Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழரின் மனசாட்சியை உறுத்தும் 14 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம்!

Featured Replies

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

நேற்றைய தினம் நடந்த 14 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம் அனைத்து தமிழர்களின் மனசாட்சிகளையும் உறுத்தும் அளவுக்கு உள்ளது.

முருகண்டியை சோகத்தில் ஆழ்த்திய 14 வயது சிறுமியின் 31.08.2018 நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கு சிறுமி வறுமையே காரணம் என தெரியவந்துள்ளது.

சிவபாதகலையகம் பொன்னகர் பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த சிறுமி தனது தாயாரிடம் பாடசாலை செல்வதற்கு வெள்ளை சீருடை புதிதாக தைத்து தருமாறு கேட்டுள்ளார் தாய் இரண்டு மூன்று நாட்கள் பொறுத்துக் கொள்ளுமாறும் அம்மா தைத்து தருகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சிறுமி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

சிறுமியின் தாயார் கூலி வேலைக்கு சென்று தான் தன்னுடைய குடும்ப செலவீனங்களை மேற்கொண்டு வருகின்றார். வீட்டில் மிகுந்த வறுமை

நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் தாயார் தான் தினக்கூலிக்கு சென்று வருகின்றார்.

600ஃஸ்ரீ ரூபாய் சம்பளத்தில் குடும்ப வாழ்வை கொண்டு செல்வதால மிகுந்த கஸ்ட்டத்தில்; வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவபாதகலையக பாடசாலையில் சிறுமிக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுகையில் சிறுமி கல்வி கற்பதில் வலு கெட்டிக்காரி எதிர்காலத்தில் ஒரு டாக்டர்ராகும் கனவு அவளுக்குள் இருந்ததாக கூறுகின்றனர்.

வறுமை ஒரு சிறுமியின் உயிரை பறித்துவிட்டது என்ற செய்தி உலகத்தமிழர்களின் மனசாட்சியை உறுத்த கூடியதாக உள்ளது

https://www.ibctamil.com/srilanka/80/105543

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் கவலைக்குரிய விடயம். சிறந்த அரசியல் இல்லாமையே இப்படியான நிகழ்வுக்கு காரணம்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு மாணவனும் இப்படியான ஒரு முடிவிற்கு சென்று இறந்து விட்டான்.அவனுடைய நினைவுகள் தான் வந்து செல்கின்றன.

காரணங்களைத் தேடலாம் பல உதவிகளையும் செய்யலாம்.
இருந்தும் இப்படியான அநியாயமான இழப்புக்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன

ஆழ்ந்த இரங்கல்கள்

  • தொடங்கியவர்
On 9/2/2018 at 7:23 PM, Athavan CH said:

 

சிவபாதகலையக பாடசாலையில் சிறுமிக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூறுகையில் சிறுமி கல்வி கற்பதில் வலு கெட்டிக்காரி எதிர்காலத்தில் ஒரு டாக்டர்ராகும் கனவு அவளுக்குள் இருந்ததாக கூறுகின்றனர்.

வறுமை ஒரு சிறுமியின் உயிரை பறித்துவிட்டது என்ற செய்தி உலகத்தமிழர்களின் மனசாட்சியை உறுத்த கூடியதாக உள்ளது

https://www.ibctamil.com/srilanka/80/105543

நிலைமை தெரிந்திருந்தால்  அந்த ஆசிரியர்கள் சீருடக்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கலாம்.

தற்கால சிறுவர்கள் பெற்றோர்களின் சிரமங்கள் / துன்பங்கள் / கஷ்டங்கள் பற்றி விளங்கிக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது கவலையான விடயம். 

தற்காலத்தில் பிறந்திருந்தால் ஆபிரகாம் லிங்கனும் தற்கொலை செய்திருப்பாரோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.