Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர்

Featured Replies

தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர்

தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தேசியத்தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும்.

மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்மஸ் சிறீ போன்ற அரசு விருதுகள் போல ஈழத்தில் விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும்

இதேபோலவே நாட்டுப்பற்றாளர் என்ற விருதும் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த பத்திரிகையாளர் நடேசன் தில்லைக்கூத்தன் நடராசா ஆகியோரும் தேசியத்தலைவரால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களாவர். முன்னாள் ஈழநாடு ஆசிரியர் கோபு எனப்படும் கோபாலரட்ணம் போன்றோருக்கு தலைவர் பிரபாகரனின் கௌரவ விருது வழங்கப்பட்டது

மூலம்

தகவலுக்கு நன்றி....

  • தொடங்கியவர்

மாமனிதர் ஜாஞானரதன்

ஞானதரன் அண்ணன் என அனைவரும் அன்போடு அழைக்கும் வை. சச்சிதானந்தசிவம் ஒரு நல்ல மனிதர். நெஞ்சத்தில் நேர்மையும் உள்ளத்தில் உயர்ந்த எண்ணமும் கொண்டவர். எளிமை அவரோடு கூடப்பிறந்தது. அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்.

அனைவரையும் கவர்ந்து கொண்ட உயரிய பண்பாளர்.

இவர் ஒரு தேச பக்தன். எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்தார். எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழவேண்டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என இதயத் துடியாய்த் துடித்தார். தேசப்பற்று அவரை போராட்டத்தோடு இறுகப் பிணைத்தது. மக்களோடும், போராளிகளோடு இணைந்து நின்று தாய விடுதலைப் போரில் பெரும் பழுக்களைத் தாமும் சுமந்து கொண்டார்.

f_gnanarathanm_afef12f.jpg

நீண்டகாலமாக எமது விடுதலை இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு பெரும் பொறுப்புக்களில் சுமந்து தாமும் முதுமைக் காலத்திலும் உறுதியோடு உழைத்தார் தனது அறிவாற்றலினாலும், கடும் உழைப்பாலும், தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியபணி என்றுமே பாராட்டுக்குரியது. இவர் தமிழீழ மண் தந்த தலை சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளி, சிறந்த ஒரு அரசியல் சிந்தனையாளர், சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தினார்.

பத்திரிகைகளிலும், சஞ்சிகைளிலும் ஓய்வில்லாது எழுதினார். எமது மக்களிடத்தில் விடுதலை உணர்வையும், தேசப்பற்றையும் தட்டி எழுப்பினார். சிங்கள இனவாத அரசின் பொய்யான பரப்புரைக்கு சாட்டையடி கொடுத்து எமது தேசத்தில் உண்மை நிலையை உலகுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இவர் எமது விடுதலை இயக்கம் ஒளிப்படத்துறையில் இன்று நிகழ்த்தியுள்ள பெரும் பாய்ச்சலுக்கு நடு நாயமாக நின்று செயற்பட்டார். நிதர்சன நிறுவனம் தோன்றிய காலம் முதல் இதுவரை அதன் வேராகவும், விழுதாகவும் அதனைத் தாங்கி நின்று செயற்பட்டார். எமது விடுதலைப் போராளிகளை ஒளிப்படத்துறையில் பயிற்றுவித்து அவர்களைச் சிறப்பாக வழிப்படுத்தி நெறிப்படுத்தி, ஒரு தேசிய தொலைக் காட்சியை உலகம் பூராகப் பரப்புகின்ற அளவுக்கு வளர்த்தெடுப்பதில் அச்சாணியாக இருந்து செயற்பட்டார்.

சிறிய குறும்படம் முதல் முழுநீளத் திரைப்படம் வரை பல்வேறு ஒளிப்பேழைகளை ஞானதரன் என்ற பேரில் தயாரித்து நெறிப்படுத்தினார். இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து எமது விடுதலை இயக்கம் களத்திலே படைத்த சாதனைகளையும், குவித்த வெற்றிகளையும் ஒளிவீச்சு சஞ்சிகைகளாகவும், விபரணங்களாகவும், தயாரித்து அவற்றை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்த உதவினார். இவர் ஆரவாரம் இன்றி அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி அளப்பெரியது.

வை.சச்சிதானந்தசிவம் அவர்களின் இனப்பற்றுக்கும், விடுதலைக்கும் மதிப்பளித்து அவரது நற்பணிகளை கௌரவிக்கும் நினைவாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.

சுய வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து தேச விடுதலை என்னும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் நீங்காத நினைவுகளாக காலமெல்லம் நிலைத்திருப்பார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

வே.பிரபாகரன்

தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள்

Related links

LTTE confers Maamanithar award to stalwart at Niedharsanam 26/01/2006

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16951

  • தொடங்கியவர்

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழீழ தேசம் இழந்துவிட்டது. தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர், அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சிறந்த மனித உரிமைப் போராளி. அனைவரையும் கவர்ந்த ஒரு தமிழினப் பற்றாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த அடக்குமுறையில் இருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று சுதந்திரமாக கௌரவமாக நிம்மதியாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரிந்து கொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப் பெற்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்து உதவினார். மட்டக்களப்பு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவுனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து உழைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றுமே பாராட்டுக்குரியவை.

திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியை கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகனாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர் என்றும் வாழ்வார்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இப்படிக்கு

வே. பிரபாகரன்

தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்.

Related news link

Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church 25 /12/ 2005

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16629

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!

[ஞாயிற்றுக்கிழமை, 25 டிசெம்பர் 2005, 01:41 ஈழம்]

http://www.eelampage.com/?cn=22812

  • தொடங்கியவர்

மாமனிதர் தர்மரட்ணம் சிவராம்

தமிழ்மக்களின் போராட்ட நியாயப்பாடுகளை உலகெங்கும் ஓங்கி ஒலித்த ஊடகவியலாளர் சிவராமுக்கு விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழங்கி கௌரவித்திருக்கிறார். ஊடகப்பணியிலிருந்து அவர் ஆற்றிய தேசியப்பணிக்கு தமிழ்மக்களின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் விடிவுக்காக இளம் பராயத்திலேயே போராடப்புறப்பட்ட சிவாராம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமையே தமிழ்மக்களின் போராட்டத்துக்கு சரியானது என்ற கொள்கையுடன் தமிழ்த்தேசியப் போராட்டத்தை ஊடகத்துறை ஊடாக மக்களுக்கு விளக்கினார்.

f_01m_fde4c5d.jpg

ஈழப் போராட்டத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எழுத்துக்களால் எதிர்த்தார். மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கும் விடிவுக்கும் விடுதலைக்கும் அரும்பாடுபட்டார். சர்வதேச அரங்கிலும் சாமர்த்தியமாக இச் செயற்பாட்டை சாமர்த்தியமாக மேற்கொண்டுவந்தார். அவரது இப்பணியை போராட்டத்தை கௌரவித்த அவருக்கு விடுதலைப்புலிகளால் இவ்வுயரிய விருது வழங்கப்பட்டுள்ளது

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே போன்றுதான் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் மாமனிதர் என்ற அந்த உயரிய விருதை பெற்றவர்..

  • கருத்துக்கள உறவுகள்

good :icon_mrgreen:

  • தொடங்கியவர்

அதே போன்றுதான் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் மாமனிதர் என்ற அந்த உயரிய விருதை பெற்றவர்..

மாமனிதர் காசி ஆனந்தன்

மட்டக்களப்பை சொந்த இடமாகக்கொண்ட காசி ஆனந்தன் ஈழத்துக் எழுச்சி கவிஞராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் செய்து சிறை சென்றவர். வாகன இலக்கத்தகடுகளிலேயே சிங்கள எழுத்துக்கள் இருக்கக்கூடாது என்று அவற்றை அகற்றும் போராட்டத்திலும் பாடசாலை பெயர்ப்பலகைகளில் சிங்கள மொழி இருக்கக்கூடாது என்றும் போராட்டம் செய்து பொலிஸாரால் கைதாகி சிறையில் சித்திரவதை அனுபவித்தவர்.

பின்னர் இந்தியா சென்று அங்கு பெரியாருடன் இணைந்து செயற்பட்டு பின்னர் இலங்கை வந்து ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு துணை நின்றார். அப்போது இவரது செயற்பாடுகளால் வெறுப்படைந்த சிறீலங்கா பொலிஸார் இவரை கைது செய்தனர். இவர் சிறீPலங்காவிலுள்ள ஐந்து சிறைகளில் சுமார் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

f_kasianantham_ca5ffa2.jpg

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான காலப்பகுதியில் பேச்சுக்களுக்காக விடுதலைப்புலிகள் இந்தியா சென்றபோது காசியும் இந்தியா சென்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் விவகாரக்குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்காலப்பகுதியில் இந்தியாவில் ராஜீவ் அரசுடனான பேச்சுக்குழுவில் விடுதலைப்புலிகள் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக காசி சென்றார்.

பின்னர் தமிழகத்திலேயே தங்கிவிட்ட காசி ஆனந்தன் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அங்கு குரல் கொடுத்தவண்ணமுள்ளார். ஈழப்போராட்ட காலத்தின் இக்கட்டான காலப்பகுதிகளில் தோளோடு தோள் நின்ற இந்த எழுச்சிக்கவிஞனுக்கு தேசியத்தலைவர் பிரபாகரன் மாமனிதர் விருது வழங்கினார்.ாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்மஸ் சிறீ போன்ற அரசு விருதுகள் போல ஈழத்தில் விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மாமனிதர் குமார் பொன்னம்பலம்

f_kumarponnamm_eb04420.jpg

குமார் பொன்னம்பலம் அவர்கள் ஒரு பிரபல சட்டமேதையாக தன் வாழ்க்கையை நடத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவவாக கொழும்பிலிருந்து அரசுடன் மோதியவர்.

நாடாளுமன்ற பதவிகளுக்காக தமது கொள்கைகளை விற்று அரசியல் நடத்தும் தலைநகரின் அரசியல் பாரம்பரியத்துக்கு மத்தியில் ஒரு தனிமனிதனாக நின்று போராடியவர். அவர் ஒரு போராளியாகவே அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவோ இல்லாத போதும் தமிழ்மக்களின் பிரச்சினையை பேச தனக்கு தானே துணை என்ற துணிவுடன் சாதித்தவர்.

இலங்கையில் மட்டுமல்ல ஐ.நா. சபையிலேயே ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவர். இவரது கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் இவரை துப்பாக்கிக்கு இரையாக்கினர். சிவராமைப்போலவே தனக்கு முடிவு இதுதான் என்று தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு சிங்கத்துடன் சவாலிட்டு சாகும்வரை தமிழனுக்காக தமிழனின் உரிமைக்காக தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளுக்காக குரல் கொடுத்து மடிந்தவர்.

சந்திரிக்கா அரசின் தமிழின அழிப்பு கொள்கையை அம்பலப்படுத்தி மனித உருமைவாதியும் சட்டத்தரணியுமான திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் பொழும்பில் சந்திரிகா அரசின் பொலையாளிகளினால் 05.01.2000 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்

சிங்களத்தின் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவல் விடுத்து, ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்து போராடியவர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள். இவரது இனப்பற்றிற்க்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து. அவரது நற்பணியை கொளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது..

  • தொடங்கியவர்

மாமனிதர்அரியநாயகம் சந்திரநேரு

f_ariyanayagam_083dd0f.jpg

வடக்கு கிழக்கில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட செயல்வீரர் அரியநாயகம் சந்திரநேரு. வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக உறுப்பினரான இவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களுடன் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படவேண்டும். சிறீலங்கா படைகளால் சிறைப்படுத்தப்பட்டுள்ள அப்பாவி தமிழ்மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பேச்சு நடத்தினார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து அயராது சமூகசேவை ஆற்றியவர். இவர் வன்னியிலுள்ள வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தின் கூட்டத்துக்கு சென்றுவிட்டு அம்பாறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யனுடன் பொலநறுவ வெலிக்கந்தையில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.