Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

Featured Replies

  • தொடங்கியவர்

6-இல் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள்

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் கடந்த ஜூன் 14-ஆம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. 
32 அணிகள் பங்கேற்ற தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறிய நிலையில் ஏனைய 16 அணிகள் தகுதி பெற்ற ரவுண்ட் 16 எனப்படும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளவையாக கருதப்பட்ட ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. உலகக் கோப்பையின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் 6-ஆம் தேதி தொடங்குகின்றன. 

உருகுவே-பிரான்ஸ்
முன்னாள் சாம்பியன்கள் உருகுவே-பிரான்ஸ் உள்ளிட்டவை இரவு 7.30 மணிக்கு நிஷ்னி நோவ்கோகிராட் மைதானத்தில் நடைபெறும் முதல் காலிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. உருகுவே அணியைக் காட்டிலும் பிரான்ஸ் அணி சற்று பலம் வாய்ந்ததாக உள்ளது.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதியதில் உருகுவே இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. பிரான்ஸ் அணியில் மாப்பே, கிரைஸ்மேன், ஜிரார்ட், போக்பா உள்ளிட்ட சிறந்த வீரர்களும், உருகுவே அணியில் கேவனி, சான்செஸ், முஸ்லெரா உள்ளிட்டோரும் 
உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி பிரேஸில்-பெல்ஜிய அணிகள் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் அரையிறுதியில் மோதும்.

பிரேஸில்-பெல்ஜியம்
கஸான் மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணிக்கு 5 முறை சாம்பியன் பிரேஸில், பெல்ஜியம் அணிகள் மோதும் காலிறுதி ஆட்டம் நடக்கிறது. இரு அணிகளுமே பட்டம் வெல்பவையாக கருதப்படுகின்றன. ரெட் டெவில்ஸ் எனப்படும் பெல்ஜிய அணி வலுவான அணியை கட்டமைத்துள்ளது. அந்தஅணியில் ரொமேலு லுகாகு உலகின் சிறந்த முன்கள தாக்குதல் வீரர்களில் ஒருவராக உள்ளார். 
அதே நேரத்தில் 5 முறை சாம்பியன், 6 முறை அரையிறுதிக்கு தகுதி போன்ற பெருமைகளை பிரேஸில் கொண்டுள்ளது. அதன் நட்சத்திர வீரர் நெய்மர், குட்டின்ஹோ, ஆகியோர் அபார பார்மில் உள்ளனர். இரு அணிகளும் 4 முறை மோதியதில் 3 முறை பிரேஸில் வென்றுள்ளது.

ரஷியா-குரோஷியா
ரஷியா-குரோஷியா அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் 7-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடக்கிறது. பிஃபா தரவரிசையில் 70-ஆவது இடத்தில் உள்ள ரஷிய அணி தொடக்க சுற்றில் அபாரமாக விளையாடியது. உருகுவே அணியிடம் தோற்றாலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் வலுவான ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கோல்கீப்பர் அகின்பீவ், செர்ஷேவ், சிறந்த பார்மில் உள்ளனர். குரோஷிய அணி கடந்த 1998 உலகக் கோப்பையில் 3-ஆவது இடம் பெற்றது. அந்த அணியில் மொட்ரிக், கோல்கீப்பர் சுபாஸிக் சிறப்பான பார்மில் உள்ளனர். ரஷியா, குரோஷியா இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் வென்று காலிறுதிக்கு முன்னேறின என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/04/6-இல்-உலகக்-கோப்பை-காலிறுதி-ஆட்டங்கள்-2952445.html

  • Replies 262
  • Views 33.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நானா நடிக்கிறேன்..? என்னைக் கவிழ்க்க இப்படியெல்லாம் விமர்சிக்கிறார்கள்: பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காட்டம்

 

 
neymar

மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் கீழே வலியால் துடிக்கும் நெய்மர். | ராய்ட்டர்ஸ்.

ஒரேயொரு வீரரின் (நெய்மர்) அதீத நாடகீய நடத்தைகளால் தங்கள் அணி தோற்றது என்று மெக்சிகோ பயிற்சியாளர் நெய்மர் மீது கடும் குற்றச்சாட்டை வைக்க நெய்மர் பதிலடி கொடுத்துள்ளார்.

மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் அன்று பிரேசிலிடம் தோற்று வெளியேறியது. அதில் மெக்சிகோ வீரர் மிகுயெல் லயுன், தேவையில்லாமல் நெய்மரின் ஆபரேஷன் நடந்த கணுக்கால் மீது தன் ஷூவை தேய்த்தார் அல்லது மிதித்தார், இது ரெட் கார்டு சம்பவமாகும், இதற்கு நெய்மர் வலிகாரணமாக எதிர்வினையாற்றினார். நெய்மர் மீது எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு, ஏனெனில் எப்போதும் எதிரணியினர் தன்னை ஃபவுல் செய்து கொண்டேயிருக்கின்றனர் என்பதாக அவர் கொஞ்சம் கூடுதலாக வினையாற்றுவதே. ஒரு தள்ளுக்கு 16 முறை பல்ட்டி அடித்ததைப் பார்த்தோம், தன் வினைத் தன்னைச் சுடும் என்பது போல் உண்மையிலேயே வலியால் துடித்தால் கூட அது நெய்மரின் நாடகீய சேட்டை என்பது போல் உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டது.

 

மெக்சிகோ பயிற்சியாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, “கால்பந்துக்கே அவமானகரமானது இது. ஒரேயொரு வீரரால் நிறைய நேரம் விரயம் செய்யப்படுகிறது. இதனால் எங்கள் ரிதம் கெட்டுப் போனது. கால்பந்து அரங்கில் நெய்மர் ஓர் எதிர்மறை உதாரணமாக விளங்குகிறார். அவரை பின் தொடரும் சிறுவர்களுக்கும் இது கேடாகும். இது வலுவான விளையாட்டு, ஆண்களின் விளையாட்டு, இதில் நடிப்பதற்கு வேலையே இல்லை” என்றார் ஒசாரியோ.

நெய்மர் இதற்கு பதிலடி கொடுக்கும்போது, “இவை என்னை கவிழ்ப்பதற்காகக் கூறப்படுவதேயன்றி வேறில்லை. நான் விமர்சனத்தை மதிப்பவனில்லை, பாராட்டுதலையும் கூட நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏனெனில் இது ஒரு விளையாட்டு வீரனின் அணுகுமுறையில் தாக்கம் செலுத்தும்.

கடந்த 2 போட்டிகளாக நான் செய்தியாளர்களைக் கூட சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். காரணம் அதிகம்பேர் ஏதேதோ பேசிக்கொண்டேயிருக்கின்றனர். பதற்றமடைகின்றனர். அவர்கள்தான் நடிக்கிறார்களோ? என் சகாக்களுடன் வெற்றிபெறவே இங்கு வந்துள்ளேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24328389.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

உ.கோப்பைக் காலிறுதியில் இங்கிலாந்து: தகராறுகள், சர்ச்சைகள் நிரம்பிய ஆட்டத்தில் பெனால்ட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது

 

 

 
england%20win

வெற்றிக்களிப்பில் இங்கிலாந்து. | கெட்டி இமேஜஸ்.

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் நேற்றைய இறுதி 16 சுற்றில் கொலம்பியாவுடன் இங்கிலாந்து ஆட்ட நேரத்தில் 1-1 என்று டிரா செய்ய பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதியில் ஸ்வீடனைச் சந்திக்கிறது. ஸ்வீடன் மற்றொரு ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தை 1-0 என்று வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

2006-க்குப் பிறகு உலகக்கோப்பைக் காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. மேலும் உலகக்கோப்பையில் முதல் முதலாக பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து வெற்றி சாதித்துள்ளது.

 

இங்கிலாந்தின் ஹாரி கேன் 57வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து தனது 6வது கோலை இந்த உலகக்கோப்பையில் அடித்துள்ளார் ஹாரி கேன்.

கொலம்பியா அணிக்குப் பெரிய பின்னடைவு அதன் பிரதான வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் காயமடைந்ததே.

பெனால்டியில் நடந்தது என்ன?

இங்கிலாந்துக்கு பெனால்டி ஷூட் அவுட் என்பது பதற்றமான ஒரு விஷயம், அணி மேலாளர் சவுத் கேட் மிகவும் பதற்றமாக சில வார்த்தைகளை ஷூட் அவுட் முன் வீரர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

முதலில் கொலம்பியாவின் ஃபால்கோ முதல் பெனால்டியை இங்கிலாந்து கோல் கீப்பரைத் தாண்டி அடித்தார் கொலம்பியா 1-0.

இங்கிலாந்தின் ஹாரி கேன் அடுத்ததாக கோல்வலையைத் தாக்க 1-1,

அடுத்து கொலம்பியாவின் குவாட்ராடோ நேராக உள்ளே செலுத்த கொலம்பியா 2-1

அடுத்து ராஷ்போர்டும் தவறு செய்யவில்லை ஆட்டம் 2-2.

கொலம்பியாவின் மியூரியல் கோலுக்குள் செலுத்தினார் கொலம்பியா 3-2.

இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த பக்கவாட்டு பாத உதையை ஆஸ்பினோ இடது புறம் பாய்ந்து தட்டிவிட கொலம்பியா 3-2 முன்னிலை.

ஆனால் கொலம்பியாவின் யூரிபி மேலே கோல் போஸ்ட்டில் அடிக்க கொலம்பியா 3-2.

இங்கிலாந்தின் டிரிப்பியர் டாப் கார்னரில் கோலுக்குள் திணிக்க 3-3

கொலம்பியாவின் கார்லோஸ் பாக்காவின் ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு தடுக்க 3-3.

eric%20dierjpg

எரிக் டயர் அடித்த வெற்றி பெனால்டி ஷூட் அவுட் கோல். | கெட்டி இமேஜஸ்.

 

இங்கிலாந்தின் எரிக் டயர் தாழ்வாக கோல் நோக்கி அடிக்க ஆஸ்பினோ வலது புறம் டைவ் அடித்தார் பந்து அவர் விரல்களில் பட்டது ஆனால் பந்து கொல் 4-3, இங்கிலாந்துக்கு வெற்றி, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தாலும் கடும் பவுல்கள், மோதல் நிரம்பிய ஆட்டம்:

ரக்பி அல்லது மல்யுத்தத்தை பெரும்பாலும் நினைவூட்டிய தகராறுகள் நிரம்பிய இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஃபவுல்கள், 8 மஞ்சள் அட்டைகள். நடுவர் மார்க் க்ரெய்கர் நேற்று ஒரு 8-9 பெக்குகளைப் போட்டால்தான் அவருக்கு இந்த ஆட்டத்தை மறக்க முடியும் என்ற அளவுக்கு கடும் மோதல் நிரம்பிய ஆட்டமாக அமைந்தது.

5வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கின் ஓட்டத்தைத் தாங்க முடியாத கொலம்பிய வீரர் யெரி மினா பந்தைக் ‘கை’யாண்டார், கார்னர் வாய்ப்பு கிடைத்த்து, கார்னர் ஷாட்டில் ஆஷ்லி யங்கின் முயற்சியை கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினாவுக்கு எந்த வித குடைச்சலையும் கொடுக்கவில்லை.

இங்கிலாந்து, கொலம்பிய ரசிகர்களின் கடும் ஆரவாரங்களுடன் ஆட்டம் தொடங்கிய போது 16வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு உண்மையான வாய்ப்பு கிடைத்தது. கெய்ரன் ட்ரிப்பியர், ஜெஸி லிங்கர்டுடன் கூட்டணி போட்டு வலது புறம் வேகமாக எடுத்துச் சென்று ஹாரி கேனுக்கு கிராஸ் செய்ய அவரது தலை முட்டல் வெளியே சென்றது.

22வது நிமிடத்தில் கொலம்பியாவின் சாண்டியாகோ ஆரிஸ், யுவான் குவாட்ராடோ இணைந்து இடது புறம் நிறைய இடம் கிடைக்க பந்தை எடுத்துச் சென்று உள்ளே நுழைய அங்கு ஃபால்கோவின் முயற்சியை ஜான் ஸ்டோன் மறித்தார்.

பிறகு இடைவேளைக்கு 5 நிமிடங்கள் முன்பாக இங்கிலாந்து வீர்ர் ஜோர்டான் ஹெண்டர்சனை கொலம்பியாவின் வில்மர் பாரியோஸ் தலையால் இடிக்க இங்கிலாந்து ஃப்ரீகிக் கேட்டது, ஆனால் நடுவர் மார்க் கிரெய்கர் மஞ்சள் அட்டை மட்டுமே காண்பித்தார். பிறகு ஸ்டாப்பேஜ் நேரத்தில் லிங்கர்ட் அடித்த ஷாட் ஒன்று மேலே சென்றது. இவையெல்லாம் வாய்ப்புகள்.

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது, ட்ரிப்பியரின் ஷாட் வீரர்கள் சுவருக்கு மேல் சென்றதில் எந்த ஒரு பயனும் இல்லை.

இங்கிலாந்து பெனால்டியில் முதல் கோல்: ஹாரி கேனின் 2018 உ.கோப்பை 6வது கோல்

 

harry%20kanejpg

முதல் கோலை அடித்த ஹாரி கேன். | ஏ.பி.

 

இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இடைவேளைக்குப் பிறகு தொடக்க நிமிடங்களில் சாண்டியாகோ ஆரிஸ் ஃபவுல் செய்ய இங்கிலாந்துக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. யங்கின் ஷாட் தலையால் முட்டப்பட்டு கோட்டுக்கு வெளியே அனுப்பப்பட கார்னர் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. இந்த நடைமுறையில் கார்லோஸ் சாஞ்சேஸ் இங்கிலாந்தின் ஹாரி கேனை ரக்பி முறையில் இடைமறிக்க நினைத்தார், நடுவருக்கு வேறு வழியில்லை பெனால்டி வாய்ப்பு இங்கிலாந்துக்கு. அதனை ஹாரி கேன் கோலாக மாற்றினார் இங்கிலாந்து 1-0. ஹாரி கேனின் 6வது கோலாகும் இது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் டெலி ஆலியின் தலையால் முட்டிய பந்து ஒன்று துரதிர்ஷ்டவசமாக கோலிலிருந்து தப்பியது.

காயமடைந்த ஸ்ட்ரைக்கர், கோல் ஸ்கோரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் பெஞ்சிலிருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க கொலம்பியர்களால் இங்கிலாந்தின் தடுப்பணையை உடைக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாக குவாட்ராடோவின் நீண்ட தூர கோல் முயற்சியும் முற்றிலும் விரயமானது.

ஆட்டத்தின் 93வது நிமிடத்தில் 25 அடியிலிருந்து கொலம்பிய வீரர் யூரிபி அடித்த லாஃப்டட் ஷாட் வலது புறம் கோல் மேல் மூலையை நோக்கி உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த போது இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு அருமையாக எம்பித் தட்டி விட்டார். இதன் விளைவாக கொலம்பியாவுக்குக் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. வந்தப் பந்தை மெகுவய்ருக்கும் மேல் எம்பி கொலம்பிய வீரர் மினா வலுவாக பந்தை முட்ட பந்து தரையில் பட்டு ட்ரிப்பியருக்கும் மேல் எழும்பி கோலுக்குள் சென்றது, கொலம்பியா சற்றும் எதிர்பாராது 1-1 என்று சமன் செய்தது, இந்த உலகக்கோப்பையில் எப்போதும் கடைசி நிமிடங்களில் ஏதாவது திருப்பம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கூடுதல் நேரத்தின் 6வது நிமிடத்தில் இடது புறம் கொலம்பிய வீரர் மொஜிகா வேகமாகச் சென்று ஒரு அபாரமான கிராஸ் செய்ய ஃபால்கோ அதனை தன் முன் காலால் ஒரு குத்து குத்த முயன்றார், பிக்போர்டு அருமையாகத் தடுத்தார். கொலம்பியா கூர்மையாக இல்லாவிட்டாலும் அபாயகரமாகத் திகழ்ந்தது. 13வது நிமிடத்திலும் மினா, சான்சேஸ் இருவரும் இங்கிலாந்து தடுப்பு வீரர்களைத் தாண்டி காற்றில் வந்த பந்துக்கு எம்பி தலையால் முட்ட பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலே சென்றது. கூடுதல்நேர 2ம் பாதியில் இங்கிலாந்தின் லிங்கர்ட் அடித்த பாஸை வார்டி ஓடிக்கொண்டே 15 அடியிலிருந்து கோல் நோக்கி அடித்தார், ஆனால் பாரியோஸ் மிக அபாரமாக அதைத் தடுத்தார். அதன் பிறகும் 23ம் நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த வாய்ப்பு வைடாகச் சென்றது கூடுதல் நேரத்திலும் 1-1 இக்கட்டு உடையவில்லை.

ஆட்டம் பெனால்ட்டிக்குச் சென்றது, இதில் எரிக் டயர் இங்கிலாந்துக்கு 4வது கோலை அடிக்க இங்கிலாந்து 4-3 என்று வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

http://tamil.thehindu.com/sports/article24327822.ece

  • தொடங்கியவர்

உலககோப்பை முடிவுகளை சரியாக கணித்த ஜப்பானின் ஆக்டோபஸ் கொல்லப்பட்டது ஏன்?

உலக கோப்பை கால்பந்து 2018-ல் ஜப்பான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் சரியாக கணித்த ஆக்டோபஸ் ஒன்று கொல்லப்பட்டு உணவானது.

ஆக்டோபஸ்படத்தின் காப்புரிமைROLAND WEIHRAUCH

ரபியோ எனப்பெயரிடப்பட்ட ஆக்டோபஸ் ஒன்று Paddling Pool எனப்படும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தப்படும் செயற்கை குளம் போன்ற ஒன்றில் விடப்பட்டு சோதிக்கபட்டது. மூன்று போட்டிகளிலும் ஆக்டோபஸ் சரியாக கணித்தது.

ரபியோவை பிடித்த மீனவர் கிமியோ அபே, அந்த ஆக்டோபஸை ஞானதிருஷ்டிக்காக பயன்படுத்துவதை விட உணவுக்காக விற்று நிறைய பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

வைரலாவதன் மூலம் கிடைக்கும் புகழைவிட தனது வாழ்வாதாரமே முக்கியம் என கருதி ஆக்டோபஸை கொல்ல கிமியோ முடிவு செய்தார் என ஜப்பான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரபியோ எப்படிச் செயல்பட்டது என தெரிந்துக் கொள்ள இந்த காணொளி உங்களுக்கு உதவக்கூடும்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது 北海道ニュースUHB
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது 北海道ニュースUHB

பசிபிக் கடலைச் சேர்ந்த ஒரு பெரிய ஆக்டோபஸான ரபியோ, கொலம்பியாவுக்கு எதிராக ஜப்பான் வெற்றி பெறும் என்பதை சரியாக கணித்தது. மேலும் ஜப்பான் செனெகலுக்கு இடையிலான ஒரு போட்டி டிராவில் முடிவடையும் என்பதை பேடிலிங் குளத்தின் வெவ்வேறு பகுதிக்கு நகர்வதன் மூலம் கணித்தது.

ஆக்டோபஸ் எப்படி கணித்தது?

வெற்றி, தோல்வி மற்றும் டிரா ஆகியவை குளத்தின் வெவ்வேறு பகுதிகளில் குறிக்கப்பட்டது. ஆக்டோபஸை ஈர்ப்பதற்காக குளத்தில் உணவு வைக்கப்பட்டது. ஆக்டோபஸ் எந்த பக்கம் நகர்கிறது என்பதை பொறுத்து அதன் கணிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆக்டொபஸை பிடித்த மீனவர் கிமியோ இனி வரும் போட்டிகளின் முடிவை கணிக்க வேறொரு ஆக்டோபஸை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

போலாந்துக்கு எதிராக ஜப்பான் தோல்வியடையும் என்பதையும் இந்த ஆக்டோபஸ் கணித்திருந்தது. ஜப்பான் - போலந்து போட்டி நடப்பதற்கு முன்னதாக ரபியோ சந்தைக்கு அனுப்பப்பட்டது .

உலககோப்பை போட்டிகளை கணித்த முதல் வினோத ஆக்டொபஸ் இதுவல்ல. 2010-ல் பால் எனும் ஒரு ஜெர்மனிய ஆக்டோபஸ் ஆறு உலக கோப்பை போட்டிகளில் சரியாக முடிவுகளை கணித்திருந்தது.

https://www.bbc.com/tamil/global-44701073

  • தொடங்கியவர்

மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; வைரலான நெய்மர், நாக்அவுட்டில் நடந்தது என்ன?

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவில் இம்முறை முக்கியமான அணிகள் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளன.

முடிவுக்கு வந்துவிட்டதா மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் சகாப்தம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்னும் ஏழு போட்டிகளில் 2018 உலககோப்பை கால்பந்துக்கான மகுடம் யாருக்கு என்பது தெரிந்துவிடும்.

தற்போது உலககோப்பையை வெல்வதற்கான ஓட்டத்தில் எட்டு அணிகள் மட்டுமே இருக்கின்றன. இவ்வார இறுதியில் எட்டு அணிகளில் இருந்து அடுத்தசுற்றுக்கு முன்னேறப்போகும் நான்கு அணிகள் எவை என்பதும் தெரிந்துவிடும்.

உருகுவே, பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரோஷியா, சுவீடன், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இந்த எட்டு அணிகள்தான் இவ்வாரத்தின் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மல்லுக்கட்டவுள்ளன.

கடைசி 16 சுற்றில் நடந்தது என்ன?

உலகில் அதிக ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அணிகள் இம்முறை காலிறுதி சுற்றுக்குக்கூடத் தகுதிபெறவில்லை.

கடந்த வாரம் சனிக்கிழமை இரவு கால்பந்து ரசிகர்களுக்கு பெருந்தீனியும் அதிர்ச்சியும் ஒருசேரக் கிடைத்தது. அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகள் அடுத்தடுத்து வெளியேறின.

ஃபிரான்ஸ் அர்ஜென்டினா இடையே நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் உதவியோடு அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் மெர்காடோ கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக 57-வது நிமிடத்தில் கோல் அடித்தது ஃபிரான்ஸ்.

அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி மீது அதிக கவனம் இருந்த இந்த ஆட்டம், கிலியனை என்றுமே நினைவில் வைத்திருக்கும் ஆட்டமாக அமைந்துவிட்டது.படத்தின் காப்புரிமைFIFA/FIFA VIA GETTY IMAGE Image captionஅர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி மீது அதிக கவனம் இருந்த இந்த ஆட்டம், கிலியனை என்றுமே நினைவில் வைத்திருக்கும் ஆட்டமாக அமைந்துவிட்டது.

ஆட்டத்தின் 64 மற்றும் 68-வது நிமிடங்களில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப் அடுத்தடுத்து கோல் அடித்தார். கிட்டத்தட்ட 11 நிமிட இடைவெளியில் மூன்று கோல்களை போட்டது ஃபிரான்ஸ். 90 நிமிடங்கள் முடிவில் அர்ஜென்டினா 2-4 என பின்தங்கியிருந்தது. ஸ்டாப்பேஜ் டைம் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் பல்வேறு காரணங்களால் அவ்வப்போது தடைபட்ட நேரத்தை கணக்கிட்டு ஆட்டத்தின் முடிவில் நடுவரால் கூடுதல் நேரம் வழங்கப்படும்) ஐந்து நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டது. அர்ஜென்டினா அதில் ஒரு கோல் அடித்தது எனினும் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தின் முடிவில் அதிகாரபூர்வமாக மெஸ்ஸி அணி உலககோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

உருகுவே போர்ச்சுகல் இடையிலான ஆட்டத்தில் 67-வது நிமிடத்தில் எடின்சன் கவானி அடித்த கோல் உருகுவேயின் வெற்றிக்கு வித்திட்டது. 2-1 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற, தொடர்ந்து நான்காவது முறையாக உலககோப்பையின் நாக் அவுட் சுற்றில் தோல்விகண்டது போர்ச்சுகல் அணி. ரொனால்டோ ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

பிரேசில் மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான ஆட்டத்தில் நெய்மர் மற்றும் ராபெர்ட்டோ ஃபிர்மினோவின் கோல்கள் பிரேசிலை காலிறுதிக்கு முன்னேற்றின. இப்போட்டியில் நெய்மர் களத்தில் வலியால் துடித்தவிதம் சமூகவலைதள உலகில் கேலியை உண்டாக்கியது.

பெல்ஜியம் ஜப்பான் இடையிலான போட்டியில் ஜப்பான் அணி 48 மற்றும் 52-வது நிமிடங்களில் கோல் அடிக்க பெல்ஜியம் 0-2 என பின்தங்கியது. 69 மற்றும் 74-வது நிமிடங்களில் பெல்ஜியம் அடுத்தடுத்து கோல் அடித்து சமன்செய்தது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க ஜப்பானின் உலக கோப்பை கனவு கலைந்தது.

1966-க்கு பிறகு உலககோப்பை கால்பந்தின் நாக்அவுட் சுற்றில் 90 நிமிடத்துக்குள் இரண்டு கோல்கள் பின்னடைவு பெற்றபின்னர் ஒரு அணி மீண்டுவந்து வென்றது இதுவே முதல்முறை.

மெஸ்ஸிபடத்தின் காப்புரிமைAFP

இப்போட்டியில் ஜப்பானின் இரண்டு கோல்களுக்கு இடையேயான இடைவெளி 4.16 நிமிடங்கள் மட்டுமே. பெல்ஜியத்தின் முதல் இரண்டு கோல்களுக்கு இடையேயான இடைவெளி 4.30 நிமிடங்கள்.

ஸ்பெயின் ரஷ்யா இடையிலான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ரஷ்யா 4-3 கோல்கள் என வென்றது.ஸ்பெயினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்து 48 வருடங்களில் முதன்முறையாக ரஷ்யா காலிறுதியில் நுழைந்துள்ளது. ஸ்பெயின் அணி உலகக் கோப்பையில் இதுவரை நான்கு முறை பெனால்டிசூட் அவுட்டில் விளையாடி மூன்றில் தோல்வி கண்டுள்ளது.

சோவியத் யூனியன் உடைந்தபிறகு ரஷ்யா உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை.

குரோஷியா டென்மார்க் இடையிலான போட்டியும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் 1-1 என சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு நீண்டது. இதில் குரோஷியா 3-2 என வென்றது.

சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு இடையேயான போட்டியில் சுவீடன் வீரர் ஃபோர்ஸ்பெர்க் மட்டுமே கோல் அடித்த்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இங்கிலாந்து கொலம்பியா இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால் ஸ்டாப்பேஜ் நேரத்தில் கொலம்பியா அடித்த கோலால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்து 4-3 என வென்று காலிறுதியில் நுழைந்தது.

இதுவரை பெரிய அளவிலான கால்பந்து தொடர்களில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்து வெல்வது இதுவே இரண்டாவது முறை. 2006க்கு பிறகு இங்கிலாந்து காலிறுதி தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இங்கிலாந்தில் கடைசி 15 நாக் அவுட் போட்டிகளில் எட்டு போட்டிகள் கூடுதல் நேரத்துக்கு நீண்டது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை 2018 கால்பந்தில் இரண்டாவது பாதியில் குறிப்பாக கூடுதல் நேரத்தில் கோல்கள் அடிப்பது அதிகரித்து வருகிறது.

கால்பந்து உலக கோப்பை: கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதியில் இங்கிலாந்துபடத்தின் காப்புரிமைAFP

காலியிறுதியில் யார் யாரோடு மோதுகிறார்கள்?

உருகுவே அணி ஃபிரான்ஸை சந்திக்கிறது. பிரேசில் பெல்ஜியம் அணியை சந்திக்கவுள்ளது. இவ்விரு போட்டிகளில் வெல்லும் அணிகள் முதல் அரை இறுதி போட்டியில் மோதும்.

ரஷ்யா அணி குரோஷியாவையும், சுவீடன் இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவிருக்கிறது. இவ்விரு போட்டிகளில் வெல்லும் அணிகள் இரண்டாவது அரை இறுதியில் மோதும்.

உலக கோப்பை இறுதிப்போட்டி ஜூலை 15-ல் மாஸ்கோ நகரத்தில் நடக்கவுள்ளது.

https://www.bbc.com/tamil/sport-44712399

  • தொடங்கியவர்

சுவீடனுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரி கேன் விளையாடுவார்- யங், வார்டி சந்தேகம்

 
அ-அ+

கொலம்பியாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் அடைந்த ஹாரி கேன் சுவீடனுக்கு எதிராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #WorldCup2018

 
சுவீடனுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாரி கேன் விளையாடுவார்- யங், வார்டி சந்தேகம்
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினத்துடன் நாக்அவுட் போட்டிகள் முடிவடைந்தது. நாளை காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது கொலம்பியா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து வீரர்களும் அதிக அளவில் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி 2 மஞ்சள் அட்டை பெற்றது. ஆனால் கொலம்பியா 6 மஞ்சள் அட்டை பெற்றது.

201807051705461739_1_Young-s._L_styvpf.jpg

இந்த போட்டியின்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன், யங், வார்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளைமறுநாள் நடைபெறும் சுவீடனுக்கு எதிரான காலிறுதியில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.

201807051705461739_2_Vardy-s._L_styvpf.jpg

இந்நிலையில் ஹாரி கேன் உடற்தகுதி பெற்று விட்டார் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அவருடன் மார்கஸ் ரஷ்போர்டு, வால்கர் ஆகியோரும் உடற்தகுதி பெற்றுள்ளனர். ஆனால், யங் மற்றும் வார்டி உடற்தகுதி பெறாததால் சுவீடனுக்கு எதிராக விளையாடுவது சந்தேகம் எனக்கூறப்படுகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/05170546/1174651/World-Cup-2018-England-Captain-Harry-Kane-fit-to-face.vpf

  • தொடங்கியவர்

பிரேசிலைச் சமாளிக்குமா பெல்ஜியம்?: உலகக் கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டத்தில் இன்று மோதல்

06-CH-SAN-NEYMAR

ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள ஒட்டலுக்கு நேற்று வந்த பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மரை வரவேற்கும் ரசிகர்கள்.   -  படம்: ஏஎப்பி

06-CH-SAN-BRAZIL

பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்.   -  படம்: ஏஎப்பி

06-CH-SAN-NEYMAR

ரஷ்யாவின் கஸான் நகரிலுள்ள ஒட்டலுக்கு நேற்று வந்த பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மரை வரவேற்கும் ரசிகர்கள்.   -  படம்: ஏஎப்பி

06-CH-SAN-BRAZIL

பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில் கால்பந்து அணி வீரர்கள்.   -  படம்: ஏஎப்பி

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல், கால் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இன்று 2 கால் இறுதி ஆட்டங்களும், ஜூலை 7-ம் தேதி 2 கால் இறுதி ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. 2-வது கால் இறுதி ஆட்டம் கஸான் நகரிலுள்ள ஸ்டேடியத்தில் இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பலம் வாய்ந்த பிரேசில் அணியை, இன்றைய கால் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் எதிர்த்து விளையாட வுள்ளது.

5 முறை உலக சாம்பியன், உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், உலகிலேயே அதிக விலைமதிப்புமிக்க கால்பந்து வீரர் நெய்மர் என பல நட்சத்திர அந்தஸ்துடன் பிரேசில் களமிறங்குகிறது. லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய பிரேசில், நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோலடித்தார். மேலும் சக வீரர் ராபர்டோ புர்னிமோ கோலடிக்கவும் அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால், நெய்மரின் தலைமையில் அரை இறுதிக்கு முன்னேறும் நோக்கத்துடன் பிரேசில் களமிறங்குகிறது.

பிரேசிலின் தாக்குதல் ஆட்டத்தை, சமாளிப்பது பெல்ஜியம் அணிக்கு நிச்சயம் கடினமான விஷயமாக இருக்கும்.

பிரேசில் அணியின் நெய்மர் தவிர சென்டர் பேக் ஆட்டக்காரர்கள் ஜோவா மிரண்டா, தியாகோ சில்வா ஆகியோரும் நடுகளத்தில் தங்களது திறமைகளை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர். மேலும் பிரேசிலின் டக்ளஸ் கோஸ்டா, ரெனடா அகஸ்டோ, பிலிப் லூயிஸ், மிரண்டா ஆகியோரும் அணிக்கு பெரும் பலமாகவுள்ளனர்.

இதனால் பிரேசிலை வீழ்த்த பெல்ஜியம் நிச்சயம் போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவது என கங்கணம் கட்டிக் கொண்டு களம் புகவுள்ளது பெல்ஜியம்.

போட்டி குறித்து பெல்ஜியம் அணி பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் கூறும்போது, “பிரேசில் அணி பலம் வாய்ந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் வியூகங்கள் வைத்திருக்கிறோம். இந்த கால் இறுதி வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. அதை நாங்கள் தவற விடமட்டோம். இதை பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பொற்காலம் என்றுதான் நான் சொல்வேன். பெல்ஜியம் அணி வீரர்களுக்கு இது ஒரு கனவு ஆட்டமாக இருக்கும். அந்த கனவை நனவாக்க அனைத்து வீரர்களும் முயல்வர். நாக்-அவுட் சுற்றில் ஜப்பானை வீழ்த்தியதும் நாங்கள் பிரேசிலுடன் மோதுவது என்பது முடிவாகிவிட்டது.

இதற்காக எங்கள் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் பிரேசிலை எதிர்த்து விளையாடுவது என்பது சவால்தான். எங்கள் ஆட்ட நுணுக்கங்களில் எந்த ரகசியமும் இல்லை. எங்களைப் பாதுகாத்துக் கொண்டு பிரேசிலுக்கு தண்டனை தருவோம். தோல்விதான் அந்த தண்டனை பந்து எங்களிடம் கிடைக்கும்போது அதை கோல் வலைக்குள் செலுத்துவோம்” என்றார். - ஏஎப்பி

http://tamil.thehindu.com/sports/article24347618.ece

  • தொடங்கியவர்

அரை இறுதிக் கனவில் பிரான்ஸ் கால்பந்து அணி: உருகுவேயுடன் இன்று பலப்பரீட்சை

 

 
06-CH-SAN-KYLIANMBAPPE

பயிற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் கால்பந்து அணி வீரர்கள்.   -  படம்: ராய்ட்டர்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

 

லீக் ஆட்டங்களில் உருகுவே அணி 3 ஆட்டங்களில் விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டு, 2-வது சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது உருகுவே. 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள உருகுவே அணியின் பலமே அதன் டிபன்ஸ் ஆட்டக்காரர்கள்தான். உருகுவேயின் டிபன்ஸ் கோட்டையைத் தகர்த்து கோலடிப்பது என்பது எதிரணிக்கு மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.

கேப்டன் டியுகோ கோடின், ஜோஸ் கிமென்ஸ், மராட்டின் கக்காரெஸ், டியுகோ லக்சால்ட் ஆகியோர் பலம் வாய்ந்த டிபன்ஸ் ஆட்டக்காரர்களாக வலம் வருகின்றனர். இவர்களது இரும்புக் கோட்டையைத் தகர்ப்பது எதிரணிக்கு கடினமான விஷயமாக இருக்கும். அதேபோல அணியின் எடின்சன் கவானி, நாக்-அவுட் சுற்றில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தினார்.

அதே நேரத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரான கிளியான் மாப்பே அபாரமாக ஆடி எதிரணி வீரர்களை அச்சுறுத்தி வருகிறார். அவரது மிரட்டலான ஆட்டம் இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். உருகுவேயின் டிபன்ஸ் கோட்டையை அவரால் தகர்க்க முடியும் என்று பிரான்ஸ் அணி நம்புகிறது.

ஆட்டம் குறித்து பிரான்ஸ் அணியின் கேப்டன் ஹியூகோ லோரிஸ் கூறும்போது, “உருகுவே அணியை நாங்கள் திறம்பட எதிர்கொள்வோம். பிரான்ஸ் அணியை அரை இறுதிக்கு அழைத்துச் செல்ல அணி வீரர்கள் உறுதி பூண்டுள்ளனர்” என்றார். போட்டி குறித்து உருகுவே அணி பயிற்சியாளர் ஆஸ்கர் தபாரெஸ் கூறும்போது, “பிரான்ஸ் அணியை வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24347611.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை கால்பந்து- பிரேசில் அணியில் இருந்து டேனிலோ விலகல்

 
 அ-அ+

உலகக்கோப்பை காலிறுதியில் பெல்ஜியத்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் பிரேசில் வீரர் டேனிலோ காயத்தால் விலகியுள்ளார். #WorldCup2018

 
 
உலகக்கோப்பை கால்பந்து- பிரேசில் அணியில் இருந்து டேனிலோ விலகல்
 
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்றுமுதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இன்றிரவு 11.30 மணிக்கும் தொடங்கும் 2-வது காலிறுதி போட்டியில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இதற்காக தீவிர பயிற்சியில் பிரேசில் அணி ஈடுபட்டு வந்தபோது, அந்த அணியின் டேனிலோவிற்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த செய்தியை பிரேசில் கால்பந்து கான்பெடரேசன் வெளியிட்டுள்ளது.

201807061609435546_1_danilo003-s._L_styvpf.jpg

ஏற்கனவே சுவிட்சர்லாந்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது டேனிலோவிற்குப் பதில் ஃபாக்னெர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரேசில் அணியின் டேனி ஆல்வ்ஸ் அணியில் இருந்து விலகியதால் டேனிலோ இடம்பிடித்திருந்தார். தற்போது காயத்தில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #Danilo #Fagner #DaniAlves

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/06160943/1174856/FIFA-World-Cup-2018-Brazil-Danilo-Ruled-Out-of-World.vpf

  • தொடங்கியவர்

உருகுவேயை 2-0 என எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

 
அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவேயை 2-0 என வீழ்த்தி பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018

 
உருகுவேயை 2-0 என எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் காயம் காரணமாக கவானி களம் இறங்கவில்லை. பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது.

தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தின. ஆனால் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின. இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் உருகுவே அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகுவே, முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

2-வது பாதி நேரத்திலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்தது. 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார். அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

201807062123014943_1_griezmann001-s._L_styvpf.jpg

0-2 என பின்தங்கியதால் உருகுவே அணி கோல் அடிக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை. 90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. என்றாலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRAURU #URUFRA #Varane #GRIEZMANN

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/06212301/1174915/world-Cup-2018-France-beats-uruguay-reached-semi-final.vpf

  • தொடங்கியவர்

உலக கோப்பை கால்பந்து - பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #BRABEL

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்
 
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
 
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.
 
தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
201807070127154690_1_bra-2._L_styvpf.jpg
 
இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். 
இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை. 
 
ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.
 
ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/07012715/1174930/belgium-beat-brazil-21-in-world-cup-football.vpf

  • தொடங்கியவர்

பெர்னாண்டினியோவின் செல்ஃப் கோல்; பிரேசில் வெளியேற்றத்தினால் நொறுங்கிய இதயங்கள்: அரையிறுதியில் பெல்ஜியம்

 

 

 
belgium%202

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம் அணி. | ஏ.எப்.பி.

உலகக்கோப்பை 2018 கால்பந்து அரையிறுதிக்கு பெல்ஜியம் அணி நுழைந்து வரலாறு படைத்துள்ளது. உலகப்புகழ் பெற்ற அந்த மஞ்சள் சீருடை கடைசியில் தாழ்வானது, சிகப்புச் சீருடை மேலோங்கி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மீண்டும் ஒரு தேசத்தின் அழுகையைப் பார்க்க முடிந்தது, கடந்த முறை ஜெர்மனியிடம் வாங்கிய பேருதை போல் அல்ல இது, மாறாக கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது, அவையெல்லாம் பிரேசில் மட்டுமே கோல் அடிக்கக் கூடிய வாய்ப்புகள் ஆனால் இம்முறை அவையெல்லாம் கோலாகவில்லை. மிகவும் நுணுக்கமான, நுட்பமான கால்பந்தாட்டத்தை பிரேசில் ஆடினாலும் பெல்ஜியத்தின் மரபும் நவீனமும் கலந்த கால்பந்தாட்டம் கடைசியில் வென்றது.

     
 

வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்த அணி (பிரேசில்) தோற்று, வாய்ப்புகளுக்காகத் தேடி அலைந்த அணி (பெல்ஜியம்) வெற்றி பெற்றது, சில வேளைகளில் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பெரும்தடையாகப் போய் முடியும். பிரேசில் பயிற்சியாளர் டிட்டே ஆஃப் டைமின் போது 4-4-2 என்று பிரேசிலின் வியூகத்தை மாற்றினார். வில்லியானுக்குப் பதிலாக ராபர்ட் பெர்மினோவைக் கொண்டுவந்தார், கேப்ரியல் ஜீஸசை வலது பக்கத்துக்கு மாற்றினார். இது பலன் கொடுத்தது. பெல்ஜியத்துக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தது. ஆனாலும் ஏற்கெனவே 2-0 என்று பெல்ஜியம் முன்னிலை வகித்த பிறகே கடினமான பணியாகவே எப்போதும் அமையும்.

இந்த ஆட்டத்தின் தன்மையை பிரேசில் பயிற்சியாளர் டிட்டே ரத்தினச்சுருக்கமாக இவ்வாறு கூறினார்:

“மிகவும் பிரமாதமான கால்பந்தாட்டம், இரு அணிகளும் பிரமிக்கத்தக்க உத்திகளைக் கொண்டு ஆடியது. இப்போது வலியுடனும், கசப்புடனும் நான் இருந்தாலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன், கால்பந்தாட்டத்தை விரும்புகிறீர்களா? இந்த ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக நாம் இதில் ஈடுபடாமல் பார்த்தோமானால் இன்றைய பிரேசில்-பெல்ஜியம் ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டம். முக்கோண பாஸ்கள். இடவல வல இட மாற்றங்கள், தடுப்பாட்டங்கள், கோல் தடுப்புகள், ஆஹா! என்ன ஒரு அழகான ஆட்டம்!”

ஆம். இப்படித்தான் இருந்தது இந்த ஆட்டம்!

ஸ்பாட் கிக் வாய்ப்பு மறுப்பு:

91வது நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டாவின் கிராசுக்கு நெய்மரும் மியூனியரும் போட்டிப் போட்டனர், இதில் மியூனியர் நெய்மரை லேசாகத் தள்ளியது போல் தெரிந்தது, நெய்மர் கீழே விழுந்தார், நிச்சயம் பெனால்டி கொடுக்கப்பட வேண்டியதுதான், மிகவும் லேசாகத்தான் தள்ளியது போல் தெரிந்தது, ஆனாலும் பெனால்டி பகுதியில் நெய்மரின் கண்ணை மறைக்கும் மியூனியரின் செயல் பெனால்டி கிக் அளிக்கப்பட வேண்டியதுதான், ஆனால் நடுவர் கொடுக்கவில்லை. வீடியோ ரெஃபரல் சென்றனர், அதில் பெனால்டி கொடுக்க வேண்டியதல்ல என்று முடிவெடுக்கப்பட்டது.

neymarjpg

தோற்ற பிறகு உணர்ச்சிகரம். | ஏ.எப்.பி.

 

94வது நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டா வலது புறத்திலிருந்து வெட்டி உள்ளே கொண்டு வந்து நெய்மருக்கு கிராஸ் செய்ய நெய்மர் கோலின் வலது மூலையைக் குறிவைத்து அடித்த ஷாட்டை கோல் கீப்பர் கோர்ட்வா முழுதும் எம்பி விரல் நுனியால் தட்டி விட்டார், இது கார்னர் வாய்ப்பைப் பெற்றுத் தந்தாலும் அது ஒன்றுமில்லாமல் போனது, ஆனால் கோர்ட்வாவின் அந்த தடுப்பு பேசப்படும்.

செல்ஃப் கோலும் பெல்ஜிய எதிர்த்தாக்குதல் கோலும், பிரேசிலின் அச்சுறுத்தல் கோலும்:

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மைதானத்தின் நட்டநடுவிலிருந்து பெல்ஜியம் வீரர் டி புருய்ன் பந்தை மிக அருமையாக ஃபெலானிக்குக் கொடுக்க டி-சர்க்கிளுக்கு வெளியே அவரால் சரியாக பந்தை கையாள முடியவில்லை. இருந்தாலும் அவர் ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது. இதனால் ஒரு கார்னர் விளைந்தது.

self%20goaljpg

பிரேசில் அடித்த செல்ஃப் கோல் தருணம், பெர்னாண்டினியோ, கேப்ரியல் ஜீஸஸ் இருவரும் எம்புகின்றனர். | ஏ.எப்.பி.

 

ஹசார்ட் கார்னர் ஷாட் பிரேசில் கோலுக்கு அருகில் தூக்கி விடப்பட அருகில் எந்த ஒரு பெல்ஜியம் வீரரோ, சிகப்புச் சட்டையோ கண்ணுக்குத் தெரியவில்லை. வந்த கார்னர் ஷாட்டிற்கு கேப்ரியல் ஜீஸஸ், பெர்னாண்டினியோ இருவரும் எம்பினர் பெர்னாண்டினியோ தலையால் முட்டித் தள்ள நினைத்தார் ஆனால் அது அவரது தோளில் பட்டு கோல் வலைக்குள் சென்றது. அருகில் ஒரு பெல்ஜியம் வீரர் கூட இல்லாத போது எதற்காக இப்படி ஒரு ஷாட்டை அவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரியாத புதிர். பிரேசிலின் செல்ஃப் கோலில் பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.

30வது நிமிடத்தில் வில்லியான் ஷாட் ஒன்று பெர்னாண்டினியோவுக்கு வர அவர் பாக்ஸின் ஓரத்திலிருந்து கோல் அடிக்கு நிலையில் இருந்தார், ஆனால் பந்தை அடிக்கும் போது கால் தவறினார். விட்செல் பந்தைத் தடுத்தார். நெய்மர் தாக்குதலை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரேசிலுக்குக் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. நெய்மரின் கார்னரை எளிதாக ஃபெலானி கிளியர் செய்தார்.

பந்து பெல்ஜியம் காலுக்கு மாற நம்ப முடியாத எதிர்த்தாக்குதலை நிகழ்த்தினார் பெல்ஜியத்தின் தாடி வைத்த ஹீரோ லுகாகு, அவரைத் தடுக்க 3-4 பிரேசில் வீரர்கள் செய்த முயற்சி வீணானது, கிட்டத்தட்ட நடுமைதானத்திலிருந்து பிரேசில் வீரர்கள் பாலினியோ, பெர்னாண்டினியோ ஆகியோரின் தீவிர இடைமறிப்பு முயற்சிகளை அபாரத்திறமையுடன் கடைந்து, கடந்து பந்தை பிரேசில் எல்லைக்குக் கொண்டு வந்தார். இது ஒரு அபாரமான ஓட்டம், பந்துடன் பிரேசில் வீரர்களின் சவாலான இடைமறிப்புகளை அதைவிடவும் திறமையாக முறியடித்து பந்தை டி புருய்னுக்க்கு வலது புறம் உதைக்க அவர் மிகப்பிரமாதமாக வலது காலால் மிக ஸ்டைலிஷாக ஒரு மரண உதை உதைத்தார், பந்து கதறிக்கொண்டு கோலுக்குள் சென்றது. லுகாகுவின் அபாரமான திறமையினாலும் டி புருயினின் மரண உதையினாலும் பெல்ஜியம் 2-0 முன்னிலை வகித்தது. டிட்டேயின் பயிற்சியில் முதல் முறையாக 2 கோல்களை வாங்கியது பிரேசில்

debruynejpg

லுகாகு கொடுத்த பந்தை கோலுக்கு எடுத்து செல்லும் டிபுருயின். | ஏ.எப்.பி.

 

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் பாலினியோவுக்குப் பதிலாக ரெனாட்டோ அகஸ்டோ உள்ளே வந்தார். அப்போது நெய்மர் அடித்த ஷாட்டை கோர்ட்வா தடுத்தார், பிறகு பந்து கூட்டினியோவிடம் வர இடது உள்புறம் விறுவிறுவென பந்தை எடுத்து வந்தார். அங்கு பதிலி வீரர் ரெனாட்டோ அகஸ்டோ தனியாக இருப்பதைக் கண்டார். உடனடியாக கவித்துவமான ஒரு பாஸில் மிக துல்லியமாக பந்தை அவருக்கு வாகாக தூக்கி விட்டார், அகஸ்டோ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை பந்து வரும் திசையில் அது போய்க்கொண்டிருக்கும் திசைநோக்கி தலையால் தள்ள வேண்டும் அவ்வளவே, அதைத்தான் செய்தார் அகஸ்டோ பிரேசில் 1-2.

பிரேசிலும் வாய்ப்புகளை நிறைய தவற விட்டது. ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை எளிதில் கோலாக மாற்ற வேண்டிய தியாகோ சில்வா கோல் போஸ்ட்டில் அடித்தார், இது உறுதியான கோல் வாய்ப்பு. அதே போல் பாலினியோ கோல் அடிக்கும் நல்ல நிலையிலிருந்து கோல் வாய்ப்பை நழுவ விட்டார்.

டிட்டேயின் பயிற்சியின் கீழ் பிரேசில் 25 ஆட்டங்களில் 20-ஐ வென்றுள்ளது. ஆட்டம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோல்களுக்கும் மேல் பிரேசில் போட்டுள்ளது. பெல்ஜியம்தான் தங்களைத் தக்கவைக்க ஆட வேண்டும், ஆனால் மாறாக பெல்ஜியம் அணியும் பிரேசிலின் வியூகத்தைக் கடந்து வந்து ஊடுருவியது.

மார்செலோ, கூட்டினியோ, நெய்மர் எப்போதுமே இடது புறம் பல சாகசங்களை நிகழ்த்தி வந்தனர். இதற்குத் தக்கவாறு பெல்ஜியத்தின் வலது பக்கம் வலுவாக இருந்தது, அங்கு மியூனியர், ஃபெலானி, லுகாகு ஆகியோர் பிரேசில் மும்மூர்த்திகள் அளவுக்குச் சாகசம் செய்ய முடியாவிட்டாலும், எதிர்த்தாக்குதல் விஷயத்தில் பிரேசிலைப் பதம் பார்த்தனர்.

நெய்மர் ஆட்டத்தில் கவனம் செலுத்தும் போது மிகப்பிரமாதமான வீரர் ஒவ்வொருமுறையும் பந்தை இவர் எடுத்து சென்று பெல்ஜியம் பகுதிக்குள் ஊடுருவி பாஸ் செய்யும் போதும் அங்கு ஒன்று ஆளில்லாமல் இருந்தது, அல்லது ஷாட் மிஸ் ஆனது, அல்லது பந்து மிஸ் ஆனது. இவையெல்லாம் பிரேசில் சாதாரணமாக கோல்களாக மாற்றும் நகர்வுகளே. ஆனால் நேற்று தகையவில்லை.

இடைவேளக்குப் பிறகு நெய்மர் மிகப்பிரமாதமாக ஆடினார், பெரிய அச்ச்றுத்தலை மேற்கொண்டார், மைதானத்தின் இடப்பக்கத்திலிருந்து நடுவுக்கும் நடுவிலிருந்து வலப்பக்கத்திற்கும் மாறி மாறி அவர் பந்தை அனுப்புவதும் பெறுவதும், மீண்டும் கோலுக்காக அனுப்புவதுமாக மிகவும் செயல்பூர்வமாகத் திகழ்ந்தார், ஆனால் அவர் ஆடிய ஷாட்களை, கொடுத்த பாஸ்களை கோலாக மாற்ற அங்கு ரிவால்டோவோ, ரொனால்டோவோ, ரொனால்டினியோவோ இல்லையே!

பிரேசிலின் இந்த ஆட்டத்துக்கு பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டுவா மட்டும் இல்லையெனில் பிரேசில் வென்றிருக்கும். நெய்மரின் கடைசி வளைந்த ஷாட் முயற்சி கோலுக்குள் சென்று விடும் என்று ஒரு கையை நெஞ்சில் பிடித்தபடி பிரேசில் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்க கோர்ட்டுவா அதனை எம்பி விரல்களால் தட்டி விட பிரேசில் ரசிகர்களின் இருதயங்கள் நொறுங்கின.

இதே மைதானத்தில் (கஸான்), ஜெர்மனி, அர்ஜெண்டினா தோற்று வெளியேறியது, பிரேசில் நேற்று வெளியேறியது. பெரிய பெரிய அணிகளை குழிதோண்டிப் புதைக்கும் இடுகாடோ இந்த மைதானம்?

அரையிறுதியில் பிரான்ஸ் அணியை பெல்ஜியம் சந்திக்கிறது, முன்னதாக இன்னொரு லத்தீன் அமெரிக்க அணியான உருகுவேவை 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article24357669.ece

  • தொடங்கியவர்

உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

 

 
 

கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த பெருந்தவறு காரணமாக இரண்டாவது கோலைத் தாரைவார்த்த உருகுவேயை, நிஸ்னி, நொவ்கோரோட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.

1_rafael_varane_no_4_frist_goal_for_fran

இந்த வெற்றியுடன் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பிரான்ஸ், உலகக் கிண்ண வரலாற்றில் ஆறாவது தடவையாக அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் மிகவும் பலமாக இடது காலால் உதைத்த பந்தை தனது உள்ளங் கைகளால் கோல்காப்பாளர் முஸ்லேரா தடுக்க முற்பட்டபோது பந்து அவரது கைகளில் பட்டு கோலினுள் சென்றதுடன் பிரான்ஸின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

3_muslera_fails_to_stop_griezemann_s_kic

முதல் சுற்றிலும் முன்னோடி கால் இறுதியிலும் ஒரு கோலைத்தானும் விடாமல் இருந்த முஸ்லேரா இப் போட்டியில் இரண்டு கோல்களை விட்டமை உருகுவேக்கு பேரிடியாக அமைந்தது. 

மறுபுறத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் கோல்காப்பளார் ஹியூகோ லோரிஸ் மிகவும் அபாரமாக செயற்பட்டு உருகுவேயின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட இப்போட்டியின் 39ஆவது நிமிடம்வரை எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

a_great_save_by_francs_gk_hugo_loris.jpg

40ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் முதலில் கோல் போட்டது. ப்றீ கிக் பந்தை தலையால் முட்டிய  ரபாயல் வரேன், பிரான்ஸின் முதலாவது கோலைப் போட்டார். இந்தக் கோல் பிரான்ஸ் வீரர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன் உருகுவே வீரர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இடைவேளையின் பின்னர் பிரான்ஸ் எல்லையை ஆக்கிரமித்து கோல் நிலையை சமப்படுத்த உருகுவே முயற்சித்தபோதிலும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் அவை முறியடிக்கப்பட்டன. 

2_griezmann_bullet_kick.jpg

உருகுவேயின் முக்கிய வீரர்களில் ஒருவரான எடின்சன் கெவானி உபாதை காரணமாக இப் போட்டியில் வியைாடாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸ் வலப்புறப் பக்கவாட்டில் தாவி பந்தைத் தடுத்தமை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

போட்டியின் 61ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்கு வேளியே இருந்து (சுமார் 20 யார்) க்றீஸ்மான் பலமாக உதைத்த பந்து முஸ்லேராவின் உள்ளங்கைகளில் பட்டு கோலினுள் புகுந்தது. அவர் அப் பந்தை முஷ்டியால் தட்டியிருந்தால் ஒருவேளை அந்த கோல் தடுக்கப்பட்டிருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயமாகும். 102ஆவது போட்டியில் விளையாடிய முஸ்லெரா இந்தத் தவறை தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.

dejected_young_uruguay_supporter.jpg

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் தன்னைத் தாக்கியதாக பாசாங்கு செய்து கீழே வீழ்ந்த 19 வயதுடைய எம்பாப்வே வலியால் துடிப்பதுபோல் நடித்தார். இதனைத் தொடர்ந்து உருகுவே வீரர் க்றிஸ்டியன் ரொட்றிகூஸுக்கும் எம்பாப்பேக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே இருவரும் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் கோல் போடுவதற்கு உருகுவே எவ்வளவோ முயன்றும் அது எதுவும் பலனிக்காமல் போக பிரான்ஸ் அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது. 

http://www.virakesari.lk/article/36156

  • தொடங்கியவர்

சோச்சியில் இன்று மோதல்: குரோஷியாவை சமாளிக்குமா ரஷ்யா?

 

 

 
07CHPMULUKAMODRIC

லூக்கா மோட்ரிக்   -  AFP

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சியில் உள்ள ஒலிம்பிக் பிஷ்ட் மைதானத்தில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யா - குரோஷியா அணிகள் மோதுகின்றன.

குரோஷியா அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதிக்குள் நுழையும் முனைப்புடன் உள்ளது. அந்த அணி சுயாதீன அந்தஸ்து பெற்ற பின்னர் 1998-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுக அணியாக களமிறங்கி அரை இறுதிவரை முன்னேறியிருந்தது. அந்தத் தொடரில் போட்டியை நடத்திய நாடான பிரான்ஸிடம் அரை இறுதியில் 2-1 என தோல்வியடைந்து குரோஷியா வெளியேறியிருந்தது. இதேபோல் 2014-ம் ஆண்டு போட்டியை நடத்திய பிரேசில் அணியிடம் லீக் சுற்றில் குரோஷியா வீழ்ந்திருந்தது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் குரோஷியா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும், அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஐஸ்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்திய குரோஷியா அணி நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கால் இறுதியில் கால்பதித்தது.

 

லூக்கா மோட்ரிக், இவான் ராகிடிக், மரியோ மன்ட்சூகிக், அன்ட் ரெபிக் ஆகியோர் அணியின் அசுர பலமாக உள்ளனர். நாக் அவுட் சுற்றில் டென்மார்க் அணியை வீழ்த்தியதில் கோல்கீப்பர் டேனியல் சுபாசிக் முக்கிய பங்கு வகித்தார். பெனால்டி ஷூட் அவுட்டில் அவர், எதிரணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை 3 முறை தகர்த்ததன் காரணமாகவே குரோஷியா அணியால் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திலும் சுபாசிக், எதிரணி வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடும்.

தொடரை நடத்தும் ரஷ்ய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அற்புதமாக விளையாடி வருகிறது. லீக் சுற்றில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவையும், 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தையும் வீழ்த்திய ரஷ்ய அணி கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியிடம் தோல்விகண்டிருந்தது. அதேவேளையில் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 கோல் என்ற கணக்கில் வீழ்த்தி அனைவரையும் வியக்கவைத்திருந்த ரஷ்ய அணி, மீண்டும் ஒருமுறை மேஜிக் காட்டும் முனைப்பில் உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்ய அணி அதிகபட்சமாக 1966-ம் ஆண்டு 4-வது இடம் பிடித்திருந்தது. ஆனால் சோவித் யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் ரஷ்ய அணி ஒருமுறை கூட அரை இறுதிக்கு முன்னேறியது கிடையாது. அதிகபட்சமாக 1982 மற்றும் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இரு சுற்றுகள் வரை எட்டிப்பார்த்திருந்தது. இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் தவித்த நிலையில், லீக் சுற்றில் அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்ய அணி. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அணிக்கு பெரிய பலமாக உள்ளது. டெனிஸ் செரிஷேவ், ஆர்டெம் ஸூபா ஆகியோர் இந்தத் தொடரில் தலா 3 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடம் வகிக்கின்றனர். அணியின் வெற்றிக்காக மீண்டும் ஒருமுறை இவர்கள் சிறந்த பங்களிப்பு செய்ய ஆயத்தமாக உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article24357610.ece

  • தொடங்கியவர்

சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

 
 அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து #WorldCup2018 #SWEENG

 
 
சுவீடனை 2-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் சுவீடன் வீரர்கள் அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இங்கிலாந்து கோல்கீப்பர் அதை திறமையாக தடுத்தார்.

201807072121539822_1_alli001-s._L_styvpf.jpg

அதேவேளையில் இங்கிலாந்து வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடினார்கள். ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் வலது கார்னர் பக்கத்தில் இருந்து அடித்த பந்தை லிங்கார்டு தலையால் முட்டி கோல் அடிக்கும் வகையில் தூக்கி அடித்தார். அதை டேல் அலி தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 2-0 என முன்னிலைப் பெற்றது.

இரண்டு கோல் அடித்தாலும் இங்கிலாந்து டிபென்ஸ் ஆட விரும்பவில்லை. தொடர்ந்த அட்டக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77-வது நிமிடத்தில் டேல் அலி மாற்றப்பட்டார். 90-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் நிறுத்தத்தை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்திலும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/07212154/1175107/world-Cup-2018-england-lead-against-sweden-1st-half.vpf

  • தொடங்கியவர்

28 வருடங்களின் பின் தகுதிபெற்றது  இங்கிலாந்து 

 

சுவீடனுக்கு எதிராக ரஷ்யாவின் சமாரா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்து, 28 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

england_s_second_goal_header_by_dele_all

ஹெரி மெகயர், டேல் அலி ஆகிய இருவரும் தலையால் தட்டி போட்ட கோல்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.

1966இல் தனது சொந்த மண்ணில் உலக சம்பியனான இங்கிலாந்து 1990இல் ஜேர்மனியிடம் அரை இறுதியில் பெனல்டி முறையில் தோல்வியைத் தழுவியது. இப்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

england_harry_maguire.jpg

ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிகப்படியாக 6 கோல்கள் போட்டு தங்கப் பாதணிக்கு குறிவைத்து விளையாடி வரும் ஹெரி கேனைக் கட்டுப்படுத்துவதில் சுவிடன் அதிக கவனம் செலுத்தியது. இதன் காரணமாக இங்கிலாந்தின் மற்றைய வீரர்கள் கோல் போடுவதற்கான முயற்சியில் இறங்கினர்.

இரண்டு அணிகளும் போட்டியின் ஆரம்பத்தில் மிக நிதானமாகவும் மெதுவாகவும் விளையாடின. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன கோலை நோக்கி உதைத்த பந்து இலக்கு தவறி வெளியே சென்றது.

englan_gk_Jordan_Pickford_brought_off_so

30ஆவது நிமிடத்தில் போட்டியில் பதிவான முதலாவது பெனல்டி இங்கிலாந்துக்கு கனி கொடுப்பதாக அமைந்தது. ஏஷ்லி யங்கின் கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய மெகயர் தலையால் தட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இங்கிலாந்தை முன்னிலையில் இட்டார்.

இதனை அடுத்து எதிர்த்தாடுவதில் சுவீடன் ஈடுபட்ட போதிலும் தவறுகள் காரணமாக பந்தை எதிரணியிடம் தாரைவார்த்த வண்ணம் இருந்தது.

44ஆவது நிமிடத்தில் ஓவ் சைட் வலையில் சிக்கிய ரஹீம் ஸ்டேர்லிங்குக்கு அடுத்த நிமிடம் கோல்போடுவதற்கு கிடைத்த வாய்ப்பை சுவீடன் கோல்காப்பாளர் ரொபின் ஒல்சன் திசைதிருப்பினார்.

eng_vs_sweden_action_1.jpg

இடைவேளையின் பின்னர் 47ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு சுவீடனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் மார்க்கஸ் பேர்க் தலையால் தட்டிய பந்தை நோக்கி இடது புறமாக தாவிய இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பின்போர்ட் அற்புதமாக தடுத்தார்.

12 நிமிடங்கள் கழித்து ஜெசே லிங்கார்ட் உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய அலி மிகவும் அலாதியாக தலையால் தட்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலைப் போட்டார்.

அடுத்த மூன்றாவது நிமிடத்தல் இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் இரண்டாவது தடவையாகவும் அற்புதமாக செயல்பட்டு சுவீடன் வீரர் விக்டர் க்ளாசனின் முயற்சியைத் தடுத்தார். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் கோலை நோக்கி வந்த பந்தை பிக்போர்ட் தனது கையால் தட்டி குறுக்குக் கம்பத்துக்கு மேலாக செல்ல வைத்தார்.

eng_harry_maguier_no_6_superb_header_int

இங்கிலாந்துக்கு 78ஆவது நிமிடத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பு வீண் போனது.

அதன் பின்னர் உபாதையீடு நேரம் உட்பட 12 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் வேகத்துடனும் விறுவிறுப்புடனும் எதிரத்தாடலில் ஈடுபட்ட அதேவேளை அவற்றின் தடுத்தாடலும் சமமாக அமைந்ததால் மேலதிக கோல் எதுவும் போடப்படாமல் போட்டி முடிவுக்கு வந்தது.

http://www.virakesari.lk/article/36201

  • தொடங்கியவர்

உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகள் வெளியேற்றம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் விநோதக் கதைகள்!

 

 
belgium_brazil1_(6)

 

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் கூடுதல் வசீகரம் அளிக்கக் கூடியவை. 

இந்தமுறை போட்டியில் கலந்துகொண்ட 5 தென் அமெரிக்க அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறின. 

ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

எனினும் தற்போது இந்த நான்கு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியுள்ளன.  

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் தோற்றுப்போய் வெளியேறின.
காலிறுதிச் சுற்றில் பிரேஸிலும் உருகுவேவும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன.

* இதையடுத்து, நேற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள் (பிரான்ஸ் & பெல்ஜியம்) மற்றும் இன்று விளையாடவுள்ள நான்கு அணிகள் என ஆறு அணிகளுமே ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவை. 

* பிரேஸில் (5), ஆர்ஜென்டீனா(2), உருகுவே (2) ஆகிய அணிகள் ஒட்டுமொத்தமாக 9 உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. எனினும் இந்தமுறை அரையிறுதிவரை கூட தகுதி பெற முடியாமல் போய்விட்டது. 

* ஐரோப்பாவில் 1958-க்குப் பிறகு எந்தவொரு தென் அமெரிக்க நாடும் உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்தச் சோகம் இன்னமும் தொடர்கிறது. 

அரையிறுதியில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெறாத உலகக் கோப்பைப் போட்டிக்ள்

இத்தாலி உலகக் கோப்பை 1934 
இங்கிலாந்து உலகக் கோப்பை 1966
ஸ்பெயின் உலகக் கோப்பை 1982
ஜெர்மனி உலகக் கோப்பை 2006
ரஷிய உலகக் கோப்பை 2018

* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை.

பிரேஸில் - 5 
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1 

இவற்றில் பிரேஸில், ஆர்ஜென்டீனா, உருகுவே, ஸ்பெயின் ஆகிய அணிகள் தற்போது போட்டியை விட்டு வெளியேறிவிட்டன. பிரான்ஸ் மட்டும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் நிலை இன்று தெரியவரும். இன்று இந்திய நேரம் 7.30 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அந்த அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. 

* மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் இல்லாத உலகக் கோப்பையாக இது மாறிவிட்டது.

* பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னேற்றம் மகத்தானது. இதன் வளர்ச்சி அனைத்து அணிகளுக்கும் பாடமாக உள்ளது.

1920: அண்ட்வெர்ப் (பெல்ஜியம்) ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது. 
1986: உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று நான்காம் இடம் பெற்றது. 
2007: ஃபிஃபா தரவரிசையில் 71-வது இடம் 
2018: ஃபிஃபா தரவரிசையில் 3-ம் இடம். பத்து வருடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/07/south-americas-world-cup-curse-continues-2955196.html

  • தொடங்கியவர்

உலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #RUSCRO

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா
 
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று முன்தினம் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
 
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின.
 
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஷியா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ரஷியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன.
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் நேரம் வழ்ங்கப்பட்டது.
 
இதை பயன்படுத்தி ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.
 
201807080232231720_1_cro-4._L_styvpf.jpg
 
தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.
 
முதலில் ரஷியாவின் வாய்ப்பை குரோஷியா கோல்கீப்பர் தடுத்துவிட்டார். ஆனால் குரோஷியா அணி முதல் வாய்ப்பில்   கோல் போட்டது.
 
இர்ண்டாவது வாய்ப்பை ரஷிய கோலாக்கியது. ஆனால் குரோஷியாவின் வாய்ப்பை ரஷியா கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
இதனால் மீண்டும் 1 - 1 என சமனானது.
 
மூன்றாவது வாய்ப்பை ரஷியா வீணாக்கியது. குரோஷியா மீண்டும் கோலாக்கியது. இதனால் 1-2 என முன்னிலை பெற்றது.
 
நான்காவது வாய்ப்பை ரஷியா கோலாக்கியது. குரோஷியாவும் கோல் அடித்ததால் 2-3 என முன்னிலை பெற்றது.
 
இறுதியாக, ஐந்தாவது வாய்ப்பை ரஷியா கோல் போட்டதால் 3-3 என சமனானது. குரோஷியா மீண்டும் ஒரு கோல் அடித்து 4-3 என  வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #RUSCRO #CRORUS #RussiavCroatia

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/08022811/1175130/croatia-beat-russia-43-penalty-shoot-in-world-cup.vpf

  • தொடங்கியவர்

இன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது- இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்

அ-அ+

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார். #WorldCup2018

 
 
 
 
இன்னும் மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது- இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன்
 
உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் குரோசியாவை எதிர்கொள்கிறது. குரோசியாவை வீழ்த்தினால் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் அல்லது பிரான்ஸ் அணியை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு நாங்கள் வெற்றியின் விளிம்பில் உள்ளோம் என்று இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தெரிவித்துள்ளார்.

201807081957101653_1_harryKane-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஹாரி கேன் கூறுகையில் ‘‘அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது அனேகமாக மூழ்காது. இன்னும் பெரிய போட்டி காத்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/08195710/1175268/FIFA-World-Cup-2018-Kane-Says-We-are-Buzzing-After.vpf

  • தொடங்கியவர்

காலிறுதியில் வெளியேறியது எனது கால்பந்து வாழ்க்கையில் சோகமான தருணம்- நெய்மர் வேதனை

 

 

அ-அ+

காலிறுதியில் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என நெய்மர் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018

 
 
 
 
காலிறுதியில் வெளியேறியது எனது கால்பந்து வாழ்க்கையில் சோகமான தருணம்- நெய்மர் வேதனை
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நெய்மர், கவுட்டினோ, மார்சிலோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட பிரேசில் 1-2 என பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பிரேசில் வீரர்கள் சோகம் நிறைந்த முகத்துடன் சொந்த நாடு திரும்பினார்கள். இந்நிலையில் பெல்ஜியத்திடம் 1-2 எனத் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவம் சோகமான தருணம் என்று நெய்மர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

201807081855099307_1_neymar002-s._L_styvpf.jpg

பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வழி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/08185510/1175261/Brazil-World-Cup-Exit-The-Saddest-Moment-of-my-Career.vpf

  • தொடங்கியவர்

வளர்ப்பு நாய் வரை கேலிக்கு உள்ளான நெய்மர்

 

 
09CHPMUNEYMAR

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார்.

இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நெய்மர் பலமுறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்தார். இந்நிலையில் நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் டுவிட்டரில் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்

 

சிறுவர்கள் முதல் வளர்ப்பு நாய் வரை நெய்மர் சேலஞ்சை செய்து வருகிறார்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இந்தியாவை சேர்ந்த வயதான பெண் ஒருவர், வீட்டு வேலைகளை செய்யும் போது லேசாக அடிப்பட்டதும் நெய்மர் போன்று கீழே சுருண்டு விழும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சிறுவர்களும் தங்களது பங்குக்கு நெய்மரை கேலி செய்துள்ளனர். இதுபோதாதென்று ஒரு வீடியோவில் பூனை ஒன்று நாயை பார்த்து சீறுகிறது. உடனே நாய் அடிபட்டது போன்று கீழே விழுந்து உருள்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24369671.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கிலாந்து  உதைபந்து ரசிகர்கள் ரஸ்யாவில்.........................

 

  • தொடங்கியவர்

முதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் நாளை மோதல்

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியும் பெல்ஜியம் அணியும் நாளை மோதுகின்றனர். #FIFA2018 #WorldCup2018

 
 
 
 
முதல் அரை இறுதி ஆட்டம்: பிரான்ஸ்-பெல்ஜியம் நாளை மோதல்
 
செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, 1998-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ், கோப்பையை வெல்லாத பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (10-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 1998, 2006 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது.

பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலக கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது.

உலக தர வரிசையில் 7-வது இடத்தில் பிரான்ஸ் அணி முன்களம், நடுகளம், பின்களம் ஆகியவற்றில் சமபலத்துடன் இருக்கிறது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

அர்ஜென்டினாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் 19 வயதான எம்பாப்வே சிறப்பாக ஆடி 2 கோல்களை பதிவு செய்தார். பெல்ஜியத்தின் பின்கள பலவீனத்தை பயன்படுத்தி அவர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதே போல கிரீஸ்மேன் கால் இறுதியில் ஒரு கோல் அடித்து அணிக்கு உதவியாக இருந்தார். இருவரும் இந்த தொடரில் 3 கோல்களை அடித்துள்ளனர்.

போக்பா, நிக்கோலா காண்டே ஆகியோர் நடுகளத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். தோல்வி எதையும் சந்திக்காத அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் டிரா செய்தது.

பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. அந்த அணி முன் களத்தில் மிகவும் வலுவாக இருக்கிறது. பதிலடியான தாக்குதல் ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

கேப்டன் ஈடன் ஹசாட், லுகாகு, டிபுருயன் ஆகியோரது கூட்டணி முன்களத்தில் பலம் பெற்று திகழ்கிறது. இதில் லுகாகு 4 கோல்கள் அடித்து உள்ளார். பிரேசிலுக்கு எதிராக அவர் கோல் அடிக்க உதவியாக இருந்தார். புருயன் பிரேசிலுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹசாட் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் திறமை பெற்றவராக இருக்கிறார்.

இது தவிர பெலானி, விஸ்டல், கோம்பேனி, நாசெர் சாதிலி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். அந்த அணியின் சிறந்த பின்கள வீரரான தாமஸ் மினுயர் கிரானி 2 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட இயலாது. பெல்ஜியம் அணியின் பலவீனமே பின்களம்தான். அதை சரி செய்வது அவசியம். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது.

இரு அணிகளும் நாளை மோத இருப்பது 74-வது போட்டியாகும். இதுவரை நடந்த 73 ஆட்டத்தில் பிரான்ஸ் 24-ல், பெல்ஜியம் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டி ‘டிரா’ ஆனது.

உலக கோப்பையில் இரு அணிகளும் 32 ஆண்டுகளுக்கு பிறகு மோத இருக்கின்றன. ஏற்கனவே 2 முறை மோதி உள்ளன. இந்த இரண்டிலும் பிரான்சே வெற்றி பெற்றது. 1938-ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ல் 3-வது இடத்துக்கான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது.

இரு அணிகளும் கடைசியாக 2015-ம் ஆண்டு காட்சி போட்டியில் மோதின. இதில் பெல்ஜியம் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இறுதிப் போட்டியில் நுழைய கடுமையாக போராடுவார்கள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. #FIFA2018 #WorldCup2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/09133923/1175385/france-vs-belgium-1st-semi-final-match-on-tomorrow.vpf

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா பிரான்ஸ்?- பெல்ஜியத்துடன் இன்று பலப்பரீட்சை

 

 
2

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி டென் 1, சோனி டென் 3 சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இரு அணிகளும் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெல்ஜியம் 30 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 19 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன. உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் இதற்கு முன்னர் இரு முறை மோதி உள்ளன. இதில் இரு ஆட்டங்களிலும் பிரான்ஸ் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது.

 

1998-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி இம்முறை இளம் வீரர்களை அதிக அளவில் உள்ளடக்கியபடி பயம் இல்லாத ஆட்டத்தை விளையாடி வருகிறது. அந்த அணி 12 வருடங்களுக்குப் பிறகு அரை இறுதியில் கால்பதித்துள்ளது. 19 வயதான கிளியான் மாபே, மற்றும் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட 22 வயதே ஆன இளம் ஜோடிகளானபெஞ்சமின் பவார்டு, லூக்காஸ் ஹெர்னாண்டஸ் ஆகியோர் சிறந்த பங்களிப்பு செய்து வருகின்றனர். இதில் பெஞ்சமின் பவார்டை வலது ஓரத்திலும், ஹர்னாண்டஸை இடது ஓரத்திலும் பயன்படுத்தும் தைரியமான முடிவை பறிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 20 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ள போதிலும் ஒருங்கிணைந்த செயல்திறனை களத்தில் வெளிப்படுத்துவது பலமாக உள்ளது.

பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டின்ஸ் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற போது அவரால் அணியில் உள்ள தனிப்பட்ட வீரர்களின் திறமையை ஒருங்கிணைத்து செயல்பட முடியுமா என்பதில் தொடக்க காலங்களில் சந்தேகம் நிலவியது. அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி கண்டது. ஆனால் அதன் பிறகு 23 ஆட்டங்களில் பெல்ஜியம் அணி தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

இதில் அந்த அணி வீரர்கள் 78 கோல்கள் அடித்துள்ளனர். ஒரு சில ஆட்டங்கள் மட்டுமே கோல் அடிக்கப்படாமல் டிராவில் முடிவடைந்தன. வீரர்களின் திறனை மேம்படுத்துவதில் துணை பயிற்சியாளராக உள்ள பிரான்ஸ் அணியின் முன்னாள் ஸ்டிரைக்கரான தியரி ஹென்றியும் பக்கபலமாக உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி 14 கோல்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் முதலிடமும் வகிக்கிறது. நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி பின்தங்கியிருந்த நிலையில் மார்ட்டின்ஸ் துணிச்சலான வகையில் சில மாற்றங்களை செய்தார். இரு விங்கர்களை வெளியே எடுத்துவிட்டு இரு நடுகள வீரர்களை களமிறக்கினார். அவர்கள் இருவரும் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். எதிரணியின் பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தவாறு அணியின் பார்மட்டை அமைப்பதில் மார்ட்டின்ஸ் கைதேர்ந்தவராக இருப்பதே வெற்றிக்கான மந்திரமாக உள்ளது. பிரேசில் அணிக்கு எதிரான கால் இறுதியில் கூட மார்ட்டின்ஸ் அமைத்த களவியூகம் தான் வெற்றியை தேடிக் கொடுத்தது. முதல் முறையாக பெல்ஜியம் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் மார்ட்டின்ஸ் தீவிரம் காட்டக்கூடும். 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி 4-வது இடம் பிடித்திருந்தது உட்சபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலமான கோல்கீப்பர்கள்

பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இரு அணிகளுக்கும் கோல்கீப்பர்கள் அசுர பலமாக உள்ளனர். பிரான்ஸ் கோல்கீப்பரான ஹியூகோ லொரிஸ், உருகுவே அணிக்கு எதிரான கால் இறுதியில் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்தெறிந்தார். அதேபோல் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பரான கோர்ட்டுவா, பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலமுறை முட்டுக்கட்டை போட்டார். பிரேசில் அணி தோல்வியை தழுவியதற்கு கோர்ட்டுவாவின் தடுப்பு அரண்தான் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இரு அணிகளும் கோல் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

 

மியூனியர்

பெல்ஜியம் அணியின் டிபன்டர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் தாமஸ் மியூனியர். பெல்ஜியம் அணியின் தாக்குதல் ஆட்ட யுக்தியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய அவர், இன்றைய ஆட்டத்தில் தடை காரணமாக களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தின் போது நெய்மரை பவுல் செய்ததாக 2-வது மஞ்சள் அட்டையை பெற்றதால் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் மியூனியர் களமிறங்க இயலாது. இதனால் பயிற்சியாளர் மார்ட்டின்ஸ் தனது பார்மட்டை மாற்றக்கூடும்.

 

ஈடன் ஹஸார்டு

தாக்குதல் ஆட்டத்திறனால் அனைவராலும் அறியப்படும் பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரரான ஈடன் ஹஸார்டு, டிபன்ஸிலும் பலம் சேர்க்கக்கூடியவர். இதேபோல் ரோமுலு லுகாகு, டி புரூயன் ஆகியோரும் அணியின் தூண்களாக உள்ளனர். பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் செல்லும் திறன் கொண்ட லுகாகு, இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்திலும் லுகாகு மிரட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜான் வெர்டொங்கன், பெலானி, தாமஸ் வெர்மியேலன், சாட்லி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

 

கிளியான் மாபே

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான ஆலிவர் கிரவுடு இதுவரை கோல் அடிக்கவில்லை என்றாலும், அவர் பந்தை கையாளும் விதமானது கிளியான் மாபே, கிரீஸ்மான் ஆகியோரை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கிறது. இதில் கீரிஸ்மான், அர்ஜென்டினா அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் இரு கோல்கள் அடித்து மிரளச் செய்திருந்தார். அதேவேளையில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெனால்டி கிக்கில் இரு கோல்கள் அடித்த கிரீஸ்மான் உருகுவே அணிக்கு எதிராக ஓபன் பிளேவில் கோல் அடித்ததுடன், அந்த ஆட்டத்தில் வாரன் தலையால் முட்டி கோல் அடிக்கவும் உதவியிருந்தார். இவர்களுடன் சாமுவேல் உமிட்டி, பால் போக்போ ஆகியோர் பலம் சேர்ப்பவராக உள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் மிரட்டக் காத்திருக்கிறது.

கடந்து வந்த பாதை

பிரான்ஸ்: லீக் சுற்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்தது. இதைத்தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்துள்ளது.

பெல்ஜியம்: லீக் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவையும், 5-2 என்ற கோல் கணக்கில் துனீசியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியையும் பந்தாடியிருந்தது பெல்ஜியம் அணி. அதேவேளையில் நாக் அவுட் சுற்றில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி மிரளச் செய்தது. கால் இறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article24376976.ece

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை கால்பந்து 2018: அதிர்ச்சிகரமான முடிவுகள், கடைசி கட்ட கோல்கள்

 

 
wc-crotia

அபாரமாக விளையாடி வரும் குரோஷிய அணி.

அரையிறுதிச் சுற்றை உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 எட்டியுள்ள நிலையில் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகள், கடைசி கட்ட கோல்கள், பெனால்டி வாய்ப்புகளால் இதுவரை நடந்ததிலேயே சிறந்ததாக ரஷியாவில் நடந்து வரும் போட்டிகள் கருதப்படுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். ரஷியாவில் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த ஜூன் 14 முதல் தொடங்கி நடந்து வரும் போட்டிகளில் முதல் சுற்று, நாக் அவுட் சுற்று, காலிறுதிச் சுற்று முடிந்து அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளன. இதில் பல்வேறு ஆட்டங்கள் மிகவும் கடும் போட்டிக்கு இடையில் முடிந்தன.
56 ஆட்டங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கிலேயே 14 ஆட்டங்களின் முடிவும், நாக் அவுட் சுற்றில் ஒரு ஆட்டமும் 1-0 எனவும் முடிந்தது. மேலும் முதல் சுற்று ஆட்டங்களில் 2-1 என்ற கோல் கணக்கில் 10 ஆட்டங்களும், நாக் அவுட் சுற்றில் ஒரு ஆட்டமும் முடிவுக்கு வந்தன.
26 ஆட்டங்கள் ஓரே ஒரு கோல் வித்தியாசத்தில் அணிகள் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் மட்டுமே இரண்டு அல்லது அதற்கு மேலான கோல்கள் போடப்பட்டு அணிகள் வென்றன. நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்-ஆர்ஜென்டீனா (4-3). பெல்ஜியம்-ஜப்பான் (3-2) ஆட்டங்கள் ஆகும். மேலும் 11 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அவற்றில் 6 ஆட்டங்கள் 1-1 எனவும் ஓரே ஒரு ஆட்டம் 0-0 எனவும் முடிந்தன. இந்த போட்டியின் மூலம் எந்த அணியையும் எளிதாக கருதக் கூடாது என்ற அனுபவத்தை ஏற்படுத்தியது.
இறுதிச் சுற்று கடந்து வந்த பாதை: முதல் சுற்றில் பல்வேறு அதிர்ச்சி முடிவுகள் ஏற்பட்ட நிலையில் நாக் அவுட் சுற்று ஆர்வமிக்கதாக மாறியது. உருகுவே, போர்ச்சுகல், பிரான்ஸ், ஆர்ஜென்டீனா, பிரேஸில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான் போன்றவை ஒரு பக்கத்தில் இருந்தன. இந்த அணிகள் தங்களுக்குள் 10 உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. மறு பிரிவில் ஸ்பெயின், ரஷியா, குரோஷியா, டென்மார்க், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து போன்றவை இருந்தன. இவை தங்களுக்குள் 2 உலகக் கோப்பையைகு மட்டுமே வென்றுள்ளன. எனினும் குரோஷியா, ரஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து அணிகளில் ஒன்று இறுதிக்கு முன்னேறும் என்ற சூழல் உள்ளது.
கணிக்க முடியாத ஆட்டங்கள்:
போட்டி துவங்கிய போது ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரேஸில், ஸ்பெயின், பிரான்ஸ் பட்டம் வெல்லும் அணிகளாகவும், போர்ச்சுகல், பெல்ஜியம், இங்கிலாந்து போன்றவை அவற்றுக்கு அடுத்த நிலையிலும் கருதப்பட்டன. ஆனால் உலகக் கோப்பை பல்வேறு அதிர்ச்சிகள், சுவாரஸ்யங்களை கொண்டிருந்தது. 
நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றில் வெளியேறியது. முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின்-ரஷியாவிடமும் தோற்று வெளியேறியது. முதல் சுற்றில் குரோஷியாவிடம் படுதோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா-பிரான்ஸிடம் நாக் அவுட் சுற்றில் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் வலிமையான போர்ச்சுகல் முதல் சுற்றில் ஈரானிடம் டிரா கண்ட நிலையில் அடுத்த சுற்றில்-உருகுவேயிடம் தோற்று வெளியேறியது. பிரேஸிலை காலிறுதியில் பெல்ஜியம் வெளியேற்றியது. உலகக் கோப்பையில் பெனால்டி ஷூட் அவுட்டில் 30 ஆண்டுகளாக வெல்லாமல் இருந்த இங்கிலாந்து எதிர்பாராத வகையில் கொலம்பியாவை நாக் அவுட் சுற்றில் வென்றது.
தாமதமாக போடப்பட்ட கோல்கள்: 56 ஆட்டஙகளில் அனைத்து அணிகளாலும் 146 கோல்கள் போடப்பட்டன. 32 அணிகளும் குறைந்தது ஒரு கோலாவது போட்டன. 146 கோல்களில் 23 கோல்கள் ஆட்டம் முடிய 90-ஆவது நிமிடத்தில் அல்லது கூடுதல் நேரத்தில் போடப்பட்டவையாகும். இது மொத்தம் அடிக்கப்பட்ட கோல்களில் 15.75 சதவீதம். இந்த 23 கோல்களில் 9 வெற்றி கோல்களாகும்.
சலேம் அல் தாசரி (எகிப்து), அஸிஸ் புகாதூஸ் (ஈரான் சேம்சைட் கோல்), குட்டின்ஹோ (பிரேஸில்), டோனி குரூஸ் (ஜெர்மனி), ஹாரி கேன் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் வெற்றிக் கோல்களை அடித்தனர்.
சில கோல்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியும் அணிகள் தகுதி பெறுவதையும் பாதித்தன. குறிப்பாக நாசர் சாடியின் ஜப்பானுக்கு எதிராக போட்ட கோல் 2-0 ஜப்பான் முன்னிலை வகித்த போதும் வெளியேற வழிவகுத்தது. குரூப் ஜி பிரிவில் ஜப்பான் அணி குறைந்த அளவில் மஞ்சள் அட்டைகளை பெற்றதால் செனகல் அணியை மீறி தகுதி பெற்றது.
ஒவ்வொரு ஆட்டம் முடிந்த போதும் அவற்றில் எதை சிறந்தது எனக் கூறுவது என ரசிகர்கள் முழிக்கும் நிலை ஏற்பட்டது. காலிறுதி முடிந்து தற்போது 4 அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளன. 
வார் தொழில்நுட்பம் அறிமுகம்: உலகக் கோப்பையில் அதிகபட்ச பெனால்டி ஷூட் அவுட்டாக 1990, 1998, 2002 =இல் அதிகபட்சம் 18 முறை பெனால்டி கிக் தரப்பட்டது. ஆனால் அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டது. வார் தொழில்நுட்பத்துக்கு பின் 28 பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. 
வார் எனப்படும் வீடியோ உதவி நடுவர் முறை பல்வேறு ஆட்டங்களின் முடிவுகளையே மாற்றி விட்டது.
பிரேஸில்-கோஸ்டா ரிகா ஆட்டத்தில் வார் தொழில்நுட்பத்தின்படி சரிபார்கக்ப்பட்டு பெனால்டி தரப்பட்டது.
48 முதல் தகுதி ஆட்டங்களில் 335 சம்பங்கவள் வார் தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டன. இதன் மூலம் சரிபார்ககப்பட்டன என் குறிப்பிடதக்கது.
அனைத்து வகைகளிலும் முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் ரஷியாவில் நடந்த போட்டியே சிறந்ததாக கருதப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jul/10/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-அதிர்ச்சிகரமான-முடிவுகள்-கடைசி-கட்ட-கோல்கள்-2956574.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.