Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றிலும் வெள்ளம்; 8-வது நாளாக குகைக்குள் சிக்கி இருக்கும் தாய்லாந்து கால்பந்து சிறுவர் அணி: மீட்புப்பணியில் ஆயிரம் வீரர்கள்

Featured Replies

சுற்றிலும் வெள்ளம்; 8-வது நாளாக குகைக்குள் சிக்கி இருக்கும் தாய்லாந்து கால்பந்து சிறுவர் அணி: மீட்புப்பணியில் ஆயிரம் வீரர்கள்

 
bpcave01071865

குகைக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மீட்டுப்படையினர்   -  படம்: ஏஎப்ஃபி

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அணியின் உதவிப் பயிற்சியாளரும்  ஒரு குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டனர். மழை கடுமையாக பெய்ததால், 8-வது நாளாக குகையில் இருந்து வெளியேவரமுடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ நீளம் உடையதாகும். இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப்பயிற்சியாளரும் சென்றார்.

   
 

ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்குப்பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்தச் சிறுவர்களையும், அணியைக் காணாமல் பல்வேறு இடங்களில் அணி நிர்வாகம் தேடியுள்ளது. இறுதியில் இந்த குகைப்பகுதி அருகே சிறுவர்களின் பைகள், சைக்கிள்கள், உடைகள் இருந்தன.

thaiJPG

குகைக்குள் தேடுதல் பணி குறித்து பார்வையிடும் அதிகாரிகள்

 

இதையடுத்து சிறுவர்கள் குகைக்குள் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், அதன்பின் குகைக்குள் தேடுதல் பணி நடத்தாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. இந்தக் குகை அமைந்திருக்கும் நகரம் மியான்மர், லாவோஸ் நாடுகள் அமைந்திருக்கும் பகுதியாகும். அங்குப் பருவமழை தீவிரமடைந்து பெய்துவருவதால், அங்கு மீட்புப்பணியை மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 8 நாட்களாகக் குகைக்குள் சிக்கி இ ருக்கும் அந்த 12 சிறுவர்கள், அவர்களின் துணை பயிற்சியாளர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்கிற விவரம் ஏதும் தெரியவில்லை.

இந்த செய்தி தாய்லாந்து நாட்டின் அனைத்து நாளேடுகளிலும் கடந்த 7 நாட்களாக முதல்பக்கத்தை அலங்கரித்துவிட்டன. சர்வதேச முக்கியத்துவத்தையும் பெற்ருவிட்டதால், உலக நாடுகள் உதவி கரம்நீட்டியுள்ளன.

இதற்கிடையே கடந்த ஒருவாரமாக பெய்தமழை ஓய்ந்து, இன்று காலை முதல் வெயில்அடிக்கத் தொடங்கி இருப்பதால், மீட்புப்பணியை விரைவுப்படுத்தியுள்ளனர். குகை 10 கி.மீ நீளம் என்பதால், நீண்டதொலைவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் வீரர்கள் நீந்த முடியாது என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். குகைக்குள் 2 அல்லது 3 கிமீ. தொலைவில்தான் சிறுவர்கள் சிக்கி இருக்கக் கூடும் என்று மீட்புப்படையினர் நம்புகின்றனர்.

colin-cs-30jpg

மீட்புப்பணியில் வீரர்கள்

 

மீட்புப்பணி நடப்பது குறித்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோபார்ட் காத்தாங்வோங் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்குப் பின் இப்போது மீட்புப்பணி மீண்டும் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நின்றுவிட்டது. மீட்புப்பணியினரும் குகைக்குள் செல்லும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதால், எனக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த குகைக்குள் செல்லும் ஸ்கூபா டைவிங் வீரர் நாரித்தார்ன் நா பாங்சாங் கூறுகையில், இந்தக் குகைக்குள் இருக்கும் தண்ணீரால் நீச்சல் அடிப்பதற்குக்கூட ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. சிறுவர்களை முழுமையாகத் தேட ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம் எனத் தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டுக்கு உதவ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், கடலில் தேடுதல் வேட்டையில்சிறப்பு வல்லுனத்துவம் பெற்ற வீரர்கள் எனப் பலரும் வந்துள்ளனர். இதனால், ஏற்குறைய ஆயிரம் பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

இது குறித்து தாய்லாந்து அதிகாரிகள் கூறுகையில் தாம் லாங் குகை தாய்லாந்து நாட்டின் மிகநீண்ட குகை, மிகவும் கடினமானது. உள்ளே சென்றுவிட்டால், மீண்டும் வந்த பாதையை அடையாளம் கண்டுவருவது கடினமாகும். இந்தக் குகைக்கு அடிக்கடி இந்த சிறுவர்கள் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள். தேடுதல் வேட்டையில் அவர்கள் கிடைத்துவிடுவார்கள் என நம்புகிறோம். குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மிகப்பெரிய ராட்சத நீர்உறிஞ்சி பம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/article24305324.ece

  • தொடங்கியவர்

தாய்லாந்தில் குகையினுள் சிக்கியிருந்த கால்பந்து அணியும் உதவிப் பயிற்சியாளரும் உயிருடன் உள்ளனர்

 thailand.jpg?resize=624%2C351

தாய்லாந்தின் மா சே நகரில் குகை ஒன்றினுள் 8 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், உதவிப் பயிற்சியாளரும் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தாய்லாந்தின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் என ஆயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டு பிரதமரின் நேரடித் தலையீட்டுடன் எடுத்த முயற்சி காரணமாக அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

10 கி.மீ நீளம் உடைய இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியினரும் துணைப்பயிற்சியாளரும் 8 நாட்களாக சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/86039/

  • தொடங்கியவர்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு மீட்பு

தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியவர்கள் ஒன்பது நாட்களுக்கு பிறகு மீட்புபடத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK/EKATOL

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.

அதிகரித்த நீரின் அளவு மற்றும் சேற்றின் காரணமாக தேடுதல் பணி தாமதமடைந்தது.

11-16 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றனர்.

12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள்.

அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியவர்கள் ஒன்பது நாட்களுக்கு பிறகு மீட்பு

"அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

"எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. இதுவரை நாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது" என ஆளுநர் தெரிவித்தார்.

குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல்நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், "சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிப்போம்" என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-44689684

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியே வர மேலும் 4 மாதம் ஆகும்

தாய்லாந்து குகையில் 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டு 9 நாள்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை ஊடகங்களிடம் தெரிவிக்கும் அந்நாட்டு ராணுவ ஜெனரல் பஞ்சா துரியப்பன்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதாய்லாந்து குகையில் 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டு 9 நாள்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை ஊடகங்களிடம் தெரிவிக்கும் அந்நாட்டு ராணுவ ஜெனரல் பஞ்சா துரியப்பன்.

தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஒன்று அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டிருக்கும் குகையில் இருந்து வெளியே வரும் மீட்புக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதாய்லாந்தில் சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டிருக்கும் குகையில் இருந்து வெளியே வரும் மீட்புக் குழுவின் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர்.

மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு சப்ளை செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.

முன்னதாக, காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.

அதிகரித்த நீரின் அளவு மற்றும் சேற்றின் காரணமாக தேடுதல் பணி தாமதமடைந்தது.

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியவர்கள் ஒன்பது நாட்களுக்கு பிறகு மீட்புபடத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK/EKATOL

11-16 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றனர்.

12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள்.

அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தாய்லாந்து: குகைக்குள் சிக்கியவர்கள் ஒன்பது நாட்களுக்கு பிறகு மீட்பு

"அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

https://www.bbc.com/tamil/global-44689684

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?

தாய்லாந்தில் குகையில் சிக்கி உள்ள 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஆறு நாடுகளும், அந்நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்குளிப்பவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?

முதல் முறையாக கேட்கப்பட்ட குரல்

தாய்லாந்து குகையில் கடந்த ஒன்பது நாட்களாக சிக்கித் தவிக்கும் தாய்லாந்தை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரான குரல் முதல் முறையாக கேட்கப்பட்டுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரரான ஜான் வொலந்தன் கூறியுள்ளார்.

குகையிலுள்ள சிறுவர்களிடம், "நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, "பதின் மூன்று பேர்" என்று பதிலளித்தனர்.

அதாவது, இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களாக குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் வெளியே வர மேலும் 4 மாதம் ஆகும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரி, இந்த குகையில் சிக்கியுள்ள 12 வீரர்களையும் அவர்களது பயிற்சியாளரையும் எந்தெந்த வழிகளில் மீட்கலாம்?

இரண்டுவழிகள் இருக்கிறது என்கிறாகள் மீட்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அதாவது, முக்குளித்தல் (Diving), துளையிடுதல் முறை (Drilling) ஆகிய வழிகளில் குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கலாம்.

முக்குளித்தல்

அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "முக்குளித்தல் முறையில் அந்த குகையில் சிக்கி உள்ளவர்களை விரைவில் மீட்டுவிடலாம். ஆனால், அது ஆபாத்தானதும் கூட" என்கிறார்.

தாய்லாந்து கப்பற்படையை சேர்ந்த முக்குளிப்பவர்கள், பிரிட்டன் குகை சிக்கியவர்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மூன்று பேர் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் என பலர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் மட்டுமல்லாமல், சீனா, மியான்மர், லாவோஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மீட்பு பணியில் பங்கெடுத்துள்ளார்கள்.

முக்குளிப்பவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள பிராணவாயு இயந்திரங்கள்படத்தின் காப்புரிமைAFP/ROYAL THAI NAVY Image captionமுக்குளிப்பவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள பிராணவாயு இயந்திரங்கள்

மிகவும் திறமைவாய்ந்த தொழில்முறை முக்குளிப்பவர்களுக்கு, குகையில் சிக்கி உள்ளவர்களை நெருங்க இன்னும் பல மணி நேரம் தேவை. இதற்கிடையே அந்த குகையில் உள்ள நீரையும் வெளியேற்ற வேண்டும்.

இந்த முறை மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமானது என்கிரார் சர்வதேச ஆழ்கடல் குகை மீட்பு அமைப்பை சேர்ந்த எட் சோரின்சன். மேலும் அவர், "இந்த முறையை கடைசி வாய்ப்பாகதான் பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் வழிகள் என்னென்ன?படத்தின் காப்புரிமைAFP/ROYAL THAI NAVY

அடர்த்தியான இருட்டில் சிக்கி உள்ளவர்கள் பயத்தில் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளவும் சில சமயம் முக்குளித்து மீட்பவர்களை கொல்லவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் எட்.

துளையிடும் முறை

இதுபோன்று குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் இன்னொரு வழி, 'துளையிடுதல்'. அதாவது குகையை துளையிட்டு தண்ணீரை வெளியே இறைத்து அவர்களை மீட்கலாம்.

துளையிடும் முறைபடத்தின் காப்புரிமைEPA Image captionதுளையிடும் முறை

ஆனால், இதற்கும் அதிக நேரம் பிடிக்கும். துளையிடும் இயந்திரங்களை குகையில் மேல் பொருத்த அதற்கான கட்டுமான அமைப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும்.

அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "இது முறை மேலோட்டமாக சுலபமானது போல தோன்றினாலும், உண்மையில் இது மிகவும் கடினமான ஒரு வழி" என்கிறார்.

"நாம் குகையில் துளையிடுவதற்கு முன்பு, அந்த குகை குறித்து முழுமையான புரிதல் வேண்டும். அந்த குகை குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறாக இல்லாமல், துளையிட தொடங்குவோமானால், தவறான இடத்தில் துளையிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் மிர்ஸா.

https://www.bbc.com/tamil/global-44698862

  • தொடங்கியவர்

குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் நலமாக உள்ளனர் 2வது காணொளி வெளியீடு

 

 

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறும் புதிய காணொளியை  கடற்படை வெளியிட்டுள்ளது.

thaivan.jpg

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் காணப்பட்டனர். நீர்மூழ்கி வீரர்களுடன் அவர்கள் உரையாடும் காணொளிவை அரசு வெளியிட்டது. சிறுவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. 

முதலில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஒரு மருத்துவர், ஒரு தாதி உள்ளிட்ட 7 பேர் சென்றனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி நீந்திச் செல்லும் பயிற்சி பெற்றவர்கள். தற்போது 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் சிறுவர்களை வெளியே அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. அவசரப்பட்டு வெளியே அழைத்து வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்க வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

 

இந்நிலையில், குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் நலமுடன் இருப்பதை காட்டும் புதிய காணொளி ஒன்றை தாய்லாந்து கடற்படை இன்று வெளியிட்டுள்ளது. 

அந்த காணொளி பதிவில், சிறுவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் கெமரா முன்பு தனது புனைப்பெயரை கூறி தன்னை அறிமுகம் செய்து , ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார்கள். 

தாய்லாந்து கடற்படையின் முகப்புத்தக தளத்தில் வெளியிடப்பட்ட இந்த காணொளியைப் பார்த்ததும், சிறுவர்களின் பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/36027

  • தொடங்கியவர்

தாய்லாந்தில் பலத்த மழை எதிர்பார்ப்பு: சிறுவர்கள் சிக்கிய குகையில் வெள்ளம் உயருமா?

தாய்லாந்தில் பலத்த மழை எதிர்பார்ப்பு: சிறுவர்கள் சிக்கிய குகையில் வெள்ளம் உயருமா?படத்தின் காப்புரிமைREUTERS

தாய்லாந்தில் இன்னும் சில நாள்களில் பெரும் மழை எதிர்பார்க்கப்படுவதால், 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டுள்ள குகையில் வெள்ள நீர் மட்டம் மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.

வெள்ள நீர் உயரும்பட்சத்தில் குகைக்குள் சிறுவர்களும், பயிற்சியாளரும் ஒதுங்கியுள்ள திட்டுப் பகுதியில் நீர் புகும் என்பதால், மீட்புப் படையினர் வானிலையோடு போராடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த குகை அமைந்துள்ள சாங் ராய் பிரதேசத்தில் வெயில் அடித்துவருகிறது.

குகையில் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது தொடர்பாக மீட்புக்குழுவினர் சிரத்தையோடு செயல்பட்டு வருகிறார்கள்.

"அவர்களை விரைவாக சென்றடைந்து விட வேண்டுமென கண்டுபிடிப்பதற்கு வேகமாக செயல்பட்டோம்" என்று வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த சாங் ராய் பிரதேச ஆளுநர் நரோங்சாக் ஒசோதானாகோரன் "இப்போது நீர் அதிகரிப்பதற்கு முன்னால் மீட்டுவிட போராடி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ராணுவம்

உயிர் காக்கும் மேலாடையை பயன்படுத்தி, சிறார்களை நீரில் நீந்தி வரச்செய்து குகையில் சிக்கியுள்ளோரை காப்பாற்றுவதற்கான சத்தியக்கூற்றை கடலில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தாய்லாந்து கடற்படைப்பிரிவு ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

குகையில் சிக்கியுள்ளோர் அவர்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக பொருத்தப்படும் தொலைபேசி இணைப்பு, இவர்கள் சிக்கியிருக்கும் இடம்வரை கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் நரோங்சாக் கூறினார்.

முன்னதாக கொண்டு சென்ற கருவி தண்ணீரில் விழுந்து செயலிழந்துவிட்டதால், புதிய தொலைபேசி குகைக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

மழை சற்று நீண்டகாலம் நின்றுவிட்டால், தாம் லுயாங் குகையில் சிக்கியுள்ளோர் அந்த பகுதியை நடந்தே கடந்து வரலாம் அல்லது மிதந்து வெளிவரலாம். முக்குளித்து வர வேண்டிய அவசியம் ஏற்படாது.

குகை பகுதியில் இருந்து 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு்ளளது.படத்தின் காப்புரிமைREUTERS Image captionகுகை பகுதியில் இருந்து 128 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு்ளளது.

இந்த குகையில் சிக்கியிருப்போரை சென்றடைய, போவதற்கு 6 மணிநேரமும், திரும்பி வர 5 மணிநேரமும் என்று மொத்தம் 11 மணிநேரம் ஆகிறது.

குகையில் சிக்கியுள்ளோரில் பலருக்கு நீச்சலடிக்க தெரியாது. இந்த பாதையில் அவர்கள் வெளிவருவதற்கு அவர்களுக்கு முக்குளிப்புக்கான அடிப்படைகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

முன்னதாக, காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வரைபட விளக்கம்

"சிறுவர்களை மீட்பதில் அவசரம் காட்டப்போவதில்லை. அவர்களை வெளியேற்றுவதில் ஆபத்தற்ற முறையை கையாளுவோம்" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர்களை பழைய நிலைக்கு கொண்டுவரவும் அவர்களின் உடல்நலத்தை பரிசோதிக்கவும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் உட்பட முக்குளிப்பவர்கள் 7 பேர் சிறுவர்களுடன் இருப்பதாகவும் சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஒன்று அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் நலம்படத்தின் காப்புரிமைAFP

மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு சப்ளை செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.

முன்னதாக, காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.

https://www.bbc.com/tamil/global-44722619

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை மீட்பு: பொருட்கள் எடுத்து சென்ற முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழப்பு

breaj

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களை மீட்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஈடுபட்ட கடற்படையை சோந்த முக்குளிப்பவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம் லாங் குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு பொருட்களை வழங்கச் சென்ற சமன் குனன் திரும்பும் வழியில் மயங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 38

அவருடன் பணிபுரிந்தவர்களால் சமனின் மூச்சினை திரும்பி வரவைக்க இயலவில்லை.

கடற்படை பணியை விட்டுச் சென்ற இவர், இந்த மீட்புப் பணியில் உதவ திரும்பினார்.

குகையில் சிக்கியவர்களை மீட்க தாமாக முன்வந்த இவர், இரவு 2 மணி அளவில் உயிரிழந்தார் என சியங் ராவ் நகர துணை ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"பிராண வாயுவை குகையில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அவரது பணி. ஆனால், திரும்பி வரும் வழியில், அவருக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை"

https://www.bbc.com/tamil/global-44734051

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களால் 'முக்குளிக்க' முடியாது : மீட்க என்ன வழி?

மீட்க என்ன வழி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு முக்குளிக்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் இந்தக்குழுவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

குகைக்குள் அவர்கள் சென்ற பிறகு பெய்த மழையால், அக்குகையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, சிறுவர்களுக்கு பிரான வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்தார்.

குகையில் சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்களுக்கு, நடக்க போதுமான வலிமை இருப்பதாகவும், ஆனால் நீச்சல் அடித்து அவர்களால் பாதுகாப்பாக வெளிவர முடியாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சியாங் ராய் ஆளுநர் தெரிவித்தார்.

மீட்க என்ன வழி?

சிறுவர்களின் உடல்நலம் சாதாரணமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு முக்குளிப்பது எப்படி என்பதோடு மூச்சு பயிற்சி மற்றும் நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மழை பொழிய தொடங்கினால் ஓர் இரவில் அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, "தற்போது இந்த நேரத்தில் சிறுவர்களால் முக்குளிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

சிறுவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் சுவாசிக்கும் காற்று நன்றாக இருப்பதாக ஆளுநர் நரோங்சக் கூறினார்.

சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அது அவர்களிடம் போய் சென்றதா என்பது தெரியவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

குகையில் அவர்கள் சிக்கியிருக்கும் இடத்தை நேரடியாக சென்றடையலாம் என்ற நம்பிக்கையில், மீட்பு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட துளைகளையிட்டனர். அதில் 18 துளைகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மிக ஆழமானது என்று பார்த்தால் 400 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

ஆனால், இதன் மூலம் சிறுவர்களை மீட்க முடியுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர், அவர்கள் மேற்பரப்புக்கு சுமார் 600 மீட்டர் கீழே இருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.

அங்குள்ள நிலை என்ன?

மீட்க என்ன வழி?

சிறுவர்கள் காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு, மீட்புப்பணியில் ஈடுபடும் பிரிட்டன் முக்குளிப்பவர்களால் குகையில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் நுழைவில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் ஒரு பாறையின் இடுக்கில் உள்ள சிறு அறையில் உள்ளனர்.

சிறுவர்களுக்கு தேவையான உணவு, பிராண வாயு மற்றும் மருத்துவ உதவிகளை தாய்லாந்து மற்றும் சர்வதேச முக்குளிப்பவர்களின் குழுக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால் அக்குகையினுள் இருக்கும் பிராண வாயுவின் அளவு குறித்து கவலை எழுந்த வண்ணம் உள்ளது. சாதாரணமாக 21 சதவீதமாக இருக்க வேண்டிய பிராண வாயு, 15 சதவீதமாக குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

 

 

"சிறுவர்களை மீட்பதற்கான சிறந்த திட்டத்துக்கு முயற்சித்து வருகிறோம், குறைந்த அபாயம் இருக்கும் நேரத்தில், அவர்களை வெளியே கொண்டுவர முயற்சிப்போம்" என்று ஆளுநர் நரோங்சக் கூறினார்.

கடந்த சில நாட்களாக மழை பொழிவது நின்றுள்ளதால் மீட்பு பணிகள் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மீட்பு பணியாளர்கள் சிறுவர்களை சென்றடைய குகையின் பல பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று தண்ணீர் வெளியேற்றப்படுவது 12 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதையடுத்து, குகைக்குள் 10 சென்டி மீட்டர் அளவிற்கு நீரின் அளவு உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கன மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குகையில் அதிக வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் முடியும் வரை குகைக்குள் சிறுவர்களை காத்திருக்க வைக்கலாம் என்று அதிகாரிகள் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்படி செய்தால் அவர்கள் 4 மாதங்கள் வரை அங்கு சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

https://www.bbc.com/tamil/global-44749143

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி: அரசின் திட்டம் என்ன?

தாய்லாந்து

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் தொடங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அங்கு பொழிந்து வந்த மழை நின்றுவிட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்பு பணியினை 'டி-டே' என அழைக்கும் அதிகாரிகள், வெளியே வர அச்சிறுவர்கள் பலமாகவும் தயாராகவும் உள்ளதாக கூறுகின்றனர்.

உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார்.

மீட்பு பணி திட்டங்கள் வெளியீடு

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் திட்டம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

  • என்ன உபகரணங்கள்?: காற்று அடைக்கப்பட்ட டாங்குகள், முழு முக மாஸ்குகள்
  • ஒரு சிறுவருடன் இரண்டு முக்குளிப்போர் இருப்பார்கள்
  • மீட்பு பணியாளர்கள் போட்டுள்ள கயிறு அவர்களை வழிநடத்த, அனைவரும் ஒன்றாக முக்குளிப்பார்கள்.
  • மிகவும் குறுகிய பாதை வரும்போது, தங்கள் பின்னாலிருக்கும் டாங்குகளை விடுவித்து, அதனை உருட்டிவிடுவார்கள். அதன் வழியாக அந்த சிறுவரை வழிநடத்துவார்கள்
  • சாம்பர் 3 முதல் குகையின் முகத்துவாரத்திற்கு நடந்து செல்லலாம்.

சிறுவர்களுக்கு முக்குளிப்பது குறித்து குறைந்தளவிலாவது தெரிந்திருக்க வேண்டும், திடமான மனத்தோடு, பதட்டமில்லாமல் இருக்க வேண்டும்.

முன்னதாக இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர்.

வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்

தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்

கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.

 

 

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், "குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது" என்று கூறுகிறார்.

பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியசிறுவர்கள்

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில், குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதில், ''கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்'' எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"படத்தின் காப்புரிமைFACEBOOK/EKATOL

''ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்'' என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

''அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்'' என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.

''என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி'' எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய திட்டம் என்ன?

அபாயகரமான இந்த பணியில் பெருமளவிலான ராணுவம் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் மோசமான சூழ்நிலையை உணர்த்துவதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கருதுகின்றனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"

சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நரோங்சக் கூறுகிறார்.

சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு முக்குளித்தல் பயிற்சி தேவையென்றும், ஆனால் இன்னமும் அதை அவர்கள் கற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

முன்னதாக, சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்படுவதற்கு சில மாதகாலமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.

https://www.bbc.com/tamil/global-44755239

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இதுவரை ஆறு பேர் மீட்பு: LIVE

மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் இன்று காலை தொடங்கினர்.

6:56 PM - மீட்புப்பணி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்

குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணிகள் தொடர்பாக தாய்லாந்து நாட்டு அரசுடன், அமெரிக்க அரசு நெருங்கி பணி புரிவதாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைTWITTER

6:53 PM - ஆறு சிறுவர்கள் மீட்பு

தறபோது வரை ஆறு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பல்வேறு உள்ளூர் ஊடகங்கள், ஏ.எஃப்.பி மற்றும் ராய்டர்ஸ் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால், பிபிசி தரப்பில் இருந்து எதுவும் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை

6:46 PM - மீட்புப் பணியாளர்களுக்கு பாராட்டு

யபடத்தின் காப்புரிமைTWITTER யபடத்தின் காப்புரிமைTWITTER

மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவோருக்கு சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

6:33 PM- மீட்புப் பணி புகைப்படங்கள்

4 பேர் மீட்புபடத்தின் காப்புரிமைREUTERS 4 பேர் மீட்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES 4 பேர் மீட்புபடத்தின் காப்புரிமைEPA

6: 31 PM - மேலும் ஒருவர் மீட்பு

மேலும் ஒரு சிறுவன் மீட்கப்பட்டதாக பிபிசியின் ஜொனாதன் ட்வீட் செய்துள்ளார். இதுவரை 4 சிறுவர்கள் தற்போது மீட்கப்படுள்ளனர்.

மேலும் ஒருவர் மீட்புபடத்தின் காப்புரிமைTWITTER

6:29 PM - எவ்வளவு பேர் மீட்கப்பட்டனர்?

இதுவரை 6 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனினும், தாய்லாந்து கடற்படை மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளது.

6:12 PM - பலவீனமான சிறுவர்கள் முதலில் வெளியேற்றப்படுவார்கள்

பலவீனமாக இருக்கும் சிறுவர்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும் என்று இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் முடிவு செய்துள்ளார்.

இதனை, பாங்காக்கை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மீட்புபடத்தின் காப்புரிமைTWITTER

5:59 PM - மேலும்நான்கு சிறுவர்கள் விரைவில் வெளிவருவார்கள் என எதிர்பார்ப்பு

மேலும் நான்கு சிறுவர்கள் குகையில் இருந்து விரைவில் வெளிவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக லெஃப்டினன்ட் ஜெனரல் கொங்சீப் கூறியுள்ளார்.

சாம்பர் 3 பகுதியை அவர்கள் அடைந்துவிட்டதாகவும், விரைவில் வெளிவருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

5:51 PM - அப்பகுதியில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் புறப்பட்டுள்ளன. அதேபோல, அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்படுவதை செய்தியாளர்கள் சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

ஆனால், அதில் யார் இருக்கிறார்கள், அது எங்கு செல்கிறது என்று தெளிவாக தெரியவில்லை.

மீட்புபடத்தின் காப்புரிமைTWITTER

5:32 PM - சியாங் ராய் சுகாதாரத்துறை தலைவர் கூறுகையில், "இரண்டு சிறுவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்றார். தற்போது அவர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட மருத்துவமனையில் உள்ளனர்.

அவர்களுக்கு உடல் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே

https://www.bbc.com/tamil/global-44755239

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் 4 பேர் மீட்பு - மீட்புப்பணி நிறுத்தம்: LIVE

மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் இன்று காலை தொடங்கினர்.

8:00 PM - 'குட் நைட்' தெரிவித்த தாய்லாந்து கடற்படை

அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற தாய்லாந்து கடற்படையான 'சீல்' தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குட் நைட் என்று பதிவிட்டுள்ளது.

7:49 PM - திங்கட்கிழமை காலை மீட்புப்பணி தொடரும்

50 சர்வதேச முக்குளிப்பவர்கள், 40 தாய்லாந்து நாட்டை சேர்ந்த முக்குளிப்பவர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் உள்ளனர். மீட்புப் பணிகள் மீண்டும் திங்கட்கிழமை காலை தொடங்கும்.

7:44 PM - மீட்புப்பணி நிறுத்தம்

குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்தார். நான்கு பேரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைக்கு மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் நரொங்சக் கூறினார்.

அடுத்தப் பணிக்கு தயார் செய்ய 10 மணி நேரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீட்புபடத்தின் காப்புரிமைTWITTER

7:20 PM - குகைப்பகுதியில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று சியாங் ராய் மருத்துவமனையை வந்தடைந்தது.

7:11 PM - குகைப்பகுதியில் இருந்து மேலும் ஒரு ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

7:04 PM - சியாங் ராய் மருத்துவமனையை அடைந்த ஆம்புலன்சுகள்

குகைப் பகுதியில் இருந்து புறப்பட்ட இரண்டு ஆம்புலன்சுகள் சியாங் ராய் மருத்துவமனையை வந்தடைந்தன.

https://www.bbc.com/tamil/global-44755239

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை இன்று காலை தொடங்கிய மீட்பு பணியாளர்கள், இதுவரை 4 பேரை மீட்டுள்ளனர்.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம்.

ஏன் அந்த பதினொரு சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்?

இந்த தருணம் வரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.

பிபிசி தாய்லாந்து செய்தியாளர்கள் தரும் தகவலின்படி, இந்த சிறுவர்கள் குழு காலை 10 மணிக்கு கால்பந்தாட்ட பயிற்சிக்காக கூடி இருக்கிறது. அவர்களது துணை பயிற்சியாளர் எகாபொல், 10.42 மணிக்கு அவர்கள் கால்பந்தாட்ட பயிற்சி செய்வதை ஃபேஸ்புக்கில் நேரலை செய்திருக்கிறார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு தாம் லாங் - குன்னம் நங்னான் தேசிய பூங்காவின் ஊழியர் 11 மிதிவண்டிகள் குகையின் நுழைவாயிலில் நிற்பதை கண்டிருக்கிறார். இதனால் சந்தேகித்து விசாரித்து இருக்கிறார். பின்னர், குகையில் சிக்கி உள்ள ஒரு சிறுவனின் பெற்றோர், தங்கள் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைAFP

அந்த சிறுவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது.

கேம் அந்த கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர். ஆனால், அன்று அவர் அந்த சிறுவர்களுடன் குகைக்குள் செல்லவில்லை. அவர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணலில், அந்த குகைக்கு முன்பே மூன்று முறை சென்று இருக்கிறோம். ஆனால், எப்போதும் தாங்கள் மழை காலத்தில் சென்றதில்லை என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர், "எப்போதும் அந்த குகைக்குள் செல்லும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாட்டுடன்தான் செல்வோம். அனைவராலும் அந்த குகைக்குள் செல்ல முடியுமா என்று சோதிப்போம். குகைக்குள் செல்வதற்கு முன்பு உணவு உண்டுவிடுவோம்" என்று முந்தைய அனுபவங்களை விளக்கி உள்ளார்.

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் அவர்களுடன் அன்று குகைக்குள் செல்லவில்லை என்கிறார் கேம். அவர், "எங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் அந்த குகைக்குள் செல்வோம். எங்கள் அணியில் ஒருவருக்கு பிறந்தநாள் வருகிறது. அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக அவர்கள் குகைக்குள் சென்று இருக்கலாம்" என்கிறார்.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைEPA

அந்த அணியின் துணை பயிற்சியாளர் எகாபொல் அந்த குகையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தனது பாட்டியை கவலை கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

Presentational grey line

எப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்?

அந்த குகைக்குள் சிறுவர்கள் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்குகிறது. அந்த பகுதியில் உள்ள காட்டினில் தேங்கிய நீர், குகையின் நுழைவு பகுதியை அடைக்கிறது.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைEPA

நுழைவாயிலில் அடைத்த தண்ணீர் உள்ளே வர, அந்த சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதியை தேடி உள்ளே சென்றார்கள். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகையான இந்த குகையின் மொத்த நீளம் 10,316 மீட்டர்.

Presentational grey line

அந்த குகையில் சிக்கி உள்ள சிறுவர்களின் பெயர் வயது மற்றும் அவர்களின் கனவு என்ன?

பெயர் வயது/பள்ளி அணியில் அவர்கள்
 சனின் விபுல்ரன்க்ரூஆங் (செல்லப் பெயர் : டைட்டன்) 11 வயது / மிசாய் கிண்டர்கார்டன் ஃபார்வேர்ட்
 பனுமாஸ் சங்க்தீ (செல்லப் பெயர்: மிக்) 13 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் தடுப்பாட்டகாரர்
டுகன்பெட்ச் ப்ரோம்டெப் (செல்லப் பெயர்: டொம்) 13 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் அணியின் தலைவர்
சம்போங் ஜெய்வோங் 13 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் லெஃப்ட் விங்கர்
 மோங்கொல் போனியம் (மார்க்) 13 வயது / பான்பமெட் -
 நட்டாவுட் டகம்ரோங்(ட்லி) 14 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் தடுப்பாட்டகாரர்
 ப்ரஜாக் சுதம் (நோட்) 14 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் கோல் கீப்பர்
எகராட் வோங்சுக்சான் (பீய்வ்) 13 வயது / டரூண்ராட் விட்டாயா கோல் கீப்பர்
அடுல் சமோன் 14 வயது/ பான்வெயின்ங்பான் தடுப்பாட்டகாரர்
பிப்பட் போ (நிக்) 15 வயது/ பான்சான்சாய் அணியில் இல்லை
போர்ன்சாய் காம்லூவாங் (டீ) 16 வயது / பான்வெயின்ங்பான் தடுப்பாட்டகாரர்
பீராபட் சோம்பியாங்ஜெய் (நைட்) 17 வயது / மிசாய் ப்ராசிட்சார்ட் விங்கர்
 எகாபோல் சந்தாவோங் 25 வயது துணை பயிற்சியாளர்

பிபிசியிடம் பேசிய இந்த அணியின் பயிற்சியாளர் நோப்பராட் கண்டாவோங், "இந்த அணியினர் அனைவருக்கும் தாய்லாந்து தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது" என்கிறார்.

Presentational grey line

இந்த குகை குறித்த நாட்டுப்புற கதை என்ன?

இந்த குகை குறித்து பல நாட்டுப்புற கதைகள் உள்ளன. இந்த குகை பெரும்பாலானவர்களால், 'தாம் லுவாங் குன் நும் நங் நன்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், 'ஆறு ஒன்றுக்கு தாயிடமாக இருக்கும் தூங்கும் பெண்ணின் பெரும் குகை'. இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.

சீனாவின் தெற்குபகுதியில் உள்ள சியாங் ரூங் என்னும் நகரத்தின் இளவரசியாக இருந்தவர், குதிரைகாரர் ஒருவருடன் காதல் கொண்டு கர்ப்பமானார்.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைREUTERS

தனது தந்தைக்கு அஞ்சி அங்கிருந்து தெற்கு நோக்கி பயணித்த இருவரும் ஒரு மலை பகுதியை அடைந்தனர்.

இளவரசியை காக்க சொல்லிவிட்டு உணவு தேட சென்ற அவரது காதலனை, இளவரசியின் தந்தை கொன்றுவிடுகிறார்.

அவருக்காக காத்திருந்த இளவரசி, ஒரு கட்டத்தில் தன் காதலர் இனி வரபோவதில்லை என்பதை உணர்ந்து ஊசியினால் தன்னைதானே குத்தி மாய்த்துக் கொள்கிறார்.

அவரது உடல் ஒரு மலையாகவும், அவரிடமிருந்து வழிந்தோடிய குருதி ஆறாகவும் மாறியது என்கிறது அந்த பழங்கதை.

Presentational grey line

இதற்கு முன்னதாக யாராவது அங்கு சென்று சிக்கிக் கொண்டுள்ளார்களா?

ஆம் என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

முன்னாள் உள்ளூர் சமூக தலைவர் இன்சோர்ன் கேவ்சொம்பாங் சொன்ன ஒரு தகவலை அவை குறிப்பிடுகின்றன.

தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்படத்தின் காப்புரிமைAFP

"வெளிநாட்டு பயணி ஒருவர் 1986 ஆம் ஆண்டு அந்த குகைக்குள் சென்று சிக்கிக் கொண்டார். ஏழு நாள் வரை அந்த குகைக்குள்ளேயே இருந்ததார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்" என்கிறது அந்த தகவல்.

ஆனால், அந்த சமயத்தில் இப்போது பெய்வதை போல மழையெல்லாம் பெய்யவில்லை.

அதன்பின், 2016 ஆகஸ்ட் மாதம் சீனர் ஒருவர் அந்த குகைக்குள் சென்று சிக்கிக் கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44759030

  • கருத்துக்கள உறவுகள்

 

தாய்லாந்தில் குகை ஒன்றினைப் பார்க்கச்சென்று திடீரென்று மழை பெய்து வெள்ளம் நிறைய, திரும்பி வரமுடியாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிக்கியுள்ள 12 சிறார்கள் மற்றும் பயிற்சியாளரை காப்பாற்ற முயற்சி செய்யப்படுகிறது. இந்தப் பணியில் உயிரிழிந்தவரே Saman Gunan.

 

Image may contain: 1 person, smiling, outdoor and closeup
 
 
  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்ளை மீட்க ஆயத்தமாகும் குழு

மேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

திங்கள்கிழமை காலை குகை வாயிலில் நிலவும் பரபரப்பு, மீட்புப் பணி விரைவில் தொடங்கவுள்ளதைக் காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/global-44755239

  • தொடங்கியவர்

LIVE: தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்

தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள மீதி ஒன்பது பேரை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக பிபிசிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்படத்தின் காப்புரிமைLAUREN DECICCA

5.20: மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சிறுவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவர்கள் பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5.10: நேற்று மீட்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் நான்கு சிறுவர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சிகையில் இருக்கும் சிறுவர்களின் குடும்பத்துக்கு மரியாதை வழங்கும் விதமாக மீட்கப்பட்ட சிறுவர்களின் பெயர்கள் வெளியிடபடவில்லை.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் சிறுவர்கள் உண்பதற்கு `பிரைட் ரைஸ்` கேட்டதாக மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

5.00 : சியாங் ராய் மருத்துவமனைக்கு விரைந்தது அவசர ஊர்தி

மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் சியாங் ராய் மருத்துவமனைக்கு வெளியே பிபிசியின் மார்ட்டின் பேஷன்ஸ் இருக்கிறார்.

மருத்துவமனைக்கு தற்போது ஒரு அவசர ஊர்தி வந்துள்ளது. திங்கள் கிழமையன்று துவங்கிய இரண்டாவது கட்ட மீட்பு பணியில் குகையில் இருந்து ஐந்தாவது நபர் மீட்கப்பட்டதாக கருதப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தாய்லாந்து அதிகாரிகள் இதுவரை ஐந்தாவது நபர் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.

4.45: இரண்டாவது கட்ட மீட்புப்பணி துவங்கியது

புதிய காற்று கலம் கொண்டுவருவதற்காகவும், மீட்பு பகுதியில் உள்ள பாதையில் வழிகாட்டி கயிறுகளை இறுக்கமாக கட்டுவதற்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணியானது, குகையில் இருந்து ஐந்தாவது நபரை மீட்பதற்காக மீண்டும் துவங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கடந்த ஞாயற்று கிழமை நடந்த முதல் கட்ட மீட்பு பணியில் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். தேர்ந்த முக்குளிப்பவர்களின் உதவியுடன் எதிர்பாராத அபாயங்கள் நிறைந்த நீர் வழித்தடம் வழியே அவர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் மீதமுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர வழிகாட்டவுள்ளனர்.

தாய்லாந்து மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்குளிப்பவர்களை கொண்ட மீட்பு குழுவானது தற்போது குகையில் மாட்டிக்கொண்டவர்களை வேகமாக மீட்க முயற்சி செய்துள்ளது. கடும் மழைப்பொழிவு தற்போது எதிர்பார்க்கப்படுகிறது மேலும் குகையில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் சிக்கியுள்ள இடத்தில் ஆக்சிஜன் அளவு அபாயகரமான வகையில் குறையத் துவங்கிவிட்டது.

4:30 தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள மீதி ஒன்பது பேரை மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக பிபிசிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குகையிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சிறுவர்கள் "நல்ல உடல்நிலையில்" உள்ளதாக தெரிகிறது.

நேற்று இரவு அங்கு பெய்த கனமழையின் காரணமாக குகையில் ஏற்கனவே நீர் சூழ்ந்துள்ள பகுதிகளின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால் அங்கு சிக்கிலுள்ள எஞ்சியவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 
 
Dhp_SYGWsAA73p6?format=jpg&name=small
 

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

LIVE: தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

https://www.bbc.com/tamil/global-44763057

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: எட்டு சிறுவர்கள் மீட்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு - LIVE

இரண்டாவது நாள் மீட்பு பணியில் நான்கு பேர் இதுவரை மீட்கப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

20.15: சிறுவர்களைமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் அவசர ஊர்தியை நோக்கி கையசைக்கும் மக்கள்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES தாய்லாந்துபடத்தின் காப்புரிமைREUTERS

19.40: மீட்கப்பட்ட சிறுவர்களை கொண்டு செல்லும் ராணுவ ஹெலிகாப்டர்

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைREUTERS

19.30: குகையில் சிக்கியிருந்த மாணவர்கள் சிலர் பயின்ற பள்ளியின் மாணவர்களிடம், அவர்கள் நண்பர்கள் சிலர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைREUTERS

மீட்புப் பணி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும், அனைத்து சிறுவர்களும் பத்திரமாக வெளியே வரவேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

தாய்லாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

19.20: தாய்லாந்து சிறுவர்களுக்காக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

18.54:தாய்லாந்து கடற்படை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

மீட்பு பணி நடக்கும் இடத்தில் இருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தபோதிலும் பல மணிநேரமாக தாய்லாந்து அதிகாரிகள் செய்தியை உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது தாய்லாந்து கடற்படையானது எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இன்றைய தினம் நான்கு பேர் மலைகுகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Thai NavySEAL

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Thai NavySEAL

ஒரு பேஸ்புக் பதிவொன்றில் மீட்கப்பட்ட எட்டு சிறுவர்கள் விவரத்தையும் வெளியிட்டுள்ளது. வைல்ட் போர்ஸ் என்ற கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் போர்ஸ் என அச்சிறுவர்களை குறிப்பிட்டுள்ளது தாய்லாந்து கடற்படை.

6.29: எட்டு சிறுவர்கள் குகையில் இருந்து மீட்பு

மீட்புபணியில் உள்ள ஒருவரிடம் இருந்து நமக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

  • இன்று மீட்கப்பட்ட நான்கு பேரும் வைல்ட் போர்ஸ் கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள்.
  • இதன் பொருள் என்னவெனில், அந்த சிறுவர்களின் 25 வயது பயிற்சியாளர் இன்னமும் குகை அமைப்புக்குள்தான் இருக்கிறார்.
  • இன்றைய தினம் மீட்கப்பட்டவர்கள் நல்ல உடல்நிலையில்தான் உள்ளனர்.
  • மீதமுள்ள நான்கு சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை செவ்வாய்கிழமையன்று மீட்க திட்டமிட்டுள்ளனர் மீட்பு குழுவினர்.

6.23:தெற்கு தாய்லாந்தில் இருந்து புகைப்படங்கள் வந்துள்ளன

தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள், தாய்லாந்தையும் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்குள்ள புகைப்படங்கள் இரண்டாம் கட்ட மீட்புபணிகள் நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்டன.

தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகுகை பகுதிக்கு அருகே அவசர விமான ஊர்தி இறங்குவதை பார்க்கும் கூட்டம் தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசியாங் ராயில் விமானப்படை தளத்தில் இறங்கும் போலீஸ் ஹெலிகாப்டர் தாம் லுவாங் குகையில் நடந்துவரும் மீட்பு பணிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதிங்கள்கிழமையன்று நிறைய அவசர ஊர்தியை பிபிசி செய்தியாளர் பார்த்த இடமான சியாங் ராயில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முன் இருக்கும் காவல்துறையினர்.

6.23:நான்கு பேர் இன்று மீட்கப்பட்டனர் - பிபிசியிடம் தெரிவிப்பு

மீட்புப்பணியில் இருந்த ஒரு நபர் பிபிசியின் ஜோனாதன் ஹெட்டிடம் நான்கு சிறுவர்கள் இன்றைய தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

5.50:மேலும் இரண்டு அவசர ஊர்திகள் குகைப்பகுதியை விட்டு வெளியேறின.

பிபிசி செய்தியாளர் ஜோனாதன் ஹெட் குகைப்பகுதியில் உள்ளார். ஆறாவது மற்றும் ஏழாவது சிறுவர்கள் மீட்கப்பட்டதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை என்கிறார்.

https://www.bbc.com/tamil/global-44763057

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: மீட்புப் பணி மீண்டும் நாளை தொடரும்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி காலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுவரை எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து குகை: மீட்புப் பணி மீண்டும் நாளை தொடங்கும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள நான்கு சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் நாளை மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஒன்பது மணி நேரங்களாக மீட்புப் பணி நடைபெற்றது என்றும் ஞாயிறன்று நடைபெற்ற மீட்புப் பணியைக் காட்டிலும் இன்று இரண்டு மணி நேரம் விரைவாக நடைபெற்றது என்றும் மீட்புப் பணியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் சர்வதேச முக்குளிப்பு வீரர்கள் 18 பேர் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமர் நரோங் சக்கோ சட்டனாக்கோன், சம்பவ இடத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்ததோடு, அங்கிருந்த சர்வதேச முக்குளிப்பு வீர்ர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

"அனைவரும் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்குளிப்பவர்களை கொண்ட மீட்பு குழு சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சிறுவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவர்கள் பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

 

 

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

LIVE: தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/global-44771330

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: 19 மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைந்தனர்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும், கால்பந்து பயிற்சியாளர் ஆகியோரில் நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள் கிழமையும் மீட்கப்பட்டனர். மீதமுள்ள ஐவரை மீட்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கியது.

முழு முகத்தையும் மூடும் வகையிலான சுவாசக் கருவி.படத்தின் காப்புரிமைAFP Image captionமீட்கப்படும் சிறுவர்கள் நீருக்கடியில் முக்குளித்து நீந்தும்போது அணியும் முழு முகத்தையும் மூடும் வகையிலான சுவாசக் கருவி.

19 முக்குளிக்கும் வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். நிலைமை சாதகமாக இருந்தால், மீதமுள்ள நான்கு சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர், அவர்களோடு தற்போது உள்ள ஒரு டாக்டர், கடற்படை முக்குளிக்கும் வீரர்கள் உள்ளிட்ட 9 பேர் இன்றே வெளியில் வருவார்கள்.

இன்றைய மீட்புப் பணி முந்தைய நாளைவிட நீண்ட நேரம் பிடிப்பதாக இருக்கும் என்றும், ஆனால், இன்றே மீட்புப் பணி மொத்தமும் நிறைவடையும் என்று நம்புவதாகவும் கடற்படை சீல்களின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி வழியே...

இதனிடையே, மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் மருத்துவமனையில் குறிப்பிடத்தக்க உடல்நலத்துடன் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் சிலர் 'மகிழ்ச்சி' என்றும், குடும்பத்தைப் பிரிந்து வாடுவதாகவும் தெரிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு சிலர் மட்டும் கண்ணாடி வழியாக குடும்பத்தினரை சந்தித்தனர்.

அவர்களுக்கு ஏதேனும் நோய்த் தொற்று உள்ளதா என்று செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளி வந்தன பின்னர் நோய் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவர்கள் குடும்பத்தை சந்திக்க அனுமதிக்கப்படுவர்.

திங்கள்கிழமை ஒன்பது மணி நேரமாக மீட்புப் பணி நடைபெற்றது என்றும் ஞாயிறன்று நடைபெற்ற மீட்புப் பணியைக் காட்டிலும் இன்று இரண்டு மணி நேரம் விரைவாக நடைபெற்றது என்றும் மீட்புப் பணியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீட்புப் பணியில் சர்வதேச முக்குளிப்பு வீரர்கள் 18 பேர் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமர் நரோங் சக்கோ சட்டனாக்கோன், சம்பவ இடத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்ததோடு, அங்கிருந்த சர்வதேச முக்குளிப்பு வீர்ர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்து பேசினார்.

"அனைவரும் இதை ஒரு பாடமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்து மற்றும் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முக்குளிப்பவர்களை கொண்ட மீட்பு குழு சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று சிறுவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு மனரீதியான ஆதரவு வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவர்கள் பிற மாணவர்களை போன்றே நடத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஆனால் நடந்தவைக்காக அவர்கள் மீது குற்றம் சுமத்தமாட்டோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44771330

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: “அனைவரும் இன்றே மீட்கப்பட வாய்ப்பு” - LIVE

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணிகள் குறித்த தகவலை இந்த நேரலை பக்கம் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம்.

4:10 PM: பதினோராவது நபர் மீட்கப்பட்டதாக தகவல்

பதினோராவது சிறுவன் குகையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

3:30 PM: ஒன்பதாவது சிறுவன் குகையிலிருந்து மீட்கப்பட்ட தகவலை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Thai NavySEAL

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Thai NavySEAL

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள எஞ்சிய ஐந்து பேரை மீட்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, குகையில் சிக்கி இருக்கும் எஞ்சியுள்ள சிறுவர்களும், பயிற்சியாளரும் இன்றே மீட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீட்பு பணிகளின் தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள்கிழமையும் மீட்கப்பட்டனர்.

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்களும், திங்கட்கிழமை நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

LIVE: தாய்லாந்து குகை: எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடக்கம்

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/global-44780328

  • தொடங்கியவர்

தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு - LIVE

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாய்லாந்து குகையில் சிக்குண்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணிகள் குறித்த தகவலை இந்த நேரலை பக்கம் மூலம் உடனுக்குடன் வழங்குகிறோம்.

5:20PM: குகையில் சிக்குண்டுடிருந்த அனைவரும் (13 பேரும்) மீட்பு

தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44780328

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையாக போராடி அனைவரையும் மீட்ட மீட்புக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. !

 

Congratulations-on-Your-Achievement.jpg

 

இயற்கைக்கு மீறி ஓரளவிற்கு மேல் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என பாடம் புகட்டப்பட்டுள்ளது..

இதே நிலை இந்தியாவில் ஏற்பட்டிருந்தால், அப்படியே சாகட்டும் என கைவிரித்திருப்பார்கள்.. ! (புயலின்போது கன்னியாகுமரி கடலில் தமிழர்களை கைவிட்டது போல்..)

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

கடுமையாக போராடி அனைவரையும் மீட்ட மீட்புக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. !

 

Congratulations-on-Your-Achievement.jpg

 

இயற்கைக்கு மீறி ஓரளவிற்கு மேல் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என பாடம் புகட்டப்பட்டுள்ளது..

இதே நிலை இந்தியாவில் ஏற்பட்டிருந்தால், அப்படியே சாகட்டும் என கைவிரித்திருப்பார்கள்.. ! (புயலின்போது கன்னியாகுமரி கடலில் தமிழர்களை கைவிட்டது போல்..)

 

அப்படியே ஆழ் கிணற்றில் விழுந்த குழந்தைகளையும் சொல்லலாம் அல்லவா சேகர் அண்ணை tw_cold_sweat:

  • தொடங்கியவர்

தாய்லாந்து குகை: 12 சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்பு

தாய்லாந்து குகை: மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.

முக்குளிப்பு வீரர்கள்படத்தின் காப்புரிமைTHAI NAVYSEAL

முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாய்லாந்து குகைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜூன் 23 முதல் குகைக்குள் சிக்கித் தவித்தார்கள்

"இங்கிலாந்து கால்பந்து அணிக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும்"

நாளை புதன்கிழமை நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும் என்று 64 வயது மனோப் சுக்சார்டு தெரிவித்திருக்கிறார்.

தாய்லாந்து குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவமனைக்கு வெளியே பிபிசி செய்தியாளர் ஹோவார்டு ஜான்சனை சந்தித்த மனோப் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தாய்லாந்து குகை: இயல்பு நிலைக்கு திரும்பும் சிறுவர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தாங் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த இந்த 12 சிறார்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் கண்டுபிடிக்க குகை ஆய்வில் சிறந்த வோலாதன், ரிச்சர்ட் ஸ்டான்டன் மற்றும் ராபர்ட் ஹார்பர் ஆகிய 3 பிரிட்டன் நிபுணர்கள் உதவியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பும் மீட்புப் பணியாளர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

On behalf of the United States, congratulations to the Thai Navy SEALs and all on the successful rescue of the 12 boys and their coach from the treacherous cave in Thailand. Such a beautiful moment - all freed, great job!

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

"இது எதிர்பாரா ஆச்சரியமா, அறிவியலா அல்லது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. 13 ஒயில்ட் போர்ஸும் (சிக்குண்ட கால்பந்து அணியின் பெயர்) தற்போது வெளியே வந்துவிட்டனர்." என தாய்லாந்து கடற்படை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்திருந்தார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

தாய்லாந்து

https://www.bbc.com/tamil/global-44785842

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருமுறை    மின்தூக்கிக்குள்(lift) மட்டுப்பட்டு எப்படி வெளியே வரலாம் என்று  கஸ்டப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது.  இச்சிறுவர்களும் , அவர்களைக் காணாத பெற்றோர்களும் எவ்வாறு வேதனைப் பட்டிருப்பார்கள்.  சிறுவர்கள் தப்பிய செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே போல சில வருடங்களுக்கு முன்பு 2மாதங்களுக்கு மேல் சிலிநாட்டு சுரங்கத்தில்  இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கதைகளையும் வாசித்து இருப்போம்.  ஆனால் பல வருடங்களாக சிங்களத்துச் சிறைகளில்  இருக்கும் எம் சகோதர சகோதரிகள் , தமிழகச்சிறையில் இருக்கும் பேரரிவாளன் போன்றவர்கள் எப்பொழுது வருவார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.