Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி2)

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

தமிழ் அந்தணர்களும், தமிழ் பார்ப்பனர்களும் ஆரியர்களின் வேதப் பரப்புரைகளால் கவரப்பட்டார்கள்; தமிழ் அந்தணர்-பார்ப்பனர்களில் சிலரைப் பிராமண சாதிக்கு மாற்றிய ஒன்றை மட்டுமே ஆரியமயமாக்கம் செய்ய முடிந்தது.

தமிழ் மண்ணில் சத்திரியர் இல்லை!

சத்திரியர்கள் என்ற இனம் தமிழ் மண்ணில் எப்போதும் இல்லை; ஜார்ஜ் மன்னர் எவ்வளவு சத்திரியரோ, ஷாஜகான் எவ்வளவு சத்திரியரோ, அலெக்சாண்டர் எவ்வளவு சத்திரியரோ, அவ்வளவே தமிழ் மன்னர்களும் சத்திரியர்கள் ஆவார்கள்.

தமிழ் மண்ணில் வைசியரும்,சூத்திரரும் இல்லை!

வணிகம் எந்த நாட்டிலும் இருக்கும் ஒன்று. உலக நாடுகளின் வணிகர்கள் எவ்வளவு வைசியர்களோ, அவ்வளவே தமிழ் வணிகர்களும் வைசியர்கள்.

மேல்வருணத்தார் மூவருக்கும் பணிவிடை செய்யும் அடிமைத்தொழில் செய்யும் சூத்திரர்கள் என்ற ஒரு வகுப்பார் தமிழ் மண்ணில் எப்போதும் இருந்ததில்லை. அவரவர் பொருளாதார வசதிகளைப் பொறுத்து பல்வேறு தொழில்களைவும், வேலைகளையும் செய்து ஊதியம் பெற்றோர் சூத்திரர்கள் என்று முத்திரை குத்தப்படவில்லை. அவரவர் வாய்ப்பைப் பொறுத்து, வணிகராகவோ, வேளாளராகவோ, தொழில் செய்வோராகவோ பணியாற்றும் எவரும் வாய்ப்பு வசதி, படிப்பு, முயற்சி ஆகியவற்றால் செய்தொழிலை மாற்றிக்கொள்ள எத்தடையும் தமிழகத்தில் இருந்ததில்லை. நாடாளும் மன்னன் வாரிசின்றி இறந்தால், கடைக்கோடி வாழ்க்கைத்தரத்தில் வாழும் மனிதனும் கூட, பட்டத்துயானை மாலையிட்டால் நாடாளும் மன்னன் ஆக்கப்பட்டான்; அப்படி மன்னன் ஆனவன் கரிகால் சோழன்.

தமிழ்ப் பார்ப்பனரும், அந்தணரும் ஆரியப்பிராமண வருணத்தில் இணைந்தனர்!

தமிழர்களைவிட நாகரிகத்தில் பன்மடங்கு கீழ்நிலையில் இருந்து நாடோடிக்கூட்டமாக வடஆரியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தேறிய காலங்களில்,  அவர்களின் வெள்ளை நிறத்தால் கவரப்பட்ட தமிழர்கள் அவர்தமக்குச் சிறப்பிடம் கொடுத்ததன் விளைவாக, தமிழ் அந்தணர்களையும், தமிழ்ப் பார்ப்பனர்களையும் கூட்டுச் சேர்த்து, ஆரியர்களால் பிராமணர்கள் என்ற ஒரு வருண வகுப்பைத் தமிழ் மண்ணில்  உருவாக்க இயன்றது.

சணலால் பூணூல் அணியும் சத்திரியர் தமிழகத்தில் இல்லை!

ஆனால், மற்ற மூன்று வருணத்தையும் உருவாக்குவதில் தோல்வியையே கண்டனர். தமிழகத்தை ஆண்ட மன்னர்களை அண்டி, அவர்களுக்குச் சத்திரியப் பட்டம் கொடுத்து, வேள்விகளைச் செய்ய வைத்து, தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முடிந்த ஆரியர்களால், மனுவருணப்படி, தமிழ் மன்னர்களுக்கு சணலால் பூணூல் அணிவித்து, ஆரிய சத்திரியர்களாக்க முடியவில்லை.

மேலும், இவர்கள் சூத்திரர் ஆக்கக் கருதிய வேளாளர்களில் பலர் சிற்றரசர்கள் ஆக இருந்ததாலும், வேளாளர் சிற்றரசர்களுடன் தமிழக முடிமன்னர்கள் திருமண உறவு கொண்டிருந்த முறைமையையும் மாற்ற ஆரியர்களால் இயலவில்லை.

வேளாளர்கள் பலரும் முடிமன்னர்களின் அவையில் முதலமைச்சர் (பெரியபுராணம் இயற்றிய அநபாய சோழனின் முதலமைச்சர் சேக்கிழார் பெருமான் ஒரு வேளாளர்) உள்ளிட்ட முக்கிய பதவிகளைப் பெறுவதையும் ஆரியர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

வைக்கோல் திரியால் பூணூல் அணியும் வைசியர் தமிழகத்தில் இல்லை!

வணிகர்களுக்கு வைக்கோல் திரியால் ஆன பூணூலை அணிவித்து ஆரிய வைசியனாக ஆக்க பிராமணர்களால் இயலவில்லை. ஆயினும், தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் தமிழக சமூகத்துக்குள் வருண அமைப்பைப் புகுத்தும் தங்கள் முயற்சியை ஆரியர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.

வருணக்கட்டுப்பாட்டுக்கான மூளைச்சலவைக் கருவியே பகவத்கீதையின் இடைச்செருகல் ஸ்லோகங்கள்!

வடநாட்டில், மக்கள் தாமாகவே முன்வந்து நால்வருணக் கட்டுப்பாட்டின்படி, அவரவருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மனம் உவந்து ஏற்கும் வகையில், இறைமை என்னும் கோட்பாட்டின் மேல் மூளைச்சலவை செய்து  கட்டிஎழுப்பும் முயற்சியாக, ஆரியப் பிராமணர்கள்,  மகாபாரத இதிகாசத்தில் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு கிருஷ்ண பகவானால் அறிவுரை சொல்லப்பட்டதாக எழுந்த பகவத்கீதை என்னும் நூலில், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் எண்ணத்தில் பல இடைச்செருகல்களைச் செய்துவிட்டனர்.  

கீதையின் 18.45ம் ஸ்லோகத்தில் "மனிதன் அவனவனுக்கு விதிக்கப்பட்ட கருமத்தைத் தவறாமல் செய்வதன் மூலம் பக்குவம் அடைய முடியும்; தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தில் ஈடுபட்டு எவ்வாறு பக்குவம் அடைவது என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக" என்று கூறுகின்றார் பகவான் கிருஷ்ணர்[8]. இச்சுலோகம் சூத்திரர்கள் என்னும் மனிதர்களை வருண முறைப்படி, விதிக்கப்பட்ட அடிமை உடலுழைப்பைத் தொடர்ந்து செய்விக்க, இறைவன் பெயரால் மூளைச்சலவை செய்ய எழுதப்பட்டது. அடிமையாக இருந்தே இறைவனை அடையும் பக்குவம் என்று ஒன்றை சூத்திரனின் மூளையில் புகுத்திவிட்டால், எந்த அடக்குமுறைக்கும் அவசியம் நேராது, அவனே அடங்கிப் பணி செய்வான் அல்லாவா? அபாரமான திட்டமிடலுடன் ஆரியர்கள் உருவாக்கிய உளவியல் உத்தியே பகவத்கீதை இடைச்செருகல்கள்.   

"கீதையின் 18.46ம் ஸ்லோகத்தில் "ஒரு மனிதன் அவன் பிறந்துள்ள வருணசாதிக்கு* விதிக்கப்பட்டுள்ள கருமத்தைச் செவ்வனே செய்வதன் மூலம் எல்லா உயிர்களின் மூலமும், எங்கும் நிறைந்தவருமான இறைவனை அடைந்து முழுமை அடைய இயலும்[9]." என்கிறார் கிருஷ்ணர்.

இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தாருக்கு, இறைவனை அடையும் வழியாக அவனனவன் பிறந்த வருணத்தின் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உளவியல் ரீதியான மனமாற்றத்தையும், ஈடுபாட்டையும் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்; தொடர்ந்து இந்நிலையைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள். .

"கீதையின் 18.47ம் ஸ்லோகத்தில் "ஒருவனுக்குத் தகுதியுடன் கூடிய ஆற்றல் இருந்து, பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மிக நேர்த்தியாகச் செய்வதைவிட, தனது வருணத்துக்கு  விதிக்கப்பட்ட சுயதருமக் கருமங்களை, நேர்த்தியாகச் செய்ய இயலாவிட்டாலும், செய்வதே சிறந்தது." என்கிறார் பகவான்[10].

இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தார்கள், அவரவருக்கு விதிக்கப்பட்ட தொழில்களை மட்டுமே செய்யவேண்டும்; பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட தொழில்களுக்கு மாறக்கூடாது, குறிப்பாகப், பிராமணர்களின் வேதக் கல்விக்கோ, வேள்வித் தொழிலுக்கோ முயற்சி செய்யக் கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையைச் செவ்வனே உருவாக்க இச்சுலோகம் மூலம் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்.   

"கீதையின் 18.48ம் ஸ்லோகத்தில் " நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போலவே, எந்த முயற்சியும் ஏதேனும் ஒரு குற்றத்தால் சூழப்பட்டிருக்கின்றது. எனவே குந்தியின் மகனே! குற்றம் நிறைந்ததாக இருந்தாலும்கூட, தனது உடன்(வருணத்துடன்) தோன்றிய கருமங்களை ஒருவன்  துறக்கக்கூடாது" என்கிறார் பகவான்[11]".

இச்சுலோகத்தின் மூலம், பிராமணனைத் தவிர்த்த ஏனைய மூன்று வருணத்தாரும் குற்றம், பாவம் உள்ளிட்ட எக்காரணத்தைக் கொண்டும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையை ஆரியப்பிராமணர்கள் இறைவனின் பெயரால் உருவாக்கினார்கள்.

குறிப்பாக, ஒரு சூத்திரன் தனது எஜமானன் கொலையே செய்யச் சொன்னாலும், கொலை பாவம் என்று கருதி, தனது எஜமானன் ஏவிய செயலைச்செய்யாமல் இருந்துவிடக் கூடாது என்ற கீழ்ப்படியும் ஒழுங்கைக் கடவுளின் பெயரால் சுயகருமம் என்று நிலைநிறுத்தவே எழுதினார்கள்.

அடிமைத்தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தாலே துறவின் பயனான மோட்சம் என்னும் மோசடி உத்தரவாதம்!

"கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் "துறவின் பலன்களை புலனடக்கம், ஜட விஷயங்களில் பற்றின்மை, ஜட சுகங்களில் நாட்டமின்மை இவற்றாலேயே அடைந்துவிட முடியும். இதுவே துறவின் உயர் பக்குவ நிலை[12]" என்கிறார் பகவான்.

இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: பகவானின் அங்க உறுப்பாகத் தன்னை எப்போதும் நினைப்பதே துறவின் உண்மையான பொருளாகும். எனவே, பகவானின் அங்க உறுப்பான ஒருவன் தனது செயல்களின் பலனை(த் தானே நுகர்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை;) பகவானாலேயே அனுபவிக்கப்படவேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு. துறவு நிலை. இத்தகு மனோநிலையால் பரமனுக்காகவே செயல்படுவதால், ஒருவன் திருப்தியுறுகிறான். இவ்வாறு ஜடனிலையிலான எதிலும் அவன் பற்றற்றவன் ஆகிறான். இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான். ஒரு துறவி தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவனோ, துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். இதுவே யோகத்தின் பக்குவநிலை ஆகும்." என்கிறார்.

ஆரிய நலனுக்கான பிராமண சுயநலத்தின் உந்துதலால் சுவாமி பிரபுபாதா உதிர்த்த 'யோகத்தின் பக்குவநிலை'யைப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கம் உதவும். துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறந்த ஒருவனுக்கு கல்வி கற்று, உயர்நிலை பெறவேண்டும் என்று ஆசை வரவே கூடாது; ஏனெனில், அவன் சுயகருமத்தை விடக்கூடாது என்னும் கட்டாயம் இருகிறது. ஆயினும், அந்தச் சூத்திரனுக்கு மனத்தளவில் ஏற்பட்ட ஆசை அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பிறருக்குத் தெரியாமல், அவன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யக் கூடும்.

இராமராஜ்ஜியத்தில், சம்பூகன் என்னும் சூத்திரன் மோட்சமடையத் தவம் செய்து, இராமபிரானால் தலைவெட்டப்பட்டு இறந்த உத்தர இராமாயணக் கதை இதற்குத் தலைசிறந்த உதாரணம். இத்தகைய முயற்சிகளை தரும சாத்திர நீதிநூற்கள் இயற்றிச் சொல்லும் சட்டத்தாலோ, அடக்குமுறையாலோ முழுவதும் அடக்கமுடியாது. ஆனால், பக்தி என்னும் உளவியல் ரீதியலான போதையை ஊட்டிவிட்டால், முழுவதுமாகத் தடுத்துவிடலாம் என்று திட்டம் தீட்டிய ஆரியப் பிராமணர்கள் செருகிய விதியே கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது. இது எவ்வாறு வேலைசெய்யும் என்பதைப் பின்வரும் உதாரணம் விளக்கும்.

'யோகத்தின் பக்குவநிலை' என்னும் கருமாந்திரத்தின் மோசடியை விளக்கும் கதை!

ஒருவன் சூத்திர துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறக்கிறான்; எனவே, அவனது சுயதருமம் துப்புரவுத் தொழில் ஆகிவிடுகிறது. கிருஷ்ண உணர்வுடைய அவன் தன்னைப் பகவானின் அங்கமாக உணர்கிறான்; அவன் பகவானுக்காகவே மலம் அள்ளுவதாகக் கருதுவதால், மலத்தின் துர்நாற்றம் அவனைப் பாதிக்காமல், கீதையில் பகவான் உறுதியளித்தபடி பகவானையே சென்றடைகின்றது; மலம் அள்ளும் கருமாந்திரத்தை அவனால் எளிதில் செய்ய முடிகிறது. (கிருஷ்ண உணர்வற்ற ஏனைய மலம் அள்ளும் சூத்திரர்கள் மலத்தின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள பட்டைச்சாராயம் குடித்துத் தங்கள் உடல்நலனை இழக்கிறார்கள் என்பதை இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டும்.) இப்படி, பகவானுக்காக மலம் அள்ளும் இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான்.  மலம் அள்ளும்போதே கிருஷ்ண உணர்வில் இருப்பதால், துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். பட்டைச் சாராயத்தின் உதவியில்லாமல் இத்தகைய "யோகத்தின் பக்குவநிலை" அடையும் 'கருமாந்திர'த்துக்குக் கிருஷ்ண உணர்வே துணை. உடல் நலமும் காக்கப்படும்.

மதம் ஒரு அபின் போன்ற போதைப்பொருள்  என்னும் மார்க்சின் தத்துவத்தை விளக்கும் பிரபுபாதா!

"மதம் ஒரு 'அபின்' போன்ற போதைப் பொருள்", என்று காரல் மார்க்ஸ் சொன்ன தத்துவத்துக்கு இதுவரை எனக்குப் புரியாமல் இருந்தது; காரல் மார்க்ஸ் தத்துவத்துக்கான சரியான விளக்கத்தை பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை விளக்கம் தருகின்றது.

இறுதியாக, சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் மொத்த உண்மை உருவமாக பகவத்கீதை இருக்கிறது என்பது சரிதான்; பக்தி என்னும் இனிப்பு தடவிய நால்வருண நஞ்சை நயமான சொற்களில் வார்த்தெடுத்து, அடிமைகள் தாமாகவே முன்வந்து, ஆரியப்பிராமணர்களின் வருணதர்மத்தைக் காக்கும் வகையில் பின்னப்பட்டுள்ள நூல் பகவத்கீதை.

திருக்குறளின் உயர்வும், பகவத்கீதையில் செருகப்பட்ட கீழ்மை ஸ்லோகங்களும்!

இறைவன் மனிதனுக்குச் சொன்னதாக, "பிறப்பின் அடிப்படையில் நால்வருணங்களை இறைவனாகிய நானே உருவாக்கினேன் (சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம்)", என்று இறைவன் திருப்பெயரால், பகவத்கீதையில் ஸ்லோகங்களை இடைச்செருகல்கள் செய்து, ஆரியர்கள் முழங்கும் கீழ்த்தரமான சுயதரும சித்தாந்தத்தை நோக்கும்போது, மனிதரான திருவள்ளுவர் தம் சகமனிதர்களுக்குச் சொன்ன உயிர் சமத்துவத் தத்துவம் பேசும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் திருக்குறள் அறம்,  ஞாலத்தினும் மாணப் பெரியது; முற்றிலும் உயர்ந்தது.

"ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!" என்று என்னதான் திருநாவுக்கரசர் போன்ற அருளாளர்கள் இறைவனின் திருப்பெயரால் சமாதான அறிவுரை சொன்னாலும், ஆரியம் மட்டுமே உயர்ந்தது, தமிழ் ஆரியத்தின் அங்கம் என்று கீழ்மைப்படுத்தும், செரித்து விழுங்கத்துடிக்கும் நாகசாமிகள் போன்ற ஆரிய இனவாதிகள்  முளைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்; போரிட்டுத் தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்.

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதையில் வரும் முருங்கை மரம் ஏறும் வேதாளத்தைப் போல, தமிழ்ப் பண்பாட்டையும், மெய்யியலையும் விழுங்கத் துடிக்கும் ஆரியர்களின் விடா முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். உலகவழக்கு அழிந்து ஒழிந்த, எழுத்து வடிவமில்லாத ஆரிய மொழிக்குச் சொந்தக்காரர்கள், என்றும் சிதையா சீரிளமை கொண்ட தமிழன்னையைக் கண்டு பொறாமை கொள்வதும்போரிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.    

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆய்வுக் குறிப்புகள் - Research References (continuation . . .)


8. स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु।।18.45।।

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥
sve sve karmaṇy abhirataḥ saḿsiddhiḿ labhate naraḥ
sva-karma-nirataḥ siddhiḿ yathā vindati tac chṛṇu
Translation of Bhagavad Gita 18.45: By following his qualities of work, every man can become perfect. Now please hear from Me how this can be done.
9. यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।।

யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥
yataḥ pravṛttir bhūtānāḿ yena sarvam idaḿ tatam
sva-karmaṇā tam abhyarcya siddhiḿ vindati mānavaḥ

Translation of Bhagavad Gita 18.46: By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work.
Commentary by Sri Adi Shankaracharya of Advaita Sampradaya:
18.46 Manavah, a human being; vindati, achieves; siddhim, success, merely in the form of the ability for steadfastness in Knowledge; abhyarcya, by adoring, worshipping; svakarmana, with his own duties stated above, as allotted to each caste; tam, Him, God; yatah, from whom, from which God; comes pravrttih, origin,-or, from which internal Ruler comes the activities; ;bhutanam, of creatures, of living beings; and yena, by whom, by which God; is tatam, pervaded; sarvam, all; idam, this world.

Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya:
As stated in the Fifteenth Chapter, all living beings are fragmental parts and parcels of the Supreme Lord. Thus the Supreme Lord is the beginning of all living entities.
This is confirmed in the Vedanta-sutra—janmady asya yatah [SB 1.1.1]. The Supreme Lord is therefore the beginning of life of every living entity. And as stated in the Seventh Chapter of Bhagavad-gita, the Supreme Lord, by His two energies, His external energy and internal energy, is all-pervading. Therefore one should worship the Supreme Lord with His energies. Generally the Vaishnava devotees worship the Supreme Lord with His internal energy. His external energy is a perverted reflection of the internal energy. The external energy is a background, but the Supreme Lord by the expansion of His plenary portion as Paramatma is situated everywhere. He is the Super soul of all demigods, all human beings, all animals, everywhere. One should therefore know that as part and parcel of the Supreme Lord one has his duty to render service unto the Supreme. Everyone should be engaged in devotional service to the Lord in full Krishna consciousness. That is recommended in this verse.
Everyone should think that he is engaged in a particular type of occupation by Hrishikesha, the master of the senses. And by the result of the work in which one is engaged, the Supreme Personality of Godhead, Sri Krishna, should be worshiped. If one thinks always in this way, in full Krishna consciousness, then, by the grace of the Lord, he becomes fully aware of everything. That is the perfection of life. The Lord says in Bhagavad-gita (12.7), tesham aham samuddharta. The Supreme Lord Himself takes charge of delivering such a devotee. That is the highest perfection of life. In whatever occupation one may be engaged, if he serves the Supreme Lord he will achieve the highest perfection.

10. श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
   स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।18.47।।

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥
śreyān sva-dharmo viguṇaḥ para-dharmāt sv-anuṣṭhitāt
svabhāva-niyataḿ karma kurvan nāpnoti kilbiṣam॥ 18.47 ॥

Translation of Bhagavad Gita 18.47: It is better to engage in one’s own occupation, even though one may perform it imperfectly, than to accept another’s occupation and perform it perfectly. Duties prescribed according to one’s nature are never affected by sinful reactions.
11. सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत्।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः।।18.48।।

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥
saha-jaḿ karma kaunteya sa-doṣam api na tyajet
sarvārambhā hi doṣeṇa dhūmenāgnir ivāvṛtāḥ:॥ 18.48 ॥
Translation of Bhagavad Gita 18.48: Every endeavor is covered by some fault, just as fire is covered by smoke. Therefore one should not give up the work born of his nature, O son of Kunti, even if such work is full of fault.
Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya:
In conditioned life, all work is contaminated by the material modes of nature. Even if one is a brahmana, he has to perform sacrifices in which animal killing is necessary. Similarly, a kshatriya, however pious he may be, has to fight enemies. He cannot avoid it. Similarly, a merchant, however pious he may be, must sometimes hide his profit to stay in business, or he may sometimes have to do business on the black market. These things are necessary; one cannot avoid them. Similarly, even though a man is a shudra serving a bad master, he has to carry out the order of the master, even though it should not be done. Despite these flaws, one should continue to carry out his prescribed duties, for they are born out of his own nature.
A very nice example is given herein. Although fire is pure, still there is smoke. Yet smoke does not make the fire impure. Even though there is smoke in the fire, fire is still considered to be the purest of all elements. If one prefers to give up the work of a kshatriya and take up the occupation of a brahmana, he is not assured that in the occupation of a brahmana there are no unpleasant duties. One may then conclude that in the material world no one can be completely free from the contamination of material nature. This example of fire and smoke is very appropriate in this connection. When in wintertime one takes a stone from the fire, sometimes smoke disturbs the eyes and other parts of the body, but still one must make use of the fire despite disturbing conditions. Similarly, one should not give up his natural occupation because there are some disturbing elements. Rather, one should be determined to serve the Supreme Lord by his occupational duty in Krishna consciousness. That is the perfectional point. When a particular type of occupation is performed for the satisfaction of the Supreme Lord, all the defects in that particular occupation are purified. When the results of work are purified, when connected with devotional service, one becomes perfect in seeing the self within, and that is self-realization.

 12. असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति।।18.49।।

அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥
asakta-buddhiḥ sarvatra jitātmā vigata-spṛhaḥ
naiṣkarmya-siddhiḿ paramāḿ sannyāsenādhigacchati ॥ 18.49 ॥

Translation of Bhagavad Gita 18.49: One who is self-controlled and unattached and who disregards all material enjoyments can obtain, by practice of renunciation, the highest perfect stage of freedom from reaction.
Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: Real renunciation means that one should always think himself part and parcel of the Supreme Lord and therefore think that he has no right to enjoy the results of his work. Since he is part and parcel of the Supreme Lord, the results of his work must be enjoyed by the Supreme Lord. This is actually Krishna consciousness. The person acting in Krishna consciousness is really a sannyasi, one in the renounced order of life. By such a mentality, one is satisfied because he is actually acting for the Supreme. Thus he is not attached to anything material; he becomes accustomed to not taking pleasure in anything beyond the transcendental happiness derived from the service of the Lord. A sannyasi is supposed to be free from the reactions of his past activities, but a person who is in Krishna consciousness automatically attains this perfection without even accepting the so-called order of renunciation. This state of mind is called yogarudha, or the perfectional stage of yoga. As confirmed in the Third Chapter, yas tv atma-ratir eva syat: one who is satisfied in himself has no fear of any kind of reaction from his activity.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதிர்கன்னி [மலர்குழலி]     இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இயற்கையின் அழகால் சூழப்பட்ட அந்த கிராமத்திலேயே கழித்தார்.   "அல்லிப்பூ தாமரைப்பூ ஆயிரம் பூப்பூத்தாலும் கல்யாணப் பூவெனக்குக் காலமெல்லாம் பூக்கலையே!"   அப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது. பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போனாள். சிறு வயதிலிருந்தே, மலர்குழலி ஆர்வமுள்ள மனதையும், கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்த அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவளது அபிலாஷைகளுடன் ஒத்துப்போகவில்லை, அவள் ஊனமுற்ற. கொஞ்சம் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தின் பாரங்களாலும் படிப்பை மேல் தொடரமுடியாமல் போய்விட்டது.   என்றாலும் வாழ்க்கை அளிக்கும் எளிய இன்பங்களில் ஆறுதலையும் மனநிறைவையும் கண்ட அவள், தனது பிரகாசமான புன்னகை, கனிவான இதயம் துணை கொடுக்க, தாயிடம் இருந்து இளமையில் பெற்ற விதிவிலக்கான சமையல் திறன் கைகொடுக்க, அதையே ஒரு தொழிலாக்கி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களை தனது வீட்டு வாசலுக்கு இழுத்து, வீட்டில் இருந்தே தங்கள் தேவைக்கு உழைக்கத் தொடங்கினாள்.   வருடங்கள் செல்ல செல்ல, மலர்குழலியின் சுவையான உணவு வகைகளுக்கான நற்பெயர் வளர்ந்தது, மேலும் அவளது ருசியான உணவு மற்றும் ஆறுதலான கூட்டத்தை நாடும் கிராம மக்கள் கூடும் இடமாக அவளது வீடு மாறியது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதிற்குள் சில வேளை, அவளுடைய உணர்வுகள் போராடுவதும் உண்டு, மலர்கள் அணிந்த கொண்டையை உடையவள் என்று பெற்றோர் இட்ட பெயர், பெயர் அளவிலேயே வாழ்ந்து, தனிமையான வாழ்க்கை அமைந்த போதிலும், அதை தனக்குள்ளேயே அடக்கி, அவள் வெளியே அதை காடடாமல் மகிழ்வு போல வாழ கற்றுக்கொண்டாள்.   வாழ்க்கை அவளை தன் வழியில் அழைத்துச் சென்றாலும், மலர்குழலி அறிவு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவள் மிகவும் நேசித்த புத்தகங்களின் ஒரு சிறிய தொகுப்பை அவள் வைத்திருந்தாள், அவள் இரவுகளை அவற்றின் பக்கங்களில் மூழ்கடித்தாள். பலதரப்பட்ட தலைப்புகளில் உரையாடும் அவளது திறன், அவளின் உணவுக்கு வரும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து மரியாதையையும் பாராட்டையும் பெற்றது.   மலர்குழலியின் இல்லமானது அறிவுரையை நாடுபவர்களுக்கு அல்லது வெறுமனே கேட்கும் காதுகளுக்கு ஆறுதல் மற்றும் ஞானம் தரும் இடமாகவும் மாறத் தொடங்கியது. வயிற்றுப் பசிக்கு உணவையும், அறிவு பசிக்கு நல்ல கருத்துக்களையும் கொடுத்தது. அதனால் அவர் கிராமத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக ஆனார், சர்ச்சைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினார், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவளுடைய அமைதியான இருப்பும், எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு பொருத்தமான தீர்வு காணும் திறனும் அவளைப் பலருக்கு நங்கூரமாக மாற்றியது.   ஒரு நாள், அகக்கடல் என்ற நபர் அந்த கிராமத்திற்கு தனது ஆசிரியர் வேலையில் மாற்றம் கிடைத்து வந்தார். அவர் ஒரு திறமையான இசைக்கலைஞரும் கூட. அவர் ஏற்கனவே ஒரு ஆசிரியை ஒருவளை திருமணம் செய்து இருந்தாலும், கொரோனா நோயினால் அவரை பறிகொடுத்தது மட்டும் அல்ல, பிள்ளைகளும் இல்லாததால், தனிக்கடடையாகவே அங்கு தனது புது ஆசிரியர் பணியை தொடங்கினார். மலர்குழலியின் சமையல் திறமை மற்றும் அவளது துடிப்பான இயல்புகளைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவளைச் சந்திக்க, மற்றும் தனது இரவு, வார விடுமுறை நாள் உணவுகளை அங்கு சாப்பிட முடிவு செய்தார். அவளுடைய அடக்கமான இல்லத்தில் அவன் அடியெடுத்து வைத்த கணம், மசாலா வாசனையும் சிரிப்பொலியும் அவனை வரவேற்றன.   மலர்குழலிக்கும் அகக்கடலுக்கும் நாளாக ஆக ஒரு நல்ல புரிந்துணர்வு நட்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசினர். அகக்கடல் தனது கிட்டார் மீது தனது ஆத்மார்த்தமான சுருதிகளை வாசித்தார், மலர்குழலி தனது வயதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதற்கு ஏற்றவாறு அபிநயங்கள் பிடித்து மகிழ்வார். அவளும் அவனும் ஒத்த வயதில் இருப்பதாலும், தன்னை மாதிரியே ஒரு தனிமை அவனிடமும் இருப்பதாலும், அவள் வெளிப்படையாகவே அவனுடன் பழகுவதில் பிரச்சனை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் தொடர்பு ஆழமடைந்தது, மேலும் கிராமவாசிகள் அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை கவனிக்காமல் இருக்கவும் இல்லை.   அகக்கடல் அந்த கிராமத்துக்கு வந்து, ஒரு ஆண்டால் மலர்குழலியின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமானார்கள், இதுவரை பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற துணிவில் இருந்த அவளுக்கு, தனிமை மேலும் பெரிதாகியது. சிலர் அவளை இப்ப வெளிப்படையாக ஒரு முதிர்கன்னி, திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணாக பார்க்க தொடங்கினர். அவளது வீடு இன்னும் உணவுக்கு திறந்திருந்தது, என்றாலும் இப்ப அங்கு வருபவர்களின், சிலரின் போக்கில் சில மாற்றம் காணப்பட்டது. அது அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து உணவு பரிமாறுவது ஒரு இடைஞ்சலாக மாறிக்கொண்டு இருந்தது.   அதைக்கவனித்த அகக்கடல், அங்கேயே அவளுக்கு துணையாக தங்க முடிவு செய்தான். நாட்கள் செல்ல செல்ல மலர்குழலி மற்றும் அகக்கடலின் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கனவுகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் சகவாசம் அடைந்தனர். இளமை கடந்து இருந்தாலும், அவர்களின் இதயம் இளம் பருவத்தினர் போல, ஒரே அலைநீளத்தில் எதிரொலித்தது. மலர்குழலி தன் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நீண்ட காலமாக நம்பியிருந்த உணர்வுகளை, தான் இப்ப அனுபவிப்பதை உணர்ந்தாள். என்றாலும் சமூக அமைப்பையும் மதிக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே ஊரறிய, அவர்களின் முன்னாலையே அவளின் கையை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், ஒரு மாலை நேரத்தில், சூரியன் வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைந்தபோது, அகக்கடல் தனது கிட்டார் மெல்லிசை மூலம் மலர்குழலியிடம் தனது காதலையும் திருமணம் செய்யும் எண்ணத்தையும் ஒப்புக்கொண்டார். மலர்குழலியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவள் ஒரு காலத்தில் இளமைக்காகவே காதல் ஒதுக்கப்பட்டது என்று எண்ணியவள், அது தவறு என்பதை உணர்ந்தாள். இவர்களது காதல் கதை கிராமத்தில் கிசுகிசுக்கப்பட்ட கதையாக மாறினாலும், காதலுக்கு வயது இல்லை என்பதற்கான அடையாளமாக அது அமைந்தது.   ஒரு நாள், சிறு குழந்தைகள் சிலர் அவளது புத்தகங்களின் தொகுப்பைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். அந்த பக்கங்களில் உள்ள கதைகள் மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாடசாலையால் வந்தபின் தங்கள் மாலை நேரத்தை அதில் செலவிடத் தொடங்கினர். ஆசிரியையாக வேண்டும் என்ற மலர்குழலியின் கனவு உண்மையில் இறக்கவில்லை; வேறு வடிவமாக பிள்ளைகளூடாக வெளிவரத் தொடங்கியது.   குழந்தைகளின் உற்சாகம் மலர்குழலியில் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்தது. அவள், புது கணவர் அகக்கடலின் உதவியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் முறைசாரா வகுப்புகளை நடத்தத் தொடங்கினாள். குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் கருணை மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவம் பற்றி கற்பித்தாள். கிராமப் பெரியவர்கள் விரைவில் அவளது முயற்சிகளை அங்கீகரித்து, தங்களின் ஆதரவை வழங்கினர், ஒரு சிறிய சமூக நூலகம் மற்றும் கற்றல் மையத்தை நிறுவ உதவினார்கள்.   மலர்குழலியின் நூலகம் முழு கிராமத்திற்கும் அறிவு மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறியது. படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் எல்லா வயதினரும் அவளது தாழ்மையான இல்லத்திற்கு திரண்டனர். அவள் கற்பித்த குழந்தைகள் தாங்களாகவே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வளர்ந்தனர், அவர்களின் பாதைகள் மலர்குழலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டன.   வருடங்கள் செல்லச் செல்ல மலர்குழலியின் இருப்பு அவளைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டே இருந்தது. அவளின் முதிர்கன்னி வாழ்க்கை முற்றுப்புள்ளிக்கு வந்தது மட்டும் அல்ல, அவளின் மற்றோரு ஆசையான ஆசிரியர் பணியும் ஒரு விதத்தில் நிறைவேறியதுடன், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் இன்று மகிழ்வாக வாழ்கிறாள். மலர்குழலியின் கதை அவளது கிராமத்திற்குள் மட்டுமல்ல, இலங்கையில் எங்கும் பரவி அவளுக்கு புகழ் சூடியது.   என்றாலும் அவளின் வாழ்வு சவால்கள் இல்லாமல் இல்லை, ஏனென்றால் சமூகம் அதன் தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தது, ஆனால் மலர்குழலியும் அகக்கடலும் அவர்களை நெகிழ்ச்சியுடனும், விதிமுறைகளின்படியும், இணைந்து வாழும் உறுதியுடனும் எதிர்கொண்டனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் காதல் மலரலாம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை கிராமவாசிகளுக்குக் கற்பித்த அவர்களின் கதை பலருக்கு உத்வேகமாக அமைந்தது.   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு! இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1413421
    • கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381
    • ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409
    • செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.