Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் பல்குழல் எறிகணை செலுத்திகள்: சிறிலங்கா படைத்தரப்பு

ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 07:06 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளால் நேற்று நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் அவர்கள் சிறியரக பல்குழல் எறிகணை செலுத்திகளை பயன்படுத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை முறக்கொட்டாஞ்சேனைஇ மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருமலை மட்டக்களப்பு வீதியில் உள்ள காவல்நிலையங்கள் மீதும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன்இ செங்கலடி மற்றும் கறுத்தப்பாலம் பகுதியில் அமைந்துள்ள நிலைகள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 10-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கிரிமிச்சைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது படையினர் இரண்டு பல்குழல் எறிகணை செலுத்திகளுக்குரிய எறிகணைகளையும் மூன்று 81 மி.மீ மோட்டார் எறிகணைகளையும் கைப்பற்றியதாகவும் படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே வவுணதீவின் தெற்குப் பகுதிகள் மீது சிறீலங்கா வான்படையின் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களையும் நேற்று நடத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.eelampage.com/?cn=31187

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்க்கும் போது இரணுவம் பல்குழல்எறிகனையை பறிகொடுத்துவிட்டதோ ஆஅஆஆஆ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் பொறுமையை எனியாவது புரிந்தாள்சரி புலிகள் வசம்மானதே பல்குழல் பிரங்கி இரணுவம் கதிகலங்கிவிட்டானே சந்தோசம் அஅஅஅஅஅ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் பொறுமையை எனியாவது புரிந்தாள்சரி புலிகள் வசம்மானதே பல்குழல் பிரங்கி இரணுவம் கதிகலங்கிவிட்டானே சந்தோசம் அஅஅஅஅஅ

TOO LATE! ltte army ithai vanga munnamey vangidaanga

சுனாமியின் பின் முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்றிலிருந்து பல்குழல் எறிகணை செலுத்தி வாகனம் ஒன்று புறப்பட்டதாக அங்கு மீட்பு வேலைகளில் இருந்த எமது தெரிந்தவர் ஒருவர் முன்னரே எமக்கு சொல்லி இருந்தார்.

புலிகள் நேற்று நடத்திய தாக்குதலின்போது பல ஆயுதங்கள் புலிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ட்டிரக் வாகனங்களை தாம் தாக்கியழித்ததாக படையினர் தெரிவித்ததில் இருந்து இது உறுதியாகிறது.

சில வேளைகளில் பல்குழல் வெடிகணை செலுத்திகள் புலிகளிடம் சென்றிருக்கலாம்.

ஏனோ தெரியவில்லை குறித்த தாக்குதல் பற்றி புலிகள் எதனையும் தெரிவிக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'உலக இராணுவ மேதைகளினதும் படை வரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்கும் அடங்க முடியாமல் திமிறிக் கொண்டு நிற்கிறது புலிகளின் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை. காற்றைப் போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்களின் போர்த்திறனும் வீரமும். 'இப்படித்தான் இருப்பார்கள்" என்று எல்லோராலும் கணிக்கப்படுகிற போது புலிகள் அந்தக் கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்துக்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறாhகள். முடிவில் மீண்டும் அறுபட முடியாத புதிராய் புலிகள். புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்கிறது. தமிழனை தலைநிமிரச் செய்கிறது".

எனவே நாம் தலைநிமிர்விற்குத் தயாராவோம்.

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

(ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதர்குள் பலகோணங்களிள்பார்த்தாள் இவர்ரினுள்பலவிடையங்கள் புரியாதபுதிராய் உள்ளது அதாவது சித்தாண்டிக்கும்செங்களடிக்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நேற்று நடத்திய தாக்குதலின்போது பல ஆயுதங்கள் புலிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ட்டிரக் வாகனங்களை தாம் தாக்கியழித்ததாக படையினர் தெரிவித்ததில் இருந்து இது உறுதியாகிறது.

சில வேளைகளில் பல்குழல் வெடிகணை செலுத்திகள் புலிகளிடம் சென்றிருக்கலாம்.

ஏனோ தெரியவில்லை குறித்த தாக்குதல் பற்றி புலிகள் எதனையும் தெரிவிக்கவில்லை

புலிகள் பேசாமல் இருப்பதன் நோக்கம் புரியாத புதிராக இருந்தாலும்

என்பார்வையில் இப்படிப்பார்கின்றேன்.

கடலால கொண்டுவர விடுங்கோ இல்லையென்றால்

உங்களிட்ட இருந்து எடுப்பம்???

யாவருக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் நகர்வின் முலம் தென்மராட்சி கைப்பற்றப்பட்டு அதன் பின்னர் புலிகள் அடுத்த கட்ட நகர்விற்காக புலிகள் தயார்படுத்தலில் ஈடுபடுத்திக் கொண்டு இருந்த பொழுது தான் சந்திரிக்காவினால் முதன் முதலாக இசுரேலினாலும் பாகிசுதானிலாலும் வழங்கப்பட்ட முறையே 12 குழல் 24 குழல் போன்றவை தான் முதன் முதலாக யாழின் பலாலி அச்செழு இராணுவத்தளங்களில் இருந்து மிகவும் முர்க்கத்தனமாக தென்மராட்சியின் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள் மீது பொழியப்பட்டது இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் நகர்வுகள் இடைநிறுத்தப்பட்டு சில குறிப்பிட்ட இடங்களில் இருந்து புலிகள் பின்நகர்திருந்தனர் அதாவது சரசாலை மட்டுவில் கைதடி போன்ற பகுதிகளில் இருந்து.

அந்த நேரத்தில் பொதுவாக யாழில் மக்கள் கதைத்துக் கொண்டிருந்த விடயம் இனி பல்குழலுக்கு புலிகளால் தாக்கு பிடிக்க முடியாது எனவும் இனி எந்த தாக்குதல்களும் நடாத்த முடியாது எனவும் பேசிக் கொண்டனர் ஆனால் அந்த வேளையில் மக்களினுடைய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் வகையிலும் சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வித்திலும் களமுனைத்தளபகில் ஓருவரும் ஓயாத இலைகள் நகர்வில் பலகளங்களிற்கு நெறிப்படுத்தியவருமான கேணல் பால்ராச் அவர்கள் பிலகளின' குரல் வானொலியில் ஓலிபரப்பாகிய சிறப்பு ஓலிபரப்பின் பொழுது தெரிவித்த கருத்;துக்கள் குறிப்பிட்தக்கதாக இருந்தது

" இன்றைய நாட்களில் குறிப்பாக குடாநாட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளின் வீரத்தில் சம்பந்தமாக சந்தேகப்படுகின்றார்கள் அதாவது பல்குழல் தாக்குதலுக்கு விடுதலைப்ர்லிகளினால் தாக்கு பிடிக்கமுடியாமல் திணறுகின்றார்கள் என்பதை தான் முற்று முழுவதுமாப மறுப்பதாகவும் சீறிலங்காப்படைகளிற்குத் தான் பல்குழல் புதிதே தவிர புலிகளிற்கு இது பழைய விடயம் ஆகவே பல்குழலை பாவிக்கவும் தெரியும் அதிலிருந்துது தப்பவும் புலிகளிற்குத் தெரியும்" என் தெரிவித்திருந்தார் .

அதன் பின்னர் தீச்சுவாலை நகர்வையும் எதிரியினுடைய பல்குழல் தாக்குதலாலேய எதிரிகளை அழிக்கப்பட்டதும்

1999 ஆம் ஆண்டு புலிகளினால் தள்ளாடி முகாம் மீதும் பல்குழல் தாக்குதலர் ஓன்று நடாத்தபபட்டிருநதது குறிப்படத்தக்கதுஜஃளணைநஸ.ஜஃஉ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணா முதலே சொல்லி இருந்தார். நாங்கள் கடல் வழியாக ஆயுதங்கள் அதுவும் இந்தியாவில் இருந்து கடத்த வேண்டிய அவசியமே இல்லை.நாம் எமக்கான ஆயுதங்களை சிங்கள இராணுவத்திடம் இருந்தே பெற்றுவிடுகின்றோம். என்றார்!".

அவர் சொன்ன சத்திய வார்த்தைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

புலிகள் புயல் மாதிரி...எப்படி எந்தத் திசையிலிருந்து எங்கு வீசவேண்டுமென்பதை அவர்களே அறிவார்கள்.

பறித்தார்களோ வாங்கினார்களோ!

பயன் படுத்த தொடங்கியது மகிழ்ச்சியே

கிழக்கில் எம் மக்கள் துயரம் தொடராதிருக்க வழி பிறக்கட்டும்

http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=54

பறித்தார்களோ வாங்கினார்களோ!

பயன் படுத்த தொடங்கியது மகிழ்ச்சியே

கிழக்கில் எம் மக்கள் துயரம் தொடராதிருக்க வழி பிறக்கட்டும்

http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=54

உமது அறிவிற்கு எட்டி இந்த தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு கருணைநிலலுக்கு நன்றி

காரணம் தலைமை பற்றி நன்கு அறியப்படத்தப்பட்ட கருத்து!

புதன், 08 நவம்பர் 2006 17:21

மாசற்ற மதியூக வீரன் !

மாசற்ற மதியூக வீரன் !

கல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றிய காலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும் ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டைய பாடல்கள் கூறுகின்றன. இன்று உயர்ந்த நிலையில் உள்ள இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில் சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு. இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை.

இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும் ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம் நின்று பெரு மூச்செறிந்து, அவருக்கு இணையான ஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச் செல்வார்கள். அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்.

நவீன ஆயுதங்கள், உலகத்தின் புதிய போர் வியூகங்கள் என்று எத்தனை திட்டங்களைப் போட்டாலும் ஒரே நொடியில் அத்தனையையும் புரிந்து தவிடு பொடியாக்கிவிடும் திறமை வாய்ந்தது அவர் மதியூகம். இப்படி சொல்லி விட்டால் மட்டும் அது போதியதாகி விடாது. அதற்குரிய காரணங்களையும் தருதல் அவசியம். இதற்கு எத்தனையோ உதாரணங்களைத் தரலாம். இருந்தாலும் மேலை நாடுகளின் இன்றைய போர்த் திட்டங்களுடன் அவருடைய மதியூகத்தை நாம் ஒப்பு நோக்கி உணர்ந்து கொள்வது சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஆயுத விற்பனையை அதிகரிப்பதற்கு மேலை நாடுகள் அறிமுகம் செய்துள்ள இன்றைய போர் உத்தியை வாரோட்டப் போர் முறைமை என்று எளிமையாகக் கூறலாம். போரில் ஒரு முறை ஒரு அணியை முன்னேறச் செய்வது, மறுமுறை எதிரணியை முன்னேறச் செய்வது என்று இரு தரப்பும் வாரோட்டம் போல ஓய்வின்றி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருப்பதை வாரோட்டப் போர் முறை என்று கூறலாம். ஆயுத விற்பனை சீராக நடைபெற மேலை நாடுகள் கண்டு பிடித்துள்ள புதிய போர்க்கள வியூகங்களில் இது முக்கியமானது.

இதை பல நாடுகளில் அறிமுகப் படுத்தி மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளன. சில மேலை நாடுகளின் ஆயுத விற்பனை வருமானம் கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியமாக உயர்ந்து சென்றமைக்கு உலகில் பல வளரும் நாடுகள் வாரோட்டப் போர் முறைக்குள் சிக்குண்டது முக்கிய காரணமாகும். இதற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் வாரோட்டப் போர்கள் சிறந்த உதாரணங்களாகும். பல நாடுகளில் வெற்றி கண்ட இந்த வாரோட்டப் போர் முறை ஒரேயொரு இடத்தில் மட்டும் தோல்வியடைந்து போனது அதுவே தமிழீழம்.

சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் இலங்கையிலும் ஓர் வாரோட்டப் போர் முறையை ஏற்படுத்த எண்ணி சிறிலங்கா அரசுக்கு சிலர் சூரியக்கதிர் என்னும் போர் வியூகத்தை வகுத்துக் கொடுத்தனர். பெரும் ஆயுத தளவாடங்களுடன் கிளர்ந்து வந்தது சிங்கள இராணுவம். இவர்கள் ஏன் இப்படி வருகிறார்கள் ? இவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை எவரும் கண்டு பிடிக்காத நேரத்தில் கண்டு பிடித்ததுதான் தலைவர் பிரபாகரனுடைய மதியூகம். ஒரே உத்தரவு போராளிகளையும் மக்களையும் இழப்பில்லாமல் பின்வாங்கும்படி கூறினார். இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்து இலட்சம் மக்களும் போராளிகளும் யாழ். குடாநாட்டையே விட்டு வெளியேறி எதிரியின் எண்ணத்தையே ஈடேற விடாது முறியடித்தனர்.

இத்தருணத்தில் மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒன்றைப் புரிந்திருக்கலாம். அங்கு ஓர் போர் நடக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பது அவர்களின் செய்திகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. உண்மையில் சூரியக்கதிர் இப்படியாகும் என்பதை எவரும் எதிர் பார்த்திருக்க முடியாது. திட்டம் வகுத்த எல்லோர் எண்ணங்களும் ஒட்டு மொத்தமாகத் தவிடு பொடியானது. எதிரிகள் கறுவிக் கொண்டனர். தமது பருப்பு முதல் தடவையாக தமிழீழத்தில் வேகாமல் போய்விட்டதை உணர்ந்தனர். இருந்தாலும் மனதை ஆற்றிக் கொண்டனர். வாரோட்டப் போர் முறையை வெற்றி கொள்வதானால் மறுபடியும் ஓர் வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் இறங்கினால்தான் சாத்தியமாகும். எனவே வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் சிக்குண்டுபோவது தவிர்க்க முடியாதது என்று சூரியக்கதிர் வியூகத்தை வகுத்தவர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் உலகத்தவர் எவரும் எதிர் பாராதபடி அங்கு வேறு காரியங்கள் நடைபெற்றன. ஓயாத அலைகள் மூன்று வவுனியா வீதியில் மோதலை நடாத்தி, ஆனையிறவு முகாமிற்குரிய உணவு, நீர் ,மின்சாரம் என்பவற்றின் வழங்கலைத் தடை செய்து அதை பெரும் போரின்றி வீழ்த்தியது. பின்னர் சாவகச்சேரியைத் தாக்கி, ஊரெழு வழியாக உள்ளே புகுந்து பலாலியில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தொண்டைக் குழியையும் நெரித்தது.

இடி விழுந்ததைப் போல ஓர் பேரோசை ! திருடன் கையில் தேள் கொட்டியதைப் போல உலக நாடுகள் எல்லாமே விழித்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற வேண்டுமென்று துடித்துப் பதைபதைத்தன. இவர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கியோர் அவர்களிடம் ஏதோ ஓர் உள்நோக்கம் இல்லாமல் இப்படித் துடிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கலாம்.

இதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். ஜே.வி.பி காலத்தில் அறுபதாயிரம் வரையான சிங்கள மக்களையே சிறிலங்கா இராணுவம் கொன்றதாக கூறுகிறார்கள். அப்பொழுதெல்லாம் சிங்கள மக்களுக்காக கண்ணீர் விடாத நாடுகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் துடி துடிக்கின்றன ? இதுதான் முக்கிய கேள்வியாகும்.

அழுது துடித்தவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் அத்தனை பேரும் சிறிலங்கா அரசுக்கு பெருந் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்து அந்தப் போரினால் கணிசமான வருமானம் பெற்று வந்தவர்களே என்பது தெரியவரும். இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து தயாரித்த சூரியக்கதிரை இழப்புக்கள் இல்லாமல் சொற்ப செலவுடன் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டார்கள் என்றால் எதிரிகள் துடிக்காமல் இருப்பார்களா ? சூரியக்கதிர் வியூகத்தை வகுத்து, சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களையும் வழங்கிய நாடுகள் துடித்த துடிப்பில் தங்களை அறியாமலே தங்களை இனம் காட்டிக் கொண்டன.

போர்க் கலையிலும், போரியல் அறிவிலும் தமக்கு இணையானோர் எவரும் இல்லையென மார் தட்டியோர் கட்டிய அத்தனை மனக் கோட்டைகளையும் இடித்து தகர்த்ததுதான் ஓயாத அலைகள் மூன்று. அந்த போர்த் திட்டத்தை வகுத்த மதியூக மூளையே தலைவர் பிரபாகரனின் வெற்றியின் இரகசியம்.

இந்த மதியூகம்தான் உலகத்தின் அதி சிறந்த ஆயுதம். மதியூகத் தலைவனே உலகத்தின் மாபெரும் படையணி. எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் ஒரு பிரபாகரனுக்கு இணையாக உலகில் எதுவும் வரப்போவதில்லை என்று உணர்த்தியது ஓயாத அலைகள் மூன்று.

இதை மேலும் சிறப்பாக விளங்க மகாபாரதத்தில் ஓரிடத்தை அவதானிக்கலாம். தன்னிடம் உதவி கேட்டு வந்த அர்ச்சுனனைப் பார்த்து இதோ பார் என்னிடமுள்ள அக்குறோணிக் கணக்கான சேனைகள், பரிவாரங்கள் எல்லாம் உனக்கு வேண்டுமா ? அல்லது கையில் ஆயுதம் இல்லாது தேர்ச் சாரதியாக இருக்கும் தனியனான நான் வேண்டுமா ? என்று கண்ணன் கேட்டான்.

கண்ணா ! பரந்தாமா ! எத்தனையாயிரம் கோடி சேனைகள் இருந்தாலும் அவையெல்லாம் கால் து}சுக்கு சமானம். நீ ஒருவன் எம்மோடு இருந்தால் அதற்கு இணையாக உலகில் எதுவும் வருமோ ? என்று கூறி கண்ணனை பார்த்த சாரதியாக ஏற்று பாரதப் போரிலும் வென்றான் அர்ச்சுனன்.

எந்த நாடும், எந்த சேனையும் எமக்கு வேண்டாம் ! நீர் ஒருவரே எமக்குப் போதும் ! தமழீழத்தை மீட்டெடுப்போம் என்று தலைவர் பிரபாகரனின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர் தமிழீழ மக்களும் அவரின் அன்புத் தம்பிகளான விடுதலைப் புலிகளும்.

ஆம் ! தலைவர் பிரபாகரனின் மதியூகமே தமிழினத்தின் வெற்றி ! அவருக்கு இணையான போர்க்கலை வல்லுநர்கள் இன்றைய உலகில் இல்லை என்பதைக் கூற அந்த மாசற்ற மதியூகத்தில் உருவான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையே சாட்சியமாகும்.

புலிகள் நேற்று நடத்திய தாக்குதலின்போது பல ஆயுதங்கள் புலிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு ட்டிரக் வாகனங்களை தாம் தாக்கியழித்ததாக படையினர் தெரிவித்ததில் இருந்து இது உறுதியாகிறது.

சில வேளைகளில் பல்குழல் வெடிகணை செலுத்திகள் புலிகளிடம் சென்றிருக்கலாம்.

ஏனோ தெரியவில்லை குறித்த தாக்குதல் பற்றி புலிகள் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆம் உங்கள் செய்தி உண்மையே . செங்கலடியில் வசிக்கும் எனக்குத் தெரிந்த

நண்பரின் உறவினரைத் தொடர்பு கொண்ட போது சில தகவல்களை அறிந்தேன்.

ஆமட் வாகனங்கள் பெருந்தொகை ஆயுதங்கள் மல்ரிபரல் செலுத்திகளும்

சித்தாண்டி என்ற முகாமிலிருந்து எடுக்கப்பட்டதாக அறிந்தேன். தக்குதல்

நடக்கத் தொடங்கியபோது முகாமைப் படையினர் கைவிட்டுச் சென்று விட்டாரகள்.

இதைத்தவிர படையினர் முகாம்களில் தங்குவதில்லையாம். விடுதலைப்புலிகளால்

எடுத்துச் செல்லப்பட்ட ஆமட்வாகனமொன்று படைமுகாமுக்குச் சற்றுத்

தூரத்தில் புதைந்த நிலையில் காணப்படுகிறதாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாங்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேனும் அதாவது இவங்கள் இந்த கருத்தை சொல்கிறாங்கள் என்றால், எங்களின் ஆயுத பலத்தை விமர்சிக்கிற மாதிரி ஏதோ ஒரு காரியத்தை சாதிப்பதிற்கு இதை பிரச்சாரமாக உபயோகிக்கிறாங்கள் என்பது தான் உண்மை.

இவங்கள் சொன்னால் என்ன சொல்லா விட்டால் என்ன எங்க தலைவர் கத்திக்கு கத்தி, புத்திக்கு புத்தி என்ற மாதிரி எதையும் சமமாக்குவதில் வல்லவர் என்ற நம்பிக்கை தமிழர் ஆகிய எங்களுக்கு இருந்தால் போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக விரைவிள் மகிந்தாவி;ற்கு அதிர்சி காத்திருக்கின்றது அதைவிட சம்புரிள் நிலைகொன்டவர்களுக்கும் வகரையிள் நிலைகொன்டவர்களுக்கும் அழிவுகாலம்தொடங்கிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உலகத்தவர் எவரும் எதிர் பாராதபடி அங்கு வேறு காரியங்கள் நடைபெற்றன. ஓயாத அலைகள் மூன்று வவுனியா வீதியில் மோதலை நடாத்தி, ஆனையிறவு முகாமிற்குரிய உணவு, நீர் ,மின்சாரம் என்பவற்றின் வழங்கலைத் தடை செய்து அதை பெரும் போரின்றி வீழ்த்தியது. பின்னர் சாவகச்சேரியைத் தாக்கி, ஊரெழு வழியாக உள்ளே புகுந்து பலாலியில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தொண்டைக் குழியையும் நெரித்தது.

இடி விழுந்ததைப் போல ஓர் பேரோசை ! திருடன் கையில் தேள் கொட்டியதைப் போல உலக நாடுகள் எல்லாமே விழித்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற வேண்டுமென்று துடித்துப் பதைபதைத்தன. இவர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கியோர் அவர்களிடம் ஏதோ ஓர் உள்நோக்கம் இல்லாமல் இப்படித் துடிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கலாம்.

இதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர். ஜே.வி.பி காலத்தில் அறுபதாயிரம் வரையான சிங்கள மக்களையே சிறிலங்கா இராணுவம் கொன்றதாக கூறுகிறார்கள். அப்பொழுதெல்லாம் சிங்கள மக்களுக்காக கண்ணீர் விடாத நாடுகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் துடி துடிக்கின்றன ? இதுதான் முக்கிய கேள்வியாகும்.

அழுது துடித்தவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் அத்தனை பேரும் சிறிலங்கா அரசுக்கு பெருந் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்து அந்தப் போரினால் கணிசமான வருமானம் பெற்று வந்தவர்களே என்பது தெரியவரும். இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து தயாரித்த சூரியக்கதிரை இழப்புக்கள் இல்லாமல் சொற்ப செலவுடன் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டார்கள் என்றால் எதிரிகள் துடிக்காமல் இருப்பார்களா ? சூரியக்கதிர் வியூகத்தை வகுத்து, சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களையும் வழங்கிய நாடுகள் துடித்த துடிப்பில் தங்களை அறியாமலே தங்களை இனம் காட்டிக் கொண்டன.

இப்பொழுது இராணுவம் சம்பூர், வாகரை எனப் பிடிக்கும் போது, அமைதியாக இருந்து விட்டு, தமிழர் படைகள், தமது நிலத்தினை மீட்கும் போது அமெரிக்கா, இந்தியா உட்பட ஒடி வருவீனம். 40000 இராணுவத்தினை பாதுகாக்க ஒடி வந்த இந்தியா, தனது சொந்த மக்களான அப்பாவி மீனவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் போது பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, இலங்கை அரசுடன் கடல் ரோந்து, இலங்கை அரசுக்கு பயிற்சி என செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.