Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

Featured Replies

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

 

sri-lanka-rupee-300x200.jpgஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இந்த மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில், 157.46 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி நேற்று 159.04 ரூபாவாக வீழ்ச்சி கண்டது.

இந்த ஒரு வாரத்தில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 1.58 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்காவின் கடன் சுமையும் வெகுவாக அதிகரித்து வருவதாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

சிறிலங்காவின்  வெளிநாட்டுக் கடன் சுமார் 30 பில்லியன் டொலர்களாக இருந்தது.

கடந்த ஒரு வாரத்தில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பிறக்கத்தினால், கடன் சுமை 47 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/26/news/30582

போர் முடிந்து வெற்றி விழா கொண்டாடிய மோட்டு  சிங்கள ,முஸ்லீம் மக்களும் மறு பக்கம் நேரடியாக பாதிக்கபட்ட தமிழ் மக்களும் தான்  இந்த கடன் சுமை தாக்கி மக்களை வாட்டி வதக்குது. ஆனால் இந்த போரை நட்த்துவதுக்கு முன் செவன் லெவன் போன்ற சாதாரண கடைகளில் வேலை பார்த்தவரையும் ,கொலைகள் செய்து ஜெயில் போன அரசியல்வாதிகளும் சொந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தவரும் ஆகிய பொய் அரசியல் வேடதாரிகள் இலங்கையின் முதல் இருபது பணக்காரர்களில் வந்ததை பார்த்து உதிரி அரசியல் கட்சிகளும் தமிழரசு போன்ற கூட்டம்களும் முதல்    முப்பது பணக்காரர்களுக்குள் வரவேணும் எனும் வெறியில் தொடர்வது இலங்கை மக்களின்   சாபகேடு இலங்கை சுதத்திரம் பெற்றபின் மக்கள்   நன்றாக செழிப்புடன் வாழனும் என்று சிந்தித்த தலைவன் என்றால்  பிரபாகரனை தவிர வேறு ஒருவரையும் காணவில்லை மற்றையவர்கள் மேற்கத்தைய நிறுவனம்களின் அடியாள் அரசியல் வேலைகளை செவ்வனே செய்வதால் இலங்கை ரூபாவில் இங்கிலாந்து போன்ற நாடுகளின் விலையில் சாதாரண உணவுப்பொருள்களை வாங்க   வேண்டிய கட்டாய நிலை   இலங்கையின் அனைத்து மக்களுக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்

உந்த ஆள் தான் மீண்டும் ஆளுனரா ...? இந்தாள் கப்ஸா கப்ரால் ஆச்சே ராஜபக்ஷே காலத்தில் இலங்கை அமெரிக்காவுக்கு பொருளாதாரத்தில் சவால் விடப்போகுது என்றும் வளர்ச்சிவீதம் 9% ,12% என்று கண்டமேனிக்கு அடிச்சிவிட்டு பிறகு எல்லோரும் கிடுக்கி பிடிபிடிக்க ..ங்கே  என்று பேந்தப்பேந்த முழித்த ஜில்லாக்கேடி 

  • கருத்துக்கள உறவுகள்

யாரு அந்த  ரூபா

  • தொடங்கியவர்
47 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உந்த ஆள் தான் மீண்டும் ஆளுனரா ...? இந்தாள் கப்ஸா கப்ரால் ஆச்சே ராஜபக்ஷே காலத்தில் இலங்கை அமெரிக்காவுக்கு பொருளாதாரத்தில் சவால் விடப்போகுது என்றும் வளர்ச்சிவீதம் 9% ,12% என்று கண்டமேனிக்கு அடிச்சிவிட்டு பிறகு எல்லோரும் கிடுக்கி பிடிபிடிக்க ..ங்கே  என்று பேந்தப்பேந்த முழித்த ஜில்லாக்கேடி 

பிழையாக எழுதி உள்ளார்கள்.   இவர் இப்ப ஆளுனர் இல்லை அஜித் நிவாட் கப்ரால்.

தற்போது ஆளுனர் குமாரசாமி.

 

15 hours ago, நந்தன் said:

யாரு அந்த  ரூபா

எங்கடை நாலு வீடு தள்ளி இருந்தவ <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, spyder12uk said:

எங்கடை நாலு வீடு தள்ளி இருந்தவ <_<

ஆ....தெரியும்...தெரியும்....அட அவவே.:cool:

  • தொடங்கியவர்

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியை நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுனர்

 

Dr.-Indrajit-Coomaraswamy-300x200.jpgஅமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி,  ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

“இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 2.9 வீதத்தினால் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பும், 4.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாணயத்தின் மதிப்பு, 4.4 வீதத்தினாலும்,  அவுஸ்ரேலிய டொலரின் மதிப்பு 2.7 வீதத்தினாலும், இந்தோனேசிய நாணயத்தின் மதிப்பு 2.4 வீதத்தினாலும் சரிவு கண்டுள்ளன.

இவ்வாறு நாணய மதிப்பு குறைந்துள்ளதால், வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தும் போது அதிகளவு நிதியை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், அப்படியல்ல. நாங்கள் அமெரிக்க டொலரில் தான் கடன்களைத் திருப்பிச் செலுத்துகிறோமே தவிர, சிறிலங்கா  ரூபாவில் அல்ல.” என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட சிறிலங்கா மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, பொருளாதாரம் மற்றும் கணிதம் தொடர்பாக சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இப்படி தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/04/27/news/30590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.