Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா?

Featured Replies

ஈழத்தமிழனின் ஆதங்கம்

நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன்

எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு

நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை

இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும்

தமிழர்கள் இங்கு

அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம்

இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும்

300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கவேண்டியுள்ளது

எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை.பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல்

7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது

இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்

உங்கள் விசா முடிவதற்குள் சென்றுவிட்டு மீண்டும் புது விசா எடுத்து வாருங்கள்

ஒரு தடவை விசா பெற்றால் இலகுவில் மீண்டும் கூடிய கால விசா பெறலாம்.உங்கள் விசா காலாவதியாகுமட்டும் நின்றுவிடாதீர்கள்

விசா காலாவதியாகும் பட்சத்தில் பொலிசில் பதிய வேண்டி ஏற்ப்படும் பின்பு உங்கள் கடவுச்சீட்டு பயனற்றதாகிவிடும்

எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயற்படுங்கள் நாங்கள் படும் கஸ்டங்களை நீங்களும் படக்கூடாது

அரிய உண்மை தகவல்கள்....

நானும் அறிந்தேன்.... அனுபவப்பட்டேன்..... என் உடன்பிறப்பின்மூலம்...

எத்தனையோ ஈழத்தமிழர் அங்குள்ளார்கள்...

அகதிமுகாங்களிலும்... தனிப்பட்ட முறையிலும்...

2 டாவது வகையினர்.... கனக்க படித்து கரைத்து குடித்து தாமும் இந்திய தமிழர் ஆகியுள்ளார்கள்... :)

அவர்கள் இதுபற்றி இங்கு கதைக்கமாட்டார்கள்.... இப்படி ஓர் இணையம் உள்ளதே எனதெரிந்தும்...

எங்கு என்ன சொல்லணும் நீங்கள் அறிந்து தகவல் தந்ததே.... ஒர் அரிய சேவை நன்றி

(ஈழத்து இந்திய யாழ்கள நீண்டகாலநண்பர் ஒருவர் உள்ளார் அவர் இதுபற்றி அறிந்தாரோ நான் அறியேன்)

யாழ் நண்பர்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிபார்கள் 2 வது உங்கள் கருத்தாததால் கொஞ்சம் யோசித்து பதில்எழுதுவோர் பார்த்து அதற்கேற்ப சிங்சக் போடுவர் பாருங்களளேன் நண்பா.... :lol: 498 போர்பார்த்தும் ஒருவர் இதில் கருத்தெழுதவில்லை என்றால் இந்த சேவைக்காக உங்களுக்கு கவலைவரும :) தொடர்ந்து நேரம் இருந்தால் எழுதுங்கள்.... யாழை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.உங்களை யாழும் யாழைநீங்களும் கப்பற்றிவிடுவீர்கள் :) நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கைக்கு நன்றி.தமிழீழத்தைத் தவிர வேறு எங்காவது நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று பகல்கனவு காண வேண்டாம்.

Edited by eelapirean

நண்பர் ஒருவர் மேலே கூறியுள்ளது போல் இச்செய்திப் பக்கம் சுமார் 600 தடவைகளிற்கு மேல் இதுவரை பார்க்கப்பட்டுள்ளது, ஆனால் இருவரே இதுவரை பதில் கருத்து எழுதியுள்ளார்கள், ஆனாலும், நம்மவர்கள் இதுபற்றி அக்கறையின்றி இருக்கின்றார்கள் என்பதல்ல இதன் அர்த்தம்...

எனது நண்பன் ஒருவன் கூட நீண்டகாலமாக தமிழ்நாட்டில் இருக்கின்றான், அவனது கூற்றுப்படி, ஈழத்தமிழர் இந்தியாவில் - தமிழ்நாட்டில் சுதந்திரமாக வாழவேண்டுமாக இருந்தால், தாம் பேசும் பேச்சு மொழியில் இருந்து, தமது நடையுடை, பாவனை அனைத்தையும் தமிழ்நாட்டு தமிழர் பாணியில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இதைவிட ஈழத்தமிழர் என்று அறிந்தால் அவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கவென்றும், தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் இருக்கின்றது. இதைவிட போலிஸ் கெடுபிடி சொல்லி வேலை இல்லை...

தமிழ்நாட்டு தமிழருக்கே தமிழகத்தில் நீதி, நியாயம் கிடைக்காதபோது ஈழத்தமிழர் அதை அங்கு எதிர்பார்ப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை...

மேலும், இந்தச் செய்தியையும் ஒருமுறை பாருங்கள்....மனம் உடைந்து போவீர்கள்...இது பழைய செய்தியாக இருந்தாலும், எக்காலத்திற்கும் பயந்தரக்கூடிய பல தகவல்களை, ஆபத்துக்களை இது கூறுகின்றது..

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=252771

எச்சரிக்கைக்கு நன்றி...பல உறவுகள் இதனால் பயனடைவார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பதிவை தமிழீழ செய்திகள் என்ற பிரிவிலிருந்து வேறு உகந்த பிரிவுக்கும் மாற்றினால் நல்லம் என்று நினைக்கிறேன்.

சகோதரம் உங்கள் ஆதங்கம் விளங்குகிறது. இதை தமிழ் நதி என்பவர் தனது 'புகொக்' இல் விரிவாக விளக்கியுள்ளார், அதற்கு தமிழக சகோதரர்களும் பதிலிட்டுள்ளனர்-- சென்று பார்வையிடுங்கள்.

http://tamilnathy.blogspot.com/2007/03/blog-post_08.html

மேலும் தமிழக உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அதிகாரிகளின் தொடர்புகள் உள்ளன. மின்னஞ்சல் முதல் தொலைபேசி இலக்கம் வரை கலைஞரிலிருந்து அனைவரினதும் உள்ளது. இது சகித்து போக வேண்டிய விடயமல்ல- அதிகாரிகளுக்கு முறையாக அறிவித்து மேலும் தொடராமல் வழி செய்ய வேண்டிய விடயம். அங்கு வறிய மக்கள் படும் கஸ்டத்தை நாமும் படுவதென்பது வேறு, ஆனால் தஞ்சமடைந்த எம்மீது சுடுதார் வார்ப்பது போன்ற பொலிஸில் பதிய பணம் பறிப்பது, காஸ் இற்கு அதிக விலை அறவிடுவது போன்றன முறையிடப்பட வேண்டியன.

தொடர்புகள்: http://www.tn.gov.in/contacts.htm

இப்படி நான் 2000 ஆண்டு இந்தியாவுக்கு சென்றபோது அனுபவித்தோம் குறிப்பாக தங்குமிட விடுதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டோம்.விமான நிலையத்தில் இலங்கை இராணுவம் சோதனை செய்வதை விட கடுமையாக சோதனை செய்யப்பட்டோம். ஆட்டோகாரரும் ஈழத்தமிழனா என நக்கலடிப்பதையும் கண்டோம். ஆனால் ஏன் இப்படி எனக்கு புரியவில்லை.தகவலை இங்கு பதிந்த நண்பருக்கு நன்றிகள் தான் பட்ட துன்பம் படுக இவ்வையகம் என இருக்கும் மனிதருக்கு இடையில்ல் தான் பட்ட தின்பம் இன்னொரூவன் படக்கூடாதென ஆதங்கப்படும் நண்பருக்கு என் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்படி நான் 2000 ஆண்டு இந்தியாவுக்கு சென்றபோது அனுபவித்தோம் குறிப்பாக தங்குமிட விடுதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டோம்.விமான நிலையத்தில் இலங்கை இராணுவம் சோதனை செய்வதை விட கடுமையாக சோதனைசெய்யப்பட்டோம்.ஆட்டோகா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனின் ஆதங்கம்

நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன்

எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு

நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை

இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும்

தமிழர்கள் இங்கு

அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம்

இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும்

300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்க வேண்டியுள்ளது

எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை. பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல் 7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது

இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்

உங்கள் விசா முடிவதற்குள் சென்றுவிட்டு மீண்டும் புது விசா எடுத்து வாருங்கள்

ஒரு தடவை விசா பெற்றால் இலகுவில் மீண்டும் கூடிய கால விசா பெறலாம்.உங்கள் விசா காலாவதியாகுமட்டும் நின்றுவிடாதீர்கள்

விசா காலாவதியாகும் பட்சத்தில் பொலிசில் பதிய வேண்டி ஏற்ப்படும் பின்பு உங்கள் கடவுச்சீட்டு பயனற்றதாகிவிடும்

எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயற்படுங்கள் நாங்கள் படும் கஸ்டங்களை நீங்களும் படக்கூடாது

நண்பரே,

உங்களது நிலையை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்.

தயவுசெய்து தமிழகத்தில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியப்படுத்தவும்.

தமிழகத்திலே நல்லவர்கள் மிக சொற்பமே உள்ளனர். அதனால்தான் தமிழக அரசியல், சினிமா மற்றும் பத்திரிக்கைகள் இம்மூன்றும் கேவலமான நிலையில் இருக்கின்றன.

சொற்ப நல்லவர்களும் (புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால்) உதவுவதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.

பெரிய மனிதரான பழ.நெடுமாறன், வை.கோ போன்றவர்களுக்கே பொடா என்றால், சாதாரண மக்கள் படும் துன்பங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

உண்மையில் சொல்லப்போனால், தமிழர்களே இந்தியாவில் அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அரசியல்,சினிமா,பத்திரிக்கைகள

மேலே படிக்கும் போது வேதனையகவிருக்கின்றது, தமிழனிற்க்கு தமிழனே உதவமாட்டேன் என்கிறான் வேறு யார்தான் உதவுவார்கள், அதற்குள் வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று ஒரு பேர். ஈழதமிழனிற்க்கு தாயகதை தவிர வேற்ங்கையும் நிம்மதியுமில்லை ஆதரவுமில்லை, நமக்கு நாமே பலம்,

அதற்குள் வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று ஒரு பேர். ஈழதமிழனிற்க்கு தாயகதை தவிர வேற்ங்கையும் நிம்மதியுமில்லை ஆதரவுமில்லை, நமக்கு நாமே பலம்,

வானவில், இந்தியாவில் நம்மட ஆக்கள் எல்லாரும் நிம்மதி இல்லாமல், ஆதரவில்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது,

நான் இப்ப கிட்டடியில் இந்தியா போனேன் .... சில இடங்களுக்கு போனன் .... அங்க நான் பார்த்ததில் தமிழ் நாட்டில் அதாவது குறிப்பா மெற்றாஸில் (சென்னை) நம்மட ஆக்கள் நல்ல வசதியாக .... வாழ்கிறார்கள். சில பேர் சொந்தமாக வீடு வாங்கியிருக்கினம்(புலத்தில் உள்ளவர்கள் வாங்கி விட்டிருக்கினம்) சில பேர் வாடகை வீட்டில் இருக்கினம்.

அங்க துன்பப்படுபவர்கள் என்றால் அது அகதி முகாம்களில் இருக்கும் நம் தமிழர்கள் தான். :D

இந்தியாவில், ஈழத்தமிழர்கள் கூடுதலானோர் அகதி முகாம்களிலிலே இருக்கினமாம்.வசதி உள்ளவர்கள் மட்டுமே வெளியே வீடு எடுத்து இருக்கினமாம்.

முந்தி ஒருக்கா யாரோ ஒருத்தரர் அகதி முகாம்களில் எடுத்த போட்டோஸ் என்று சொல்லி யாழ் ல இணைத்திருந்தார் . அதை பார்த்தேன். இந்தியா போனால் ... அந்த மாதிரியான முகாமுக்கு போய் பாக்கனும் எண்டு நினைச்சன்.... ஆனால் போகல :( . அப்படியிருந்தும் எங்கட மாமா கிட்ட கேட்டன் போவமா எண்டு ... அவரும் அங்க உள்ள நிலமையை சொன்னார் ... இப்ப கண்டபடி எல்லாம் முகாம்களுக்கு போக முடியாது ஒரே செக்கிங் நடக்குமாம் தெரியாத வெளி ஆக்கள் வந்தால் அவர்களை பிடிச்சு ஒரே விசாரனைகள் எல்லாம் நடக்குமாம். எதாவது வாய் காட்டினால் கூட கூட்டிக் கொண்டு போய் அடிப்பாங்களாம் இந்திய பொலீஸ் .... எண்டு பயப்பிடுத்தினார் ... அதனால் அம்மா போக விடயில்லை :( ஹும் அகதி முகாம்களில் வாழும் நம்ம இளைஞர்கள் இப்படியும் அடிவாங்குறார்களா எண்டு நினைச்சு கவலைப் பட்டேன். :(

மெற்றாஸில் இருப்பவர்களுக்கு வெளி நாட்டில் இருந்து காசு போகின்றது அதனால் அவர்கள் அப்படி வசதியாக இருக்கினம் எண்டு நினைக்கிறேன்.வெளி நாட்டு உதவி இல்லாதவர்களே ... அகதி முகாமில் வாழ்கிறார்கள் எண்டு நினைக்கிறன். அதுவும் மெற்றாஸில் உள்ளவர்கள் சில பேர் வாழ்கிற வாழ்கையோ அந்த மாதிரி தான் இருக்கு... வீட்டுக்கு வேலைக்காரி வச்சிருக்கிறார்கள் ... தண்ணி பிடிக்க ஒராள் ... காய் கறிகள் வாங்க ஒராள் ..ஒரு குடம் தண்ணி பிடித்து குடுப்பவர்களுக்கு 3 ரூபாய் .... மாசத்தில் மொத்தமா அவர்களுக்கு காசு. எங்கயும் போக வேண்டும் என்றால் ... உடனே ஆட்டோ வந்து வாசல்ல நிக்கும் ... ஹும் இப்படி இருக்கு அவையிண்ட வாழ்வு... :lol:

இந்தியாவில் கன காலம் வாழ்கிறவர்கள்... படிக்கின்ற இளைஞர்கள் ஈழத்தில் என்ன நடக்குது போகுது எண்டு ஒரு யோசனை இல்லாமல் இருக்கிற மாதிரியும் தெரிஞ்சுது.அப்படியே இந்தியா ஆக்கள் மாதிரி மாறிட்டினம் எண்டுதான் சொல்ல வேண்டும்.அங்க படிச்சவர்கள் அங்கத்தய பாஸ்போர்ட் எடுத்து இருக்கினம்.அங்க உள்ள இளைஞர்களுக்கு ஈழத்தைப் பற்றி ஒன்டும் தெரியல எண்டு தான் நினைக்கிறன்.ஆளுக்கொரு மொபைல் ஒரு நாளைக்கு 30 எஸ் எம் எஸ் ஜோக்ஸ் அனுப்பிக் கொண்டு இருக்கினம் . ( அதைப்பார்க்க புலத்தில் இருக்கும் இளைஞர்கள் எவ்வளவோ பரவாயில்லை எண்டு தோனிச்சு. :D B) :( )

ஹும் சூழ் நிலைக்கேற்றால் போல் மாறத்தானே வேணும் .... அங்க படிச்சிட்டு வேலை தேடும் போது உடனே இந்தியா பாஸா எண்டு தான் கேப்பினமாம். இந்தியா பாஸ்போர்ட் இருந்தால் உடன் வேலை கிடைக்குமாம். ஹும் மாப்பிள்ளை சொன்ன மாதிரி ஈழத்தமிழர் எண்டால் கொஞ்சம் ஏமாத்திறதாகவும் எனக்கும் சொன்னாங்க, :angry: அங்க கடைகளுக்கு போனால் உண்மையான விலைய விட கூட்டி சொல்லுவினம் நம்மட ஆக்கள் அப்படியே வாங்கிட்டு வந்திடுறதாம்.ஆனால் இந்தியாக்காரார் சண்டைபிடிச்சு அந்த விலையை குறைச்சு வாங்குவினம்.அவர்கள் சண்டையே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ;)

இந்தியாவில் ஈழத்தமிழரை ஆதரிக்கும் தமிழர்களும் இருக்கினம். !

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில உள்ள ஈழத்தமிழர்களுக்கு போராட்டம் பற்றிய பிரச்சாரங்கள் போவது மிகக் குறைவு புகலிடத்தோடு ஒப்பிடும் போது. ஏன் கொழும்பில் இருக்கிற தமிழர்கள் அரசின் செய்திகளோடு தான் வாழ்கின்றனர். உண்மை போராட்டம் பற்றிய விழிப்பூட்டல் அதிகம் கிடைத்தும் உணராத மரக்கட்டைகளாக இருப்பது புகலிடத்தில் உள்ளவர்கள் தான் அதிகம்..! புகலிடத்தில் உள்ள இளசுகளுக்கு பொதுவாக அந்தச் சிந்தனையே இல்லை..!

பாருங்கள் புகலிடத்தில் இருந்து இணையங்களில் புளுகித் தள்ளுபவர்கள் நேரடியாக செல்லும் போது பிரச்சனைகளை சந்திக்கப் பயந்து அப்பா அம்மா மேல பழியைப் போட்டிட்டு தப்பிக்கிறாங்க..! ஆக புகலிடத்தில் நல்லா வேசம் போட முடிகிறது.. போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில கொழும்பில உள்ளவைக்கு அது முடியாத நிலை..!

புகலிடத்தில் போராட்டம் என்பது பொழுதுபோக்கு...! ஆனால் ஈழத்தில் அது வாழ்வுக்கான உரிமைக்கானது. அதை புகலிடத்தில் உள்ளவர்கள் உணர முடியாது. உணர்ந்தாலும் அக்கறை செலுத்த வேண்டியதில்லை..!

இன்று தமிழகம் இந்தியா புகலிடத்தமிழர்களின் சுற்றுலா மையமாகி உள்ளது. காரணம் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு கொழும்பில் பிரச்சனை என்பதால்.

புகலிடத்தமிழர்களைப் பொறுத்தவரை முதலில் தங்கள் இருப்பு.. வசதி வாய்ப்பு.. பொழுதுபோக்கு உல்லாசம்.. அதன் பின்னர்தான் போராட்டம்.. அதுவும் ஜஸ்ட் பொழுது போக்கிற்கு..! இப்படியான நிலையில் எத்தனை தமிழர்கள் உண்மையான பங்காளிகளாக முடிகிறது.

தற்போது கூட ஈழத்தில் பிறந்து வளர்ந்து வெளிநாடுகளுக்கு படிக்க வந்த இளைஞர்கள் தான் திரும்பிப் போய் புலிகளுக்கு உதவுகின்றனர். பொய் புரளி சொல்லி அகதியாக ஓடிவந்து பொருளாதார அடைக்கலம் தேடியுள்ள எவரும் அல்லது அவர்களை தொடர்ந்து பிறந்து வந்த அவர்களின் வாரிசுகளும் இதைச் செய்யத் தயார் இல்லை..! வெறும் வார்த்தையாலங்களால் போராட்டத்துக்கு தூர இருந்து தூபம் காட்டி ஆதரவு முகமூடி போட விரும்புகிறார்களே தவிர.. பங்களாளிகளாக இருக்க இளையோர் வெகுசிலரே முன்வருகின்றனர். இவர்களோடு ஒப்பிடும் போது போராட்டத்திலிருந்தும் பிரச்சாரங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய வாழ் ஈழத்து இளையவர்களைக் குற்றம் சொல்ல ஏதும் இல்லை..! :lol:

Edited by nedukkalapoovan

இதென்னப்பு இப்படி எல்லாம் எழுதியிருக்கீங்கள். நானும் இந்தியாவில் அகதியா இருந்தனான்(1990.1991.1992). நான் இருந்த காலப்பகுதிதான்(எந்தவொரு பதிவுகளும்மின்றி) இந்தியாவில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு மிகவும் கடினமான காலபகுதியாக இருக்குமென்று நான் நினைக்கின்றேன். அதற்கு அப்பறம் 2001.2003 என இரு தடைவைகள் இந்தியா செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது.இங்கு இந்தியா(தமிழக அகதி மூகாம்) பற்றி பதியப்பட்டிருக்கும் தகவல்கல் அனைத்தும் சரியானதாக இல்லை.

கிருசி(hirusy) நீங்கள் நான் இப்போது வசிக்கும் நாட்டில் நீங்கள் விசா இல்லாமல் இருந்தால் நீங்கள் இலங்கைக்கே நாடு கடத்தப்பட கூடும்.அதற்கான சாத்தியங்கள் இங்கு இருக்கிறது.

எதையும் தேவைக்கு ஏற்றபடி அந்தந்த நேரங்களில் செய்யுங்கள். திட்டமிட்டு செய்யுங்கள். எதையும் வெல்லலாம்.

பதறாத காரியம் சிதறாது

எல்லாம் சரி இந்த நெடுக்கால போனவர் ஏன் குறுக்கால போனவர் மாதிரிக் கதைக்கிறார்???

தவறான பகுதியில் பதியப்பட்டது. நீக்கப்பட்டுள்ளது.

Edited by வாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.