Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த்

Featured Replies

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த்

 

 
rajini-7k

வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் 

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை  பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும். 

அரசியவாதிகள் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மேலும் கலைஞர், மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். தன்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை.

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது. 

தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.  13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. திமுக தலைவர் கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன். என்னால் எம்ஜிஆராக முடியாது எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்.  இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். தூய்மைதான் ஆன்மிக அரசியல். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.  

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர்தான். எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது; எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி. எம்ஜிஆரை நான் முதன்முதலாக பார்த்தபோது சூரியன் போல இருப்பவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன் என்று கூறினார். 

மேலும் தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை.  மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள், அதுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம் ஆனால் அரசியலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

http://www.dinamani.com/latest-news/2018/mar/05/எம்ஜிஆர்-ஆட்சியை-என்னால்-கொடுக்க-முடியும்-ரஜினிகாந்த்-2874969.html

 

 

திருமணம், திருமண மண்டபம்; எம்ஜிஆர் செய்த பேருதவி: ரஜினி நெகிழ்ச்சி

 

 
download%2012

ரஜினிகாந்த், எம்ஜிஆருடன் ரஜினிகாந்த்- கோப்புப் படம்

தன்னுடைய திருமணத்திலும், தனது திருமண மண்டபம் கட்டுவது இரண்டிலும் கேட்காமலே எம்ஜிஆர் உதவியதையும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எம்ஜிஆர் குறித்த அனுபவங்களைப் பற்றி ரஜினிகாந்த அவரது சிலை திறப்பு விழாவில் பேசியதாவது:

எம்ஜிஆரை முதன் முதலில் நான் பார்த்தது 1973-ல். பிலிம் இன்ஸ்டிட்யூட் வகுப்பு முடிந்ததும் டெலிபோன் பேச நான் வெளியே வந்தேன். அப்போது எல்லோரும் ஓடிப் போனார்கள் என்ன என்று பார்த்தேன். அம்பாசிடர் கார் வந்தது.

கார் கண்ணாடி இறங்குது தொப்பி போட்டு ஆப்பிள் கலரும், மஞ்சள் கலரும் கலந்த சூரியன் போன்ற முகம் எட்டிப் பார்த்து சிரித்தது. இவருக்குப் போய் சந்திரன்னு பேர் வச்சாங்களேன்னு நினைத்தேன்.

அதன் பிறகு 1975-ல் 'மூன்று முடிச்சு' ஷூட்டிங் செட் திடீரென அமைதியானது என்ன விபரம் என்று கேட்டேன். சின்னவர் சூட்டிங் என்றார்கள். திரையுலகம் ஆனாலும் அரசியல் ஆனாலும் அவர் ராஜா மாதிரி இருந்தார். அதன் பின்னர் 1978-ல் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது என்னை நலம் விசாரித்து உடல் நலம் சரியான பின்னர் வந்து சந்திக்கச் சொன்னார்.

அப்போது போய் பார்த்தேன். அறிவுரை சொன்னார். கல்யாணம் எப்போது செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார். இன்னும் பெண் கிடைக்கவில்லை என்றேன். சீக்கிரம் நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்ளுங்கள். பெண்ணைப் பார்த்ததும் முதலில் எனக்குத்தான் சொல்ல வேண்டும் என்றார்.

அதே போல் லதாவைப் பார்த்ததும் முதலில் என் அண்ணனுக்கு கூட சொல்லவில்லை, எம்ஜிஆருக்குதான் சொன்னேன். கேட்டு சந்தோஷப்பட்டார். கல்யாணத்துக்கு கூப்பிடு என்றார். ஆனால் பெண் வீட்டில் சில காரணங்களால் ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மாதம் கழிந்த நிலையில் என்ன ஆயிற்று கல்யாணம் என்று கேட்டார். நான் பெண் சம்மதம். ஆனால், அவர்கள் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று சொன்னேன்.

அவ்வளவு நாட்கள் சம்மதம் கொடுக்காத லதா வீட்டில் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்கள். எப்படி என்றால் அந்த குடும்பத்தில் பெரியவர் ஒய்.ஜி.பார்த்தசாரதியை அழைத்து ஏன் தயங்குகிறீர்கள், ரஜினி நல்ல பையன், கொஞ்சம் கோபக்காரன் உங்கள் பெண்ணை கொடுங்க நல்லா பார்த்துப்பான் என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒய்.ஜி.பி மனைவி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இன்று என் வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கிறேன் என்றால் அதற்கு காரணமே பொன்மனச்செல்வர் எம்ஜிஆர்தான்.

1984-ல் நான் திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருக்கிறேன். பவுண்டேஷன் எல்லாம் முடிந்து வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வேலை நடக்கவில்லை. தடைபடுகிறது. ஒரு முக்கியமான மனிதரால் தடைபடுகிறது ஏன் என்று தெரியவில்லை. யார் போனாலும் வேலை நடக்கவில்லை. நானும் நேரே சென்றேன் நடக்கவில்லை.

அப்போதுதான் நண்பர்கள் சொன்னார்கள் சிஎம்-ஐ போய் பாருங்கள் வேலை முடியும் என்றார்கள். எனக்கு இது போன்று சிபாரிசுக்கு போய் நின்றதில்லை. எம்ஜிஆரிடம் அனுமதி கேட்டேன் வரச்சொன்னார், மும்பையிலிருந்து அடித்துப் பிடித்து ராமாவரம் தோட்டம் சென்றேன். எம்ஜிஆர் அழைத்து விவரம் கேட்டார்.

திருமண மண்டபம் கட்டுவதில் உள்ள சிக்கலைச் சொன்னேன். 'முன்பே ஏன்' சொல்லவில்லை என்று கேட்டவர், 'எனக்கு இரண்டு நாள் டைம் கொடு' என்றார். நான் மும்பையிலிருந்து ஷூட்டிங்கை விட்டு வந்ததை சொன்னேன். 'ஷூட்டிங் வேலையைப் பாருங்கள். முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள்’ என்றார்.

பத்து நாட்கள் கழித்து சென்று பார்த்தேன். மண்டபம் கட்ட தடையாக இருந்த அந்த பெரிய மனிதர் கைகட்டியபடி நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் என்னைக்காட்டி எம்ஜிஆர் பேசினார். 'நடிகர்கள் சம்பாதிப்பது கடினம், அதை சேர்த்து வைக்க நினைப்பதை நாம் தடுக்கலாமா?' என்று கேட்டார்.

உடனடியாக அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் திருநாவுக்கரசருக்கு போனை போடச்சொன்னார். 3 நாளில் நான் கேட்ட என்.ஓ.சி வந்தது. இன்று ராகவேந்திரா மண்டம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர் தான், அவர் போன்ற மனிதர்கள் தெய்வத்துக்கு சமானம்.''

இவ்வாறு ரஜினி பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22936497.ece?homepage=true

 

 

ஜெயலலிதா இருக்கும்போது அரசியலுக்கு வர பயந்தேனா?- ரஜினி விளக்கம்

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

ஜெயலலிதா இருக்கும்போது ஏன் அரசியலுக்கு வரவில்லை, பயமா என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா இருக்கும்போதே 1996-ல் வாய்ஸ் கொடுத்தவன் நான் என்று ரஜினி பேசினார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில், ''ஜெயலலிதா இருக்கும்போது ஏன் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை? பயமா என்று கேட்கிறார்கள். எனக்கு எதற்கு பயம்? ஜெயலலிதா இருக்கும்போதே 1996-ல் வாய்ஸ் கொடுத்தவன் நான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று நினைத்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது என்பது உண்மை. நல்ல திறமையான, சக்திவாய்ந்த இரு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஜெயலலிதா போல கட்சியை இந்தியாவில் யாரும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை.

எனது நண்பர் கருணாநிதி 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் கட்சியை கட்டிக்காத்தவர். பல தலைவர்களை உருவாக்கியவர். அவர் தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார். இந்த சூழலில் தமிழகத்துக்கு ஒரு தலைவன் தேவை. அந்த இருவரின் இடத்தை நிரப்புவதற்கு நான் வருகிறேன். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22936269.ece?homepage=true

நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்னை வாழ்த்த வேண்டாம்; திட்டாதீர்கள்: ரஜினி ஆவேசம்

 

 
download%2011

எம்ஜிஆர், ரஜினிகாந்த் - கோப்புப் படம்

அரசியலுக்கு வரும் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது, நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்னை வாழ்த்த வேண்டாம், திட்டாதீர்கள் என்று ரஜினிகாந்த் ஆவேசமாகப் பேசினார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவருடைய பேச்சில் ஆவேசம் தெறித்தது.

அப்போது ரஜினி பேசியதாவது:

எம்ஜிஆர் சிலையை திறக்க அழைத்தபோது எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்று கேட்டேன். எம்ஜிஆர் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் திரையுலகிருந்து வந்தவர், ஜெயலலிதா திரையுலகிலிருந்து வந்தவர். அந்தத் தாய் வீட்டிலிருந்து வந்தவன் என்ற முறையில் எம்ஜிஆர் சாருக்கு பெரிய மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

எனக்கும் எம்ஜிஆருக்கும் பெரிய பந்தம். அது யாருக்கும் தெரியாது. ஏன் இன்னொருத்தர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரக்கூடாது. நாங்க மேக்கப் போட்டு உங்க ஹீரோயின் கூட நடிக்க வந்தோமா? நீங்கள் மட்டும் ஏன் கரைவேட்டி கட்டி அரசியலுக்கு வருகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நான் சொல்கிறேன், அய்யா நான் என் வேலையை ஒழுங்கா பார்க்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லையே, 96-லேயே என் மீதும் அரசியல் தண்ணீர் பட்டுவிட்டது. கருணாநிதி, மூப்பனார், சோ மூலம் நானும் கொஞ்சம் அரசியல் கற்றுக்கொண்டேன்.

இந்த மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் வரவேற்க வேண்டாம், ஏன் எதிர்க்கிறீர்கள். அரசியல் முள், பாம்பு, கல் நிறைந்த பாதை என்று எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். இதை எல்லாம் இருந்தும் இந்த வயதில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வந்துள்ளேன். என்னை வாழ்த்த வேண்டாம், ஏன் திட்டுகிறீர்கள்.

எனக்கு இந்த திட்டும் அரசியல் வேண்டாம். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. சத்யமாக யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது. ஆமாம் எம்ஜிஆர் யுக புருஷர், அவரைப்போல் ஆகவேண்டும் என்று நினைத்தால் அந்த நபரைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது.

ஆனால் அவரது ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும். என்னால் கொடுக்க முடியும். மக்களின் ஆசியுடன், இளைஞர்கள் ஆதரவுடன், நல்ல டெக்னாலஜி வைத்து திறமைசாலிகளை உடன் வைத்து என்னால் அரசியல் தர முடியும். ''

இவ்வாறு ரஜினி பேசினார்.

இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள்: ரஜினி அதிரடி

 

 
rajpg

ரஜினி | படம்: பிடிஐ.

இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள் என்று ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்கலைக்கழக மேடையில் மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:

''ஆன்மிக அரசியல் என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, சாதி, மதமற்ற, அறவழியிலான, தூய்மையான அரசியல்தான் ஆன்மிக அரசியல். எல்லா ஜீவன்களும் ஒன்று என்றும், இறை நம்பிக்கை உள்ளதும் தான் ஆன்மிக அரசியல். அப்போ திராவிட அரசியலில் இதெல்லாம் இல்லையா என்றால் இனிமேல்தான் ஆன்மிக அரசியலைப் பார்க்கப் போகிறீர்கள். கொள்கை கேட்டால் தலை சுத்துது என்று சொன்னதாக சொல்கிறார்கள்.

31-ம் தேதி அரசியல் முடிவை அறிவிப்பதாகச் சொன்னேன். 29-ம் தேதி உங்கள் கொள்கை என்ன என்று கேட்டார்கள். பொண்ணைப் பார்க்கப் போகும் போதே இன்விடேஷன் கேட்டால் எப்படி?

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், மேடையில் மக்கள் முன்னால் இதைப்பற்றிப் பேசுகிறார்கள், கிண்டல் செய்கிறார்கள். மக்கள் முன் பேசும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.'' என்று ரஜினி பேசினார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ரஜினி வருகையை ஒட்டி வழிநெடுக பேனர்கள்; வாகன நெரிசல்

ரஜினி

ரஜினி கலந்துகொண்ட கூட்டத்திற்காக, அவர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மிகப் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதாக, மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நாளில், இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

திங்கட்கிழமையன்று ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கூட்டம் நடக்கும் கல்லூரி சென்னையை அடுத்துள்ள வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மாலை நான்கு மணியளவில் ரஜினி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.

இதனால், அவரை வரவேற்ற சென்னை கோயம்பேட்டிலிருந்து வேலப்பன்சாவடி செல்லும் வழியெங்கும் ரசிகர்கள் கொடிகளுடனும் மேள தாளங்களுடனும் காத்திருந்தனர். இதனால், கோயம்பேடு பாலத்திலிருந்து வேலப்பன் சாவடியில் உள்ள பாலம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எங்கெல்லாம் ரசிகர்கள் திரண்டு நின்றார்களோ, அங்கெல்லாம் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல வேண்டியிருந்தது.

சென்னையில் ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்க பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அந்தச் சாலை எங்கும் இரு புறங்களிலும் ரஜினியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் நடுவில் உள்ள தூண்களிலும் பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

ரஜினி

இந்த நிலையில்தான், எம்.ஜி.ஆர். கல்லூரியில் பேச்சைத் துவங்கிய ரஜினி, இப்படி பேனர்கள் வைக்கப்பட்டதற்கு வருத்தத்தைத் தெரிவித்தார். "தயவுசெய்து இதுபோல வருங்காலத்தில் செய்ய வேண்டாம். இடைஞ்சலாக இருந்திருந்தால் மக்கள் மன்னிக்கனும்" என்றும் கூறினார்.

சென்னையில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி புகார் கடிதம் அளித்திருந்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதனை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சென்னை நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாகவும் இது பற்றிய அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில்தான் பெரும் எண்ணிக்கையில் ரஜினியின் வருகைக்காக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

http://www.bbc.com/tamil/india-43297691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.