Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்... மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்

Featured Replies

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்... மருத்துவமனையில் டிரம்ப் மருமகள்

வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிரம்ப் மருமகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அவரது மனைவி வனிசா திறந்து பார்த்துள்ளார். அதில் சந்தேகத்திற்குரிய வகையில் வெள்ளை பவுடர் இருந்துள்ளது.

விஷத்தன்மை இருக்கலாம் என்று சந்தேகித்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

கடிதம்வந்த போது வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்..

பாதிப்பு இல்லை

பிபிசியிடம் பேசிய நியூயார்க் காவல் துறை அதிகாரிகள், நாங்கள் அந்த வெள்ளை பவுடரை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் விஷத்தன்மை எதுவும் இல்லை என்றனர்

மேலும் அவர்கள், ஜூனியர் டிரம்பின் மனைவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஜூனியர் டிரம்ப் குடும்பம்படத்தின் காப்புரிமைINSTAGRAM.COM/DONALDJTRUMPJR

ஜூனியர் டிரம்புக்கு பாதுகாப்பு அளித்து வரும் ரகசிய பாதுகப்பு சேவை அமைப்பினர், வெள்ளை பவுடர் குறித்து விசாரித்து வருவதாக கூறினர்.

எதிர்ப்பை இப்படி தெரிவிப்பதா?

இது குறித்து ட்வீட் செய்த ஜூனியர் டிரம்ப், அச்சத்திற்குரிய இந்த சம்பவத்திற்கு பிறகு வனிசாவும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். எதிர்ப்பை இப்படி தெரிவிப்பது வெறுக்கதக்கதாக உள்ளது என்றார்.

 
 

Thankful that Vanessa & my children are safe and unharmed after the incredibly scary situation that occurred this morning. Truly disgusting that certain individuals choose to express their opposing views with such disturbing behavior.

 

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மூத்த மகனிடம் பேசி உள்ளார்.

மாடல்

வனிசாவுக்கும், ஜூனியர் டிரம்புக்கும் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.வனிசா நியூயார்க்கில் ஃபேஷன் மாடலாக இருந்தவர். டொனால்ட் டிரம்ப்பின் வணிகங்களை தற்போது ஜூனியர் டிரம்ப்தான் கவனித்து வருகிறார்.

டிரம்ப் குடும்பம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடிதங்கள் மூலம் விஷதன்மை வாய்ந்த பொருட்களை அனுப்பி நோய் பரப்புவது 2001 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆந்த்ராக்ஸ் கிருமி இவாறு பரப்பப்பட்டதில் 5 பேர் இறந்தனர்.

http://www.bbc.com/tamil/global-43040578

  • தொடங்கியவர்

ட்ரம்ப் மகனுக்கு பார்சலில் வந்த வெள்ளை நிறப்பொடி: முகர்ந்து பார்த்து மயங்கிய மருமகள் வெனிசா

 

 
trumph%20juniorPNG

மனைவி வெனிசாவுடன் ஜூனியர் ட்ரம்ப் - கோப்புப் படம்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ஜூனியர் ட்ரம்ப் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளை நிறப்பொடியை முகர்ந்து பார்த்த அவரது மருமகள் வெனிசா மயங்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மூத்த மகன் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப். தந்தை ட்ரம்புக்கு உதவியாக அரசியல் பணிகளை ஒருங்கிணைத்து வரும், ஜூனியர் ட்ரம்ப், தனது தந்தையின் செய்தித்தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். தனது மனைவி வெனிசாவுடன் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜூனியர் ட்ரம்ப் வீட்டு முகவரிக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளது. அதை வாங்கி, வெனிசா பிரித்து பார்த்துள்ளார். அப்போது பீதியால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டில் இருந்த வெனிசாவின் தாய் உள்ளிட்ட வேறு சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வெனிசா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோலவே பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. மனைவி வெனிசா நலமுடன் இருப்பதாக ட்ரம்ப் ஜூனியர் ட்வீட் செய்துள்ளார்.

ட்ரம்ப் மகன் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலில் இருந்த வெள்ளை நிறப்பொடி குறித்து தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதை அனுப்பியவர்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.   இந்த தகவல் பரவியதும் நியூயார்க் நகரில் பீதி ஏற்பட்டது. இதுபற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு முக்கிய நபர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பொடி அடங்கிய பார்சல்கள் வந்தன. ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள், எம்.பி.க்கள் என முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்குடன் இந்த பார்சல்கள் அனுப்பப்பட்டன. இதபற்றி தகவல் பரவியதும் பார்சல்கள் அனுப்படுவது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/article22739307.ece

ஹ்ம்ம்ம் ஐஞ்சு பிள்ளைகளை பெத்தாலும் ட்றம்ப் இன் மருமகள் டக்கராகத்தான் இன்னும் இருக்கிறா...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஹ்ம்ம்ம் ஐஞ்சு பிள்ளைகளை பெத்தாலும் ட்றம்ப் இன் மருமகள் டக்கராகத்தான் இன்னும் இருக்கிறா...

உங்களை நிலமையை எண்ணப் பரிதாபமாக உள்ளது நிழலி அவர்களே!

பெயரை நிழலியானந்தா என்று மாற்றிக் காவி அணியுங்கள், உங்களையும் சுற்றி டக்கர்கள் வந்து கட்டி அணைப்பார்கள். :grin:


Bildergebnis für நித்தியானந்தா

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/13/2018 at 10:43 AM, நிழலி said:

ஹ்ம்ம்ம் ஐஞ்சு பிள்ளைகளை பெத்தாலும் ட்றம்ப் இன் மருமகள் டக்கராகத்தான் இன்னும் இருக்கிறா...

நாவூறு பட்டுவிட்டது

https://www.cnn.com/2018/03/15/politics/vanessa-trump-donald-trump-jr-divorce/index.html

http://www.independent.co.uk/news/world/americas/us-politics/donald-trump-jr-vanessa-trump-files-uncontested-divorce-new-york-court-a8258431.html

 

  • தொடங்கியவர்
On 13.2.2018 at 4:43 PM, நிழலி said:

ஹ்ம்ம்ம் ஐஞ்சு பிள்ளைகளை பெத்தாலும் ட்றம்ப் இன் மருமகள் டக்கராகத்தான் இன்னும் இருக்கிறா...

விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள்

 

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள்

உலகப் பார்வை: விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள்படத்தின் காப்புரிமைREUTERS

அதிபர் டிரம்பின் மூத்த மருமகள், நியூ யார்க் நீதிமன்றத்தில் டிரம்பின் மகனுக்கு எதிராக விவாகரத்து கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்கும் 40 வயதாகிறது. ஐந்து குழந்தைகள் உள்ளன. 12 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் தனித்தனியே தங்கள் பாதைகளில் செல்ல விரும்புவதாக தம்பதியினர் தெரிவித்ததாக ’பேஜ் சிக்ஸ்’ என்ற செய்தி வலைத்தளம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து பிற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 

http://www.bbc.com/tamil/global-43425730

 

 

நிழலி மிக வேகமாக அமெரிக்கா நோக்கி பயணம்.:grin:

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.