Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் :

Featured Replies

யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் :

01-1.jpg?resize=800%2C497

யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் அவர்களது குழுவினரிடம் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா. பிரதிநிதி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இன்று (11) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் சந்தித்து முஸ்லிம்களுக்கு எதிரான கண்டி, அம்பாறை இனவாத வன்செயல்களை மையப்படுத்தி கலந்துரையாடியபோதே ரவூப் ஹக்கீம் இதனை அவர்களது கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, கபீர் ஹாசிம், றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் கருத்துகளை முன்வைத்தனர். முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸும் இதில் கலந்து கொண்டார்.

ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் பெல்ட்மன் முன்னிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

இலங்கையில் இனவாதம் ஆழமாக வேரூன்றிவிட்டது. வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியாத நிலை காணப்படுகிறது. அம்பாறை மற்றும் கண்டி இனவாத வன்செயல்களின்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும், சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துவதற்கும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் நடந்த கண்டி, அம்பாறை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களின்போது உள்ளூர் மற்றும் அயலூர் பெரும்பான்மை சமூகத்தினருடன் தூர இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அண்மைக்காலமாக தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சியினரும் மாறிமாறி எதிர்த்து பேசுவது இதில் இலாபம் தேட முற்படும் வேறு அரசியல் கட்சிகளுக்கு இது பெரியதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டளவில் இருந்து இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான 350 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போதிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால் இங்கு ஜனநாயகத்திலும், அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் காரணமாக அங்கு பெரும்பான்மையினராக வாழ்ந்துவந்த முஸ்லிம்களின் பரம்பலும் விகிதாசாரமும் குறைவடைய நேர்ந்துள்ளது என்றார்.

இவ்வாறாக பிந்திய இனவாத தாக்குதல்கள் புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவிலும் நடைபெற்றுள்ளது. இவற்றை இன்னமும் கட்டுபடுத்த முடியாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் ஐ.நா. பிரதிநிதியிடம் கூட்டாக சுட்டிக்காட்டிய முஸ்லிம் அமைச்சர்கள், இஸ்லாம் போர்பியா என்கின்ற இஸ்லாத்துக்கு எதிரான அச்ச உணர்வு மேலோங்கியிருப்பது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் வன்முறையில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என கூட்டாக தெரிவித்தனர்.

இவற்றை கவனமாக செவிமடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான வன்செயல்கள் பாதிப்பதாக அமையும் என்றும், கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமசிட்டா, இலங்கைக்கான ஐ.நா. நல்லிணக்க, அபிவிருத்தி ஆலோசகர் கீதா சப்ஹர்வால் ஆகியோரும் இந்தக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

02-3.jpg?resize=800%2C42904-1.jpg?resize=800%2C40405-1.jpg?resize=800%2C44406.jpg?resize=800%2C438

http://globaltamilnews.net/2018/70397/

  • தொடங்கியவர்

யுத்தத்தின் பின் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன ; ஐ.நா. பிரதிநிதியிடம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தெரிவிப்பு

இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

un.jpg

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருக்கும் அவரை, சினமன் கிரான்ட் ஹோட்டலில் சந்தித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அம்பாறையிலும், கண்டியிலும் முஸ்லிம்கள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும், சொத்துக்கள் மீதும் நடாத்தப்பட்ட கொடூரமான வன்முறைகளை விபரித்ததுடன், இன்னும் இவ்வாறான அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டுவராமல் இருப்பதாகத் தெரிவித்தனர். 

_01.JPG

இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், பைசர் முஸ்தபா மற்றும் இராஜாங்க அமைச்சர் பௌசி, முஜிபுர் ரஹ்மான் எம்.பி ஆகியோருடன், முஸ்லிம் காங்கிரஸின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஏ.ஆர்.ஹபீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஐ.நா சபையின் இராஜதந்திரியுடனான இந்தச் சந்திப்பின் போது, முஸ்லிம் தலைவர்கள் கூறியதாவது, 

_02.JPG

முஸ்லிம்களின் பள்ளிவாசலையும், சொத்துக்களையும் அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு குறிவைத்தே இந்த வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களின் பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்காலாம். முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், ஓரிரு நாட்களில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். 

_04.JPG

எனினும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும், வன்முறையாளர்கள் தமது கைங்கரியத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர் என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும், பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளை மையமாக வைத்தே செயற்படுகின்றன. முஸ்லிம்கள் மீது வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், தமது கட்சிக்கு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கி இல்லாமல் போய்விடும் என்ற அச்சம், அரசின் அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு இருக்கின்றது என்றே நாம் எண்ணுகின்றோம்.

_05.JPG

எனவே, இந்த மனோபாவத்தை அவர்கள் இல்லாமலாக்க வேண்டுமென்று குறிப்பிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள், இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழுவும் இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களைப் பற்றி பிழையான கருத்துக்களையும், தவறான எண்ணங்களையும் பரப்பி வருவதே இவ்வாறான சம்பவங்கள் விஷ்வரூபம் எடுக்க காரணமாய் அமைகின்றது என்றும் குறிப்பிட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு இலங்கையில் உள்ள ஐ.சீ.சீ.பி.ஆர் சட்டத்தின் கீழ், அதிகபட்ச தண்டனை வழங்க ஐ.நா. வலியுறுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்படாமல் தப்பியிருக்கும் வன்முறையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த ஐ.நா. உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

_06.JPG

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தைப் பாதுகாக்கும் பொலிஸார் தமது கடமைகளை பாரபட்சமின்றி செய்யும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, சிறுபான்மை மக்களுக்கும் பொலிஸார் நீதியாக கடமைகளை மேற்கொள்ளும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்படுவது காலத்தின் தேவையாகும் என்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் போது, அமைச்சர்களான  ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் வன்முறைகள் மிகவும் மோசமாக இடம்பெற்ற போது, தாங்கள் அந்தப் பிரதேசத்தில் நின்று கண்ட காட்சிகளையும், நடைபெற்ற சம்பவங்களையும் விபரித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31528

  • தொடங்கியவர்

சர்­வ­தேசம் அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்டும்

02-fe8b2804b900f4e14b6c38d1481572d73da8e0a8.jpg

ஐ.நா.அரசியல்துறை செயலரிடம் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் கூட்­டாக வேண்­டுகோள்

(எம்.சி.நஜி­முதீன்)

இலங்கை முஸ்­லிம்கள் மீது தொடர்ச்­சி­யாக கட்­ட­விழ்த்­து­வி­டப்­படும் வன்­மு­றை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேசம் பாரிய அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்டும் என ஐக் ­கிய நாடுகள் சபையின் அர­சியல் அலு­வல்­க­ளுக்­கான உதவிப் பொதுச்­செ­ய­லாளர் ஜெப்ரி பெல்ட்­ம­னிடம் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் வேண்­டிக்­கொண்­டனர். 

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டி­ருக்கும் ஜெப்ரி பெல்ட்­மனை முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நேற்று காலை கொழும்பில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். அதன்­போதே குறித்த விட­யத்­தினை அவ­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். 

சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான ரிஷாட் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், பைசர் முஸ்­தபா, இரா­ஜாங்க அமைச்சர் பௌசி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர்.ஏ.ஆர்.ஹபீஸ், முஸ்லிம் காங்­கி­ரஸின் வெளி­வி­வ­காரப் பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

அதன்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் கருத்து தெரி­விக்­கையில் அம்­பாறை மற்றும் கண்­டியில் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன் பள்­ளி­வா­சல்கள் உட்­பட சொத்­து­க­ளுக்கும் சேதம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவ்­வா­றான முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் இன்னும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. 

முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­ச­லையும் சொத்­துக்­க­ளையும் கப­ளி­கரம் செய்யும் நோக்கில் இவ்­வா­றான அட்­டூ­ழி­யங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. கண்­டியில் இடம்­பெற்ற அசம்­பா­வித்­தின்­போது பொலி­ஸாரும் பாது­காப்­புப்­த­ரப்­பி­னரும் முன்­வந்து உட­னடி நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் அச்­சம்­ப­வத்­தினைத் தடுத்­தி­ருக்­காலாம். எனினும் பொலிஸ் ஊர­டங்கு அமுலில் இருந்­த­போதும் வன்­மு­றை­யா­ளர்கள் தமது கைங்­க­ரி­யத்தை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்­டுள்­ளனர்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பெரும்­பான்மை இன மக்­களின் வாக்­கு­களை மைய­மாக வைத்தே செயற்­ப­டு­கின்­றன. அத­னா­லேயே இவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. முஸ்­லிம்கள் மீது வன்­மு­றை­களை கட்­ட­விழ்ப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்தால் தமக்கு பெரும்­பான்மை மக்­களின் வாக்கு வங்கி இல்­லாமல் போய்­விடும் என்ற அச்சம் குறித்த கட்­சி­க­ளிடம் உள்­ளது. எனினும் அந்த மனோ­பாவம் கைவி­டப்­பட வேண்டும்.

மேலும் குறித்த வன்­முறை சம்­ப­வத்தில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­வ­தற்கு ஐ.நா வலி­யு­றுத்த வேண்டும். கைது செய்­யப்­ப­டாமல் தப்­பி­யி­ருக்கும் வன்­மு­றை­யா­ளர்­க­ளையும் சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு ஐ.நா. உதவ வேண்டும். மேலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்­டனர்.

இதே­வேளை ஐ.நா. உதவி செய­லாளர் நாயகம் பெல்ட்மன் முன்­னி­லையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்­பி­டு­கையில் 

இலங்­கையில் இன­வாதம் ஆழ­மாக வேரூன்­றி­விட்­டது. வெறுப்­பூட்­டத்­தக்க பேச்­சுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட முடி­யாத நிலை காணப்­ப­டு­கி­றது. அம்­பாறை மற்றும் கண்டி இன­வாத வன்­செ­யல்­க­ளின்­போது சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­வ­தற்கும், சட்­டத்தை உரிய முறையில் செயற்­ப­டுத்­து­வ­தற்கும் போதிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

அண்­மையில் நடந்த கண்டி, அம்­பாறை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத வன்­செ­யல்­க­ளின்­போது உள்ளூர் மற்றும் அயலூர் பெரும்­பான்மை சமூ­கத்­தி­ன­ருடன் தூர இடங்­க­ளி­லி­ருந்து அழைத்து வரப்­பட்­ட­வர்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். அண்­மைக்­கா­ல­மாக தேசிய அர­சாங்­கத்­தி­லுள்ள இரண்டு பிர­தான கட்­சி­யி­னரும் மாறி­மாறி எதிர்த்து பேசு­வது இதில் இலாபம் தேட முற்­படும் வேறு அர­சியல் கட்­சி­க­ளுக்கு இது பெரி­ய­தொரு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் 2012ஆம் ஆண்­ட­ளவில் இருந்து இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் உக்­கி­ர­ம­டைந்து வரு­கின்­றன. 2014ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 350 சம்­ப­வங்கள் நடந்­துள்­ளன. அவற்றில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக போதிய சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. 

இதனால் இங்கு ஜன­நா­ய­கத்­திலும், அர­சாங்­கத்­திலும் முஸ்­லிம்கள் நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்­றனர். அம்­பாறை மாவட்­டத்தில் திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­களின் கார­ண­மாக அங்கு பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்­து­வந்த முஸ்­லிம்­களின் பரம்­பலும் விகி­தா­சா­ரமும் குறை­வ­டைய நேர்ந்­துள்­ளது என்றார்.

மேலும் பிந்­திய தாக்­கு­தல்கள் புத்­தளம் மாவட்­டத்தில் ஆன­ம­டு­விலும் இடம்­பெற்­றுள்­ளன. இவற்றை இன்­னமும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் இருப்­பது கவ­லை­ய­ளிக்­கின்­றது என்று ஐ.நா. பிர­தி­நி­தி­யிடம் கூட்­டாக முஸ்லிம் அமைச்­சர்கள் சுட்­டிக்­காட்­டினர் , 

இவற்றை கவனமாக செவிமடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான வன்செயல்கள் பாதிப்பதாக அமையும் என்றும், கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐ.நா. அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமசிட்டா, இலங்கைக்கான ஐ.நா. நல்லிணக்க, அபிவிருத்தி ஆலோசகர் கீதா சப்ஹர்வால் ஆகியோரும் இந்தக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-12#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதே முஸ்லீம் தலைவர்கள்.. யுத்தத்தின் போது.. இதே சிங்கள பெளத்த பேரினவாதிகளின் பின்னால் நின்று கொண்டு.. சவுதி.. பாகிஸ்தான் வரை சென்று பணமும்.. ஆயுதங்களும் பெற்றுக் கொடுக்க பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு.. தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரை.. நில ஆக்கிரமிப்புப் போரை.. பயங்கரவாதத்திற்கு எதிரான போரென சித்தரித்த சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு முன்னெடுத்துச் சென்ற போது.. அந்த வேளையில் நிகழ்ந்த பெரும் மானுத் துயரைக் கூட புரிந்து கொள்ள முனையாமல்.. காட்டிக்கொடுப்பிலும்.. பால்சோறு தின்பதிலும் ருசியாக காலம் கழித்தவர்களுக்கு.. வரலாறு.. இன்று ஒரு சின்ன அத்தியாயத்தை அவர்களின் மத வெறிக்கு பரிசளித்துள்ளது.

இதனையும் இவர்கள்.. தமிழர்களின் நிலத்தை வளத்தை சுரண்டவே தான் பாவிப்பார்கள்.

எனவே.. தமிழ் மக்களே.. சொறீலங்காவில் தற்போது நிகழும் சம்பவங்களை இட்டு மிக மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

வடக்குக் கிழக்கில் முளைத்து வரும்.. பேரீச்சைகளும்.. பள்ளிவாசல்களும்.. காடழிப்பு கட்டாய குடியிருப்புகளும்.. இந்தக் கடையழிப்பின் பின் இன்னும் உக்கிரமடையச் செய்யப்படலாம். 

இது.. முஸ்லிம்.. சிங்கள பெளத்த கூட்டுச் சதியாக கூட இருக்கலாம். tw_angry:

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை சர்வதேச அரங்கு வரை சென்று சிங்களவர்களுக்காக.. நியாயப்படுத்திய... இந்த முஸ்லீம் மத வெறி இஸ்லாமிய அடைப்படைவாத பயங்கரவாதத் தலைவர்கள்.. வெறும் கடை எரிப்பு..வீடுடைப்புக்காக.. பள்ளிவாசல் கண்ணாடி உடைப்புக்கு எதிராக மிகப் பலத்த குரலில் ஓலமிடுவது..  ஓநாய்களின் ஓலத்திற்கு ஒப்பானது.

பாகிஸ்தான் சவுதி போன்ற எல்லா இஸ்லாமிய நாடுகளின்  ஐ நா மனித உரிமை சபையில்.. தமிழ் மக்கள் மீதான சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இன அழிப்பை நியாயப்படுத்திக் கொண்டிருந்த கடந்த காலம் அவ்வளவு இலகுவில் மறக்கப்படக் கூடிய வரலாற்றுப் பக்கங்கள் அல்ல. 

அதனை எழுதிய முஸ்லீம்களுக்கு அல்காவின் ஒரு சின்னஞ் சிறிய தண்டனையாகக் கூட.. கண்டிச் சம்பவங்களைப் பார்க்கலாம். அவ்வளவே. 

தமிழீழ விடுதலைப்புலிகளின் இருப்பே.. இலங்கைத் தீவில் இனக் கலவரங்களுக்கான தயக்க காரணியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளே இதனைப் பல தடவைகள் சொல்லியும் இருக்கிறார்கள்.  ஆனால்.. அவர்களைப் பயங்கரவாதிகளாக்கி.. இலங்கைத் தீவின் பேரின.. மத.. பிராந்திய.. சர்வதேச சதிகளுக்கு இடைஞ்சல் என்று இலங்கை அரசியல் இராணுவக் களத்தில் இருந்து அகற்றிய சர்வதேச சமூகமே..

இன்று இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்புக் கூற வேண்டும். சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில்.. தமிழின அழிப்பை மேற்கொண்டு.. சிங்கள பேரின அரசை இராணுவ ரீதியில் இலங்கைத் தீவின் தனியொரு தனிச்சை முடிவெடுக்கும் சக்தியாக வளர்த்துவிட்டுள்ளதன் விளைவுகளுக்கு சர்வதேசமே நேரடிப் பொறுப்பும்.. பொறுப்புக் கூறலுக்கும் உரித்தானவர்கள் ஆகின்றது. 

4 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் காணிகளை முஸ்லீமுக்கு வித்து போட்டு எங்கடைகள் இங்கு வந்து அசைலம் அடித்தே தீருவீனம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

நீங்கள் எவ்வளவு கத்தினாலும் காணிகளை முஸ்லீமுக்கு வித்து போட்டு எங்கடைகள் இங்கு வந்து அசைலம் அடித்தே தீருவீனம்

நாங்கள் கண் முன்னே பார்க்கின்ற உன்மையும் கூடநல்ல வேலையிருந்தும் வெளிநாடு என்றவுடன் பறந்து போகிறார்கள் பெண்கள் முதலிடம் ) ஆண்கள் இரண்டாம் இடம் )

வடக்கில ஆமி காரன் சொன்னான் காஞ்கேசன் துறையில் நிலத்தை விட்டுட்டம் சனம் இல்லை குடியேற என்று  அவர்கள் என்ன செய்வார்கள் பெருகிசெல்கின்ற இனத்துக்கு காசை கொடுத்து நிலத்தை வேண்டுக்கொள்கிறார்கள் நமக்கு காசுதான் வேண்டும் ந்ன்று கிழக்கில் வித்து போட்டு ஓடுகிறார்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் கிழக்கு அதுக்கு பிறகு வடக்கு ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.