Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை படைகள் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை :அரசாங்கம் திட்டவட்டம்

Featured Replies

இலங்கை  படைகள் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை :அரசாங்கம் திட்டவட்டம்   

 

 

 

(ரொபட் அன்டனி)

இலங்கை இராணுவப் படைகள் யுத்தத்தின்போது எந்தவொரு கட்டத்திலும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை.  இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரிக்கிறது.  இலங்கை   பாதுகாப்புத் தரப்பினர் கொத்தணிக்குண்டுகளை பாவித்தமைக்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை என்று   அமைச்சரவைப்  பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாநாயக்க தெரிவித்தார். 

அத்துடன் கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு  முதலில் முன்னாள் ஜனாதிபதியே   இணங்கினார். தற்போதைய அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத் தகவல்  திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற   வாராந்த  அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 அமைச்சர் அங்கு மேலும்  குறிப்பிடுகையில்;

யுத்தத்தின்போது இலங்கை  எந்தவொரு கட்டத்திலும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தவில்லை. இவ்வாறு  கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தியதாக  சர்வதேசத்தின் பல்வேறு தரப்புக்கள் குற்றம்சாட்டியபோதும்  அவற்றை நாம் நிராகரித்துள்ளோம்.  மற்றும்    அதற்கு  எவ்விதமான ஆதரங்களும்  இல்லை.  எதிர்வரும் காலங்களிலும் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்பது  இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.  அதேபோன்று   தற்போதைய நிலைமையில் 102 நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ள கொத்தனிக்குண்டுகள் தொடர்பான சர்வதேச சாசனத்திற்கு  (ஒஸ்லோ சாசனம்) இலங்கை   இணக்கம் தெரிவிக்கின்றது. இது தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

bom.jpg

கேள்வி:  இலங்கை  கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஒருசில தரப்புக்கள் குற்றம் சாட்டுவதாக கூறுகின்றீர்கள்  அந்த ஒருசில தரப்புக்கள் யார்?

பதில்: சர்வதேசத்தின் பல்வேறு தரப்புக்கள் குற்றம்சாட்டினர் அல்லவா அதனைத்தான் கூறுகின்றோம். 

கேள்வி   அப்படியாயின் கலப்பு நீதிமன்றத்தை உங்கள் அரசு ஏன் ஏற்றுக்கொண்டது?  

பதில் - கலப்பு நீதிமன்றத்தை   நாங்கள் அங்கீகரிக்கவில்லை.  கடந்த அரசாங்கத்தில்தான்  கலப்பு நீதிமன்றத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர்  கற்றறிந்த பாடங்களையும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து   அதனை சமாளித்துக்கொண்டனர்.  மஹிந்த ராஜபக்ஷ  கடந்த காலத்தில் சர்வதேசத்தை  நன்றாகவே ஏமாற்றியிருக்கின்றார். அதாவது  2009ஆம் ஆண்டு  13 பிளஸ் என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்ஷவே முதலில் கூறினார். இலங்கைக்கு வந்து  13 மைனஸ் என்று கூறினார். இவ்வாறு சர்வதேசத்தையும் இலங்கையையும் மஹிந்தவே ஏமாற்றினார் என்றார்.

http://www.virakesari.lk/article/31123

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆயுதங்களை விற்பனை செய்த நாடே மாட்டிவிடுவதும் உண்டு என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்கணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

இப்படியான ஆயுதங்களை விற்பனை செய்த நாடே மாட்டிவிடுவதும் உண்டு என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்கணும் .

உண்டு அல்ல....
வரலாறும் அதுதான்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.