Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில் தரையிரங்கிய பிரதமர் ரணில்

Featured Replies

பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில் தரையிரங்கிய பிரதமர் ரணில்

 

 

மட்டக்களப்பு - ஆரையம்பதிக்கு சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதமருக்கு சிறப்பான வரவேற்பினை வழங்கியுள்ளார்.

பிரதமர் மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டடமொன்றை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் இணைந்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/189332?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலத்தபாதுகாப்பு எண்டால் இப்ப உவர் ஆருக்கு பயப்புடுறார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பலத்தபாதுகாப்பு எண்டால் இப்ப உவர் ஆருக்கு பயப்புடுறார்?

SLFP பய‌ப்படுகிறார் போல கிடக்கு

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் புதிய பிரதேச சபைக் கட்டடம் பிரதமரால் திறந்துவைப்பு

 

 

Battaicalao-Manmunaipatru-DS-office-New-building-Opening-4-700x450.jpg

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

சுமார் இரண்டரைக்கோடி ரூபாய் செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்கட்டடத்தின் திறப்புவிழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கடற்தொழில் நீரியல்வள, கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதியமைச்சர் அலிசாகீர் மௌலான, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதமரின் வருகையினைக் குறிக்கும் வகையில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதமரினால் மரமொன்று நாட்டிவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் விசேட கூட்டம் நடைபெற்றதுடன் பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான அலுவலக பைகளும், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான சமுர்த்தி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Battaicalao-Manmunaipatru-DS-office-New-Battaicalao-Manmunaipatru-DS-office-New-Battaicalao-Manmunaipatru-DS-office-New-Battaicalao-Manmunaipatru-DS-office-New-

http://athavannews.com/மட்டக்களப்பில்-புதிய-பிர/

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

பலத்தபாதுகாப்பு எண்டால் இப்ப உவர் ஆருக்கு பயப்புடுறார்?

பிள்ளையானையும் அடைத்து வைத்திருக்கிறார். அவரின் ஆட்களுக்கும் பயப்படலாம் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.