Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர்த்தமுள்ள சமஷ்டி அதிகார முறையே எமக்கு வேண்டும் – சுமந்திரன்

Featured Replies

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், சமஷ்டி குணாதிசயங்கள், ஒற்றையாட்சி குணாதிசயங்கள் இணைந்த அமைப்பே காணப்படுகின்றது என, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அர்த்தமுள்ள சமஷ்டி அதிகார முறையே எமக்கு வேண்டும் – சுமந்திரன்

 

தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ளதும் பூரணமானதுமான சமஷ்டி அதிகார முறையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழறிஞர் இராவ்பகதுர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனனதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்தமாக நாம் அரசியல் விடிவு என்று சொல்வது அர்த்தமுள்ள ஒரு விடிவாக இருக்க வேண்டும். அவை வெறும் பெயர்ப்பலகை மாற்றங்களாக இருக்கமுடியாது.

அந்த அதிகாரப்பகிர்வு உள்ளடக்கத்திலே எமக்கு சுய ஆட்சியைக் கொடுப்பதாகவும், சமஷ்டியின் அடிப்படைக் குணதிசயங்கள் பூரணமாகக் கொடுக்கப்படுவதாகவும் அமையவேண்டும். அவை தன்னிச்சையாக மீளப்பெறக்கூடியதாக இருக்கக்கூடாது.

அப்படியான நிறைவான ஒரு சமஷ்டியை பெறவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அபிலாசையாக உள்ளது. அதேபோல் சமஷ்டி என்கின்ற கோட்பாட்டை அனைவரும் அறிந்து அதனைப் பெறவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/அர்த்தமுள்ள-சமஷ்டி-அதிகா/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் முழு சனத்தையும் அங்கோடைக்கு அனுப்புவன் என்று ஒத்தைக்காலில் நிக்குது .என்று வலு கிளியரா தெரியுது .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கை தமிழ்மக்களின் கொள்கையாக பரிணமிப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
pg-01-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%
 

செல்வநாயகம் ரவிசாந்-

 

சமஷ்டியைக் கொள்கையாகக் கொண்ட ஒரே அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்தத் தமிழ்மக்களுடைய அடிப்படைக் கொள்கையாக அது இன்று பரிணமித்திருக்கிறது. கடந்த எழுபது வருட சுதந்திரச் சரித்திரத்தில் பல்வேறு தமிழ் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்துக் கட்சிகளும் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பிலுள்ள கொள்கையே தமது கொள்கையென்று ஏற்றுக் கொண்டுள்ளன எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சிறுப்பிட்டியைச் சேர்ந்த தமிழறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் "இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 13ஆம் அரசியலமைப்புத் திருத்தம் 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அத்திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றி விடுமென்று குற்றஞ்சாட்டிப் பலர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். அரசியமைப்புச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரை இலங்கையை ஓர் ஒற்றையாட்சி முறையென்று வர்ணித்திருக்கின்ற காரணத்தால் சர்வஜன வாக்கெடுப்பில்லாமல் 13 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற முடியாதென்பது அவர்களுடைய வாதம்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றக் குழாமில் ஒன்பது நீதியரசர்கள் இருந்தார்கள். அதில் நால்வர் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சி முறையை மீறவில்லையென்று தீர்ப்பளித்தார்கள். வேறு நால்வர் இலங்கையினுடைய அரசியலமைப்பை ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்டி முறைக்கு மாற்றிவிடுமென்று  சாரப்பட வாக்களித்தார்கள். ஒன்பதாவது நீதியரசரான பாரிந்த ரணசிங்க 13 ஆம் திருத்தத்திலிருந்த இரண்டு பிரிவுகளைச் சுட்டிக் காட்டி அவை மாற்றப்படாவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமெனத் தீர்ப்பளித்தார்.

மாகாண நிரலிலுள்ள விடயங்கள் மீது மத்திய பாராளுமன்றம் மேலாதிக்கம் செலுத்துவதைத் தவிர்ப்பது சமஷ்டியின் முதலாவது அடிப்படைக் குணாதிசயமாகக் கருதலாம். சமஷ்டியின் இரண்டாவது அடிப்படைக் குணாதிசயமாக நான் கருதுவது மாகாணத்திற்கென்று பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை ஒரு தன்னிச்சையான அரசியலமைப்பின் மூலம் மத்தி மீளப்பெற முடியாததாக இருத்தல் வேண்டும்.

இவ்விரண்டு அடிப்படைக் குணாதிசயங்களும் தற்போது நடைமுறையிலுள்ள 13 ஆம் திருத்தத்தில் இல்லாத காரணத்தினால் இது சமஷ்டி இல்லையென்று நாம் கூறினாலும் கூட மேற்சொன்ன நான்கு நீதியரசர்களின் கருத்துப்படி 13 ஆம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பை ஒற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்டிக்கு மாற்றியிருக்கிறது.

ஆனால், மேற்சொன்ன திருத்தங்களுக்குப் பிறகு ஐந்து நீதியரசர்கள் ஒற்றையாட்சி முறை பாதிக்கப்படவில்லையென சொன்ன காரணத்தினால் 5/4 பெரும்பான்மையின் அடிப்படையில் இன்று அமுலிலிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஒற்றையாட்சி முறையைப் பெயரளவில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

 

 
 

ஒற்றையாட்சி முறை என்பது பிரித்தானியாவில் உருவான ஒரு கோட்பாடாகும். இது சட்டவாக்கல் அதிகாரத்தை மட்டும் மையப்படுத்தியதாகும். அதாவது மத்திய பாராளுமன்றத்திற்கு நிகராகச் சட்டங்களை ஆக்கும் அதிகாரமுள்ள வேறு நிறுவனங்கள் இருக்க முடியாதென்பது அக் கோட்பாட்டின் அடித்தளமாகும். எழுதப்படாத அரசியலமைப்பைக் கொண்ட மகா பிரித்தானியா இன்றைக்கும் ஒற்றையாட்சியைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அப்படியிருந்த போதிலும் பிரித்தானியாவில் இன்று இருக்கும் அதிகாரப் பகிர்வின் விஸ்தீரணம் எந்தச் சமஷ்டி நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கும் சளைத்ததல்ல.

பெயரளவில் ஒற்றையாட்சி முறையைப் பிரித்தானியா கொண்டிருந்தாலும் நடைமுறையில் உலகிலுள்ள பெரும்பாலான சமஷ்டி ஆட்சி முறையை விடக் கூடுதலான சமஸ்டி குணாதிசயங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஆகவே பலர் கருதுவதைப் போல சமஷ்டி என்பது ஒற்றையாட்சிக்கு நேரெதிரான ஆட்சி முறை என்பதைவிட பெயரளவில் ஒற்றையாட்சி நாடுகளுக்குள்ளும் முழுமையாக ஊடுருவக் கூடியது. ஆகவே, இன்றைய சமஸ்டியின் விஸ்தீரணத்தைப் பற்றிப் பேசுகின்ற போது ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட முறையாக அதனை அணுக முடியாது.

கடந்த- 2014 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் என்ற வகையில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக 6 ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைவாகத் தொடரப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்- 04 ஆம் திகதி பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட உச்சநீதிமன்ற குழாமொன்றினால் வழங்கப்பட்டது. பல நாடுகளினுடைய அரசியலமைப்புக்களின் பல சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"நாடுகளை ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி என்று பெயரிடுவது தவறான அர்த்தத்தைத் தரக் கூடும். சில ஒற்றையாட்சிக் குணாதிசயங்களோடும் காணப்படலாம். ஆகையால், இறைமை, அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்பவை ஓர் ஒற்றையாட்சி அரசிற்குள் சமஷ்டி முறைமையிலான ஆட்சி முறையை ஏற்படுத்த வழிவகுக்கலாம்"

சமஷ்டி என்று அழைக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டங்களைக் கொண்ட எல்லா நாடுகளிலேயும் சில ஒற்றையாட்சிக் குணாதிசயங்கள் காணப்படும். அந்த நாடு பிளவுபடாமால் ஒரேநாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள் தான் அந்த ஒற்றையாட்சி குணாதிசயங்கள். ஆனால், இவற்றைக் காரணமாகக் கொண்டு அது சமஸ்டி அல்லதென்று கூறிவிட முடியாது.

இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்றுவிடாமல் எல்லாவகையான அரசியலமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரணமடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரளவில் மட்டும் வர்ணிக்கப்படும் ஒரு ஆட்சி முறையாக இருக்க முடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் குணாதிசயங்கள் காணப்படுமாகவிருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது சமஷ்டி ஆட்சி முறையாகவே காணப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.vaaramanjari.lk/2018/09/16/செய்திகள்/தமிழரசுக்-கட்சியின்-சமஷ்டிக்-கொள்கை-தமிழ்மக்களின்-கொள்கையாக-பரிணமிப்பு

  • தொடங்கியவர்

இந்­திய இரா­ணு­வத்­தி­டம் நானும் அடி­வாங்­கி­னேன் -சுமந்­தி­ரன் எம்.பி.!!

 
sumanthiran-640x405.jpg

 

 

போரின் வலி­களை மன­த­ள­வில் பல­முறை உணர்ந்­தி­ருக்­கின்­றேன். இந்­திய இரா­ணு­வம் கடு­மை­யா­கத் தாக்­கி­ய­போது உட­லி­லும் போரின் வலியை உணர்ந்­தேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

சிறுப்­பிட்டி தமி­ழ­றி­ஞர் சி.வை.தாமோ­த­ரம்­பிள்ளை 187ஆவது பிறந்த தினத்தை முன்­னிட்டு, இன்­றைய கூட்­டாட்­சி­யின் விரி­வாக்­கம் எனும் தலைப்­பில் நினை­வுப் பேரு­ரையை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் வீர­சிங்­கம் மண்டபத்­தில் நேற்று நிகழ்த்­தி­னார்.

அவர் நினை­வுப் பேருரை வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னி­டம் சில கேள்­வி­களை எழுப்­பி­னார். அதற்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘கூட்­டாட்சி (சமஷ்டி) தேவை­யற்­றது என்று ஏன் கூறி­னீர்­கள்’ என்ற கேள்­விக்கு, கூட்­டாட்சி தேவை­யற்­றது என்று நான் ஒரு­போ­தும் தெரி­வித்­த­தில்லை. அதனை அர்த்­த­முள்­ள­தாக்­கு­வ­தற்­காக உழைப்­ப­வன் நான் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் பதி­ல­ளித்­தார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கேள்வி பதி­லின் போது மேலும் கூறி­ய­தா­வது, அர­சி­ய­லில் தேசி­யப் பட்­டி­யல் பின்­க­தவு என்­றால் நான் பின்­க­தா­வால்­தான் அர­சி­ய­லுக்­குள் வந்­தேன். போரின் வலி­களை மன­த­ள­வில் பல­முறை உணர்ந்­தி­ருக்­கின்­றேன். இந்­திய இரா­ணு­வம் கடு­மை­யாக தாக்­கி­ய­போது என் உட­லி­லும் வலி உணர்ந்­தேன் – என்­றார்.

https://newuthayan.com/story/09/இந்­திய-இரா­ணு­வத்­தி­டம்-நானும்-அடி­வாங்­கி­னேன்-சுமந்­தி­ரன்-எம்-பி.html

  • கருத்துக்கள உறவுகள்

875_AE916-_E9_CC-48_BB-_A515-_FF5_F44855

11 hours ago, பெருமாள் said:

 

இந்தாள் முழு சனத்தையும் அங்கோடைக்கு அனுப்புவன் என்று ஒத்தைக்காலில் நிக்குது .என்று வலு கிளியரா தெரியுது .

 

அங்கோடைக்கு 134

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.