Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்புலத்தார்- முன்னோர்களே- கயமை உரைகளும்

Featured Replies

தென்புலத்தார்- உரையும் சிதைக்கும் கயமை உரைகளும்

 
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை              ( 43  இல்வாழ்க்கை)

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.
Then1.jpg
 
 
 

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
 
தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் எளிதாய் விளக்கும்.
puram%2Bthenpula.jpg 
 புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் 
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் 
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் 
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்......   (புறம்-9)  
                -   அக்காலத்  போர் நெறி காட்டும்.
போரிற்காய் நுழையும் அரசன் ஊரை வளைத்த உடன் - அந்த ஊரில் உள்ள  ஆனினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், இறந்த பின்னர் பித்ரு காரியம் தொடர்ந்து செய்ய வேண்டிய புதல்வர்ப் பெறாதோர் இவரகளை பத்திரமாக காக்கும்படி செய்வர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே என மன்னர்

 நம் உயிரை எடுப்பவர் கூற்றுவன் (எமன்) எனப் பெயர், சிவபெருமான் கூறும்படி காலம் முடிந்தபின் உயிர் எடுப்பதால்;  வள்ளுவரும் மரணம் குறித்து -  கூற்றத்தை (குறள்-894)  கூற்றமோ (1085) கூற்று (326,765, 1083) கூற்றம் (269) எனப் பல குறள்களில் கூறி உள்ளார்.

முன்னோர் கடன் என்பது இறந்த உடன் சில தான-தர்மங்களும், பிண்டமிடல் போன்றவையும், பின் மாதா-மாதம் அமாவாசை அன்றும், மாதம் முதல் நாட்களிலும் மிகுந்த ஆசாரமுள்ளோரும், மற்றவர்கள் முக்கியமான நீர்நிலைகளில் முழுக்கிடுதலும் மரபு. வருடா வருடம் திதி தருதல்.

இந்த திதி நாட்களில் கோவிலிற்கு செல்லவும் கூடாது என்பர், அதாவது கடவுளிற்கு முன் தென்புலத்தார் கடன் - வள்ளுவரும் முதலில் அதை வைத்தார்.
Then.jpg

தற்கால புலவர்களின் கயமை உரைகள்.
திருக்குறளிற்கு முதல் உரை மணக்குடவர் எனும் சமணர்; சமணத்தில் ப்த்ரு கடன் கிடையாது, ஆயினும் அவர் அதை அப்படியே கூறி உள்ளார்.

19ம் நூற்றாண்டு முதல் கல்வி கிறிஸ்துவர்களால் வடிவமைக்கப்பட,  நச்சு ஏற்றப்பட -தமிழர் மரபு என்பது பாரத நாட்டின் பொதுமை என்பதைவிட்டு,  திருக்குறளிற்கு தன்னிச்சையாய் உளறலாய் உரை செய்தனர்.

Then14.jpg
 சாலை இளந்திரையன் - தென்னிலப் பகுதிகளில் உள்ளவர் 
 இலக்குவனார் -தென்னாட்டவர்
  இளங்குமரன் -தெளிந்த அறிவினர் 
குழந்தை - தென்னாட்டவர்
 வளன் அரசு (ஜோசப் ராஜ்) -வாழ்ந்து மறைந்தோர்
  க.ப.அறவாணன்- அரிய பெரிய வாழ்வு வாழ்ந்து மறைந்தோர் 
 
 தமிழர் மரபை ஏற்காதுகிறிஸ்துவ நச்சுக் கருத்தின் அடிமைகளாய் எழுதப்பட்ட உரைகள்.
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

clip

clip

Image may contain: textImage may contain: 1 person

  • 2 weeks later...

எல்லா மதங்களும் விதைப்பது நச்சு கருத்துக்களைத் தான்.  அதிலும் இந்து மதம் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகளை விதைத்து மக்களின் முன்னேற்றத்திற்கும் சுபீட்ச வாழ்விற்கும்  பெருந்தடையாக விளங்குவது பார்ப்பனீயம் என்ற கொடிய விசமே.

இன்றும் கூட  கேரள வெள்ளப்பெருக்கு என்ற இயற்கை அழிவிற்கு கடவுளின் தண்டனை தான் காரணம் என்  அவரகளுக்கே உரிய ஈனத்தனமான கருத்துக்களை பரப்பிவருகிறது நச்சு பாரப்பனீயமே. பாரப்பனர்கள் உடனடியாக செய்யவேண்டியது அவர்கள்  மனிதர்களாக மாறுவதே. மனித பரிணாம வளர்ச்சியின் பயனாக மனித உருவத்தில் ஏற்கனவே உள்ள அவர்கள் உடனடியாக மனித பண்பு உள்ளவர்களாக மாற வேண்டும்.

  • தொடங்கியவர்

நண்பரே தமிழர் மெய்யியலே இந்து சமயம், வெற்று கற்ப்னையாய் புனையப்பட்ட நச்சு விஷமே பார்ப்பனர் - பிரிவினை, கிறிஸ்துவர் தன் மதம் பரப்ப சொன்ன நச்சுப் பொய்களே .
இவை தொல்லியலோ, சங்க இலக்கியமோ, திருக்குறளும் பார்ப்பனர்களை போற்றுவதே, அறவாழ்வு அன்று முதல் இன்று வரை வாழ்வது தான்.
நச்சுக் கிறிஸ்துவ கருத்துக்களை தூக்கி எறிந்து தமிழராய் - பழமை உணர்ந்து வாழ்ழ்வேண்டும்.
நிறைமொழி மாந்தர் நிலத்து மறைமொழி காட்டி விடும். இந்த நிலத்து தொல்குடியினரே பார்ப்பனர்கள்.

 

  • தொடங்கியவர்

 1330 குறளில் திருவள்ளுவர் பயன்படுத்தாத சொல் தமிழ்.
தெளிவாய் வள்ளுவர்  
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல்குறும்பும் இல்லத நாடு.                    குறள் 735: 
இந்தியாவின் மக்களை மதம் மாற்ற பொய்யாய் பிரிவினை செய்த நச்சுக்களே ஆரியம் - திராவிடம் என்பது. பாதிரி கால்டுவெல்படி தமிழர்கள் இம்மண்ணின் அன்னிய வந்தேறிகள், கைபர் - போலன் வழி வந்கவர்கள்.
மொழி - இனம் என்ற பொய்களால் திருவள்ளுவர் கூறியதை சிதைப்போர், திருவள்ளுவர் குறளிற்கு முதல் உரையான சமணர் மணக்குடவர் உரை, வள்ளுவத்தினின்று 100 ஆண்டுக்கள் வந்த உரை பற்றி உரக்க வேண்டும்

On 8/22/2018 at 3:54 PM, devapriya said:

நண்பரே தமிழர் மெய்யியலே இந்து சமயம், வெற்று கற்ப்னையாய் புனையப்பட்ட நச்சு விஷமே பார்ப்பனர் - பிரிவினை, கிறிஸ்துவர் தன் மதம் பரப்ப சொன்ன நச்சுப் பொய்களே .
இவை தொல்லியலோ, சங்க இலக்கியமோ, திருக்குறளும் பார்ப்பனர்களை போற்றுவதே, அறவாழ்வு அன்று முதல் இன்று வரை வாழ்வது தான்.
நச்சுக் கிறிஸ்துவ கருத்துக்களை தூக்கி எறிந்து தமிழராய் - பழமை உணர்ந்து வாழ்ழ்வேண்டும்.
நிறைமொழி மாந்தர் நிலத்து மறைமொழி காட்டி விடும். இந்த நிலத்து தொல்குடியினரே பார்ப்பனர்கள்.

 

என்ன நண்பரே தமது இந்து மத‍த்தை தமது வியாபார நிறுவனமாக பயன்படுத்தும் வருமானத்துக்காக அர்த்தமற்ற மூடப்பழக்கங்களை விதைத்து மக்களிடைய சாதி பிரிவினைகளை ஏற்படுத்திய பார்பனர்களை போற்ற வேண்டுமா?   நீங்கள் கூறிய  மெய்யியல் பார்பனர்கள் தான் மேற்குலகில் உள்ள அத்தனை இந்து ஆலயங்களில் பல்லாயிக்கணக்கில் கறுப்பு பணமாக வருமானம் பெறுவது எந்த மெய்யியலில் அடங்கும். அவ்வளவு பணமும் மக்கள் பனியிலும், குளிரிலும் உழைத்து சட்டப்படி வரி செலுத்தி பெற்ற பணமே. கொஞ்சம் அசந்தால் எம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு அழைத்து சென்றுவிடுவீர்கள் போல் உள்ளது

உணர்ந்து கொள்ளுங்கள் ஆன்மீகம் என்பது வேறு. மதங்கள் என்பது வேறு. இந்து மத பத்தாம்பசலி அர்த்தமற்ற சடங்குகள்  பார்பனரின் வருமானத்தை அடிப்படையாக கொண்டவை. ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டவை அல்ல.  அது மட்டுமல்ல கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய எல்லா மதங்களும் மனிதர்களால் தமது தேவைக்காக ஏற்படுத்த பட்டவையே. மக்களின் பயமே மதங்கள் என்ற வியாபார ஸ்தாபனங்களின் மூலதனம். அதை அனைத்து மதங்களும் செவ்வனே செய்து வருகின்றன.  மதங்களின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிக்க பட்டன.  அன்று தாமே எதிர்த்த அறிவியல் கண்டு பிடிப்புகளை  அற்பதனமாக மத வியாபாரத்துக்கு அனைத்து மதங்களும் பயன்படுத்துகின்றன. 

நீங்கள் செய்ய வேண்டியது மெய்யியல் என்று கூறும் தர்மத்தின் படி பார்ப்பனரை வாழ சொல்லுங்கள். ஒரு நாள்கூட அவர்கள்மெய்யிலின் படி வாழ மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த பிறகு அவர்களை போற்றி பாடுங்கள்.  அதற்கு முன் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் பார்பன திருடர்களை போற்றாதீர்கள். அவ்வாறு போற்றுவது மாபியா கும்பல்களை போற்றுவதற்கு சமன்.

Edited by tulpen

  • தொடங்கியவர்

உலகின் மிகப் பெரும் பணக்கார நாடு 2000 ஆண்டுகள் உலகின் 25%, ஆனால் பைபிள் ஒற்றை புத்தகக் கதையை நம்பி அதன் மூட நம்பிக்கை பொய்கடவுள் கட்டுக்கதைக்கு அடிமைப் படுத்த கிறிஸ்துவ ஆங்கிலேயன் செய்த பொய்களில் ஆழ்ந்தால் பயன் இல்லை. கிறிஸ்துவ ஆங்கிலேயன் மோசமான ஆட்சியில் 10 கோடி இந்தியரை செயற்கை பஞ்சத்தால் கொன்றனர், 600 லட்சம் கோடி கொள்ளை அடித்து சென்றனர். 
சமுதாயப் பிரிவில் உள்ள வர்ணப் பிரிவுகளிற்கு காரணம் ஒரு சிறு கூட்டம் எனில் நீங்கள் பாதிரிகள் நச்சு பொய்களுக்கு அடிமை பட்டதை திருப்பி ஒலிக்கிறீர்கள்.
//மத‍த்தை தமது வியாபார நிறுவனமாக பயன்படுத்தும் வருமானத்துக்காக அர்த்தமற்ற மூடப்பழக்கங்களை -அர்த்தமற்ற சடங்குகள் இவை எல்லா மதத்திலும் உண்டு, ஆனால் தமிழரின் மெய்யியலில் இவை கட்டாயம் கிடையாது, கட்டாயமாய் தசம பாகம் கொடு என யாரும் சொல்ல இயலாது, எந்த ஜமாத்தும் மிரட்ட முடியாது, நீங்கள் விருப்பமானால் செய்யலாம்.
நமது பேராசையில் அதிக பலனிற்கு அதிக பக்தி என ஏமாற்றுவோர் வலையில் விழுவதற்கு காரணம் இந்து மதம் காரணமல்ல.
/மத‍த்தை தமது வியாபார நிறுவனமாக பயன்படுத்தும் வருமானத்துக்காக பயன் அடைவது இஸ்ரேலும், சௌதி அரேபியாவும், தங்கள் நாட்டு மொத்த வருமானத்தில் 10%  அதிகமாய் கிறிஸ்துவமௌம், இஸ்லாமிய  பத்தாம்பசலி மதக் கட்டாய அர்த்தமற்ற சடங்குகள் தான். 

பாரத நாட்டின் வரலாற்றுக்கு ஆதாரம், கல்வெட்டுகள் - இலக்கியமும் தான்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

clipclip

 

  • கருத்துக்கள உறவுகள்

தென்புலத்தார் என்பது கன்னியா குமரிக்குத் தெற்கே கடல்கோளால்(சுனாமி) அழிந்த மக்களைக் குறிக்கும்.  ‘பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோட்டமும் கொடுங்கடல் கொள்ள...‘  என்னும் சிலப்பதிகாரப்பாடல்  இதனைக் குறிக்கின்றது.  தென்மதுரை, கபாட புரம் போன்ற முதல், இடைச் சங்ககால நகரங்கள் இதனாலழிந்தன.    வள்ளுவருக்கும் முற்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் அவ்வாறழிந்த  தமிழர்நாகரீகத்தை நினைவு கூர்ந்து, (தற்போது தீபாவளி கொண்டாடுவது போல) வந்துள்ளனர்.   பிற்காலத்தில் ஆரியர் செல்வாக்கால் அந்த நினைவு நோன்பு நின்று போனது.  அந்த இடத்தை இராவணன், சூரபத்மன் போன்றோரை வடவர் வென்ற கொண்டாட்டங்கள் பிடித்துக்கொண்டன -உ-ம்- தீபாவளி.   வள்ளுவர் அந்த நினைவினை மறந்துவிடாது தமிழர்கள் அனுட்டிக்க வேண்டுமென்று தனது  ‘தென்புலத்தார்...‘ குறளின் மூலம் வலியுறுத்துகிறார்.

Edited by karu

  • தொடங்கியவர்

அந்தணர் - பிராமணர்கள் - தமிழைன் மூத்த தொல்குடி என சிலப்பதிகாரம் "பார்ப்பனி தன் பண்டை தொல் கப்பியக் குடி" சொல்கிறது.
சங்க இலக்கியத்திலோ (பொமு200 - பொஆ 600, தொல்காப்பியம் பொஆ 700, திருக்குறள் பொஆஅ800; சிலப்பதிகாரம் -0ஆ.11ம்நூற்றாண்டிலோ கடல்கோள்  கண்டம் அழித்தல் இல்லை, குமரிக் கண்டம் என ஒரு கட்டுக் கதை கண்டம் இருந்ததில்லை. 
குமரிக் கண்டம் அழிந்திருந்தால் இப்போது உள்ள அனைவரும் தமிழுமே வந்தேறி தான்

 

  • தொடங்கியவர்

போரிற்கு செல்கையில் தென்புல வாழுநர் கடன் உள்ள மூத்த மகன்கள், கர்ப்பிணி, பசுக்கள், கல்வி போதிக்கும் அந்தணர் இவர்கள் காக்கப் படவேண்டும் என்பது சங்கப் பாடல்.
கட்டுக் கதை கடல் கோள் - மதவெறி நச்சுப் பொய் ஆரியர் என்பவர் சர்ச் பொய்களின் அடிமை Image may contain: 1 person, crowd and text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.