Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி

Featured Replies

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையை பாதுகாக்க நெதர்லாந்து உதவி

 

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார்.

சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினோம்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு இரணைமடுவில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தற்கு, அவ்வாறு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கும், எவ்வளவு காலம், எவ்வளவு நிதி தேவை என்பது தொடர்பிலும் ஆராய்ந்ததுடன், வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் உதவி செய்யுமென உறுதியளித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

நெதர்லாந்து அரசாங்கம் எமது நாட்டின் அபிவிருத்திக்கும், கோட்டையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்வதாக தூதுவர் உறுதியளித்துள்ளதுடன், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் மற்றும் கல்வியில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=102777

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிது அல்ல.

நெதர்லாந்து அரசு ஈழத்தமிழர் எப்போதும் கொழும்பு சிங்கள அரசை தயவிலேயே தங்கி  இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகிறது.

கோட்டையை விடுவோம். சில வேளைகளில் நெதர்லாந்து அரசிதற்கு உணர்வு பூர்வமான பிணைப்பு இருக்கலாம்.

ஆயினும், யாழில் உள்ள தனியார் காணிகளில் உள்ள ராணுவ பிரசந்தனத்தை அகற்றுவதற்கு, கோட்டையை நிரந்தர இராணுவ முகமாக மாற்றும் திட்டத்தை இந்த கூரேயே சமீபத்தில் சிபாரிசு செய்திருந்தார்.  

அபிவிருத்தி என்பது அந்த மாகாணத்தில் மக்களால் தேர்தல் மூலம் தெரிந்து நிறுவப்பட்ட நிர்வாகத்துடனே கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.

இது வடமாகாண சபை நிர்வாகத்தால் கடுமைஞான தொனியில் கண்டனம் செய்யப்படவேண்டும்.  

நாங்கள் விடும் பிழை என்னவென்றால், முதலமைச்சர் முள்ளிவாய்க்காலில் அறிவுறுத்தி சொன்னது போல, மற்றவர்களிட்ற்கு மனம் நொந்து விடுமோ என்று எண்ணி, அவர்கள் செவிமடுக்க விரும்பியதை சொல்கிறோம் மற்றும் கேட்கிறோம்.

சமீபத்தில், நான் இங்கு தெரிந்தவர் ஒருவரின் வாடகை வீடு பிரச்சனைக்கு (வீட்டில் இருந்து வெளியேறுமாறு உரிமையாளர் கோரியுள்ளார்) county court  இல் உதவியாக சென்ற பொது, Judge கேட்டது என்னவென்றால், ஏன் திருத்த வேலைகளை உடனடியாக உரிமையாளரிடம் சொல்லவில்லை. தெரிந்தவர்   சொன்னது, உரிமையாளரின் மனம் கோணி பிரச்னை தந்து எழுப்ப முயறசிப்பார் என்பதால். அப்போது ஜட்ஜ் சொன்னது, நீங்கள் எடத்திற்கு வாடகை காட்டுகிறீர்கள், இது உங்கள் உரிமை, எழுப்புவது என்பது பின்பு வரும் பிரச்சனை. எனவே உரிமையை யாருக்கும் மனம்  நோகும் என்று எண்ணி எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்.  

ஆயினும், பல சட்ட கடமைகளை அந்த வீட்டு உரிமையாளர் உரிய காலவரையரையில் செய்யத் தவறியதன் காரணமாக உரிமையாளரின் சட்டபூர்வமான அறிவுப்பு ஏறத்தாழ நிரந்தராமாக  செல்லுபடி அற்றது  ஆகி விட்டது.

இது ஓர் உதாரணம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kadancha said:

இது ஒன்றும் புதிது அல்ல.

நெதர்லாந்து அரசு ஈழத்தமிழர் எப்போதும் கொழும்பு சிங்கள அரசை தயவிலேயே தங்கி  இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு வருகிறது.

 

 

தேசிய இனங்களின் தேசிய நாட்டை அழித்து புதிய மதம் சார்ந்த தேசியநாடுகளை உருவாக்கியதில் அவ‌ர்களுக்கும் முக்கிய பங்குண்டு தானே அதுதான் அந்த அக்கறை.... 

  • கருத்துக்கள உறவுகள்

காலனித்துவ காலத்தின் நிவைுகளை மீட்டி மகிழ்வதிலும்  தங்களின் பழைய காலனி நாட்டு மக்களுக்கு அதை காலாதிகாலத்துக்கு  நினைவுபடுத்திக்கொண்டு இருப்பதிலும்  எஜமானர்களுக்கு அலாதி பிரியம். கோட்டைக்கு இனி என்ன பாதுகாப்பு வேண்டியிருக்கு. ஒல்லாந்தை கிட்லர் தாக்கியபோது ஒல்லாந்துப்படைகள் ஒரேநாளில் ஜேர்மனியிடம்  சரணடைந்ததை அம்மையார் அறியாமல் விட்டிருக்கமாட்டார். ஒல்லாந்து நாட்டில் கிட்லர் கட்டிய கோட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க உலகப்போர் முடிந்த பிந்திய காலங்களில் (கிழக்கு) ஜெர்மனியிடம் ஒல்லாந்து தேசத்தவர்கள் நிதிபெற்றிருப்பார்களோ தெரியாது. யாழ் கோட்டை எங்கள் பாட்டன் பூட்டனை சிறை வைத்த இடம் அவர்களை தூக்கில் தொங்கவிட்ட இடம். காலனித்துவத்தின் சின்னம். அடிமைவாழ்வின் அடையாளம். தமிழர் பிரதேசத்திலிருந்து முற்றிலும் அகற்றப்படவேண்டிய ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.