Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் இனவாத தாக்குதல்

Featured Replies

அம்பாறையில் இனவாத தாக்குதல்

P21-b13e20d3e1d34701c35df2e6b9c3611230c9e481.jpg

 

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முடி­வு­களை எடுப்­ப­தற்கு முன்­னமே முஸ்­லிம்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளிக்கத் தீர்­மா­னித்­தார்கள். முஸ்­லிம்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மீது கொண்ட இரக்­கத்­தினால் அல்ல. மாறாக மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. இவற்­றி­லி­ருந்து பாது­காப்புப் பெற வேண்­டு­மாயின் புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்ய வேண்டு­மென்று முஸ்­லிம்கள் எண்­ணி­னார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெறும் அனைத்து ஒடுக்கு முறை­களும் தடுக்­கப்­படும். மீறிச் செயற்­ப­டு­கின்­ற­வர்­களை நாய்க் கூட்டில் அடைப்போம் என்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் சொன்­னார்கள். தேர்தல் முடி­வ­டைந்து நல்­லாட்­சியும் அமைக்­கப்­பட்­டது. முஸ்­லிம்கள் மிகுந்த மகிழ்ச்­சி­ய­டைந்­தார்கள். ஆனால், நல்­லாட்சி அர­சாங்கம் முஸ்­லிம்­களின் எதிர்பார்ப்பை நிறை­வேற்­ற­வில்லை. முஸ்­லிம்கள் இன்னும் இன­ரீ­தி­யான தாக்­கு­த­லுக்கு உட்­பட்டுக் கொண்டே இருக்­கின்­றார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் ஆளுங் கட்­சியில் பங்­கா­ளிகள் என்று அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றார்கள். அமைச்சர் பத­விகள் முஸ்லிம் சமூ­கத்தை எவ்­வி­தத்­திலும் பாது­காக்­கா­தென்­பது தெளி­வா­கி­யுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் நடத்­தப்பட்ட காலங்­களில் எல்லாம் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அமைச்­சர்­க­ளா­கத்தான் இருந்­துள்­ளார்கள்.

இந்த ஆட்­சியில் தமக்கு பாது­காப்பு கிடைக்கும், தமது பள்­ளி­வா­சல்கள் பாது­காக்­கப்­ப­டு­மென்று முஸ்­லிம்கள் நம்­பிக்கை வைத்த நிலை­யிலும் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்கள் மீது காட்டு­மி­ராண்டித்தனமான தாக்­கு­தல்கள் நடை­பெ­று­கின்­றன. கடந்த 26ஆம் திகதி அம்­பாறை நகரில் அமைந்­துள்ள ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீதும், முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீதும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­குதல் முஸ்­லிம்­க­ளி­டையே பலத்த அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் காலத்­திலும், அதற்குப் பின்­னரும் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அம்­பாறை நகர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீதான தாக்­குதல் மிகவும் மோச­மா­ன­தாக இருக்­கின்­றது. இவை­களை நடத்­தி­ய­வர்கள் அடை­யாளங் காணப்­பட்­டுள்ள போதிலும் இன­வா­திகள் அவர்­களை கைது செய்யக் கூடா­தென்று நிபந்­த­னை­களை விதிக்­கின்­றார்கள். தாக்­கு­தல்­தா­ரி­களை கைது செய்­யாமல் பாது­காப்­பதும், கைது செய்­ததன் பின்னர் முறை­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­தி­ருப்­பதும் இன­வா­தத்தை வளர்ப்­ப­தா­கவே அமையும்.

கடந்த காலங்­களில் பேரு­வளை, தர்கா நகர், ஜிந்­தோட்டை உட்­பட பல இடங்­களில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் போன்றே இத்­தாக்­கு­தலும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. குறித்த சம்­பவம் நடை­பெற்ற இரவு அம்­பாறை நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்கிச் சாப்­பிட்ட பெரும்­பான்மை இன ஒருவர் கொத்து ரொட்­டியில் வெள்­ளை­யாக காணப்­பட்ட ஏதோ ஒன்­றினை சுட்­டிக்­காட்டி கருத்­தடை மாத்­திரை கொத்து ரொட்­டியில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக ஹோட்டல் முத­லா­ளியை தாக்­கி­யுள்ளார். இதற்கு சுமார் 45 நிமி­டங்­களின் பின்னர் மோட்டார் சைக்­கிள்­க­ளிலும், வேறு வாக­னங்­க­ளிலும் சுமார் 100இற்கும் மேற்­பட்­ட­வர்கள் மூன்று தட­வைகள் இங்கு வருகை தந்து தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளார்கள். ஒவ்­வொரு குழுவும் வேறு­பட்ட வகையில் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளார்கள். ஹோட்­டலில் சம்­பவம் நடை­பெற்று ஒரு குறு­கிய நேரத்­திற்குள் இவ்­வாறு திட்­ட­மிட்டு தாக்­கு­தலை மேற்­கொள்ள முடி­யாது. மேலும், ஹோட்­டலில் ஏற்­பட்ட பிரச்­சி­னைக்கு சட்டம் இருக்­கின்­றது. குறிப்­பிட்ட கொத்து ரொட்­டியை பரி­சோ­தனை செய்­யலாம். இவைகள் நடை­பெ­ற­வில்லை. மேலும், கருத்­தடை மாத்­தி­ரையை பெண்­கள்தான் வாய் மூல­மாக சாப்­பிட வேண்டும். ஆண்கள் சாப்­பிட்டு கருத்­த­டையை ஏற்­ப­டுத்த முடி­யாது. இந்த உண்­மைகள் இருக்­கத்­தக்­க­தா­கவே தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

மேலும், குறிப்­பிட்ட ஹோட்­டலில் ஏற்­பட்ட பிரச்­சி­னைக்கு பள்­ளி­வா­ச­லுக்கும், அப்­பி­ரச்­சி­னை­யோடு சம்­பந்­தப்­ப­டாத ஏனைய ஹோட்­டல்­க­ளுக்கும் எந்த சம்­பந்­த­மு­மில்லை. அப்­ப­டி­யி­ருக்க எதற்­காக இத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது அடிப்­ப­டையில் இன­ரீ­தி­யான வன்­மு­றை­யாகும். மேலும், அம்­பாறை பொலிஸ் நிலை­யத்­திற்கும் பள்­ளி­வா­ச­லுக்கும் இடையே சுமார் 500 மீற்றர் தூரமே உள்ளது. தாக்­குதல் சம்­பவம் நடை­பெற்று முடிந்த பின்­னரே பொலிஸார் வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவை­களின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது அம்­பாறை சம்­பவம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஒரு திட்­ட­மிட்ட இன­வாத அச்­சு­றுத்தல் என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

சட்டம் அனைத்து இன மக்­க­ளுக்கும் சம­மாகச் செயற்­பட வேண்டும். சட்டம் முறை­யாகச் செயற்­படும் போது அங்கு புரிந்­து­ணர்வு ஏற்­படும். நாக­ரிகம் வளரும். நாடும் அபி­வி­ருத்­தி­ய­டையும். வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் சட்டம் பெரும்­பாலும் பார­பட்­ச­மின்றி அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.ஆகவே தான் இலங்­கையின் பாது­காப்பு கட்­ட­மைப்பில் மாற்றம் வேண்­டு­மென்று சிறு­பான்மை புத்­தி­ஜீ­வி­க­ளி­னாலும், சர்­வ­தே­சத்­தி­னாலும் தொடர்ந்­து­ கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கின்­றன. இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பற்ற நாடு என்று சர்­வ­தேச மன்­னிப்புச் சபையும் அறி­வித்­துள்­ளது.

2009ஆம் ஆண்­டிற்கு முதல் தமி­ழர்கள் பல­வாறு தாக்­கப்­பட்­டுள்­ளார்கள். இதனை தடுப்­ப­தற்கு தமிழர்கள் ஆயுதக் குழு போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். அது மட்டு­மல்­லாது தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் கார­ண­மாக விடு­தலைப் புலிகள் 2009ஆம் ஆண்டு தோற்­க­டிக்­கப்­பட்­டதன் பின்­னரும் தமி­ழர்­களின் உரி­மைக்­கான போராட்டம் தளர்ச்­சி­ய­டை­வில்லை. தற்­போதும் தமி­ழர்­களின் உரி­மைக்­கான போராட்டம் வேறு வடி­வத்தில் இடம்­பெற்றுக் கொண்டு தான் இருக்­கின்­றது. தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­ட­மையால் தான் அர­சாங்கம் பொறிக்குள் மாட்­டி­யுள்­ளது. ஆனால், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், கட்­சி­களும், புத்­தி­ஜீ­வி­களும் ஒரு­போதும் சர்­வ­தேச மயப்­ப­டுத்த முனை­ய­வில்லை. மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது அவர் நல்­லாட்சி நடத்­து­கின்றார். அங்கு மனித உரிமை மீறல்கள் நடை­பெ­ற­வில்­லை­யென்று முஸ்லிம் தலை­வர்கள் வெளி­நா­டு­க­ளுக்கு சென்று பரி­சாரம் செய்­தார்கள். தமது ஊர்­களில் மஹிந்­த­விற்கு ஆத­ர­வாக பேர­ணி­க­ளைக்­கூட நடத்­தி­னார்கள். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை சர்­வ­தேச மயப்­ப­டுத்தி தீர்வு ஒன்றை எட்­ட­ வ­லி­யு­றுத்­தாது அடுத்­தவன் குடியை கெடுக்கும் வேலை­யையும், தமக்கு தாமே குழி தோண்டும் வேலை­யையும் மட்­டுமே முஸ்லிம் தலை­வர்­களும், புத்­தி­ஜீ­வி­களும் செய்து கொண்­டி­ருந்­தார்கள். இன்றும் இத­னையே செய்து கொண்­டிக்­கின்­றார்கள். அமைச்சர் பத­வி­க­ளுக்­காக ஏங்கும் இவர்­களால் தங்கள் சமூகம் பற்றிப் பேசு­வ­தற்கு எங்கே துணிவு இருக்கப் போகி­றது .

இதேவேளை, அம்­பாறை சம்­ப­வத்­தை­ய­டுத்து முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களான பைசால் காசிம், ஹரீஸ், நசீர், மன்சூர் ஆகியோர் அங்கு சென்று மாவட்ட செய­லாளர் மற்றும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­னார்கள் . அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான றிசாட் பதி­யூ­தீனும் அம்­பா­றைக்கு விஜயம் செய்து சேதங்­களைப் பார்­வை­யிட்டார். அம்­பாறை பள்­ளி­வா­சலின் சேதங்­க­ளுக்கு மத்­தியில் ளுஹர் (பகல் நேரத்) தொழு­கையை நடத்­தினார். அர­சாங்க அதி­ப­ருடன் பேசினார். சேதங்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும், பள்­ளி­வா­சலில் பொலிஸ் சாவடி ஒன்­றினை அமைக்­கு­மாறும் கேட்டுக் கொண்டார்.

இந்­நி­லையில் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட 05 சந்­தேக நபர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளார்கள். இதேவேளை அமைச்சர் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்­ளிட்­ட­வர்கள் தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு நீதி விசா­ரணை வேண்­டு­மென்றும் கேட்­டுள்­ளார்கள்.

இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பை உறுதி செய்­யு­மென்று நம்ப இய­லாது. ஏனெனில், முதலில் முஸ்லிம் சமூ­கத்தைப் பற்­றிய தப்­ப­பிப்­பி­ரா­யங்கள் களை­யப்­படல் வேண்டும் அதற்­கு­ரிய வேலைத் திட்­டத்தை தயா­ரிக்க வேண்டும்.

    மேலும், தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­பட வேண்டும். இவை­களை செய்­யாது வெறும் கைதுகள் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பை வழங்­காது. பொலிஸார் பொது மக்­களின் நம்­பிக்­கையை பெற்றுக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 

அம்­பாறை சம்­ப­வத்­துக்கு உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான அழுத்­தங்­களை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுக்க வேண்டும். இம்­மா­வட்ட முஸ்­லிம்கள் கடந்த காலங்­களில் முஸ்லிம் காங்­கி­ரஸை ஆத­ரித்­த­வர்கள். தற்­போதும் அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கே தமது ஆத­ரவை வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆதலால், ஏனைய கட்­சி­களை விட முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்­குத்தான் இதில் அதிக பொறுப்பும், கட­மையும் உள்­ளது. இறக்­காமம் - மாயக்­கல்­லி­ம­லையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்ட போது இரண்டு வாரங்­களில் அதனை அகற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­போ­மென்று ரவூப் ஹக்கீம் அன்று தெரி­வித்­தி­ருந்தார். சிலையை அகற்ற முடி­ய­வில்லை. தற்­போது புத்தர் சிலைக்கு சிறிய கூடாரம் போடப்­பட்­டுள்­ளது.

இந்த நாட்டில் மீண்­டு­மொரு இனக் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பௌத்த பேரி­ன­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ளார்கள். கடந்த காலங்­களில் தமி­ழர்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் மோத­விட்­டார்கள். தற்­போது இவர்­களை மோத வைக்க முடி­யாது. இரண்டு சமூ­கங்­களும் இன மோத­லி­லிருந்து நிறை­யவே பாடங்­களைக் கற்­றுள்­ளன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது மக்கள் நம்­பிக்­கையை இழந்து விட்­ட­தாக கன­டாவின் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் கிரிஸ்­தி­ரியா பிறிலன்ட் மனித உரிமைப் பேர­வையின் 37ஆவது கூட்டத் தொடரில் தெரி­வித்­துள்ளார். இதனை அர­சாங்கம் கருத்திற் கொள்ள வேண்டும். இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்கள் உள்ள நிலையில் முஸ்­லிம்­களின் மீதான தாக்­கு­தல்கள் இன்னும் மோச­மான விளை­வினை நாட்­டிற்கு ஏற்­ப­டுத்தும் என்­ப­தனை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆதலால், தமி­ழர்­களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமாயின் இரு இனங்களும் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்கு தயாராக வேண்டும். தங்களின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படும் போதுதான் அரசாங்கத்திற்கு அதிக அழுத்தங்கள் ஏற்படும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

ஆதலால், முஸ்லிம்கள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக செயற்படுவதற்கு முன் வருதல் வேண்டும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதான முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்கள் உட்பட) ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம் முஸ்லிம்கள் எல்லாக் கட்சிகளும் இணைந்த கூட்டமைப்பை விரும்புகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இதேபோன்று தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டும். இவர்கள் ஒற்றுமைப்படாது பிரிந்து நிற்பது பேரினவாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-04#page-2

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

ஆதலால், தமி­ழர்­களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமாயின் இரு இனங்களும் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்கு தயாராக வேண்டும். தங்களின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படும் போதுதான் அரசாங்கத்திற்கு அதிக அழுத்தங்கள் ஏற்படும். பிரச்சினைகளுக்கு தீர்வும் கிடைக்கும்.

ஆதலால், முஸ்லிம்கள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு கூட்டமைப்பாக செயற்படுவதற்கு முன் வருதல் வேண்டும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதான முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்கள் உட்பட) ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம் முஸ்லிம்கள் எல்லாக் கட்சிகளும் இணைந்த கூட்டமைப்பை விரும்புகின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இதேபோன்று தமிழ்க் கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டும். இவர்கள் ஒற்றுமைப்படாது பிரிந்து நிற்பது பேரினவாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதனை தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம் சாமி ....
முஸ்லிம்களும் சிங்களவர்களும் அடிபட்டாலும் ,மருந்து தமிழர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும். தமிழர்கள் ஒற்றுமை ஒற்றுமை என்று 
ஓலைப்பாயில் ஒண்ணுக்கடித்தவாறு  புலம்பவேண்டும் , மற்ற இரண்டு இனமும் சேர்ந்து தமிழரை மொத்தவேண்டும் 
தமிழன் இருக்கும் கோவணமும் பறிபோய் நடுத்தெருவில் நிக்கவேண்டும்  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.