Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

 

 

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

DXLafn3VwAAshKn.jpg

இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் யாழ். மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக .இளைஞர்களினால்

மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கடந்த சில வாரங்களாக   சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள்,அதிகபடியாக  படுகொலை கொலை செய்யப்பட்டனர்.

DXLafogVAAAANxh.jpg

இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

DXLZAhRUQAAS2I6.jpg

2009 இல் இதே போன்ற அழிவை ஈழத்தமிழினமும் சந்தித்திருந்தது. இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/31138

  • தொடங்கியவர்

கிழக்கு கூட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும் தாக்குதல்களுக்கு யாழ் – கிளிநொச்சியில் கண்டனம்…

syria.jpg?resize=720%2C450

சிரியாவின்  கிழக்கு கூட்டா மீது சிரிய படைகள் நடத்திவரும் தாக்குதல்கைளக் கண்டித்தும், அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று  மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

இதன்போது சிரியாவின் கூட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலயுறுத்தியுள்ளார்கள்.

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனயீர்ப்பு

kili-syria.jpg?resize=800%2C533

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று(01) கண்டன கவனயீர்ப்பு போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை இவர்கள் வெளிப்படுத்தியினர்.

ஜநாவே உனது கள்ள மௌனத்தை களை, ஈழத்திலிருந்து சிரியாவுக்கு குரல்,பொது மக்கள் கொல்லப்படுவதனை நிறுத்து, சிரியாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கு,2009 முள்ளிவாய்க்கால், 2018 இல் சிரியா, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கண்டன கவனயீர்ப்பில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

kili-syria2.jpg?resize=800%2C533kili-syria1.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/68893/

  • கருத்துக்கள உறவுகள்

ல்லோருக்காகவும் தமிழன் குரல் கொடுப்பான், ஆனால் தமிழன் அழியும்போது குரல் கொடுக்கத்தான் எவனுமில்லை. தமிழேன்டா!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ragunathan said:

ல்லோருக்காகவும் தமிழன் குரல் கொடுப்பான், ஆனால் தமிழன் அழியும்போது குரல் கொடுக்கத்தான் எவனுமில்லை. தமிழேன்டா!!!!!

ஐயா சம்பந்தன் ஐயா அம்பாறை முஸ்லீம்களுக்காக அறிக்கை விட்டிருக்கார் அங்கே நேற்று தமிழர் காணிகளை பிடித்த முஸ்லீம்களை கொஞ்ச தமிழ் மக்கள் போய் தடுத்ததை மறந்து இப்படியானவர்களும் இருக்கிறார்கள் அரிக்கப்பட்டு வரும் அட்டைப்பள்ளம் கிராமம் முஸ்லீம்கள் தமிழர் மயானங்களை கூட விடுவதாகவில்லை பிடிக்கப்பட்ட இடம் ஓர் மயான பூமி 

28511842_1642934135799617_529654692_n.jp

 

  • கருத்துக்கள உறவுகள்

28168367_2087542208149647_12734726436538

28378472_2087542424816292_90260140475940

  • தொடங்கியவர்

யாழில் கவனயீா்ப்பில் ஈடுபட்டவா்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய பெண்!

 

யாழில் கவனயீா்ப்பில் ஈடுபட்டவா்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய பெண்!

சிரியா நாட்டில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றபோது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை அச்சுறுத்தும் வகையில் பெண்ணொருவா் செயற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது குறித்த இடத்திற்கு வந்திருந்த நடுத்தர வயதுடைய பெண்ணொருவா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளாா்.

குறிப்பாக கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் கைகளில் ஏந்தியிருந்த பதாகைககளில் எழுதியுள்ள வாசகங்களை பாா்த்து அது தொடா்பில் கேள்வியெழுப்பியதாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

அத்துடன் கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கடுமையாக பேசியதுடன், விளையாட்டு துப்பாக்கியை நீட்டி கவனயீா்ப்பில் ஈடுபட்டவா்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளாா்.

இதேவேளை குறித்த பெண்ணின் செயலை பாா்த்து பொலிஸாா் மௌனமாக இருந்ததாகவும், குறித்த பெண் ஆா்ப்பாட்டம் முடிவடையும் வரை இவ்வாறே செயற்பட்டதாகவும் , தெரிவிக்கப்படுகின்றது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-protest-01

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கியைக் காட்டியவர் சிங்களவாராக இருக்கலாம். தமிழர் என்றால் அவர் கைது செய்யப்பட்டிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.