Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தை அடைய முயற்­சித்தால் சம்­பந்தன் கடும் விளை­வு­களை எதிர்கொள்வார்: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் எச்­ச­ரிக்கை

Featured Replies

ஈழத்தை அடைய முயற்­சித்தால் சம்­பந்தன் கடும் விளை­வு­களை எதிர்கொள்வார்: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் எச்­ச­ரிக்கை

12-411f960fbb9cae085c78e02f6d9de16539911fa4.jpg

 

(இரா­ஜ­துரை ஹஷான்)

13ஆவது அர­சியல் திருத்­தத்தை வலுப்­ப­டுத்திக் கொண்டு ஈழத்தை அடைய இந்­தி­யாவை நாடினால் சம்­பந்தன் கடும் விளை வு­களை எதிர்­கொள்ள நேரிடும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்கட்­சி­யாக இருந்து கொண்டு தேசிய அர­சாங்­கத் தின் பங்கா­ளி­யாக செயற்­படும் இரா.சம்­பந்தனுக்கு நாட்டைப் பிரிக்கும் அர­சி­ய­ல­ மைப்­பை பற்றிப் பேசு­வ­தற்கு தார்­மீக உரிமை கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 

13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை வலுப்­ப­டுத்தி அதனை விரைவாக நடை­மு­றைப்­ப­டுத்­த வேண்டும். இதற்கு இந்­திய அரசாங்கம் உத­வி­ய­ளிக்க வேண்டும். இந்த விட­யத்தில் இந்­தியா பின்­வாங்க முடியாது என எதிர்க்­கட்சித் தலைவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்­வொன்றில் குறிப்­பிட்­டுள்­ளமை ஒரு­த­லைப்­பட்­ச­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. எதிர்க்­கட்சி த்தலைவர் நாட்டைப் பற்றி ஒருபோதும் பேசு­வது கிடையாது.

வட­க்கு, கி­ழக்கு மக்கள் தொடர்பில் மாத்­ தி­ரமே அர­சி­யலில் செல்வாக்கு செலுத்து ­கின்றார். இருப்­பினும் வடக்கு மக்­களின் அத்­தி­யா­வ­சிய பிரச்­சி­னைகள் தொடர் பில் பேசாமல் நாட்டைப்பிரிக்கும் அர­சி­ய­ ல­மைப்பு தொடர்பில் மாத்­திரமே பேசி அர­சாங்­கத்தின் நெருக்­க­டி­யை மேலும் தீவி­ரப்­ப­டுத்து­கின்றார். 13 ஆவது அர­சி­ய­லமைப்பு திருத்தம் ஒருதரப்­பி­ன­ருக்கு மாத்­திரமே சாதகமாகக் காணப்படுகின்றது. மக்கள் மத்தியில் மீண்டும் விரோதங் களை ஏற்படுத்தும் இந்த அரசியலமைப்பு திருத்தத்தை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-2

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ......ஐயோ.....இவற்றை கொடுமை தாங்கேலாமல் கிடக்குது..!

இந்தியாவில் உதவியைக் கொண்டு....சம்பந்தன் ஈழம் காண வெளிக்கிட்டால்...கடும் விளைவுகளை எதிர் கொள்ள நேரிடுமாம்!

சம்பந்தன் ஐயாவையும், இந்தியாவையும்........நாங்கள் புரிந்து கொண்ட அளவுக்காவது...இந்தாள் இன்னும் புரிந்து கொள்ளவில்லைப் போல உள்ளது!

வடிவேல் வாய்சில் சொல்லனும் என்றால் " சம்பந்தன் ஒரு டம்மி பீசுங்க அந்தாள் வாய் திறப்பதே தன்னுடைய மூன்றாவது அரண்மனை போன்று கட்டப்படும் வீடு பற்றி மட்டுமே வேணுமெண்டால் ஜானதிபதி மாளிகையில் சித்திரை பொங்கல் புக்கைக்கு சைட்டால் வாய் திறப்பார் உங்க ஆள் ரணில் இடம் கேட்டுத்தான் காலைக்கடனே முடிப்பவராம் " மற்றபடி  தமிழாவது ஈழமாவது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை சம்பந்தன் மறந்து பல வருடமாச்சு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

ஈழத்தை அடைய முயற்­சித்தால் சம்­பந்தன் கடும் விளை­வு­களை எதிர்கொள்வார்: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் எச்­ச­ரிக்கை

12-411f960fbb9cae085c78e02f6d9de16539911fa4.jpg 
Bildergebnis für தலைவர் சம்பந்தர்

 

 

"வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்து இரு கண்கள் இருண்டு 
வயது முதிர்ந்து நரைதிரை வந்து வாதவிராத குரோதம் அடைந்து
மதியும் அழிந்து செவிதிமிர்வந்து வாயறியாமல் விடாமல் மொழிந்து
துயில் வரும்நேரம், இருமல் பெறாது தொண்டையும் நெஞ்சமும் உலர்ந்து வறண்டு 
துகிலும் இழந்து சுனையும் அழிந்து, கலகல என்று மலசலம் வந்து
கால்வலி மேல்வழி சாரநடந்து தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும் உலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து"

இந்தப் பட்டினத்தார் பாடலுக்கேற்ற நிலையில் இருக்கும் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர, தேசிய இயக்­கத்தின் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு, தான் படும் அவலநிலையை... தனது நிலையில் இருக்கும் சம்பந்தரும் ஈழத்தை அடைந்து அதன் தலைவராகி அனுபவிக்கக் கூடாது என்ற நல்லெண்ணமே அவரை அப்படிப் புத்திமதி கூறவைத்துள்ளது போல் தெரிகிறது. :grin: 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.