Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வர்த்தகர்களிடையே முரண்பாடு!!

Featured Replies

கிளிநொச்சி வர்த்தகர்களிடையே முரண்பாடு!!

 

 

public-market-02-750x430.jpg

 
 

கிளிநொச்சி பொதுச் சந்தையில் சந்தை வர்த்தகர்கள் இன்று ஊடக சந்திப்பு நடத்திக் கொண்டிருந்த தருணத்தில்,
வர்த்தக சங்கத் தலைவரும், உப தலைவரும் வருகைதந்ததால் இரு வர்த்தகர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை என்ற கோரிக்கையுடன் கிளிநொச்சி சநற்தை வர்த்தகர்கள் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இதன் போது வர்த்தக சங்கத் தலைவர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டவர். அக் கட்சியினர் சந்தையில் புதிய மாடிக் கட்டத்தை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர் என்று தெரிவித்து வர்த்தகர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

 
 

public-market-01-750x430.jpgpublic-market-03-750x430.jpg

http://newuthayan.com/story/17/கிளிநொச்சி-வர்த்தகர்களிடையே-முரண்பாடு.html

  • தொடங்கியவர்

புதிய சந்தைக் கட்டடத்துக்கு- கிளிநொச்சி வர்த்தகர்கள் எதிர்ப்பு!!

 

IMG_2885-750x430.jpg

 
 

தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை. மாறாக வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையில் கனகபுரம் மற்றும் ஏ9 பிரதான வீதியை நோக்கியபடி புதிய கட்டடத்தை அமைத்து தருமாறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்ததாவது,

நாட்டின் பல இடங்களில் மாடி சந்தைக் கட்டடத் தொகுதிகள் வெற்றியளிக்கவில்லை. முக்கியமாக சனத் தொகை அதிகளவு கொண்ட யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் மாடி சந்தைக் கட்டடங்கள் வெற்றியளிக்காத நிலையில் குறைந்தளவு சனத்தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தைக் கட்டடத்தை மூன்று மாடியில் அமைப்பது வர்த்தகர்களாகிய எங்களை அழிவுக்கு கொண்டு செல்லும் ஒரு திட்டம்.

 

எனவே எமது விருப்பத்திற்கு மாறாக எமக்கான கட்டடத்தை அமைக்க வேண்டாம் என அரசியல் தரப்பினர்கள்,அரச அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபையினர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

எங்களது சந்தையின் தற்காலி கட்டம் தீயினால் அழிந்த போது, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் மத்திய அரசின் அமைச்சர்களுடன் பேசியதற்கு அமைவாக எமக்கு நட்ட ஈடும் புதிய கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை மாவட்டச் செயலகம் வீட்டுத்திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டனர்.

தற்போது தங்களின் விருப்பத்திற்கு மாறாக மாவட்டத்தில் உள்ள அரசியல் தரப்புக்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களின் விருப்பத்தை எங்கள் வாழ்வாதாரத்தின் மீது திணிக்கின்றனர். ஆகவே நாம் இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.என்றனர்.

IMG_2882-750x430.jpg

http://newuthayan.com/story/17/புதிய-சந்தைக்-கட்டடத்துக்கு-கிளிநொச்சி-வர்த்தகர்கள்-எதிர்ப்பு.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, நவீனன் said:

எங்களது சந்தையின் தற்காலி கட்டம் தீயினால் அழிந்த போது, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் மத்திய அரசின் அமைச்சர்களுடன் பேசியதற்கு அமைவாக எமக்கு நட்ட ஈடும் புதிய கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை மாவட்டச் செயலகம் வீட்டுத்திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டனர்.

மக்களே! ஊரிலையெல்லாம் கந்தோரிலை வேலை செய்யுற ஆக்களுக்கு மாடிவீடுகள் எழும்புது எண்டால் அதின்ரை அர்த்தம்  இப்ப விளங்குதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.