Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரனின் படத்துடன் முள்­ளி­வாய்க்­கா­லில் போராட்­டம்!! சிரி­யப் படு­கொ­லைகளை நிறுத்­தக் கோரி

Featured Replies

 
 
28379448_1614878135267217_21940332472531

பாலச்சந்திரனின் படத்துடன் முள்­ளி­வாய்க்­கா­லில் போராட்­டம்!!

சிரி­யப் படு­கொ­லைகளை நிறுத்­தக் கோரி

 

 

சிரிய நாட்­டில் ஏற்­பட்­டுள்ள போரி­னால் இடம்­பெ­றும் மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது.

முள்­ளி­வாய்க்­கால் முதன்­மைச் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்கள் தென்பட்டன.

சிரியப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­ முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இன்று முல்­லைத்­தீ­வு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்­டங்கள் இடம்­பெ­ற்றன.

 

28379529_1614877985267232_5781376422381228576953_1614878018600562_7760417058765628575798_1614878058600558_8997301143726028468480_1614878021933895_5697418837811328468244_1614878051933892_6284227646243228468025_1614877988600565_21038874538737

http://newuthayan.com/story/73259.html

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய மக்களுக்காக போராடி சீன் போட்டதுபோதும், போய் காணாமல்போன எமது உறவுகள், மீள் குடியேற்றத்துக்காக தவிப்பவர்கள், மீள குடியேறியும் வாழ்வாதாரம் ஏதும் இன்றி தவிக்கும் எமது மக்களுக்காக போராடுங்க,உதவி செய்யுங்க!

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது சிரியா எமக்கு குரல் கொடுத்ததா , அல்லது சிரிய மதத்தை சார்ந்தவர்கள் யாராவது ,எமக்காக அழாமல் இருந்தாலும் பரவாயில்லை, எம்மை பார்த்து சிரிக்காமலாவது இருந்தார்களா?

இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லபோனால், இன்று சிரியாவுடன் கைகோர்த்து நிற்கும் ஈரானும் ஈழத்தின் இறுதிபோருக்கு ஆயுதம் வழங்கியநாடுகளில் ஒன்று,முள்ளீவாய்க்காலில் எல்லாம் முடிந்ததும் மஹிந்தவை வாயார வாழ்த்திய நாடுகளிலும் ஒன்று!

அவர்களுக்காக போராட ,குரல் கொடுக்க ஆயிரம்பேர் உண்டு எமக்காக குரல் கொடுக்க எமக்குள்ளேயே யாரும் இல்லை!

 

 

  • தொடங்கியவர்

சிரியாவில் இடம்பெறும்  மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து  மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

 

 
 

 

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம்பெற்றது.

DSC_0041.JPG

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்  குறித்த போராட்டம் இடம் பெற்றது.

DSC_0042.JPG

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் குழந்தைகள் முதல் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அவர்களின் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0074.JPG

குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜும்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0063.JPG

போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர்  வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

http://www.virakesari.lk/article/31224

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.