Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவன் கஜனின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு(படங்கள்)

Featured Replies

சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவன் கஜனின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு(படங்கள்)

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3752.jpg?resize=800%2C534

 

கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட இரண்டு யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய வீட்டினை அமைச்சர் சுவாமிநாதன் கஜனின் தாயார் நடராஜா சறோஜினிதேவியிடம் கையளித்துள்ளார். வீட்டினை கையளித்த பின்னர் கருத்துரைத்த அமைச்சர் சுவாமிநாதன் இந்த வீடு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கஜனின் இழப்புக்கு ஈடாகாது. இருப்பினும் நாம் அப்போது பிரதமருடன் பேசி குடும்பத்தினருக்கு வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக இந்த வீட்டினை அமைத்துக்கொடுத்துள்ளோம். இந்த வீட்டினை இராணுவத்தினர் மிகவும் சிறப்பாக அமைத்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், அமைச்சின்அதிகாரிகள், கிராம அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

IMG_3712.jpg?resize=800%2C534IMG_3715.jpg?resize=800%2C534IMG_3725.jpg?resize=800%2C534IMG_3732.jpg?resize=800%2C534IMG_3740.jpg?resize=800%2C534IMG_3746.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/93210/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் இழைக்கப்படும் குற்றங்களுக்கு பரிகாரம்.. வீடு வழங்குதல் என்றாகிப் போய்விட்டது.

நீதியும் இல்லை.. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் இல்லை. மாறாக.. குற்றமும் குற்றவாளிகளும் பாதுக்காக்கப்படும் வகைக்கு.. வீடு வழங்குதல் தான் கையூட்டாகி விட்டுள்ளது. ?

சர்வதேசத்தினால் தமிழர் பிரதேச அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதியை ஏற்கனவே அரைவேக்காட்டு அரசியல்வாதி சுவாமிநாதன் சிங்கள-பௌத்த இராணுவப்பயங்கரவாதிகள் ஆக்கிரமித்திருந்த தமிழர்களின் காணிகளை விடுவிக்க சிங்கள-பௌத்த இராணுவப்பயங்கரவாதிகளுக்கு வழங்கி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை நாசம் செய்திருந்தார். 

தற்போது சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளிடம் நக்கி நக்கி அரசியல் செய்யும் சுவாமிநாதன் இதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றார்? 

இதனால் இன்னொரு குடும்பத்துக்கு கிடைக்கக்கூடிய வீட்டுத்திட்டம் இல்லமால் போனது என்பதை அறிவிலி சுவாமிநாதன் ஒத்துக்கொள்வாரா? 

படுகொலை செய்த சிங்கள போலீஸ் பயங்கரவாதிகளுக்கு என்ன தண்டனை? 

வெறும் வீடு மட்டும் நட்டஈடு ஆகுமா? 

படுகொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு குறைந்தது 10 கோடி ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும். 

  • தொடங்கியவர்

“வழங்கப்பட்ட வீடு ஏமாற்றமளிக்கிறது” கஜனின் சகோதரி கவலை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Kajan-House1.jpg?resize=800%2C533

 

தம்பியின் மரணத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில் வீடு மாத்திரமே அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வீடு எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே காணப்படுகிறது. என கஜனின் சகோதரி கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற காவற்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட இரண்டு யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (29-08-2018) வழங்க்ப்பட்டுள்ளது.

குறித்த வீடு இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. வீட்டின் அத்திபாரம் கஜனின் தாயார் இரண்டு இலட்சம் ரூபா தனது பணத்தை செலவு செய்து கட்டியது என்றும், அத்தோடு வீட்டின் லிண்டர் வரையான கட்டுமானப் பணிகளை ஊரில் உள்ள மேசன் ஒருவரை மேற்கொண்டார் எனவும், அதன் பின்னரான கட்டுமானப் பணிகளையே இராணுவத்தினர் மேற்கொண்டனர் என்றும்  கஜனின் குடுத்தினர் தெரிவித்துள்ளனர்.

Kajan-House4.jpg?resize=800%2C533

கஜனின் தாயாருக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே வீடு இவ்வாறான ஒரு அமைப்பில் வடிவமைக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். அத்தோடு வீட்டில் பல பகுதிகள் பூசப்படாது காணப்படுவதோடு, வெடிப்புக்களும் காணப்படுகின்றன. மேலும் வீட்டின் நிலம் கூட சீமெந்து கொண்டு சீராக பூசப்படவுமில்லை இதனை தவிர பின் பக்கம் ஜன்னல்களுக்கு கதவுகள் பொருத்தப்படவில்லை இவ்வாறு பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

சாதரணமாக பொது மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்ற எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கூட அவர்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கின்ற போது தங்களது வீட்டுக்கு 13 இலட்சத்து 50 ஆயிரம் அரசின் நிதியும் அத்திபாரத்திற்கு எங்களது நிதி இரண்டு இலட்சம் என 15 இலட்சத்து 50 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.எனக் குடும்பத்தினர் தெரிவிக்கப்படுகின்றனர்.

எனவே இதன் மூலம் தனது தாயார் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும், தம்பியின் மரணத்தின் போது தங்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம், உட்பட பல உதவிகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை வழங்கப்பட்ட வீடும் திருப்தியி்லலை என்றும் கஜனின் சகோதரி தெரிவித்தார்.

 

Kajan-House3.jpg?resize=800%2C533

Kajan-House2.jpg?resize=800%2C533

Kajan-House5.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/93353/

வீட்டின் முன்பக்கம் வடிவாத் தானே இருக்குது!

அதைவைச்சு மக்களை ஏமாற்றலாம் என்று நினைச்ச சாமிநாநதன் தலையில மண்ணை அள்ளிப்போடுறீகளே!

  • கருத்துக்கள உறவுகள்

கஜனின் குடும்பம் மட்டுமல்ல.. மொத்த தமிழினமும் இப்படித்தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எங்களில் சிலர்.. அரையோகுறையோ இதை வைச்சுக் கொண்டு முன்னேற வேண்டும்.. அதுதான் பிள்ளையின் (மக்களின்) இழப்புக்கு பரிகாரம் என்று வகுப்பெடுக்க வந்திடுவினம். இத்தனைக்கும் அவைட பிள்ளைகள் வெளிநாட்டில் செல்வச் செழிப்போடு நல்ல சமூகப் பாதுகாப்போடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 

எமது இந்த நிலைக்கு எம்மவர் எம்மவரை ஏமாற்றிப் தம் சொந்தப் பிழைப்பை காப்பாற்றிக் கொள்ள நினைப்பதும்.. ஒரு காரணம். ?

கிடைக்கிறதை விடக்கூடாது எப்படியோ வாங்கிவிடோணும் என்கிற காக்கைவன்னியர் மனநிலையில் உள்ளவர்களுக்கு இப்படியான தீர்வுகள் தான் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.