Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

Featured Replies

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

 

 

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக  இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Arnold-Emmanuel..jpg

இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/30600

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ். மாநகரசபையின் மேயராக ஆர்னோல்ட் சற்றுமுன் தெரிவு

 

யாழ். மாநகரசபையின் மேயராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துணை மேயராக து. ஈசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரசபைக்கான மேயரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் சூடு பிடித்திருந்த நிலையில், ஆர்னோல்ட் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாமற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர்தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தாஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட்டை யாழ். மாநகரசபையின் மேயராக்குவதற்கு கட்சி உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனினும், யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட்டை தெரிவு செய்ய வேண்டாம் என கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் எடுத்து கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

அத்துடன், சமூக சேவகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சொலமன் சிறிலை நியமிக்க வேண்டுமென்ற கருத்தும் மேலோங்கியிருந்தது.

இந்த நிலையிலேயே யாழ். மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக கவனம் செலுத்தியிருந்த நிலையில் ஆர்னோல்ட் யாழ். மாநகரசபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/174249?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆர்நோல்ட்டுக்கு உங்களை செ.கஜேந்திரன் திட்டோ திட்டு என்று திட்டினவர் அதையும் மீறி உங்களில் நம்பிக்கை வைத்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் எனும் நப்பாசையில் வாழ்த்து சொல்றம் .

  • தொடங்கியவர்
சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்’
 
 

- எஸ்.ஜெகநாதன்

“அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் செழிப்பான,  நேர்த்தியான வாழ்வுக்காவும் ஒரு நிலையான அரசியல் தீர்வுக்காவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதுக்கிணங்க  செயற்படுவதுடன்,  ஏனைய கட்சிகளை ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சேர்த்து-பயணிப்பதே-எனது-நோக்கமாகும்/71-211537

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாக சேர்ந்து பயணிப்பது வேறு

பதவிக்காக சேர்ந்து பயணிப்பது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஆர்நோல்ட்டுக்கு

  • தொடங்கியவர்

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

 

 

jaffnaயாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

வடக்கு கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை. இதனால் தொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பிறகட்சிகளின் ஆதரவுடனேயே நிர்வாகத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, உள்ளூராட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்து, சிவில் சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சூழலில், 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில், அதிகபட்சமாக 16 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, வெளியில் இருந்து- நிபந்தனையற்ற ஆதரவை வழங்க 10 ஆசனங்களைக் கொண்ட ஈபிடிபியும், 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் முன்வந்துள்ளன.

பெரும்பான்மை பலம் இல்லாத உள்ளூராட்சி சபைகளில், அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சி, ஆட்சியமைப்பதற்கு ஈபிடிபி ஆதரவு அளிக்கும் என்றும், மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கு அளிக்கப்படும் இந்த நிபந்தனையற்ற ஆதரவு, நிர்வாகத்திறனைப் பொறுத்து நீடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதேவேளை, மத்தியில் கூட்டு அரசாங்கத்துக்கு ஐதேக ஆதரவு அளிப்பதால், யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஐதேக ஆதரவு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/15/news/29128

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.