Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

Featured Replies

நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..

Nalloor.png?resize=800%2C511

 

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.  வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

முல்லைத்தீவு மாவட்ட கொக்கிளாய் நாயாறு பகுதிகளில் சிங்கள மீனவர்கள் அடாத்தாக வாடிகள் அமைத்து தங்கி இருந்து , சட்டவிரோதமான மீன் பிடிமுறமைகள் மூலம் மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் என இந்த சபையில் மூன்று வருடங்களுக்கு மேலாக கூறி வருகின்றேன்.
 
அது தொடர்பில் மத்திய மீன் பிடி அமைச்சராக அப்போதிருந்த மஹிந்த அமரவீரவிடம் நேரில் கூட அது தொடர்பில் முறையிட்டு உள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.
 
கொக்கிளாய் பகுதிகளில் தொடங்கிய ஆக்கிரமிப்பு நாயாறு , சாலை சுண்டிக்குளம் தாண்டி தற்போது யாழ்.மாவட்டம் மருதங்கேணி வரை தொடர்கின்றது.  ஆனால் அதனை தடுக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இவ்வாறே சென்றால் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமையும் காலம் வெகு விரைவில் இல்லை என்றே தோன்றுகின்றது என தெரிவித்தார்

http://globaltamilnews.net/2018/81686/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

நல்லூருக்கு அருகில் மிக விரைவில் விகாரை கட்டப்படும் நிலை உருவாகும்..

 

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.  வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இதுவரை இப்படி ஒரு எண்ணம் புத்த சிங்களத்துக்கு தோன்றியதா இல்லையா என்பது தெரியவில்லை. இனித் தோன்றலாம்.
 
"திரிகோண மலையை அமெரிக்காவின் பாவனைக்குக் கொடுத்து அவர்கள் ஆதரவுடன் நாங்கள் தனியரசு அமைத்துக்கொள்வோம்" என்ற அமிர்தலிங்கத்தின் மேடைப்பேச்சை அடுத்தே அங்கு சிங்களக் குடியேற்றம் விரைவுபடுத்தப் பட்டதாக செய்தி படித்த ஞாபகம்.  
 

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்லூர் கோவில் முஸ்லிமுக்கு சொந்தமானது என எங்கன்ட சனம் கட்டுரை எழுதினம்...


விகாரை கட்ட புலம்பெயர்ந்த தமிழர் தனது காணியை நன்கொடையாக கொடுத்தார்...என்ற செய்தி பத்திரிகையில் வந்தாலும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

ந‌ல்லூர் கோவில் முஸ்லிமுக்கு சொந்தமானது என எங்கன்ட சனம் கட்டுரை எழுதினம்...


விகாரை கட்ட புலம்பெயர்ந்த தமிழர் தனது காணியை நன்கொடையாக கொடுத்தார்...என்ற செய்தி பத்திரிகையில் வந்தாலும் வரும்

இப்ப கொஞ்சப்பேர்   அதில என்ன  பிழை என்று கொண்டு வருவினம் பாருங்கோவன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இப்ப கொஞ்சப்பேர்   அதில என்ன  பிழை என்று கொண்டு வருவினம் பாருங்கோவன் 

நீங்க  கொழும்பில் கட்டலாம்

புலத்தில் கட்டலாம்

அவங்க  கட்டக்கூடாதா???  அது தானே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.