Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!

Featured Replies

  • யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!
 
 

யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!

யாழ்ப்பாண மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

எதிர்வரும் ஜீன் 5 ஆம் திகதி தேசிய மரம் நடுகை தினத்தை முன்னிட்டு  யாழ். நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர்.

இதன் போது விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை ஆணையாளர்  உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

IMG-7729-300x200.jpgIMG-7728-300x200.jpg

http://newuthayan.com/story/92961.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
  • யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!
 
 

யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!

முதல் குப்பை போட ஒரு வாழியை வையுங்கோ.மிச்சத்தை பின்பு பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:
  • யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!
 
 

யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!

 

http://newuthayan.com/story/92961.html

 

மேலே தான் பாட்டில் பறந்துபோகும் 
காகத்தை பிடித்து கலர் அடிக்க போறாங்களோ ? 

  • தொடங்கியவர்

யாழ். மாந­க­ரில் 4 ஆயி­ரம் மரக்­கன்­று­கள் நடத் திட்­டம்

பசு­மை­ப்ப­டுத்­தும் வேலைத்­திட்­டத்­தின் கீழ் ஜூனில் ஆரம்­பம் என்கிறார் குரே

 
reginold-cooray2555-750x430.jpg
 
 

யாழ்ப்­பாண மாந­க­ரத்­தைப் பசு­மைப் ­ப­டுத்­தும் வேலைத்­திட்­டத்­தின் கீழ் 4 ஆயி­ரம் மரக்­கன்­று­களை நடு­வ­தற்கு திட்­ட­மிடப்பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண ஆளு­நர் றெஐி னோல்ட் குரே தெரி­வித்­தார்.

இந்த வேலைத்­திட்­ட­மா­னது கொழும்பு அரசு, வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர், யாழ்.மாந­கர முதல்­வர், ஆகி­யோ­ரு­டன் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

அரச திணைக்­க­ளங்­கள் மற்­றும் இரா­ணு­வத்­தின் ஒத்­து­ழைப்­பும் இதற்­குப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்­றைய தினம் வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது.

இத­னைத் தொடர்ந்து இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

உல­கத்­தில் தற்­போது கால­நிலை மாற்­ற­மா­னது ஏற்­பட்­டுள்­ளது. இது இயற்­கை­யின் சம­நி­லை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வாறு கால­நிலை மாற்­ற­மா­னது ஏற்­பட்டு மழை வீச்சி பாதிப்­ப­டைந்­த­மைக்கு பல்­வேறு கார­ணங்­கள் இருந்­தா­லும் காட­ழிப்பே முதன்­மைக் கார­ண­மா­கும்.

பல மரங்­கள் வெட்டி அழிக்­கப்­பட்­டு காடு­கள் அழி­க்கப்­பட்­ட­மை­யால் பசு­மைத் தன்மை அற்­றுப்­போ­யுள்­ளது. இத­னால் தற்­போது ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்­களை எதிர்­கா­லச் சந்­த­தி­யி­னர் எதிர்­கொள்­ளக் கூடாது என்­ப­தற்­காக கொழும்பு அரசு, வடக்கு மாகாண ஆளு­நர், வடக்கு மாகாண சபை மற்­றும் யாழ்.மாந­கர சபை ஆகி­யன இணைந்து இந்த வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ளன.

இதன்­படி எதிர்­வ­ரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி மரக்­கன்­று­கள் நடப்­ப­ட­வுள்­ளன. மரக் கன்­று­கள் நடு­வ­தற்­கான இடங்­களை மாந­கர சபை தெரிவு செய்து தந்­துள்­ளது. அத்­து­டன் ஒவ்­வொரு நிலங்­க­ளின் தன்மை, நீரின் தன்மை என்­ப­வற்கு ஏற்ப அந்த இடங்­க­ளுக்­கு­ரிய மரங்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்­றில் 600 மரங்­கள் வரை­யில் மாந­கர சபை­யால் பரா­ம­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஏனைய பயன்­தரு மரங்­கள் பாட­சா­லை­க­ளி­டம் ஒப்­ப­டைக்­க­ப்ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் பத்து மாதங்­கள் வரை­யில் வறட்­சி­யான சூழல் காணப்­ப­டு­வ­தால் இந்தச் செயற்­திட்­டத்­தின் மூலம் பச்சை நிற­மாக யாழ்ப்­பாண மாந­க­ரத்தை உரு­வாக்க முடி­யும்.

எனவேஇந்தச் செயற்­திட்­டத்­துக்கு அனைத்­துத் திணைக்­க­ளங்­க­ளி­ன­தும், அரச அதி­ப­ரி­ன­தும், பாட­சா­லை­க­ளி­ட­மும், இரா­ணு­வத்­தி­ன­ர­தும், பொது அமைப்­புக்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்­புக்­கள் பெறப்­பட்­டுள்­ளன என்­றார்.

ஊடக சந்­ததிப்­பில் வடக்­கு­மா­காண விவ­சாய அமைச்­சர், மா­ந­கர மேயர், ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்தார்­கள்.

http://newuthayan.com/story/10/யாழ்-மாந­க­ரில்-4-ஆயி­ரம்-மரக்­கன்­று­கள்-நடத்-திட்­டம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.