Jump to content

எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம்


Recommended Posts

எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம்

 

கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

தி.மு.க. போராட்டம்

எச். ராஜா இன்று காலையில் பதிவுசெய்த ஒரு ட்விட்டர் குறிப்பில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என்று கூறியிருந்தார்.

தி.மு.கவின் மாநிலங்களை உறுப்பினர் கனிமொழியைக் குறிப்பிடும்வகையில் தெரிவித்த இந்தக் கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எச். ராஜாவின் டிவிட்டர் செய்திபடத்தின் காப்புரிமைTWITTER Image captionஎச். ராஜாவின் டிவிட்டர் செய்தி

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்க கனிமொழி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் மறுத்துவிட்டார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் எச். ராஜாவின் வார்த்தைகளைக் கண்டித்துள்ளார். "கள்ளக் குழந்தை என்பதே தவறு. எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய் ஒரு தந்தை இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் எதிர்ப்புபடத்தின் காப்புரிமைTWITTER

இதற்கிடையில், எச். ராஜாவின் இந்தக் கருத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது" என்று கூறியிருக்கிறார்.

தமிழிசையின் டிவிட்டர் செய்திபடத்தின் காப்புரிமைTWITTER Image captionதமிழிசையின் டிவிட்டர் செய்தி

 

https://www.bbc.com/tamil/india-43813859

Link to comment
Share on other sites

`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்?' - ஓர் அலசல்

 
 
Chennai: 

ஹெச்.ராஜா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தமிழக பி.ஜே.பி-யினருக்கே அவரது பேச்சுக்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்திவருவதாகச் சொல்கிறார்கள், கமலாலய வட்டாரத்தில். இதுகுறித்துப் பேசும் பா.ஜ.க முக்கியஸ்தர்கள், ''தமிழக பி.ஜே.பி அளவில், உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஹெச்.ராஜாவுக்கு இருக்கிறது. இதனாலேயே உள்ளூர் தலைவர்களோடு அவருக்கு நல்லதொரு உறவும் இல்லை.

மேடைகளில், தடித்த வார்த்தைகளில் பேசும்போது, அடிமட்டத் தொண்டர்களின் கைத்தட்டல் கிடைக்கும் என்பது உண்மைதான். தொண்டர்களுடைய உற்சாகத்துக்காக பெரிய தலைவர்களேகூட அப்படிப் பேசுவதும் வாடிக்கைதான். ஆனால், அந்த கைத்தட்டலுக்காகவே தொடர்ந்து வரம்பு மீறி விமர்சிப்பதும், மீடியாவில் பேசும்போதுகூட தரம் தாழ்ந்து வார்த்தைகளைக் கொட்டிவருவதும் அவரது மரியாதையை சீர்குலைக்கும் என்பதை அவர் ஏனோ உணர்வதே இல்லை.

பதற்றத்தை ஏற்படுத்தும் தொனியில் அவர் ட்விட்டர் பதிவிட்டதையடுத்தே, ஆங்காங்கே பெரியார் சிலைகளுக்கு அவமரியாதை செய்யும் போக்குகள் அரங்கேறின. அப்போதும் அதுகுறித்து மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்காதவர், சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, அந்த ட்விட்டர் பதிவை என் கவனத்துக்குக் கொண்டுவராமல் அட்மினே பதிவிட்டுவிட்டார் என்று அரதப் பழசான பொய்யை அவிழ்த்துவிட்டார். அப்போதே மீடியாவில் 'ஹெச்.ராஜா அட்மின்' என்ற தலைப்பில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். 

இப்போது, கவர்னர் சர்ச்சையிலும், தேவையே இல்லாமல் கருணாநிதி குடும்பத்தினரை கேவலப்படுத்தி ட்வீட் செய்திருக்கிறார். இது, கட்சிக்காரர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களிடையேயும் அவருக்குக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வெற்று விளம்பரத்துக்காக இப்படிப் பேசி அகில இந்திய அளவில் பி.ஜே.பி தலைவர்களிடம் பெயர் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அதன் மூலமாக தமிழக பி.ஜே.பி-யில் நல்லதொரு பொறுப்புக்கும் வந்துவிட வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பே இப்படியெல்லாம் அவரைப் பேச வைக்கிறது.'' என்று பொருமினர்.

ராஜா விவகாரம்

இந்நிலையில், ஹெச்.ராஜாவின் அதிரடி செயல்பாடுகள் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''எதிர்ப்பு அரசியல்தான் கட்சியை வளர்த்தெடுக்கும் என்ற பாலபாடத்தை ஹெச்.ராஜா நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எதையாவது பேசி மீடியாவில் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்க வேண்டும். தான் பேசுவது சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம்கட்டம். ஆனால், ஒவ்வொரு நிகழ்வையும் தங்களது கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி? அதனைப் பிரச்னைக்குள்ளாக்குவது எப்படி... என்பது போன்ற வித்தைகளையெல்லாம் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ரவீந்திரன் துரைசாமிதமிழ்நாடு முழுக்க காவிரிப் பிரச்னை சம்பந்தப்பட்ட போராட்டங்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரத்தில்கூட, 'கர்நாடகத்தில் பி.ஜே.பி ஜெயிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றார் ஹெச்.ராஜா. மேலும், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் குறிப்பிட்டத் தலைவர்களை 'கொலை முயற்சி வழக்கின்கீழ் கைது செய்ய வேண்டும்' என்று அதிரடியாகப் பேசி, பிரச்னையை திசை திருப்பிவிட்டார். இப்போதும்கூட, நிர்மலா தேவி ஆடியோ பிரச்னை, கவர்னருக்கு எதிராகத் திரும்புவதைக் கவனித்தவர், சட்டென்று தி.மு.க தலைவரைத் தாக்கி ட்வீட் செய்து தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் அவருக்கு எதிரான போராட்டங்களாக மடைமாற்றம் செய்துவிட்டார்.

'கல்யாண வீடா இருந்தாலும் எழவு வீடா இருந்தாலும் எனக்குத்தான் மாலை விழணும்' என்று தமிழ் சினிமா ஒன்றில் வரும் வசனம் அரசியலுக்கு நன்றாகப் பொருந்தும். இங்கே நாகரிகம் பார்த்துக்கொண்டு நியாய தர்மம் அனுசரித்துக்கொண்டிருந்தால், மக்கள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். உண்மையோ பொய்யோ, நல்லதோ கெட்டதோ எதுவானாலும் பரபரப்பைக் கிளப்புவதுபோல் ஏதாவது கருத்தைச் சொல்லி, திரி பற்ற வைத்துவிடவேண்டும். அதன்பிறகு வெடித்துச் சிதறுவதெல்லாமே சம்பந்தப்பட்ட தலைவருக்கான பப்ளிசிட்டியாகவே வந்து விடியும். இந்த வேலையை ஹெச்.ராஜா கனகச்சிதமாகச் செய்துவருகிறார். 

அவரது கட்சியினரேகூட, அவரது செயல்பாடுகளை விமர்சிப்பதுபோல் நடிக்கிறார்களே தவிர... உள்ளார்ந்து அவர்களும் இந்த அநாகரிகத்தை வரவேற்கத்தான் செய்வார்கள். ஏனெனில், அரசியலில் எப்போதுமே இரட்டை நிலைப்பாடுகள் உண்டு. நல்ல விஷயங்களை கட்சியின் மேல் மட்டத் தலைவர்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளாக வெளியிடுவார்கள். சில இரண்டாம்தர எதிர்ப்புகள் மற்றும் நிலைப்பாடுகளைத் தங்களுக்கு அடுத்தபடியாக உள்ள கீழ்மட்டத் தலைவர்களை வைத்து செயல்படுத்துவார்கள். இதில் ஹெச்.ராஜா எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே... 

பி.ஜே.பி-க்கு நேரடி எதிரி காங்கிரஸ்தான்; சித்தாந்த ரீதியாக எதிரி கம்யூனிஸ்ட் கட்சி. ஆக, இந்த இரண்டு கட்சிகளைத் தவிர்த்து, பி.ஜே.பி தலைவர் ஒருவர் தேவையே இல்லாமல் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மீது பாய்கிறார் என்றால் அது அவரது கட்சி சார்ந்ததாக இருக்காது; தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகத்தான் இருக்கும்!'' என்கிறார்.

அடுக்கடுக்கான  இந்த விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு ஹெச்.ராஜாவின் செல்பேசி எண்ணுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தோம். ஆனாலும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் ஹெச்.ராஜா தரப்பினரது விளக்கத்தைக் கேட்டுப் பெற்றோம்... ``ஹெச்.ராஜா பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர். அவர் தமிழக அளவிலான கட்சிப் பதவிகளுக்காக அரசியல் செய்துவருகிறார் என்று சொல்வதே விஷமமானது. தேசிய அளவிலான பி.ஜே.பி-யின் மூத்தத் தலைவர்களுடன் நேரடி தொடர்புகொண்ட ஹெச்.ராஜா, கட்சிப் பணிக்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

 

தமிழக திராவிட அரசியலில், நடைபெறும் கூத்துகளை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. வெறும் உணர்ச்சி அரசியலை மட்டுமே முன்வைத்து தமிழக மக்களை இதுவரையிலும் ஏமாற்றிவந்தவர்களுக்கு ஹெச்.ராஜாவின் அறிவுபூர்வமான கேள்விகளும், விமர்சனங்களும் கோபத்தை வரவழைப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க ஹெச்.ராஜாவுக்கும் விருப்பம் இல்லை'' என்கின்றனர் பொறுமையாக.

https://www.vikatan.com/news/politics/122761-reasons-behind-the-hraja-comments.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
    • டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது. அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும். 2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா எந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடர்களில் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர். கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல் பந்தயங்களில் அதிக ரன் குவித்த விராட் கோலி, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல் 2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார். விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஐபிஎல்-லில் மட்டை வீச்சாளர்களை நடுநடுங்க வைத்த பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார். பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, குல்தீப் யாதவ் (வலது) மற்றும் ரவீந்திர ஜடேஜா (இடது) இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கின்றனர். ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம் இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே. இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை. மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து ரிஷப் பந்த் ஐபிஎல் தொடர் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது. தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனி தலைமையிலான இந்திய அணி, 2007ஆம் ஆண்டு முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்றது. டி20 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது. ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள். உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.   பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் இந்தியாவின் பேட்டிங் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும். லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/ckkk69xgl6qo
    • சென்ற தலைமுறையினர் மாமிசத்தை கிழமைக்கு ஒரு முறைதான் உண்பார்கள். அதுகும் கோவில் கொடியேற்றங்கள் தொடங்கி விட்டால் மாதக் கணக்கில் மரக்கறி உணவுதான். இப்போதைய மரக்கறிகள் கூட... இரசாயனம் கலந்த விளைச்சலுடன் தான் கிடைக்கின்றது.   இன்று  கிழமையில் 6 நாளும் மாமிசம்தான். அந்த இறைச்சி தரும் மிருகங்களும், பறவைகளும் ஆரோக்கியமாகவும், சதைப்பிடிப்பாகவும் இருக்க  அதிக ஊட்ட  சத்துக்களையும், நோய் எதிர்ப்பு குளிசைகளான "அன்ரி பயோட்டிக்" போன்ற மருந்துகளை உணவில்   அளவுக்கு அதிகமாகவே கலந்து கொடுக்கும் போது... அந்த இறைச்சியை உண்ணும் மனிதனும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து ஒரு கட்டத்ததில்  நோயாளி ஆகி விடுகின்றான். எங்கும் எதிலும் வியாபாரம் முக்கியமாகி விட்ட நிலையில் மனித உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. 
    • முதல் 8 ஓவர்களில் கனடாவின் பக்கம் இருந்த ஆட்டம் அடுத்த 5 வர்களில் அமேரிக்கா பக்கம் திரும்பியது. முதல் போட்டியில் என் கணிப்பு வென்றது🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.