Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான்படை - ஒரு நேரடி அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.

ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.

முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.

இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.

1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.

என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்????

நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்?

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்."

புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.

"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?"

"இல்ல. என்ன விசயம்?"

"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..."

"என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?"

"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..."

ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.

"இயக்கத்தின்ர ஹெலியாம்"

"டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?"

"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது."

எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.

நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.

"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"

எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.

"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன்.

இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில

"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.

அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.

அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.

"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.

இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.

----------------------------------------------------------------------------------

இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.

நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.

இப்பதிவு வன்னியனின் பூராயம் வலைப்பதிவில் இருந்து நன்றியுடன் மீளபதிவாக்கப் பட்டிருக்கிறது.

http://pooraayam.blogspot.com/2005/10/blog-post.html

"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்;

இந்த கற்பனை நேற்று நனவானது

புலிகள் 90 கலிபரால் குருவிகள் சுடுவதைப் பார்த்த எமக்கு, நேற்றைய கட்டில் நாயக்கர் மீதான சம்பவம் புல்லரிக்கச் செய்யும் விடயமே.

நண்பரின் கதையும் உற்சாகத்தைத் தந்தாலும், புலிகளின் விமான ஓடுபாதை லொக்கேசன், மற்றும் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி நாம் கதைப்பதை நிறுத்துவது நல்லது. முக்கியமாக எமது போரியல் பேராசிரியர் தேவையில்லாத இந்த ஆராய்ச்சிகளை தமிழ்நாதம் கட்டுரையில் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்! நாம் உற்சாக மிகுதியில் உளறும் சில விடயங்கள் சிறீ லங்கா குண்டர்களிற்கு பல முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு உதவக்கூடும். எனவே, நாம், முக்கியமான எழுத்தாளர்கள், புலிகளின் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது.

நன்றி!

புலிகள் 90 கலிபரால் குருவிகள் சுடுவதைப் பார்த்த எமக்கு, நேற்றைய கட்டில் நாயக்கர் மீதான சம்பவம் புல்லரிக்கச் செய்யும் விடயமே.

நண்பரின் கதையும் உற்சாகத்தைத் தந்தாலும், புலிகளின் விமான ஓடுபாதை லொக்கேசன், மற்றும் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி நாம் கதைப்பதை நிறுத்துவது நல்லது. முக்கியமாக எமது போரியல் பேராசிரியர் தேவையில்லாத இந்த ஆராய்ச்சிகளை தமிழ்நாதம் கட்டுரையில் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்! நாம் உற்சாக மிகுதியில் உளறும் சில விடயங்கள் சிறீ லங்கா குண்டர்களிற்கு பல முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு உதவக்கூடும். எனவே, நாம், முக்கியமான எழுத்தாளர்கள், புலிகளின் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது.

நன்றி!

yes! you are right maapillai. Lets not make our mouths wide open and talking sensitive things

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 90 கலிபரால் குருவிகள் சுடுவதைப் பார்த்த எமக்கு, நேற்றைய கட்டில் நாயக்கர் மீதான சம்பவம் புல்லரிக்கச் செய்யும் விடயமே.

நண்பரின் கதையும் உற்சாகத்தைத் தந்தாலும், புலிகளின் விமான ஓடுபாதை லொக்கேசன், மற்றும் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி நாம் கதைப்பதை நிறுத்துவது நல்லது. முக்கியமாக எமது போரியல் பேராசிரியர் தேவையில்லாத இந்த ஆராய்ச்சிகளை தமிழ்நாதம் கட்டுரையில் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்! நாம் உற்சாக மிகுதியில் உளறும் சில விடயங்கள் சிறீ லங்கா குண்டர்களிற்கு பல முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு உதவக்கூடும். எனவே, நாம், முக்கியமான எழுத்தாளர்கள், புலிகளின் சில அந்தரங்கமான விடயங்களைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது.

நன்றி!

****************************************************************************

வணக்கம் சகோதரன் மாப்பிளை அவர்களே நானும் உங்களின் இந்த கருத்துடன் இணைகிறேன், பல தடவை இந்த தளத்தில் இதே போன்ற பல விவாதத்தின் போதும் கூறியிருந்தேன் அதாவது புலிகளின் ராணுவ சம்பந்தப்பட்ட விமர்சனங்களை இயன்றளவு தவிர்ப்பது சிறந்தது என்று. இதற்கு உதாரணமாக நடந்து முடிந்த ஒரு சம்பவம் என்ன வென்றால் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின்போது கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் வந்த செய்தி மூலம் தான் சில விடயங்களை உறிதிப் படுத்தியதாக, இதைப்பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் தானே? அந்த செய்தியை பிரசுரித்தவர் இன் று ஒரு பிரபல அரசியல் ஆய்வாளராம், எனது தற்போதைய சந்தேகம் இவர் அந்த செய்தியை திட்டமிட்டுத்தான் பிரசுரித்தாரா? ஏனென்றால் அவர் இன்று தமிழ்த் தேசியத்திற்கு சார்பானவர் அல்ல.

Edited by Valvai Mainthan

மாப்புவின் கருத்தோடு உடன்படுகின்றேன் ..

மாப்பு சரியாய் போட்டிர் எமக்கு தெரிந்த ஊகங்களையும் வெளியிடாமல் இருப்பது நல்லது தான் எமக்கு பெயர் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளின் ரகசியங்களை இராணுவ விற்பன்னர் ஆய்வாளர் என இன்னும் பல சோடனைப் பெயர்களுடன் வெளியிடாமல் இருப்பது நன்று .

அத்துடன் நேற்றைய தாக்குதல் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் பாரிய மகிழ்வை ஏற்படுத்தியிருப்பதையும் யாவரும் அறிந்நததே ஆனாலும் இந்ந பொழுதுகளில் முத்த தளபதி கிட்ண்ணாவைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்ன விமானத்திற்கும் கிட்டுவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேடகிறயளோ !

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் தமது தேவைகளை தாமே நிறைவு செய்யவேண்டுமென்ற ஆர்வத்துடன் பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம் அந்த நேரத்தில் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டுஅவர்களுக்கு ஓரு வித்தியாசமான சிந்தனை ஓட்டம் அதாவது எமது தேசத்திலும் விமானம் பறந்தால் எப்படி இருக்கம் என்று

அந்த ஆர்வத்தை அவர் அப்படியேவிட்டு விடவும் இல்லை அவரது தொடர்ந்த முயற்சியினால் அதே ஆண்டு காலப்பகுதியில் யாழ் முற்றவெளிப்பகுதியில் ஊள்ளுர் தயாரிப்பைக் கொண்டு செய்யப்பட்ட விமான மாதிரியை பற்க்க விடப்பட்ட பொழுது வெறுமனே நிலத்தை சுற்றி ஓடி சிறுது மேல் எழுந்து விழுந்து நொருங்கிவிட்டது கிட்டுவிற்கு தாளத கவலையுடன் தலைவரைச் சந்தித்து கவலைப்பட்ட பொழுது தலைவர் சொன்னராம் கிட்டு கவலைப்படத இப்ப நீ தொடங்ஙிய முயற்ச்சி சிறு தடங்கல் பட்டலாலும் நிட்சயமாக என்றோ ஓருநாள் எமது வான்படையும் வானில் பறக்கும் என்று அன்று தலைவர் கிட்டுவிற்கு கொடுத்த உறுதி மொழி நேற்று கட்டுநாயக்காவில் சிங்கள குகையில் புகுந்நத எமது வான் புலிவீரர்களால் அடித்து உறியாகிவிட்டது

இன்று இந்த மகிழ்ச்சி செய்தியை கேட்க கிட்ண்ணா இல்லாவிடினும் விடுதலைக்காய்

வித்ததன 18000 போராளிகளுடன் சேர்தது நினைநிறுத்திக் கொள்வோம்.

;

situ.jpg

2005 இல் சண்டே டைம்ஸ் செய்தி http://www.sundaytimes.lk/050206/columns/sitrep.html

விடுதலைப் புலிக்களின் விமானப்படை குறித்து முன்னர் பல செய்திகள் வெளிவந்தன. 2005 ஆண்டு யாழில் இணைக்கப்பட்ட செய்திகளின் இணைப்பை கீழே தருக்கின்றேன்.

http://www.yarl.com/forum/index.php?showtopic=4359

வான்புலிகள் தொடர்பான அறிவித்தலை தொடர்ந்து சிறீ லங்காவில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தமிழ் நெட் செய்தி (1998)

Sri Lanka buying missiles - report

[TamilNet, December 18, 1998 12:09 GMT]

Sri Lanka is buying Surface to Air Missiles (SAMs) and radar systems, according to the latest issue of the military industry publication, Jane's Defence Weekly. Reports that the Liberation Tigers have acquired an air capability "have forced the Sri Lanka government to hurriedly procure air-defence systems" said the JDW.

The Ministry of Defence (MoD) "has called for tenders for surface-to-air missiles (SAMs), air-defence guns, short-range battlefield surveillance radars, mobile air-defence radars and thermal imagers" says JDW.

The JDW report by Iqbal Athas, a leading Sri Lankan defence correspondent, cites Sri Lankan military intelligence sources confirming that the Tigers as having acquired "a two-seater fixed wing aircraft and a small helicopter"

"We are yet to identify their make and origin though we suspect they were smuggled in in a knocked-down condition and assembled in the Wanni jungles" the sources told JDW.

The Liberation Tigers also announced at the end of November that aircraft of the 'Air Tigers' had taken part in this year's Heroes' Day celebrations.

A warning sent by the Sri Lankan Air Force's Air Defence Command and Control Centre said pictures showed one of the aircraft to be similar to a US manufactured Robinson R44 Astro light helicopter, said JDW.

"Since the suspected aircraft is confirmed to be a helicopter which could fly at high altitudes, carrying, say, a payload of 200kg of explosives, dropping it in a selected area is a strong possibility," the centre warned.

The centre also noted that "the possibility of attaching a medium calibre gun on the aircraft to fire on selected targets cannot be ruled out."

Sri Lanka's armed forces have no SAMs and rely for air defence on Bofors 40mm L/60 and L/70 guns, said JDW.

Reproduction of this news item is allowed when used without

any alterations to the contents and the source, TamilNet, is mentioned

காவடி அவர்களின் இணைப்பு ஏற்கனவே பல மாதங்களிற்கு முன் யாழ் களத்தில் இணைக்கப்பட்ட ஒன்று!

மனதில் புழுங்கிக் கொண்டிருந்த அனைவரும் உட்சாகத்தை பகிர்ந்து கொள்வது இயல்பானது. எனினும் இன்னமும் போர் முடிந்து விடவில்லை. விடுதலை கிடைத்த பின்னர் எந்தத் தயக்கமுமின்றி அதை செய்யலாம். இந்த உட்சாகத்தை கட்டுப்படுத்தி அடுத்த கட்ட வெற்றிகளுக்கும் (சில சமயம் தோல்விகளுக்கும்) மீதப்படுத்தி மேலும் உத்வேகமாக அனைவரும் விரைந்து செய்யப்பட வேண்டியவற்றை செய்வது நன்று. போர் விரைவில் முடிவடைந்து மக்கள் அவலம் தீர்க்கப்பட வேண்டும்.

புதியவன்,

நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்த இடம் பொம்மை வெளி (நாவாந்துறை) என்று நினைக்கிறேன்.

புதியவன்,

நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்த இடம் பொம்மை வெளி (நாவாந்துறை) என்று நினைக்கிறேன்.

நினைக்காதேங்கோ...! அது கல்லுண்டாய் வெளியிலை நடந்தது....! அந்த முயற்ச்சியிலை ஓட்டிப்பார்த்தவர் கிட்டண்ணாவுடன் வீரச்சாவடைந்த "லெப் கேணல். குட்டிசிறி" அண்ணா...

என்ன தளயாரே ரொம்ப நாளைக்கப்புறம்............ நலமா........? :P

மாபிளை சொல்வது முற்றிலும் உண்மை ராணுவ ரகசியம் எதிரிக்கு நாமே கொடுகின்றோம் இனி ஆவது சிந்தித்து கருத்து சொல்லவும்.

நன்றி

வெற்றிவேல் உங்கள் ஆங்கிலத்தில் கிறமர் பிழைஇருக்கு அறிமுக பகுதிக்கு போய் ஆம் வாரன் எண்டு சொன்னா நான் எதில பிழை எண்டு வடிவா காட்டித்தாறன். பிழைகள் எல்லாரும் விடுறது இயற்கை. அதுவும் அவசரத்தில ரைப் பண்ணேக்க இது சகஜம்.

கிட்டண்ணை 1986 ல் பிளேன் என் ஜின் செய்ய அதீத முயற்ச்சி செய்து அதில் ஓரளவு வெற்றி கண்டவர். அப்ப கோட்டைக்க குண்டு இறக்க்கத்தான் அவை பிளான் பண்ணினவை.வாக்ஸ்வகன் கார் என் ஜின் தான் அவை பாவித்த பேஸ்.

கிட்டண்ணாவின் விமானத்தை போட்டோவில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதன் வெளிப்பகுதி மரப் பலகையினால் செய்யப்பட்டிருந்தது.

தமீழீழப் போரியல் வரலாற்றின் புதிய பரிணாமமான வான் புலிகள் நேற்று உலகத்திற்கு தங்கள் வரவைப் பதியப்படுத்தி உள்ளனர்.புலிகள் அழிந்தனர் என்று எக்காளம் இட்டவர்கள் இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.வானில் பேர் இரைச்சலைக் கேட்டாலையே கூனிக் குறுகி, ஓடி ஒழிந்து ஓடிய நாம் இன்று நேர நிமிர்ந்து மேல் நோக்கி விண்ணில் எமது வான் படையின் வரவைத் தரிசிக்கிறோம்.இந்த உணர்ச்சிப் பிரவாகம் நியாயமானதே,காலம் காலமாக இந்த இயந்திர அரக்கர்களிடம் நாம் பலி கொடுத்த குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள் எண்ணிலடங்கா.கேட்பதற்கு நாதியற்று மாண்டு கொண்டிருந்தோம்.ஆனால் இன்று உலகமே எம்மைப் பார்த்து ஆச்சரியத்துடன் எழுதுகிறது.இந்தக் கணத்தில் நாம் சிறிது சிந்திப்பது அவசியமானது என்பதற்காகவே இந்தப் பதிவு.

இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆனது?அதற்கு எது காரணம்?எமது மன வலிமையும்,எம்மில் நாம் வைக்கும் நம்பிக்கையும் ,எமது ஒன்று பட்ட அயராத உழைப்பும் தான் காரணம்.இன்று நடந்த தாக்குதலின் பின்னால் விமானம் ஓட்டிய ஓட்டிகள், அவர்களின் உழைப்பு, விடாத முயற்சி, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் அவர்களின் உழைப்பு, துல்லியமாக வேவு பார்த்தோர், தொழில் நுட்பரீயாக குண்டுகளையும் அதனைப் செயற்படுத்தும் விசையையும் வடிவமைத்தோர், இவர்கள அனைவரையும் நெறிப்படுத்தியவர்கள், இதற்கும் மேலாக எம்மால் இப்படிச் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொடுத்த தேசியத் தலைவர், வான் படைக்கு வித்திட்ட கேர்ணல் சங்கர், அதற்கு முன்னரும் கிட்டண்ணாவின் காலத்தில் மேற் கொள்ளப் பட்ட வடிவமைப்பு முயற்சிகள் என்று எண்ணிலடங்கா போராளிகளினதும், மக்களினதும் உழைப்பு இருக்கிறது.

நாம் புலம்பிக் கவிதைகள் வடிப்பதாலோ அன்றி எம்மைக் காப்பாற்றுங்கள் என்று இந்த உலகத்தவரிடம் மன்றாடுவதாலோ எமது அழிவை எம்மால் நிற்பாட்டி விட முடியாது.எமது போராடும் திறனை அறிவியல் ரீதியாக வளர்ப்பதாலேயே எம்மால் எமது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தேசியப் படையைக் கட்டி எழுப்ப முடியும் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா.எமது போராட்டத்தின் ஒவ்வொரு படி முறை வளர்ச்சியின் பின்னாலும் ஒவ்வொரு தொழில் நுட்ப அபிவிருத்தி பின் நிற்கிறது.இந்த அபிவிருத்தியில் புலத்தவராகிய எமது பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு வரும் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.

புலத்தில் உள்ள அனைத்து நுட்பவியலாளர்கள், மாணவர்கள், மக்களின் ஒத்துழைப்பும் பரந்து பட்ட ரீதியில் பெறப்படுமாயின் நாம் இன்னும் இன்னும் வளர முடியும்.பலரின் ஒன்று பட்ட உழைப்புத் தான் எமக்கான தேசத்தை விரைவில் நிர்மாணிக்க உதவும். நாம் பெருமிதம் கொள்ளும் இந்தத் தருணத்தில் இது பற்றிக் கொன்சம் சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமீழீழப் போரியல் வரலாற்றின் புதிய பரிணாமமான வான் புலிகள் நேற்று உலகத்திற்கு தங்கள் வரவைப் பதியப்படுத்தி உள்ளனர்.புலிகள் அழிந்தனர் என்று எக்காளம் இட்டவர்கள் இன்று வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.வானில் பேர் இரைச்சலைக் கேட்டாலையே கூனிக் குறுகி, ஓடி ஒழிந்து ஓடிய நாம் இன்று நேர நிமிர்ந்து மேல் நோக்கி விண்ணில் எமது வான் படையின் வரவைத் தரிசிக்கிறோம்.இந்த உணர்ச்சிப் பிரவாகம் நியாயமானதே,காலம் காலமாக இந்த இயந்திர அரக்கர்களிடம் நாம் பலி கொடுத்த குழந்தைகள், சிறுவர்கள், மனிதர்கள் எண்ணிலடங்கா.கேட்பதற்கு நாதியற்று மாண்டு கொண்டிருந்தோம்.ஆனால் இன்று உலகமே எம்மைப் பார்த்து ஆச்சரியத்துடன் எழுதுகிறது.இந்தக் கணத்தில் நாம் சிறிது சிந்திப்பது அவசியமானது என்பதற்காகவே இந்தப் பதிவு.

இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியம் ஆனது?அதற்கு எது காரணம்?எமது மன வலிமையும்,எம்மில் நாம் வைக்கும் நம்பிக்கையும் ,எமது ஒன்று பட்ட அயராத உழைப்பும் தான் காரணம்.இன்று நடந்த தாக்குதலின் பின்னால் விமானம் ஓட்டிய ஓட்டிகள், அவர்களின் உழைப்பு, விடாத முயற்சி, விமானக் கட்டுப்பாட்டாளர்கள் அவர்களின் உழைப்பு, துல்லியமாக வேவு பார்த்தோர், தொழில் நுட்பரீயாக குண்டுகளையும் அதனைப் செயற்படுத்தும் விசையையும் வடிவமைத்தோர், இவர்கள அனைவரையும் நெறிப்படுத்தியவர்கள், இதற்கும் மேலாக எம்மால் இப்படிச் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொடுத்த தேசியத் தலைவர், வான் படைக்கு வித்திட்ட கேர்ணல் சங்கர், அதற்கு முன்னரும் கிட்டண்ணாவின் காலத்தில் மேற் கொள்ளப் பட்ட வடிவமைப்பு முயற்சிகள் என்று எண்ணிலடங்கா போராளிகளினதும், மக்களினதும் உழைப்பு இருக்கிறது.

நாம் புலம்பிக் கவிதைகள் வடிப்பதாலோ அன்றி எம்மைக் காப்பாற்றுங்கள் என்று இந்த உலகத்தவரிடம் மன்றாடுவதாலோ எமது அழிவை எம்மால் நிற்பாட்டி விட முடியாது.எமது போராடும் திறனை அறிவியல் ரீதியாக வளர்ப்பதாலேயே எம்மால் எமது மக்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தேசியப் படையைக் கட்டி எழுப்ப முடியும் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா.எமது போராட்டத்தின் ஒவ்வொரு படி முறை வளர்ச்சியின் பின்னாலும் ஒவ்வொரு தொழில் நுட்ப அபிவிருத்தி பின் நிற்கிறது.இந்த அபிவிருத்தியில் புலத்தவராகிய எமது பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு வரும் சீர் தூக்கிப்பார்க்க வேண்டும்.

புலத்தில் உள்ள அனைத்து நுட்பவியலாளர்கள், மாணவர்கள், மக்களின் ஒத்துழைப்பும் பரந்து பட்ட ரீதியில் பெறப்படுமாயின் நாம் இன்னும் இன்னும் வளர முடியும்.பலரின் ஒன்று பட்ட உழைப்புத் தான் எமக்கான தேசத்தை விரைவில் நிர்மாணிக்க உதவும். நாம் பெருமிதம் கொள்ளும் இந்தத் தருணத்தில் இது பற்றிக் கொன்சம் சிந்திப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மிகத் தெளிந்து தேர்ந்து வார்த்தைகளைக் கையாண்டிருக்கின்றீர்கள் சகோதரா. எம் அண்ணை சொன்னது போல்" செயலால் வளர்ந்த பின்பே நாம் பேசத் தொடங்க வேண்டும்' என்பதை ஒவ்வொருவரும் உள்வாங்கி உணர்ந்து நடந்துகொண்டாலே போதுமானது.

எம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு எம் விடுதலையை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டாலே 'தோல்வி என்ற சொல்லை எம் விடுதலைப்போராட்ட அகராதியிலிருந்ந்து அகற்றி விடலாம். ஒன்றிணைவோம் செயற்படுவோம்!

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்

நன்றி.

என்ன தல ரொம்ப நாள காணகிடைக்கேல !

என்ன என்னை நினைச்சு ஏதோ உடம்பு புல்லரிக்குது சொறியுறன் என்டியள் அதால ஏதாவது காயம் வந்திட்டோ ! அதே காணகிடைக்கேல

சும்மமமமமமாhh பபப கிகிகி டீடீடீ க்க்க் குகுகு தான்

தல தல தல தாழாது உந்தன் தல.

என்ன தல ரொம்ப நாள காணகிடைக்கேல !

என்ன என்னை நினைச்சு ஏதோ உடம்பு புல்லரிக்குது சொறியுறன் என்டியள் அதால ஏதாவது காயம் வந்திட்டோ ! அதே காணகிடைக்கேல

சும்மமமமமமாhh பபப கிகிகி டீடீடீ க்க்க் குகுகு தான்

தல தல தல தாழாது உந்தன் தல.

புரிந்து கொண்டால் சரிதான்.

- லூசா

மாப்பிள்ளை மற்றும் பிரச்சார விடையங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் கள உறுப்பினர்களுக்கு எனது வேண்டுகோள்.....வான் தாக்குதல் எற்படுத்திய மகிழ்ச்சியுடன் 40% வீதமான அழிவுகள் விமானப்படைக் கலங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளாதாகவும

இந்த வராலாற்று நிகழ்வை மகிழ்வை கட்டுப் படுதத எந்த ஒரு தமிழனாலும் முடியாது. உண்மை. ஆயினும் சிறிது பின்னால் திரும்பிப் பார்ப்பது நன்று. அன்று புலிகளில் விமான எதிர்ப்புப் படையணியால பாலாலியிலே வந்து இறங்க முயற்சித்த சிங்கள விமானத்தை சுட்டு வீழ்த்திய போது ஏற்பட்ட மகிழ்வு அதன் பின் மறு நாள் காலையும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்த அதை காண ஓடிச் சென்ற அனுபவம் இன்றும் மறக்க முடியாத பசுமையாய்....

அதன் பின் எம் மண்ணின் மக்கள் இனி எம் பிள்ளைகளுக்கு விமானத்தை படத்தில் தான் காட்டவேண்டி வரும் என்று இறுமாப்புடன் துள்ளிக் குதித்தது எல்லாம் பசுமையாய் என் மனக் கண்ணில். ஆனால அதன் பின்?? சீயாம செட்டீயும், புக்காராவும் போய் மிக்கும் சுப்பர் சோனிக்கும் வந்து எம் தலையில் குண்டு கொட்டி அழித்த துயரம்....... அது போலத் தான் நேற்றைய நிகழ்வும். நாளை எதிரியவனுக்கு உலக வல்லரசுக்கள் ஓடிவநது உதவலாம்.

இன்று எதிரியிடம் இல்லாத நவீனங்களை அள்ளிக் கொடுக்கலாம். அப்போது நாம் எம் மனத்தளவில் மறுபடியும் சுருண்டு போகலாம். ஆதலால் மனதில் இந்த சந்தோசம் நிலைத்து நிற்க இந்த வெற்றி நிலைத்து நிற்க எம்மாலான பங்களிப்புகளை அது பொருளாதார பலமோ அல்லது தொழில நுற்ப பலமோ தாரளமாகச் செய்து தலைவரின் கையையும் எம் தேசியப் படையையும் பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடன். இன்னும் இனியும் எம மண் இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை வெற்றியுடன் பதிய வேண்டும். அதற்கான பங்களிப்புகள் ஒவ்வொரு தமிழனிடமிருந்தும் கிட்ட வேண்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

சரி நீங்க ஜனார்த்தனன் சொல்லவ்து எங்கள் காதுகளுக்கு கேட்கிறது. இரவு வேளயில் இந்த தாக்குதல் நடந்திருக்கு. இது உலகவல்லரசுகளின் நெஞ்சில் காலால் அடித்தது போல அவன் குப்புற விழுகிறானோ இல்லையோ. புலிகளின் பேச்சு சந்திக்கு சந்தி கதைபடுகுது. அவர்கள் என்னதான் எனி பூட்டினாலும் சிங்கள மக்களின் ஒவ்வொரு பகுதிகளினையும் இப்படி காப்பாற்ற முடியாது. இத்தாக்குதல் அத்தியிற்பூத்தாட் போல எதிரி அயரும் தருணங்களில் தான் எப்பாலும் எங்கேயோ நடக்கும்.

இது இலங்கை அரசை மேலும் கடன் காரர் ஆக்கும். இந்தா கதே பசுபிக் விமானசேவைகளினை தற்காலிகமாக் நிறுத்தியுள்ளது. காப்புறுதிகள் எனி கூடப்போகுது. சுதந்திர வர்த்தக வலயம் தொடங்கி பெரிய எண்ணை குதங்கள் என்று பெரிய இடங்களெல்லாம் இவர்கள் நவீன கருவிகளினை பூட்ட வைப்பதே அரசினை மேலும் பிச்சைக்காரனாக் மாற்ற வைக்கவே.

இப்பவாவது இராணுவம் புரிந்திருக்கும் என்றால் இல்லை எனி அவன் இதைச்சாட்டாக வைத்து முல்லைத்தீவினை அடிக்கப்புறப்படுவான். ஆகவே தலைவர் இதுகளினை எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக அலசி அதன் பின்பு தான் ஒரு நோக்கத்திற்காக இதனை கச்சிதமாக் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதற்கு முதல் உங்கள் களத்தில் ஒரு செய்தி வந்தது கொழும்பில் உள்ள விமான கண்டோல் ரூமில ஒரு அடையாளம் தெரியாத விமானம் ஒன்று பறந்ததாக ஆகவே அலேடாகத்தான் இவை இருந்தவை. ஆனாலும் புலிகள் மிக நவீனமான் ஒண்றை ஏற்கனவே கண்டு பிடித்து விட்டுத்தான் முதலில் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் இதனை கச்சிதமாக் செய்திருக்கிறார்கள்.

இப்ப பல் குழல் எறிகணைகள் வந்த பின்பு புலிகளின் தாக்குதல் முறை மாற்றப்பட்டு இருக்கும். தேவையில்லாத உயிர் இழப்புகளினை தவிர்க்க.

இப்ப உதாரணத்துக்கு போன வருடம் அமெரிக்கா டிவென்ஸ் க்கு ஒரு இந்திய பி.எச்.டி செய்யும் மாணவன் ஒரு வைவால் போல பறக்கும்

ஒரு வேவு விமானத்தினை கண்டு பிடித்துக்கொடுத்திருக்கிறா

இக்பால் அத்தாஸ் தமிழ் நாதத்துக்கு கொடுத்த பேட்டி

இங்கே கிளிக் செய்க

தமிழ்நாதம் போன்ற ஒரு பிரபலமான இணையதளத்திற்கு தெளிவான ஆங்கிலத்தில், இறுக்கமான, குறுக்கு கேள்விகளோடு கூடிய ஒரு செவ்வியை நடத்தக் கூடிய ஒருவர் கிடைக்கவில்லையா?

கேள்வி கேட்பவரின் மொழித்திறனும் கேள்விகளின் தரமும் தான் செவ்வியின் தரத்தை தீர்மானிக்கும்.

ஈழவன் உங்கள் இணைப்பினை கிளிக் செய்தால் எரர் மெசேஜ் வருகுது. அது சரி உங்க கொமன்ஸ தமிழீழ புதிய ஜெனரேட்டர்லில எதிர் பார்க்கிறேன். Gஈ எலெக்ரிகல்ஸ் உடன் ஒரு தொடர்பு கொள்ள ஒரு பிரிஸ்பேன் பெரிய ஆளுடன் தொடர்பு கொள்ள முதல் உங்கள் கருத்துகள் அவசியம். நீங்கள் விரும்பினால் ஒரு ரெஸ்ரோரன்ட்டில் சந்திக்கலாம் இதை விரிவாக விவாதிக்க.

தமிழீழத்தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'நிலவரம்" நிகழ்ச்சியில், இனிநடக்கவேண்டியவை பற்றி மிக விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, இளந்திரையன் அண்ணாவின் கடைசி வாக்கியமான, "போர்வலுச்சமநிலை மற்றப்பக்கம் மேலெழுந்து காணப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" எனக் குறிப்பிட்டதைக் கூறலாம். இந்நிகழ்வு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் பதியப்பட்ட ஒன்றாகும். இந்நிகழ்வைக் கூர்ந்து கேட்டால் பல விடயங்கள் உங்களுக்கு வெளிச்சமாகும். யோகி அண்ணா மற்றும் இளந்திரையன் அண்ணா ஆகிய இருவரும் மிகத்தெளிவாக, பல முக்கிய செய்திகளை எமக்குத் தந்திருக்கிறார்கள். இருவரும் கூறும் ஒவ்வொரு வாக்கியத்திலும் செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.