Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் அச்சுறுத்தல்!- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்

Featured Replies

இராணுவம் அச்சுறுத்தல்!- தியாகி திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்

 

thileepan-710x350-702x350-720x450.png

இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள், அச்சத்தில் வேலையை கைவிட்டு திரும்பியவுடன், தாம் அங்கு பணியில் ஈடுபடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து யாழ். மாநகர சபையினர் வெளியாட்களை தற்காலிக வேலைக்கமர்த்தி வேலி அமைக்கும் பணிகளை பூரணப்படுத்தியுள்ளனர்.

தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் யாழ். மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் முதற்கட்டமாக நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இராணுவம்-அச்சுறுத்தல்-த/

  • தொடங்கியவர்

நல்லாட்சியிலும் “பருப்பும் சோறும்”தான் தமிழர்களுக்கு உணவா?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Ranil-Chandrika-Maithripala-800x636.jpg?

 

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் தூபி புனரமைப்பில் ஈடுபட்டவர்களை பார்த்து ‘வெளியில் வாழ ஆசையில்லையா? பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா’ என்று அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வாசகங்கள் இந்நாட்டு அரசின் வாசகங்களாகவே தென்படுகின்றன. உண்மையில் நல்லாட்சியில் தமிழர்களுக்கு பருப்பும் சோறும் உண்ணும் நிலமைதான் உருவாக்கப்படுகிறதா?

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஏற்பட்டிருக்கும் ஆட்சி நல்லாட்சி என்று பேசப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட மக்களையும் விடுதலைப் போரில் ஈடுபட்டு சாவடைந்த போராளிகளையும் நினைவு கூரலாம் என்று இலங்கை அரசே விளக்கங்களை அளித்தது. போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொண்ட அரசாங்கம், ஜேவிபி போராளிகளை நினைவு கூரும் உரிமையைப்போலவே விடுதலைப் புலிப் போராளிகளையும் நினைவு கூரும் உரிமையும் தமிழர்களுக்கு உண்டு என்று வாதிட்டது.

இத்தகைய பேச்சுக்களுக்கும் களத்தில் தமிழ் மக்களுடனான அணுகுமுறைகளுக்கும் சில வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் தன்னெழுச்சியாக சென்று துப்புரவு செய்து மாவீரர் தினத்தை கொண்டாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அங்கே இராணுவப் புலனாய்வாளர்கள் மாற்று உடைகளில் வந்து படம் பிடித்துச் சென்றுள்ளார்கள். மாவீரர் துயிலும் இல்லத்தில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ஜெயக்குமாரை நான்காம் மாடிக்கு அழைத்து கடுந்தொனியில் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

அவரிடமும் பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல தற்போதும் யாழ் பத்திரிகையாளர்களுக்கு நான்காம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே புத்தக கடைகளுக்குச் செல்லும் இராணுவப் புலனாய்வாளர்கள், அங்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை விற்பனை செய்தால் பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா என்றே கேட்கின்றனர். இந்தக் கேள்வி சாதாரணமான ஒன்றல்ல. தமிழ் மக்களை எந்த நேரத்திலும் இன வதை சிறைகளில் அடைப்போம் என்ற பாரபட்சமான, ஒடுக்குமுறையான அணுகுமுறை.

ஏற்கனவே சிறைகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பருப்பும் சோறும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்த அரசு இணங்கவில்லை. எத்தனையோ போராட்டங்கள் நடந்தும் துயரமான மரணங்கள், இழப்புக்கள் நடந்தும் அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு பருப்பும் சோறும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறது. தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தவும் ஒடுக்கி வைத்திருக்கவுமே இவ்வாறு அவர்கள் சிறையில் உள்ளனர். காலம் காலமாக ஈழத் தமிழர்களை ஒடுக்கி ஆளும் அதே பேரினவாத இராணுவ அணுகுமுறையே இந்த சொல் தாக்குதலாகும்.

அண்மையில் வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு சென்று வழிபட்டால் கைது செய்வோம் என்று இலங்கை பொலிஸார் எச்சரித்தனர். தமிழ் மக்கள் தங்கள் நம்பிக்கை மிக்க வழிபாடுகளை முன்னெடுத்தாலும் அதற்குத் தண்டனையும் பருப்பும் சோறுமா? அப் பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாம். வெடுக்குநாறி மலை அப் பகுதி தமிழ் மக்களின் பண்பாட்டு உரிமை. அதில் தலையிடவோ, தடுத்து நிறுத்தவோ தொல்லியல் திணைக்களம் ஒன்று தேவையில்லை. அவர்களின் பண்பாட்டை பாதுகாப்பதும் அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதுமே இந்த திணைக்களத்தின் உண்மையான பணி அத் திணைக்களம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு மண்ணிலே, இந்த மண்ணின் தொல்லியல் அம்சங்களுக்கும் அடிப்படைகளுக்கும் பண்பாட்டுக்கும் மாறாக எத்தனையோ இடங்களில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்ட வேளையில் இந்த தொல்லியல் திணைக்களம் எங்கு சென்றது? அல்லது அவைகளை தமிழ் மண்ணில் திணித்து தமிழ் மண்ணின் பண்பாட்டை ஒடுக்கி அழிப்பதுதான் இந்தத் தொல்லியல் திணைக்களத்தின் வேலையா? இவர்களும் தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மறுத்து அவர்களுக்கு பருப்பும் சோறும் உட்டப் பார்க்கிறார்களா?

ஈழத் தமிழர்களின் வாழ்வில் தெய்வங்களையும் போரில் இறந்த மக்களையும் உரிமைக்காக போரிட்டு மாண்ட போராளிகளையும் வழிபடுவது அல்லது நினைவுகூர்வது என்பது அவர்களின் பண்பாடாகிவிட்டது. அந்தப் பண்பாட்டை மறுக்க எவருக்கும் எந்த அரசுக்கும் உரிமை இல்லை. மக்களின் பண்பாட்டு உணர்வை, உரிமையை அங்கீகரிப்பது அரசின் கடமை. அவ்வாறு இல்லாவிட்டால் அது அந்த மக்களின் அரசில்லை என்பதே அர்த்தம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதாக காட்டிக் கொண்டு உள்ளுக்குள் மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியின் இராணுவ அணுகுமுறைகளை பின்பற்றுவதையே பருப்பும் சோறும் வாசகங்கள் உணர்த்துகின்றன.

மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுக்கு கட்டி ஆட்சியை கைப்பற்ற உதவிய ஈழத் தமிழ் மக்களுக்கு, இவ் நல்லாட்சி அரசு, பருப்பும் சோறும் ஊட்டத்தான் முனைகிறதா?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/91524/

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து இந்தப் பணி நிறுத்தப்படக் கூடாது. தியாகிகளுக்கு அஞ்சலி செய்யும் உரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும். அதை தட்டிப்பறிக்க சிங்கள ஆட்சியாளர்களும்.. அதன் அடிவருடி இனஅழிப்பு இராணுவத்துக்கும் எந்த அருகதையும் கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இராணுவ அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து இந்தப் பணி நிறுத்தப்படக் கூடாது. தியாகிகளுக்கு அஞ்சலி செய்யும் உரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும். அதை தட்டிப்பறிக்க சிங்கள ஆட்சியாளர்களும்.. அதன் அடிவருடி இனஅழிப்பு இராணுவத்துக்கும் எந்த அருகதையும் கிடையாது. 

ஆது தானே வாங்கோ போய் போராடுவம்.?

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக... அகதியாகவும் இன்னும் பல வழிகளிலும் அந்நிய நாடுகளுக்கு ஓடியாந்து.. பொருளாதாரமே வாழ்க்கை என்று வாழும் தமிழர்கள் அனைவரும் வாருங்கள்.. உங்களுக்கு நாங்கள் தலைமை ஏற்று அல்ல நல்ல வழிகாட்டிகளாக.. சுதந்திர பூமிக்கான பயணத்தில் கூட வருகிறம்.

பிற்குறிப்பு.. உங்கட பிள்ளை குட்டி.. புகலிடத்தில் பிறந்தவை என்ற பீலாவிடாமல் அவர்களை அணி சேர்த்துக் கூட்டி வரவும். 

அடக்குமுறைக்கு பயந்தவர்களால்.. அகதியாக முடியும். ஆனால் சாவுக்கு அஞ்சாதவனால் மட்டுமே சுதந்திரக் காற்றை நோக்கிப் பயணிக்க முடியும்.

நிலத்துக்கு சொந்தமே இல்லாத சிங்களவன்.. எங்கள் நிலத்தில் தன் ஆக்கிரமிப்பால்.. தனக்கான.. சுதந்திரத்தை எழுதிக் கொண்டிருக்கிறான்.. நாமோ... அவனுக்கு கீழ் எப்படி அடங்கி வாழ்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.. காரணம்.. எங்களுக்கு தேவை கொலிடேயும்.. அங்குள்ளவர்களுக்கு தேவை..  தினமும் மனதோடு ஏங்குவதும் சாவதும்..! 

இதற்குப் பெயர் போராட்டம் கிடையாது. இப்படி போராடி இருந்தால்.. புலிகள் என்ன பிரபாகரனும் இப்போ எங்கோ ஒரு நாட்டில் வெளிநாட்டுப் பாஸ்போட்டில்.. பிள்ளை குட்டிகளோடு வாழ்ந்து கொண்டிருப்பார்..! 

அவருக்கு மட்டும் தான் சுதந்திர தமிழீழம் தேவைப்பட்டதோ..????!

பலஸ்தீனர்கள் வெளிநாட்டுக்கு ஓடியாந்ததை விட இன்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்குள்ளும் போராடுவதால் தான்.. உலகின் வலிமை மிக்க இராணுவ வல்லமையை எதிர்த்து அடக்குமுறையை எதிர்த்து ஒரு அடையாள தேசத்தையாவது கட்டிவளர்க்க முடிந்துள்ளது. தங்கள் மண்ணுக்காக.. மக்களுக்காக இறந்த வீரர்களை போற்ற முடிகிறது.

ஆனால்.. நாம் புலிகளை என்ன எதையும் மறப்போம்.. ஆனால் சிங்களவன் முன் கைக்கட்டி தலைகுனிந்து வாழ்வோம்.. அதுவே இப்போ எங்கள் வாழ்க்கை என்று தீர்மானிக்கின்றனர்.. காட்டிக்கொடுத்தோடும்.. தேசம் விட்டு ஓடியோரும். ?

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.