Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் எதிர்ப்புப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.

ரொக்கட்றரோ (Tரொcஅடெரொ) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்தமை தவறு - லாக்கூர்ண நகரசபை உறுப்பினர்

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தவறு என பாரிஸ் லாக்கூர்ண நகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று கூறினார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரஞ்சு அரசுக்கு சுட்டிக்காட்டுவது அனைத்து தமிழ் மக்களின் கடமை எனவும் அன்ரொனி ரூசல் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணியில் அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

வியாழன் 05-04-2007 01:57 மணி தமிழீழம் [முகிலன்]

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் எதிர்ப்புப் போராட்டம்

பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.

ரொக்கட்றரோ (Trocadero) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

post-2709-1175789788_thumb.jpg

நன்றி : பதிவு

அனைவரும் ஒன்றுதிரழ்வோம். ஈஃபிள் கோபுரத்திற்கு முன்னால் தமிழரின் உரிமைப் போராட்டத்தை பிரெஞ்சு அரசுக்கு புரிய வைப்போம்.

மிக நல்ல முயற்சி. கூடியளவு மக்கள் கலந்து எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டும்.

முன்னதாக நமது பத்திரிகைகள் தொலைக்காட்சி நிருவனங்கள் பிரென்சு தகவல் ஊடகங்கள்,மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு( இலங்கையில் அகதிகளுக்கு உதவும் நிருவனங்களில் பிரான்சு கிளையின் வேலை செய்பவர்கள் ) கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனும் தகவலை வைத்தும் அதனை எதிர்த்து எதிர்வரும் 9ம் திகதி எதிர்ப்பு போராட்டம் நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்டு அவர்கள்

நிகழ்விற்கு நிச்சயம வரவழைக்கப்படவேண்டும்.

அத்துடன் பிரென்சு நகரசபை உறுப்பினர்கள் மூலமும் ஊடகர்கள் வரவழைக்கப்படலாம்,

பிரான்சில் வாக்குரிமை பெற்ற தமிழ் மக்களின் தொகைகள் அரசியல் கட்சிகளை கவரப்பண்ணப்படவேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூடினோம், கத்தினோம், கலைந்தோம் என்பவதை விட்டு வித்தியாசமாக பலன்கொடுக்கக்கூடியதாக நடத்தி முடித்தால் மேலும் இப்படியான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இவர்களுக்கும் விடுதலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

முழுவிளக்கமும் கொடுபட்டால் அவர்களும் நமக்காக வாதடுவார்கள்...அத்துடன் பட்டினிக்கு எதிரான இயக்கத்திற்கும் அறிவிக்கப்படவேண்டும்.

எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் பிரென்ச் எழுத்தில் பெரிய எழுத்திற்களிலும் விளக்கமாக இருந்து வெளினாட்டவர் பார்க்கும் போது உடனே விடையம் புரியக்கூடியாதாக வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மத்தியில் கூடினோம்இ கத்தினோம்இ கலைந்தோம் என்பவதை விட்டு வித்தியாசமாக பலன்கொடுக்கக்கூடியதாக நடத்தி முடித்தால் மேலும் இப்படியான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் இவர்களுக்கும் விடுதலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

05-04-2007-2-onrukudal.jpg

05-04-2007-3-onrukudal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

No where I am able to find the news item appeared in international media about the arrest. I wanted to read about the nature of arrest and the charges against them. Can any one help

மேதகு பிரான்ஸ் ஐனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு.. சகமனிதனுக்கு உதவுவோருக்கு கைதுதான் பரிசா

[Thursday April 05 2007 10:11:51 PM GMT] [யாழ் வாணன்]

கௌரவ ஐக்குவாஸ் சிராக் ஐனாதிபதி பிரான்ஸ்

மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு

சகமனிதனுக்கு உதவுவோருக்கு கைதுதான் பரிசா

நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம்.

சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பொருளாதார தடை காரணமாக முற்றுகைக்கு உட்பட்டுள்ள தருணத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசபடைகளின் விமானக் குண்டுவீச்சு மற்றும் ஆழ ஊடுருவும் அணியின் ஊடுருவல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் நாட்டை விட்டு தப்பியோடுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன

பிரான்ஸ் குடிமக்களாகவோ அன்றி அகதிகளாகவோ வாழ்ந்து வந்த இந்த 16 பேரும் கைது செய்யப்படும் நாள் வரை சட்டத்தை மதித்து நடப்பவர்களாகவே வாழ்ந்து வந்தவர்கள்.

நிதி சேகரிக்கும் நோக்கத்துடன் அவர்கள் பிரான்ஸ் வந்தவர்கள் அல்ல. அரச பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு தப்பி வந்தவர்கள் தமிழர் தாயகத்தில் நிலவும் தற்போதைய சூழல் காரணமாகவே இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்டனர். இலங்கை அரச படைகளினாலும் ஒட்டுக்குழுக்களினாலும் அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டத்திற்கு எதிரான கொலைகள் கடத்தல்கள் தடுத்து வைப்புக்கள் காணாமல்போதல்கள் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுக்கள் பாலியல் துன்புறுத்தல்கள் பொருளாதார தடைகள் கட்டுப்பாடுகள் மீன்பிடித்தடை இடப்பெயர்வுகள் எறிகணை வீச்சுக்கள் ஆகியவை தமிழ்மக்களின் வாழ்வை துயர்நிலைக்கு தள்ளியுள்ளதுடன் அவர்களை நாட்டை விட்டு தப்பியோடுவதற்கும் உந்துகின்றன.

மனச்சாட்சி உள்ள எவரும் சகமனிதருக்காக கவலைப்படுவது இயல்பு மேற்குறித்த எமது சகோதரர்களும் இதனையே செய்தனர் . இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் உணவு இன்றி வாழும் ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு உதவும் முகமாகவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசங்கம் உதவுவதும் இல்லை ஏனைய உள்ளுர் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களை எதையும்; அனுமதிப்பதுமில்லை என முழு உலகுமே அறியும். மேலும் தமிழ் மக்களுக்கு இடைவிடாது உதவும் ஒரே ஒரு தொண்டர் நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கி கணக்கை முடக்கி அதன் நடவடிக்கையை பெரிதும் மட்டுப்படுத்தியுள்ளது.

அத்தகைய நிகழ்வுகளின் பி;ன்னணியிலேயே தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டசிலர் ஏதாவது ஓரு முறையில் தமிழ் மக்களுக்கு உதவும்முகமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் அண்மைய கைதுகளில் அதுவும் தடைப்பட்டுவிட்டன

பிரான்ஸ் அரசாங்கத்தின் மீதும் சுதந்திரத்திற்காக மிகத்தீவிரமாக போராட்டத்தை நடத்திய கடந்த கால வரலாற்றை கொண்டவர்களும் குடியரசு ஆட்சிமுறையை உலகுக்கு அறிமுகம் செய்த அந்நாட்டு மக்கள் மீதும் நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் குடியரசின் மகுடவாசகமான „சுதந்திரம் சமத்துவம்சகோதரத்துவம் „ ஆனது பிரான்ஸ் மக்கள் என்றென்றும் எமது பக்கமே. அதாவது ஒடுக்குபவர் பக்கமல்ல ஒடுக்கப்படுபவர் பக்கமே என்பதை உணர்த்தி நிற்கின்றது. இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் சுதந்திர பிரான்ஸ் படைகள் நாட்டிற்கு வெளியேயும் பிரான்ஸ் தற்காப்பு படைகள் உள்நாட்டிலும் அமெரிக்கா இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளின் உதவியுடனும் தீயசக்திகளுக்கு எதிராக போரிட்டன. அன்னிய உதவிகள் எதுவுமின்றி பிரான்ஸ் மக்களால் விடுதலை பெற்றிருக்க முடியாது.

இந்த சூழலை நாம் எமது சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். தமிழ் மக்கள் எந்த ஒரு வெளியாரின் உதவியும் இன்றி தாய்நாட்டிற்காகப் போராடி வருகின்றார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மாத்திரம் இருந்தே அவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் பிரான்ஸ் அரசாங்கத்தின் நடவடிக்கையானது போராட்டத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி தமிழ் பொதுமக்களின் நிலையையும் மோசமாக்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையே தமது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்தமை தவறு - லாக்கூர்ண நகரசபை உறுப்பினர்

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தவறு என பாரிஸ் லாக்கூர்ண நகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று கூறினார்.

இதிலை ஏதாவது யாருக்காவது புரிகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை ஏதாவது மேலதிக செய்திகள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

French police arrest 17 in Tamil Tiger swoop

01 Apr 2007 18:10:52 GMT

Source: Reuters

Alert Me | Printable view | Email this article | RSS [-] Text [+]

Background

Sri Lanka conflict

More PARIS, April 1 (Reuters) - French police arrested 17 suspected Tamil Tigers on Sunday in a morning raid aimed at the armed separatist group's fundraising operations, a police source said.

The men, 16 Tamils and one Frenchman, were arrested in Paris and various suburbs as part of an investigation into "financing terrorism", extorsion of funds, and money laundering, the source said.

"The people we arrested are senior members of the Tamil Tiger leadership in France," the source said.

The Tamil Tigers say they are fighting for an independent state for minority Tamils in the north and east of Sri Lanka. The group is listed as a terrorist organisation in France.

The men were held for questioning by police. Several thousand euros were seized in the operation, the source said.

http://www.alertnet.org/thenews/newsdesk/L01725314.htm

  • கருத்துக்கள உறவுகள்

Thanks Nunavilan, konjsam virivana thakaval thanthirukkirirkaL.

[The men, 16 Tamils and one Frenchman, were arrested in Paris and various suburbs as part of an investigation into "financing terrorism", extorsion of funds, and money laundering, the source said.]

nadaipeRavuLLa pOraaddam veRRi peRa vazththukiren. aanalum suyavimarsanamum Niraiya thEvai. Nan pesiya engkaLmethu anuthApamuLLa Norwegia irasathanthirikaL kavalaiyOdu sonna sila vidayangkaL athiRssi tharuvathaakum. veLinaddu seyalpaadukaL mezamaikkap paduvathum suya vimarsanamum avasiyam.

பிரான்ஸில் விடுதலைப்புலிகளுக்காக மிரட்டி நிதி சேர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பம்

இலங்கையில் செயற்படும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்ப்பதற்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த வார முற்பகுதியில் பிரான்ஸில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கு எதிராக பிரான்ஸ் நீதிபதிகள், குற்றவியல் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான நீதிப் புலனாய்வுகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு பல மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்குமாறு பிரான்ஸில் உள்ள இலங்கையர்களை மிரட்டிப் பணியவைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில் போது, பெரும்பாலும் இலங்கையர்களான 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 4 பேர் நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.