Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும் ; சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும்  ; சம்பந்தன் 

 

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்  ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை   நன்றாக அறிவோம்.  ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை  சமாளிக்க வேண்டியுள்ளது.  எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

sampanthan.jpg

பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார்  கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூட திறப்புவிழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்,

எமக்கு சுதந்தரம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து சுதந்திரத்தை வரவேற்றோம். எம் அனைவரதும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவில்லை.  தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க  முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். 

தமிழ் மக்களும் சமூக, பொருளாதார அந்தஸ்துக்களை பெற்று இந்த நாட்டினை ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்லவே விரும்புகின்றனர். 

ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்த வண்ணமே இருந்தது. 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டன. 

அதன் பின்னரே நிலைமைகள் மாற்றம் பெற்றன. அதனை அடிப்படையாக  கொண்டே 30 ஆண்டுகால யுத்தம் நிலவியது, இது நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பிரச்சினைகளை தீர்க்க இந்தியா தலையிட்டது, ஏனைய சர்வதேச நாடுகளின் தலையீடுகள் காணப்பட்டன. எனினும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றது.

 

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னரும் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னரும் தமிழ் மக்களின் விடயத்தில் நெருக்கடிகளே நிலவுகின்றன. எனினும் எமது பிரச்சினைகளை  பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம். இந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். அதனால் தான் தமிழ் மக்களின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்தது. 

தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பது எமக்குத் தெரியும். ஜனாதிபதி தீர்வு குறித்து செயற்படுகின்றனர் என்பது எனக்கு நன்றாக தெரியும். 

இந்த நாட்டில்  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜனாதிபதி  அவருக்கு உள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன்.  ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அவருக்கு இருக்கும் சவால்களை  சமாளிக்க வேண்டியுள்ளது.

எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள். 

சர்வதேச அளவில் உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் பலமடையும். இந்த நாட்டின் பொருளாதரத்தை மீண்டும் பின்னடைவு நாட்டினை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நகர்வுகளை நாம் தவிருத்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் பொருளாதரத்தில் தொழிநுட்ப கல்வி முறைமை மிகவும் அவசியமாக கருதப்பட வேண்டும். இன்று உலக நாடுகளின் பொருளாதார இஸ்திரத்தில் தொழிநுட்ப கல்வியும் அதன் மூலமான நகர்வுகளுமே முக்கிய இடைதினை வகிக்கின்றது. 

ஜெர்மனி உலகின் மிகவும் பலமான பொருளாதார கொள்கையினை கொண்டுள்ள நாடாகும். நீண்ட யுத்தம் ஒன்றுக்கு முகங்கொடுத்து நெருக்கடிகள் மிக்க நாடக இருந்த ஜெர்மனி இன்று முன்னேற்றகர பொருளாதார கொள்கையினை கொண்டுள்ளது. அதற்கு அந்த நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் பெற்றைகளின் உருவாக்கவே இதற்குக் காரணமாகும். சிறிய குடும்பங்களாக இவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அவர்களின் பொருளாதரத்தில் அது தாக்கம் செலுத்தியது.   தொழில்நுட்பவியல் வளர்ச்சி தேசிய பொருளாதரத்தில் பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றது. 

http://www.virakesari.lk/article/31779

  • தொடங்கியவர்

 

தமிழ் மக்களின் பிரச்சினையை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்த்து வைப்பாரானால், உள்நாட்டிலும், உலகத் தலைவர்களாலும் மதிக்கப்படுவார் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப நிலைய திறப்பு விழாவில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை ஆகசபுளுகுகளை மூட்டை கட்டி வையுங்க 2016 க்குள் தீர்வு என்ன பொய் பரம்பரையே பிச்சை வாங்கணும் அப்படி ஒரு பொய் கடைசி தமிழன் இருக்கும்வரை உங்கள் ரெத்த வெறி அடங்காது என்பது எங்களுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more peopleஎங்கு போய் நோவது ?

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும்  ; சம்பந்தன் 

இந்த ஆர்வம் இலங்கையில் பிரதமராக, சனாதிபதியாக வந்த அனைவருக்குமே உள்ளமை உலகத்துக்கும் தெரியும். அதாவது இலங்கையில் தமிழ் மக்களை அழித்துவிட்டால் பிரச்சனைகளும் தீர்வுகண்டுவிடும். அதனால்தான் வந்த ஒவ்வொருவரும் தங்களால் இயன்றளவு தமிழர்களை அழித்து வருகின்றனர். ஒரு அடிமட்டக் குடிமகனுக்கே தெரிந்த இந்த உண்மை பெரும் தலைவராக விளங்கும் சம்பந்தருக்குத் தெரியாதிருந்தால்தான் அதிசயம்.:shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.