சில மாதங்களின் முன்பே உறுப்பினராக இணைந்ததற்கான காரணம் எனக்கு ஆரம்பத்தில் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரிந்திருக்கவில்லை. இதற்கு தமிழ் தட்டச்சு பலகை வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்போதுதான் யாழ் களத்திலேயே ஆங்கிலோதமிழ் மூலம் இலகுவாக தமிழில் எழுத முடியும் என அறிந்துகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். ஆனால் இதனை ஏன் நீங்கள் கதைகள் நாடகங்கள் பகுதியில் இணைத்துள்ளீர்கள்?

இன்னொரு முக்கிய விடயம் ஈ மெயில் தமிழ் யுனிக் கோர்ட் முறையைப் பயன்யடுத்தி அனுப்பும் போது கூட பலரது கணணி மூலம் அச்செய்தியை தமிழில் வாசிக்க முடிவதில்லை. எனவே இச்செய்தியை அனுப்பும் போது அதை ஒரு படமாக - JPEG File - அனுப்பவேண்டும். அப்போதுதான் அதை அனைவராலும் - அனைத்து கணணிகளாலும் அச் செய்தியை தமிழில் வாசித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உருவாக்கலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னஞ்சலை இவ்வாறு மாற்றி எழுதியுள்ளேன். கருத்துத் தெரிவிக்கவும்.

வணக்கம் நண்பரே,

நாளும் பொழுதும் தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை ஒரு தமிழராக நீங்கள் ஊடகங்களின் மூலமாக அறிந்து கொண்டிருப்பீர்கள். ஊடகங்களில் துண்டு துண்டாக வரும் செய்திகளை வாசிப்பதால் வெறும் குழப்பமே மிஞ்சுகிறது.

இதனால், இன்றைய நிலவரங்கள் தொடர்பாக எங்கள் மனதில் எழும் சஞ்சலங்கள் தவிர்க்க முடியாதனவே.

போரினால் நாளும் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் அவதியுறும் மக்களைக் காக்க நாம் ஆற்றவேண்டியவை தான் என்ன?

இந்தக் கேள்வி ஒவ்வொரு தமிழன் மனதிலும் இருந்தாலும் இன்றைய கடுகதி வாழ்க்கையில் எம்மால் என்ன தான் செய்துவிட முடியும் என்ற சலிப்பே எம்மில் பலரிடம் மிஞ்சி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு இது தான் விடை என்று தெரிந்திருந்தால் அதை இந்த மின்னஞ்சலில் எழுதி இருப்போம். அப்படி ஒரு விடை இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், இன்றைய தாயக நிலவரங்களை நாங்கள் சரியாக அறிந்து வைத்திருப்பதனாலும் எம்மால் முடிந்த அளவுக்கு அவற்றை மற்றவர்களுக்குத் தெளிவிப்பதனாலும் தான் இந்தக் கேள்விக்கான பதிலை அடையமுடியும் என்பது மட்டும் உண்மை.

இந்த நிலையில், வெறும் கணனி விசைப்பலகையைத் தட்டுவதன் மூலமே உங்கள் போன்ற வேறும்பல தமிழ் அறிஞர்களுடன் கலந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் தொன்மை வாய்ந்த இசைக்கருவியான யாழின் பெயரிலுள்ள கருத்துக்களத்தில் கீழே உள்ள இணைப்பில் சென்று இணையுங்கள்.

http://www.yarl.com/forum3/

இங்கு தமிழில் எழுதுவது மிகவும் சுலபம். நீங்கள் வேறு எந்த மென்பொருளையும் பாவிக்கத் தேவையில்லை. எவ்வாறு இங்கு தமிழில் எழுதுவது என்று அறிய இந்த இணைப்புக்குச் சென்று அறியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

தமிழில் நீங்கள் தட்டச்சு செய்வதும் மிகச்சுலபம். ஆங்கில உச்சரிப்பையே தட்டச்சு செய்தால் போதுமானது. உதாரணமாக, அம்மா என்று எழுத amma என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள யாழ் குடும்பம் ஆவலாக உள்ளது.

ஏற்கனவே நடைபெறும் ஆக்கபூர்வமான விவாதங்களைப் பார்வையிட இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20565

இந்த மின்னஞ்சலை உங்கள் தமிழ் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

நன்றி.

இருப்போம் தமிழா நெருப்பாய்

இருந்தது போது இதுவரை செருப்பாய்

இருப்போம் தமிழா நெருப்பாய்

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு முக்கிய விடயம் ஈ மெயில் தமிழ் யுனிக் கோர்ட் முறையைப் பயன்யடுத்தி அனுப்பும் போது கூட பலரது கணணி மூலம் அச்செய்தியை தமிழில் வாசிக்க முடிவதில்லை. எனவே இச்செய்தியை அனுப்பும் போது அதை ஒரு படமாக - JPEG File - அனுப்பவேண்டும். அப்போதுதான் அதை அனைவராலும் - அனைத்து கணணிகளாலும் அச் செய்தியை தமிழில் வாசித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உருவாக்கலாம்!

இது நல்ல ஐடியா. மின்னஞ்சலின் இறுதி வடிவம் எட்டப்பட்டதும் அவ்வாறு செய்வோம்.

நல்ல விடயம். ஆனால் இதனை ஏன் நீங்கள் கதைகள் நாடகங்கள் பகுதியில் இணைத்துள்ளீர்கள்?

வேறு எங்கு போடுவது? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமாக இந்த அஞ்சல்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் அனுப்ப பின்வரும் மூன்று படிநிலைகளையும் கைக்கொள்ள வேண்டும்.

  1. வெளிநாட்டில் தற்போது படிக்கும் மாணவர்களும் வெளிநாட்டில் படித்த பழைய மாணவர்களும்: அனேகமான பெரிய பல்கலைகழகங்களில் (முக்கியமாக UK, கனடா, அவுஸ்திரேலியா) படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ் மாணவர் சங்கம் இருக்கும். இதன் தலைவர்/நிர்வாகிகளை அணுகினால் இலகுவில் அந்தப் பல்கலைகழகத்தில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் இந்த மின்னஞ்சல் போகுமாறு செய்யலாம். மேலும், அவர்களின் தமிழ் சங்கத்தினால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்கு அந்த மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பர். ஒவ்வொரு பல்கலைகழகத்திற்குமான தொடர்பு மின்னஞ்சல் முகவரிகளை நாம் சேர்த்து நிர்வாகத்தின் உதவியுடன் ஒரு formal மின்னஞ்சல் அனுப்பும் போது அதிக பயன் கிடைக்கும்.
  2. சிறீலங்காவில் படித்து புலம்பெயர்ந்த மாணவர்கள் நாடுரீதியாக: ஒவ்வொரு வெளிநாட்டிலும் சிறிலங்காவில் படித்த பழைய மாணவர்கள் அந்தந்த பல்கலைக்கழகத்தின் சார்பாக ஒரு பழைய மாணவர் சங்கம் நடத்துகிறார்கள். (உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு கனடாவில் தற்போது வசிக்கும் எல்லா தமிழ் மாணவர் சார்பாகவும் ஒரு அமைப்பு இருக்கும்). இவர்களிடையே பொதுவாக யாஹூ குறூப் தொடர்பு இருக்கும். இந்த அமைப்பில் அங்கத்தவராக இருக்கும் ஒருவரினால் எல்லாருக்கும் மின்னஞ்சலை குறூப் இ-மெயிலாக அனுப்ப முடியும்.
  3. சிறீலங்காவில் படித்து புலம்பெயர்ந்த மாணவர்கள் அவர்களின் academic year/batch ரீதியாக: இனி ஒவ்வொரு இலங்கைப் பல்கலைக்கழக தமிழ் (பழைய) மாணவர்களும் தமது batch சார்பாக ஒரு yahoo group வைத்திருப்பார்கள். இதிலும் அங்கத்தவராக இருக்கும் ஒருவர் எல்லா அங்கத்தவரும் பெறும் படியாக மின்னஞ்சல் அனுப்ப முடியும். மேலே 2) இல் தவறியவர்களுக்கு இதன்மூலமாக கட்டாயம் மின்னஞ்சல் செல்லும்.
மேற்கூறிய மூன்று வகையினர் சார்பாகவும் யாழில் அங்கத்தவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் உதவ முன் வந்தால் இந்த வேலையை மிகப் பிரயோசனமுள்ளதாக மாற்ற முடியும். இதில் உள்ள ஒரு சிறிய பிரச்சனை என்ன வென்றால் அனேகமானவர்கள் இங்கு அனாமதேயமாக இருக்கவே விருமபுகின்றனர். அவர்களின் அந்த உணர்வை மதித்து, எவ்வாறு இந்த தகவல்களை திரட்டி இந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பதே இங்குள்ள முக்கிய கேள்வி.

யாராவது இதற்கு நல்லதாக ஒரு தீர்வு சொல்லுங்கள்.

மேலும், மின்னஞ்சலை மாற்றி எழுதியுள்ளேன். பார்வையிட்டு கருத்துத் தெரிவியுங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=272077

Edited by பண்டிதர்

hi5, friendster,tagged போன்றவற்ரினூடாகவும் முயற்ச்சிக்கலாம்

பண்டிதர், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆனால் ஈமெயில் விபரங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது ஆபத்தானது. உதாரணமாக இந்த முகவரியைப் பாவித்து விஷமிகள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். அல்லது ஈமெயில் முகவரியயே மூடிவிடவோ அல்லது பாஸ்வேட்டை மாற்றிவிடவோ முடியும்.

விரைந்து நடவடிக்கை எடுப்பீர்களா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர், உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆனால் ஈமெயில் விபரங்களை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது ஆபத்தானது. உதாரணமாக இந்த முகவரியைப் பாவித்து விஷமிகள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். அல்லது ஈமெயில் முகவரியயே மூடிவிடவோ அல்லது பாஸ்வேட்டை மாற்றிவிடவோ முடியும்.

விரைந்து நடவடிக்கை எடுப்பீர்களா ?

மாற்றினால் மாற்றட்டும். இதற்காக மட்டுமே உருவாக்கிய இ-மெயில் தான் அது. வேறு என்னவிதமாக பாதுகாப்பாக செய்யலாம் என ஆலோசித்து வருகிறேன். நிர்வாகத்தின் உதவியும் கேட்கவுள்ளேன். பார்ப்போம்.

பண்டிதர்.

அருமையான நல்ல யோசனை. நானும் 60-70 பேருக்கு அனுப்புகிறேன். 100 ஐ எட்ட முயற்சி செய்கிறேன்.

மின்-அஞ்சலில் அனுப்பவேண்டிய செய்தியை ஆராய்ந்தேன்.

சிறு குறிப்பு:

மின் அஞ்சலில் வணக்கம் நண்பரே, என்று அழைப்பதற்குப் பதிலாக ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான

சொல்லை அல்லது சொற்களைப் பயன்படுத்தினால் நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

மற்றும்படி யாவும் கச்சிதமாக செய்திருக்கிறீர்கள்.

நண்பரே என்பது ஆண்/பெண் இருவருக்கும் பொதுவானது அல்லவா? :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்படியான உணர்வைக் கொண்டிருப்பது பெருமிதமளிக்கின்றது. இது தொய்ந்து போகாமல் தொடர்ந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.

மின்னஞ்சல்கள் என்பன, நமக்குத் தெரிந்தவர்களுடாகவே பாவிக்கப்படுகின்றது.

அவ்வாறே ஹாய்5, http://www.tagged.com போன்ற தளங்களில் இந்தியர்கள் உற்பட நிறையத் தமிழர்கள், இருக்கின்றார்கள். அவர்களுககும் தமிழீழம் பற்றிய தகவல்களை அனுப்பலாம். அல்லது யாழ் போன்ற தளங்களில் கட்டுரைகளை எழுதி விட்டு, அவர்களுக்கு அந்த இணைப்பை அனுப்பி வைத்தும் பிரச்சாரப்படுத்தலாம்.

ஆமாம் இது மிக இலகுவானதும், சிறப்பாகவும் செய்யக்கூடியது, சாதரனமாக ஒவ்வொருவரும் பாவிப்பது மற்றும் அதிகமான நண்பர்களை வைத்திருப்பார்கள்

  • 3 years later...

வரவேற்கத்தக்க போராட்டங்கள் தான்... ஆனால் ஏன் இன்னமும் இந்த தளங்களில் இயங்கமுடியவில்லை? அல்லது ஏன் இன்னமும் தாமதிக்கின்றீர்கள்? இதுதான் இப்போதைய காலத்தில் தேவையான போராட்ட முறையும் கூட.... யார் முன்வந்து செய்யப்போகின்றீர்கள்? நான் இந்தத் திட்டங்களில் பங்களிக்க தயாராக தாராள மனத்துடன் இருக்கின்றேன். வேறு யார் இந்த செயற்திட்டங்களை முன்வந்து செய்யப்போகின்றீர்களோ செய்யுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.